Search This Blog

7.4.09

ஈழத் தமிழர் பிரச்சினையில் தி. க. வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்:


4) தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலை யோடும், பொறுப்புணர்ச்சி யோடும் அணுகப்படக் கூடியது ஈழத் தமிழர்களின் பிரச்சினையாகும்.

இரண்டாம் அணி, மூன்றாம் அணி ஆகியவற்றில் அடங்கியுள்ள கட்சிகளுக்கிடையே இது குறித்து முரண்பட்ட கருத்துக்களும், அணுகு முறைகளும் உண்டு என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தி.மு.க.வைப் பொறுத்த வரை தொடக்க முதல் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்ட திராவிடர் இயக்கமாகும். இந்தப் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியைக் கூட இழந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டசபை மூலமும், மக்கள் போராட்ட மூலமும், மத்திய அரசிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து மத்திய அரசைப் பல வகைகளிலும் செயல்பட வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள் அளிக்கப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கைகளில் முக்கியமானதாகும் -அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் செயல்பாடுகள் காரணமாக வெளி நாடுகளும் இந்தப் பிரச்சினையில் தலையிடும் ஒரு சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல திருப்பமாகும். நடக்க விருக்கும் பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு முழு வெற்றியை ஈட்டிக் கொடுப்பதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையில் மேலும் கடுமையான அழுத் தத்தைக் கொடுக்க வாய்ப்பு அதிகமாகும் என்பதையும் திராவிடர் கழகப் பொதுக்குழு தொலைநோக்குப் பார்வையோடு தெரிவித்துக் கொள்கிறது.

செய்தியாளர்கள் கூட்டத்தில் 30.3.2009 அன்று பேசிய முதல் அமைச்சர் மானமிகு மாண் புமிகு கலைஞர் அவர்கள் தமிழ் ஈழம் மலருவதை முதலாவதாக வரவேற்று மகிழ்வதில் நானாக வேயிருப்பேன் என்று கூறியுள்ளதையும் தமிழின வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


எல்லா வகைகளிலும் சீர் தூக்கி - நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார் பின்மை உறுதிப்பட, கல்வி வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சம பகுதியினரான பெண் களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலாபம் உள்ள தொழிலாக உருவாக்கப்பட, (காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம் பெற, மதவாதம் தோற்கடிக் கப்பட, வரும் 15-ஆம் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலும், இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலும் அணி வகுக்கும் கட்சிகளுக்கு வாக்குகள் அளித்துப் பிரமிக்கத்தக்க வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகச் செயற்குழு தமிழ்நாடு வாக்காளப் பெரு மக்களை ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.

தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையே ஆத ரித்து, வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகம் திட்ட மிட்ட வகையில் பிரச்சாரம், களப்பணிகள் ஆற்றுமாறு கழகத் தோழர்களை இப் பொதுக்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.....



தீர்மானம் எண் -3

ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள்:

(அ) இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று இந்திய குடியரசு தலைவர், அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் போன்றவர்கள் உட்பட வேண்டுகோள் விடுத்தும், தமிழ்நாடு அரசின் இடை யறாத அழுத்தங்களின் பயனாக பிரதமர், வெளியுற வுத்துறை அமைச்சர், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெளிப் படையாகப் போர் நிறுத்தம் தேவை என தெரிவித்த பிறகும் உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்தும், இலங்கை அதிபர் இராஜபக்சே அவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமாக தமிழர் களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதால் இதன் அடுத்த கட்டமாக மத்திய அரசு அளவிலான கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாய் மத்திய அரசை இப்பொதுக் குழு வற்புறுத்துகிறது.

தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள் ஏற்கெனவே இடையாறாமல் விடுத்துவரும் வேண்டு கோள்களுக்கு மேலும் தேவையான அழுத்தத்தைக் கொடுக்குமாறு இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. (ஆ) மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், இராஜபக்சேவின் ஈழத் தமி ழின ஒழிப்பு நிலைப்பாட்டைக் கண்டித்தும் சென்னை உட்பட மாவட்ட தலைநகரங்களில் நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை 12-04-2009 ஞாயிறு காலை 11.00 மணிக்கு நடத் துவது என்றும், கழகத் தலைவர் தலைநகர் சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை ஏற்பார் எனவும் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.

----------------"விடுதலை" 7-4-2009

6 comments:

thiru said...

//தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் செயல்பாடுகள் காரணமாக வெளி நாடுகளும் இந்தப் பிரச்சினையில் தலையிடும் ஒரு சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.//

கருணாநிதிக்கு காவடி தூக்க கி.வீரமணி இப்படியெல்லாம் உளறலாமா? இந்திய அரசு போடுகிற முட்டுக்கட்டை காரணமாக உலக நாடுகள் மௌனம் சாதிப்பது எல்லோருக்கும் தெரியும். கருணாநிதி சோனியாவுக்கும், சோனியா கருணாநிதிக்கும் எழுதிய கடிதங்களால் எந்த புண்ணாக்கு பலனும் கிடையாது. புலம்பெயர் தமிழர்களின் கிளர்ச்சிகளும், போராட்டங்களும் காரணமாக சில நேரங்களில் உலக நாடுகள் மௌனத்தை கலைத்தன. அவர்களது வியர்வையின் விளைச்சலை கருணாநிதியின் துரோகத்தை மறைக்க வீரமணி பயன்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

பெரியார் உயிரோடு இருந்தால் இந்த அறிக்கைகள் வருமா? பெரியார் பெயரில் நடத்தும் நிறுவனங்களின் இலாபத்திற்காக இப்படி சேப்படி தீர்மானங்களை நிறைவேற்றுவதை நிறுத்துவது பெரியாருக்கு செய்யும் நன்றியாக இருக்கும்.

Unknown said...

நண்பர் திரு அவர்களின் கருத்து சரியானது என்று நம்புகிறேன். இது பச்சை துரோகம். பெரியார் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வரும் நபர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

Anonymous said...

ithu thaan muthukila kuththuRathu enpathu. ellaamee oree maddaikaL thaan?

தமிழ் ஓவியா said...

திரு பிறக்காத காலங்களிலிருந்து வீரமணியும் திராவிடர் கழகமும் ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் உழைத்ததை நாடு அறியும்.

யாருக்கும் காவடி தூக்க வேண்டிய அவசியம் வீரமணிக்கு இல்லை.
கொள்கை அடிப்படையில் பாராட்ட வேண்டியதை பாராட்டியும், எதிர்க்க வேண்டியவைகலை எதிர்த்தும் வருகிறார்.

அதுவும் இம்முரை கலைஞர் ஆட்சி மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் பல நடவடிக்கைகளை கலைஞர் எடுத்து வருகிறார்.

கடந்த கால ஆட்சியில் புலி என்று பெயர் சொன்னாலே பிரிவினைவாதி என்ற நிலையை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது.

//பெரியார் பெயரில் நடத்தும் நிறுவனங்களின் இலாபத்திற்காக இப்படி சேப்படி தீர்மானங்களை நிறைவேற்றுவதை நிறுத்துவது பெரியாருக்கு செய்யும் நன்றியாக இருக்கும்.//

திரு அவர்களே இதுதான் அசல் உளறல்( நீங்கள் பயன்படுத்திய சொல்லாட்ட்சி தான் இது)

பெரியார் கொள்கை என்ன என்று தெரியாத நீங்கள் எல்லாம் பெரியாரைப் பற்றிப் பேசுவது தான் வேடிக்கையாக உள்ள்து.

மக்கள் பின்னால் செல்பவர் அல்ல பெரியார்,மக்களைத் தன் பின்னால் வரவழைத்தவர் பெரியார்.

தீமானங்களை முழுமையாகப் படியுங்கள். தெளிவு பிறக்கும்.

'தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலை யோடும், பொறுப்புணர்ச்சி யோடும் அணுகப்படக் கூடியது ஈழத் தமிழர்களின் பிரச்சினையாகும்.

இரண்டாம் அணி, மூன்றாம் அணி ஆகியவற்றில் அடங்கியுள்ள கட்சிகளுக்கிடையே இது குறித்து முரண்பட்ட கருத்துக்களும், அணுகு முறைகளும் உண்டு என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தி.மு.க.வைப் பொறுத்த வரை தொடக்க முதல் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்ட திராவிடர் இயக்கமாகும். இந்தப் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியைக் கூட இழந்திருக்கிறது.

தமிழ்நாடு சட்டசபை மூலமும், மக்கள் போராட்ட மூலமும், மத்திய அரசிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து மத்திய அரசைப் பல வகைகளிலும் செயல்பட வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள் அளிக்கப்பட வேண்டும் என்பது நமது கோரிக்கைகளில் முக்கியமானதாகும் -அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் செயல்பாடுகள் காரணமாக வெளி நாடுகளும் இந்தப் பிரச்சினையில் தலையிடும் ஒரு சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல திருப்பமாகும். நடக்க விருக்கும் பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு முழு வெற்றியை ஈட்டிக் கொடுப்பதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையில் மேலும் கடுமையான அழுத் தத்தைக் கொடுக்க வாய்ப்பு அதிகமாகும் என்பதையும் திராவிடர் கழகப் பொதுக்குழு தொலைநோக்குப் பார்வையோடு தெரிவித்துக் கொள்கிறது.

செய்தியாளர்கள் கூட்டத்தில் 30.3.2009 அன்று பேசிய முதல் அமைச்சர் மானமிகு மாண் புமிகு கலைஞர் அவர்கள் தமிழ் ஈழம் மலருவதை முதலாவதாக வரவேற்று மகிழ்வதில் நானாக வேயிருப்பேன் என்று கூறியுள்ளதையும் தமிழின வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.'

பல்வேரு சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஆதரவளிக்கிறது திராவிடர்கழகம்.


----------விவாதிப்போம்(நாகரிகமாக)

அ.ப.சிவா said...

"கடந்த கால ஆட்சியில் புலி என்று பெயர் சொன்னாலே பிரிவினைவாதி என்ற நிலையை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது."

நீங்கள் கூட சமுக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த போதுதானே

தமிழ் ஓவியா said...

சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தது ஒரு நல்ல செயலைசெய்ததற்க்காக. அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடுவது அவ்வளவு சரியல்ல.


அதே போல் இடஒதுக்கீட்டுக்காக போரடியவர்களை அந்த ஜெயில் இந்த ஜெயில் என்று அலைக்கழித்தது அன்றைய கலைஞர் அரசு. அதே போல் சேலத்தில் பகுத்தறிவு வாசகங்கள் அடங்கிய தட்டியை வைத்ததற்க்காக வயதான தோழர்களை கைவிலங்கு போட்டு நீதி மன்றத்திற்கு அழைத்து வந்ததும் க்லைஞர் அரசுதான் தோழரே. பாரட்ட வேண்டியதை பாட்டுவதும் கண்டிக்க வேண்டியதை கண்டிப்பதிலும் தி,க, ஒரு போதும் தயங்கியதில்லை

இருந்தாலும் உங்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் இப்போது ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆதரவு அலை வந்துள்ளதும் ஆங்காங்கெ ஆதரவுப் போரட்டங்கள நடத்த முடிவதற்கு காரணம் கலைஞர் அரசு தான் காரணம் என்பதையும் மறக்க முடியாது.

கொள்கை(principles) வேறு திட்டங்கள்(policies) வேறு

என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு எந்தக் குழப்பமும் வராது சிவா.

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி