Search This Blog

21.4.09

"வள்ளலாரும், பெரியாரும்"









"எல்லா மதத்திலும் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் பெரியார் ஓரளவு ஏற்றுக்கொண்ட மதங்கள் புத்தமதமும், இஸ்லாமும் ஆகும். இதில் எந்த மதத்தைத் தழுவினாலும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காரன் என்கிற முத்திரையோடு மற்ற மதத்துக்காரணைக் குறைகூற நேர்வதால் மதங்களை தழுவாதப் பொது மனிதனாக வாழச் சொல்கிறார் பெரியார். நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால் மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும் என்று விடுதலை இதழில் எழுதுகிறார்.

இதையே வள்ளலார்

ஜாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று ..... (5508) என்று இந்தச் ஜாதி மத இழிவுகளைப் பேயாட்டம் என்ற குறிப்பிட்டுப் பாடுவதோடு அவைகள் ஒழிந்து போகட்டும் என்று பாடுகிறார்.

நான்கு வருணம் என்னால் படைக்கப்பட்டிருக்கிறது என்று பகவத்கீதையில் கண்ணன் உபதேசிப்பதாக உள்ளது. ஆனால் வள்ளலாரோ

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ..... (4174)
என்று தனது சீர்திருத்தத்தை அருட்பாவில் காட்டி இந்தச் சமுதாயப் பாகுபாட்டை வன்மையாகக் கண்டிக்கிறார்."

------------மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி எழுதிய "வள்ளலாரும், பெரியாரும்" நூலிலிருந்து

2 comments:

கோவி.கண்ணன் said...

ஆகா,

வள்ளலார், பெரியார்.....என் வலைப்பதிவில் இணைந்தே படமாக இருக்கிறார்கள்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்.

உங்கள் வலைப்பதிவை தவறாமல் பார்த்து வருகிறேன் தோழர்.

நன்றி.