Search This Blog

14.4.09

ஈழப்பிரச்சினையை தேர்தலில் முன்வைக்கக்கூடாது ஏன்? - 2


ஈழத் தமிழர் பிரச்சினையில்
என்றைக்கும் தமிழர்கள் ஓரணியிலே நிற்கவேண்டும்

சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை


ஈழத்தமிழர் பிரச்சினையிலே தமிழர்கள் என்றைக்கும் ஓரணியிலே ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரை ஆற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 4.4.2009 அன்று இரவு 7.30 மணிக்கு எம். ஆர். ராதா மன்றத்தில் - நாடாளுமன்றத் தேர் தலும் ஈழத்தமிழர் பிரச் சினையும் என்ற தலைப் பில் நடைபெற்ற சிறப் புக் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-


நவீன்பட்நாயக் அவர்கள் நல்ல வாய்ப்பாக அந்தப் பிடிப்பிலிருந்து இப்பொழுதுதான் வெளியேறிப் போனார். அவர் இருந்த காரணத்தினாலே, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கிறித்துவர்களைஅகதிகள் முகாமிற்குள் தள்ளி இலங்கை அகதிகள் முகாமைப் போல நடத்தினார்கள்.

கிறித்துவ மதத்தில் இவர்கள் சேர்ந்தார்கள் என்பதற்காக இப்படி நடத்தினார்கள்என்பதை யாராவது மறந்துவிட முடியுமா?

6-10-2008 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களிடம் முதல்வர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவரை மத்திய அரசு உடனடி யாக அழைத்து நிராயுத பாணிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களைக் கொல்வது குறித்து இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இந்திய அரசின் இரா ணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை அரசு அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்கிட வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எத்தகைய துன்பங்களுக்கும் ஆளாகக் கூடாது என் பதை வலியுறுத்தினார்.

திராவிடர் கழகம் ஒரு பக்கம், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஒரு பக்கம். தி.மு.க. ஒரு பக்கம் என்றிருந்தால் மட்டும் போதாது.

தமிழர்கள் ஒன்று திரண்டு குரல் கொடுத் தால்தான் இதற்கு வலிமை ஏற்படும் என்ற காரணத் தால் 14-10-2008 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கலைஞர் கூட்டினார். அந்த கூட்டத்திலே அதிமுக கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட் டது.

அதேபோல மதிமுக கலந்து கொள்ளவில்லை. நாங்கள்தான் ஈழத்தமிழர்களை ஆதரிக்கின்றோம் என்று சொல்லுகின்ற நண்பர்களே கூட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வரவில்லை.

இன்றைக்கு தனித்து நின்று நான்தான் எல்லா மாற்றத்தையும் கொண்டு வரப்போகிறேன் என்று சொல்லுகின்ற ஒரு நடிகர் நண்பர் தே.மு.தி.க. என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கக்கூடிய 40 இடங்களுக்கும் நானே ராஜா என்று சொல்லி தனித்து தேர்தலில் நிற் கிறார்.

நல்ல முடிவுதான் அப் பொழுதுதான் அவருடைய பலம் என்ன என்பது மக்களுக்குத் தெரிய வரும். அவரும் கலந்து கொள்ளவில்லை. இந்தநடிகர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தேர்தலைப் புறக் கணிப்போம் என்று சொன்னார்.

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கருத்தைச் சொல்லுவார். தேர்தலைப் புறக்கணிக்கின்ற இலட்சணமா இது?

பா.ஜ.க.வுக்கு ஒரு நப்பாசை இருந்தது. ஒரு வேளை அதிமுக நம் பக்கம் வருமா? என்று அத்வானிகள் பேசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். இலட்சிய தி.மு.க.தலைவர் டி.ராஜேந்தர் அவர் கள்அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே - அனைத் துக்கட்சிக் கூட்டத்திற்கு வராதவர்களை கடுமையாகச் சாடினார்.

முதல்வர் கலைஞர் - டி.ராஜேந்தர் அவர்களுடைய பேச்சை நிறுத்தச் சொன்னார். தயவு செய்து அவர்கள் இங்கு வராத காரணத்தாலே நீங்கள் தாக்காதீர்கள். நான் அழைத்திருக்கிறேன் என்பதற்காக ஒருவேளை அவர்கள் வராமல் இருக்கலாம். நாம் எல்லோரும் பிரிவாக வந்திருக்கிறோம் என்று காட்டாதீர்கள். தமிழ் நாட்டுமக்கள் நாங்கள் எல்லோரும் ஒன்று தான் என்று காட்ட வேண்டும். ஆகவே நீங்கள் யாரையும் தாக்கிப் பேசாதீர்கள் என்று சொன்னார்கள்.

அதேபோல சட்ட மன்றத்திலே 12-11-2008 அன்று முதல்வர் கலைஞர் அவர்களே போர் நிறுத்தம் தேவை என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். மத்திய அரசு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அங்கு போர் நிறுத்தத்தை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வர் கலைஞர் முன்வைத்தார்கள்.

இதற்கிடையில் கொட்டும் மழையிலே 24-10-2008 அன்று சென்னையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப் போர் அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடை பெற்றது. அதனையும் அதிமுக புறக்கணித்தது. மற்றவர்கள் புறக்கணித்தார்கள்.

சில நண்பர்கள் இதை அரசியலுக்குப் பயன் படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். டிசம்பர் 2 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து இந்தக் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

டிசம்பர் 4 ஆம் தேதி அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் தமிழகத்திலிருந்து முதல்வர் கலைஞர் தலைமையிலே சென்று, பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவர் களிடத்திலே சொல்லி என்னென்ன கருத்துகளை வலியுறுத்த முடியுமோஅவ்வளவையும் வலியுறுத்தி விட்டுத்தான் வந்தார்கள். எந்த அளவுக்கு நாங்கள் இதைப் பற்றி சொல்ல முடியுமோ அதைச் செய்கிறோம் என்று சொன்னார்கள்.

அதன் பிறகு தமிழகத் திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் வந்த பிற்பாடு இங்கேயிருந்து உணவு போக வேண்டும், மருந்து போக வேண்டும். இலங் கையில் மக்கள்அவதிப் பட்டுக் கொண்டிருக் கின்றார்கள் என்று சொன்ன நேரத்திலே உடனடியாக இலங் கைக்கு மருந்துகள், உண வுகள் இவைகள் எல்லா வற்றையும் அனுப்புவ தற்கு வாய்ப்பாக மிகப் பெரிய சூழலை உருவாக்கி அது மட்டுமல்ல 50கோடி ரூபாய் நிதியையும் திரட்டினார்.

மத்திய அரசின் மூல மாக இவைகளை வழங்க முதல்வர் கலைஞர் அவர் கள் ஏற்பாடு செய்தார் கள். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க மறுக்கிறார் என்று இன்றைக்கு அரசியல் ரீதியாக எல் லோரையும் கழற்றி விட் டுக் கொண்டிருக்கின்ற அருமைச் சகோதரர் நெடுமாறன் அவர்கள் அரசியல் எண்ணத்தோடு முதல்வரை பார்த்து குறை சொல்லுகிறார்.

முதல்வர் அவர்கள் பொறுப்பேற்ற காரணத்தால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக் கப் போகிறேன் என்று சொன்ன நெடுமாறன் அவர்களைத் தடுத்து நிறுத்தி, உணவு போவதற்கு - மருந்துகள் அனுப் புவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார் முதல்வர்.

இன்றைக்கு கப்பல் மூலமாக மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், துணிமணிகள் அத்தனையும் போயிருக்கின்றன. என்னுடைய கையிலே அதிகாரத்தை வைத்துக் கொண்டு சொல்லுகின்றேன்.

நாங்கள் சேகரித்த மருந்துகளும், அரிசி போன்ற உணவுப் பொருட்களும் அனுப்பப்பட முடியவில்லை என்று 5-6-2008-லே கேட்டார்.

நீங்கள் நிறுத்துங்கள். நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சி எடுப்போம் என்று சொல்ல, உடனடியாக மத்திய அரசிடம் பேசி, செஞ்சிலுவைச் சங்கத்தினுடைய அனுமதியோடு இதனை நடத்த வேண்டுமென்று சொல்லி, அதன் மூலம் மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்கி அனுப்பியிருக்கின்றார்கள்.

அது சில நேரங்களிலே தவறாகப் பயன் படுத்தப்படுகிறதென்றால் அய்.நா. சபையைச் சார்ந் தவர்கள் பொருட்கள் விநியோகத்தை மேற்பார் வையிட வேண்டும் என்று சொல்லி அத்துணை முயற்சிகளையும் செய் திருக்கின்றார்கள்.

ஒரு மாநில அரசு அதனுடைய எல்லைக்கு எவ்வளவு உட்பட்டதோ அதை செய்தது. இன்றைக்கு இலங்கைப் பிரச் சினையைப் பற்றி கவலைப் படுவதைப் போல காட்டிக் கொள்ளக்கூடிய அதிமுக, அதன் நாடாளு மன்ற உறுப்பினர்கள், பிரதமரை சந்தித்து ஏதாவது வலியுறுத்தினார்களா? இல்லை.

மதிமுக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பிரதமரைப் போய்ப் பார்த்தார்களா? அல்லது மற்றவர்கள் பார்த்தார் களா? தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்று சொன்னால் - அரசி யலுக்காக ஈழத்தமிழர் பிரச்சினையை நாம் பயன்படுத்தக்கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேர்தல் முடிந்த பிற்பாடு கூட ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை என்று சொன் னால் நாம் எல்லோரும் ஒரே குரலிலே நிற்க வேண்டும் என்பதுதான் அன்றும் - இன்றும்-என் றும் இந்த அணியைப் பொறுத்தவரையிலே இவர்களை ஆதரிக்கிற வர்களைப் பொறுத்த வரையிலே நம்முடைய நிலை. (கைதட்டல்)

அது மட்டுமல்ல, முதல்வர் அவர்கள் மருத் துவ மனையிலே இருந்த பொழுதுகூட நண்பர் களே! இலங்கைப் பிரச் சினையிலே கட்சி சார் பற்ற முறையிலே ஒரு துணை அமைப்பை உரு வாக்க வேண்டும் என்று சொல்ல - இலங்கை தமிழர் பாதுகாப்பு துணைக் குழுவை முதல்வர் அவர் கள் ஏற்படுத்தினார்கள். அப்பொழுதும் கூட, இந்தப் பிரச்சினையிலே இரண்டு பிரிவாக இருக் கிறார்கள் என்று சொன்ன பொழுது, கத்திரிக்கோ லின் இரு பிளேடுகள் தனித் தனியாக இருந் தாலும் கூட - அந்த இரண்டுக்கும் மத்தியிலே உள்ளவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்று ஒரு விளக்கம் சொல்லி முதல்வர் அவர்கள் ஒரு தெளிவுபடுத்தினார். இதிலே விரோத மனப்பான்மை காட்டவில்லை. ஏனென்றால் இதனாலே பாதிக்கப் படக்கூடியவர் கள் நம்முடைய தமிழர்கள் - ஈழத் தமிழர்கள்.


அங்கே எப்படியாவது போர் நிறுத்தம் நடத்தியாக வேண்டும். அய்.நா. சபை வரை அழுத்தம் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் கலைஞர் அவர்கள் சொன்னதினுடைய விளைவாகத் தான் கப்பல் சென்றது.

முதல்வர் அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாகத்தான் அய்க்கிய நாடுகள் சபையிலே மற்ற நாடுகளிலே பேசக்கூடிய சூழல் ஏற்பட்டது.

இன்னமும் முழுமையாக போர் நிறுத்தம் வரவில்லை என்று சொல்லுகின்ற பொழுது நமக்கும் வேதனையாக இருக்கிறது. போர் நிறுத்தம் வந்தாக வேண்டும். இரண்டு நாட்கள் அதாவது 48 மணி நேரம் போர் நிறுத் தம் செய்தால் மட்டும் போதாது.

இன்னும் தெளிவாக போர் நிறுத்தம் வர வேண்டும் என்ற பிரச்சினையிலே மற்றவர்கள் எல்லாம் கைவிட்டு விட்டார்களா? இப்பொழுது கூட இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னார்கள். சோனியா காந்தி அவர் களுக்கு இதைப்பற்றி அக் கறை இல்லை.

-----------------------தொடரும் ............."விடுதலை"13-4-2009

2 comments:

Unknown said...

//இலட்சிய தி.மு.க.தலைவர் டி.ராஜேந்தர் அவர் கள்அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே - அனைத் துக்கட்சிக் கூட்டத்திற்கு வராதவர்களை கடுமையாகச் சாடினார்.

முதல்வர் கலைஞர் - டி.ராஜேந்தர் அவர்களுடைய பேச்சை நிறுத்தச் சொன்னார். தயவு செய்து அவர்கள் இங்கு வராத காரணத்தாலே நீங்கள் தாக்காதீர்கள். நான் அழைத்திருக்கிறேன் என்பதற்காக ஒருவேளை அவர்கள் வராமல் இருக்கலாம். நாம் எல்லோரும் பிரிவாக வந்திருக்கிறோம் என்று காட்டாதீர்கள். தமிழ் நாட்டுமக்கள் நாங்கள் எல்லோரும் ஒன்று தான் என்று காட்ட வேண்டும். ஆகவே நீங்கள் யாரையும் தாக்கிப் பேசாதீர்கள் என்று சொன்னார்கள்.//

இப்படி பேசிய கலைஞரை இன்று எல்லோரும் தாக்குவது ஓட்டுக்காகவா?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி