பிராமணர்களுக்கு ஆதரவு - எஸ்.வி. சேகர் அறிவிப்பு என்ற தலைப்பில் தினமலர் ஏட்டில் (11.4.2009 பக்கம் 7) ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
தி.க. தலைவர் வீரமணியை நேரில் சந்தித்தோம். அப்போது அவர் பிராமணர்களுக்கு 7 சத வீதம் இடஒடுக்கீடு அளிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறினார் என்று தென்னிந்திய பார்ப்பனச் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எஸ்.வி. சேகர் கூறியதாக தினமலரில் வெளி வந்துள்ளது.
அதுபற்றிய உண்மையான தகவல்;
4.4.2009 நாளிட்ட விடுதலை ஞாயிறுமலர் கேள்வி ஒன்றுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பதில் உண்மையைத் தெரிவிக்கக் கூடியதாகும்.
கேள்வி: பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு கேட்கிறாரே சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) எஸ்.வி. சேகர்?
- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பதில்: என்னையும்கூட நேரில் (1.4.2009) பெரியார் திடலுக்கு வந்து சந்தித்து இது பற்றி தனது நிலையை விளக்கினார்.
நான் அவரிடம் தெளிவுபடுத்தினேன். ஏற்கனவே இருந்த உங்களுக்கான இடஒதுக்கீட்டை வகுப்புவாரி Proportional Representation உரிமை ஆணையை - எதிர்த்து நீதிமன்றத்திற்கு, பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து ஒழித்தவர்கள் நீங்கள்தான் - பார்ப்பனர்கள்தான்; அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வகுப்புவாரி சட்டம் வந்தால்தான் எந்த அரசும் முன்னேறிய ஜாதியி னராகிய பார்ப்பனருக்கு இடஒதுக்கீடு தர முடியும். அதுவும் 3 விழுக்காடு உங்களுக்குத் தருவதில் எவ்வித மறுப்பும் இல்லை; பிரச்சினை எழுந்ததே - நீங்கள் ஏற்கனவே 100 விழுக்காடும் ஏகபோகமாக வைத்திருந்தினால் தான் என்று விளக்கினேன். அவரும் புரிந்து கொண்டார்.
("விடுதலை" ஞாயிறுமலர் 4.4.2009)
உண்மை இவ்வாறு இருக்க பார்ப்பனர்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாக தின மலரில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு மாறானது.
ஒன்று எஸ்.வி. சேகர் சொன்னது தவறான தகவலாக இருக்க வேண்டும்; அல்லது தினமலர் ஏட்டின் தவறான தகவலாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும்.
பொது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
-------------- கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
"விடுதலை"ஞாயிறுமலர் 18-4-2009
Search This Blog
18.4.09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பெரியார் சாமிகள் மடாலயம்:மடாதிபதி வீரமனி சாமி: சிறப்பு போஜை:சொக்க தங்கம் சொனிஅ போஜை:முதுகுத்தன்டு கிழம் (சிரப்பு போசாரி)
குரங்த கட்டனம்...வாரீர்!
பதிவு தொடர்பான, நாகரிகமான பின்னூட்டங்களுக்கு மட்டுமே மறுமொழி அளிக்கப்படும்
நன்றி
Post a Comment