Search This Blog

14.4.09

பெரியார் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லையா?


அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம். "தமிழ் ஓவியா"வலைப்பதிவை தொடர்ந்து பார்த்து படித்து ஊக்கப்ப்படுத்தியும் விமர்சித்தும் வரும் அனைத்து தோழர்களுக்கும் புரட்சியாளர அம்பேத்கர் பிறந்த நாள் (14-4-1981) சிந்தனையாக கீழ் கண்ட கட்டுரை ஒன்றைத் தருகிறேன். இக்கட்டுரை 2004 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது.

(தற்போது குடும்பச் சுமையும், பணிப்பளுவும் அதிகமாகி விட்டதால் எழுத்துப்பணி தடை பட்டுள்ளது. மீண்டும் முன்பு போல் எழுத்துப் பணியை தொடர ஆவன செய்து வருகிறேன்.

இக்கட்டுரையை "மனிதநேய சமுதாயப் பணியில் என் பங்கும் இருக்கட்டும் என்று கூறி தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய நண்பர் "ஆதிஆனந்த் அப்பா" அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடமுள்ள கையெழுத்து பிரதிகளையும் தட்டச்சு செயது தருவதாக வாக்களித்துள்ளார்)

அம்பேத்கர் பிறந்த நாள் சிந்தனையாக இதை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்

------------------------------------------------------------------------------------மார்ச் 2004"புதியகோடாங்கி" இதழ் கேள்வி-பதில் பகுதியில் பெரியார் பற்றிய இரண்டு கேள்விகளுக்கு "முனிமா" பதில் அளித்துள்ளார்


கேள்வி:- 1 - பெரியார் நாடகம் நடத்துகிறார்கள். நீங்கள் பார்த்தீர்களா, உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்?.

பதில்:- தமிகத்தில் பெரியார் நாடகம் தான் நாற்பது ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அம்பலத்தில் ஆடியதை அறையில் அடக்கி வாசிக்கிறார்கள. இதைப்போய் மெனக்கெட்டு பார்க்க வேணடுமா?

கேள்வி:- 2 - பெரியார் தலித்துகளுக்கு எதுவுமே செய்யவில்லையா?

பதில்:- தாழ்த்தப்பட்ட தலித் சமுகத்தில் பல தலைவர்கள் ஈ வெ ராவுக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள. ஆகையால் ஈ வெ ராவை தலித்துகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் தலித்துகளின் பார்ப்பன எதிர்ப்பை தனதாக்கியதோடு மட்டுமல்லாது. பொது எதிரியைக் காட்டி திராவிட அரசியலில் தலித்துகளின் தனி இயக்கங்களைக் கரைத்து தலித்தல்லாதாருக்கு அதிகாரம் தேடித்தந்தவர் ஈ வெ ரா. தலித்துகள் தனி இயக்கமாவதன் அவசியம் முப்பதாண்டுகளுக்கு பிறகே உணரப்பட்டது. இந்த தாமதம் தான் ஈ வெ ரா தலித்துகளுக்ககுச் செய்தது.

“கலகக்காரர் தோழர் பெரியார்” என்ற வரலாற்று நாடகம் தற்போது தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் நடந்து வருகிறது. இந்த வரலாற்று நாடகத்தை நடத்துபவர்கள் பெரியார் இயக்கத்தைச் சார்ந்தவர்களோ, பெரியார் தொண்டர்களோ அல்ல.

கடந்த 25 ஆண்டுகளாக நிஜ நாடகம் நடத்திவரும் இடதுசாரி சிந்தனையாளரும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைகக்கழகத்தில் நாடகத்துறைப் போராசியராகவும் இருக்கும் பேராசிரியர் மு.இராமசாமி ஆவார். ஏன் பெரியார் நாடகம் நடத்துகிறோம் என்பதை விளக்கும் நாடகத்தின் ஒருபகுதி இதோ.

“சாதி மதவாத அச்சுறுத்தல் மேலோங்கி இருக்கிற இன்றைய நிலையில் மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், இந்துமத பயங்கரவாத்திற்கு எதிராகவும் செயல்படவேண்டிய அவசியத்தேவை இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு இருக்கிறது. அதற்குப் பெரியார் சிந்தனைகள்தான் உடனடித்தேவையா இருக்கும்னு நெனைக்கிறோம். பெரியாரின் தேவை அவசியங்கிறதுனாலதான் இந்த நாடகம்"
(வல்லினம், பிப்-ஜூலை 2003)

ஒரு காலகட்டத்தில் இடதுசாரி சிந்தனையார்கள் பெரியாரைப் புறக்கணித்தும், பெரியாரியலை விமர்சித்தும் வந்தது மாறி இப்போது அவர்களே பெரியாரை புதிய பிரச்சார முறையில் அதாவது கைக்காசைச் செலவழித்து, பொதுக்கூட்டங்கள் போட்டு பெரியாரின் கருத்தை மக்களுக்கு சொல்லிவந்தோம். ஆனால் நிஜ நாடக்குழுவினர் பெரியாரின் கருத்தை மக்களே காசு கொடுத்துக் கேட்க வைத்துள்ளனர். காசு கொடுத்து நாடகத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் கூடுகிறதென்றால் பெரியாரின் தேவை இன்றைய சூழலில் எவ்வளவு அவசியமானது என்பதை முனிமா புரிந்து கொள்ளட்டும்.

பெரியார் தமிழக மக்களின் ஒவ்வொரு அணுவிலும், இரத்தத்திலும் உறைந்திருக்கிறhர். பார்ப்பனப் பாசாங்கு வாழ்க்கை வாழ்ந்து வரும் ‘முனிமா”வுக்கு வேண்டுமானால் பெரியார் தேவையில்லாமல் இருக்கலாம், ஒடுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்டு வாழ்ந்து வரும் எத்தனையோ முனிமாக்க்களுக்கு பெரியார் ஊனறுகோல் இன்னும் தேவைப்படுகிறது . "முனிமா" வும் பாசாங்கு வாழ்க்கையை உதறிவிட்டு உண்மையை உணர்ந்து ஒடுக்கப்பட்ட முனிமாக்களுக்கு உழைக்க முன்வரவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

இந்த நாடகத்தை மெனகெட்டு பார்க்க வேண்டுமா? என்கிறhர் முனிமா.

பார்த்திருந்தால் முனிமாவின் இரண்டவாது பதிலுக்கான பதில் கிடைத்திருக்கும் . இந்த நாடகத்தில் தாழ்த்தபட்டோருக்காகப் பொpயார் ஆற்றிய தொண்டு பற்றி பெரியார் பேசுவதாக வரும் பகுதி இது்

“1932 செப்டம்பர் 24ஆம் நாள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தியால் இழைக்கப்பட்ட பூனா துரோக ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு முன்பாக, காந்தி செத்தாலும் பரவாயில்லை இரட்டை வாககுரிமையுடன் கூடிய தனி வாக்காளர் தீர்வைக் கைவிட வேண்டாம் என்று அம்பேத்காரைக் கேட்டுக்கொண்டேன். இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாசகத்தின் பொருளைத் தங்களுக்குச் சாதகமாகத் திரித்துக் கொண்ட பார்ப்பனர்கள் அரசியல் சட்டத்தில் 16வது பிரிவில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தாழ்தத்ப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த கல்வியில் இடஒதுக்கீடு உரிமைக்கு எதிராக நீதி மன்றம் சென்றபோது தமிழ்நாட்டில் நான் தலைமையேற்று நடத்திய கிளர்ச்சியால்தான் 16(4) உடபிரிவின்படி பிற்படுத்தப்பேட்டோர் பழங்குடியின மக்கள், தாழ்த்த்பட்டோருக்கான கல்வியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் முதல் சட்டத்திருத்தம் வந்தது"

(இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் பெற்றுத்தந்தவர் பெரியார். "வல்லினம்"-பக்67 மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டே பெரியார் செயல்பட்டார். ஆனால் மனித நேயத்திற்கு எதிரியாய் இருப்பவர்கள் (இன்றுவரை) பார்ப்பனர்கள்தான் என்பதைத் தன் அனுபவங்கள் மூலமாய் உணர்ந்து அவர்களை எதிர்த்தார். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைத்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை ஆத்ரித்தும் வரவேற்றும் செயல்பட்டவர் பெரியார்.அவ்வகையில் தாழ்த்தப்பட்டோர் தனி இயக்கமாகச் செயல்பட்டதைப் பெரியார எப்போதும் எதிர்த்ததில்லை . இதைப் பெரியார் தெளிவுப்படுத்தும் பகுதி இதோ:

“என்னையோ அல்லது திராவிடர் இயக்கத்தையோ வீணாகக் குறை கூறினாலும் இல்லாவிட்டாலும் ஒன்று கூறுகிறேன். தோழர்களே திராவிடர் இயக்கம் தன் கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்தநாட்டில் பள்ளன் பறையன் என்ற இழி சாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன். தாழ்த்தப்பட்டடோர் பெடரேசனில் சேருவதை யான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை, அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள். திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனை தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமை உண்டு”
(விடுதலை 8.7.1947)

இன்று வரை பெரியார் இயக்கம் இவ்வழியிலேயே பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் பெடரேசன் அரசியல் கட்சியாகி இப்போது எப்படியுள்ளது என்பதையும் பார்ப்பன சங்கராச்சாரி செயேந்திரனின் காலடியில் தாழ்த்தப்பட்டோர் மீட்சிக்காக அருள்பெற்றுக கொண்டிருக்கும் நீலப்புலிகள் மற்றும் டாக்டர் அம்பேத்கார் மக்கள்சபை முன்னோடிகள் பற்றி முனிமா நடுநிலையுடன் சிந்தித்து முடிவெடுக்கட்டும்.

பார்ப்பனர்களால் இன்றுவரை அண்டமுடியாத அக்கினியாய் இருப்பவர் பெரியார். எனவே பெரியாரின் பார்ப்பன எதிhப்பின் அவசியத்தை உணர்ந்து தலித்துகள் தனி இயக்கமாக இயங்கி (பெரியாரும் இதையே 1930-1933 கால கட்டங்களில் வலியுறுத்தியுள்ளார்) தலித் விடுதலையை வென்றெடுக்கட்டும். அதற்குப் பெரியார் இயக்கங்கள் என்றும் உறுதுணையாய் இருக்கும்.

---------------நன்றி:-"களத்துமேடு" இதழ் ஏப்ரல் 2004 பக்கம்:-17-19

5 comments:

Unknown said...

//பார்ப்பனர்களால் இன்றுவரை அண்டமுடியாத அக்கினியாய் இருப்பவர் பெரியார்.//

அம்பேத்கர் பிறந்த நாளை பி.ஜே. பி. கொண்டாடுகிறது. ஆனால் பெரியாரிடம் நெருங்க முடியாமல் இருப்பது உண்மைதான் தோழர். வை.கோ. கொண்டாடிய பெரியார் பிறந்த நாள் கூட்டத்தில் பெரியார் என்ர பெயரையே உச்சரிக்காமல் கலந்து கொண்டவர்கள்தான் வாஜ்பேயிக்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு

Thamizhan said...

அனைவர்க்கும் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்றே பெரியாரிடம் ஒருவர் கேட்டார்
"ஆதி திராவிடராகிய நான் உங்களுடன் சேர்வதால் எனக்கு என்ன லாபம்?" என்று.
பெரியார் சொன்னார்" உங்களுக்கு லாபம் இல்லை.நஷ்டந்தான். நீங்கள் ஆதி என்பதை இழந்து திராவிடர் ஆவீர்கள்" என்று.
பெரியாரைக் குறை கூறும் தோழர்கள் அம்பேத்கர் அவர்களது வார்த்தைகளைக் கவணித்தாலே போதும்.நன்கு படிக்கட்டும்.
சென்னையிலே அவரைச் சந்தித்து எங்களுக்குத் தலைவர் வேண்டும் என்ற போது அது தான் பெரியார் இருக்கிறாரே அவரை விட உங்களுக்கு வேறு தலைவர் எதற்கு என்றாராம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா

அப்ரகாம் said...

பெரியார் சூத்திரர்களின் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார் என்பதற்கு இனறைய தமிழக அரசியலே சாட்ச்சி,சுதந்திறம் வாங்கி 62 ஆண்டுகளாகியும் தமிழ் நாட்டில் ஓர் தாழ்த்தப்பட்டவர்கூட முதல்வர் ஆக முடியவில்லையே அது ஏன்? எல்லாம் பெரியார் செயல் என்பதில் மாற்றுக் கருத்து உங்களுக்கு இருக்குமானால் இதைப்பற்றி மீன்டும் விவாதித்து பயனில்லை.