Search This Blog

2.11.14

தமிழக மீனவர்கள் அய்வருக்குத் தூக்குத் தண்டனை-இந்திய அரசை அச்சுறுத்துவதே நோக்கம்!


தமிழக மீனவர்கள் அய்வருக்குத் தூக்குத் தண்டனை என்பது
இலங்கை அரசு, இந்திய அரசை அச்சுறுத்துவதே!
பொங்குமாக்கடலாய் தமிழர்கள் பொங்கி எழுமுன்
மத்திய அரசு, தண்டனையை ரத்து செய்விக்க முயல வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழக மீனவர்கள் அய்வருக்கு இலங்கை நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு உண்மையாக துரிதமாக செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2011 நவம்பர் 28 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து  712 விசைப்படகுகள் கடலுக்கு சென்றன. அன்றிரவு கச்சத்தீவு அருகே நூற்றுக்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வில்சன், அகஸ்டஸ், லாங்நைட்ஆகியோரை சிறைப் பிடித்துச் சென்றனர்.
பிடித்துச்சென்ற போது இலங்கை கடற்படை சார்பில் எல்லை கடந்ததாக உங்களைக் கைது செய்து இலங்கை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகத்தான் தெரிவிக்கப் பட்டது, இது குறித்து அகஸ்டிஸ் என்பவர் தமிழகத்தில் உள்ள தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறைப் பிடித்துச் சென்ற மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் 2 நாட்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அவர்களிடம் சிங்கள மொழியில் உள்ள சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் இலங்கை ஊர்க்காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை அடுத்து ஊர்க்காவல் படையினர் எல்லை தாண்டியதாக கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவர் மீதும் போதைப்பொருள் கடத்தி வந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்ததாக கூறினார்கள். மீன்பிடிப் படகில் ஹெராயின் போதைப் பொருள் கடத்திச் சென்று நடுக் கடலில் பைபர் கிளாஸ் படகில் காத்திருந்த இலங்கையைச் சேர்ந்த மூவரிடம் கொடுத்ததாகவும், 8 பேர்களும் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது.  அப்பட்டமான பொய் வழக்கு!
இது தொடர்பாக கியூ பிரிவு காவல் துறையினரும், தமிழக உளவுத்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை முடிவில் இது பொய் வழக்குதான் என்று அரசுக்குத் தெரிவித்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக இலங்கை மூத்த வழக்குரைஞர்கள் வாதாடி னார்கள் என்றாலும் பயனில்லை.

அய்வரையும் விடுவிப்பதாக ராஜபக்சே சொன்னது என்னாயிற்று?

நரேந்திரமோடி பதவியேற்பு விழாவுக்கு  வருவதற்கு முன் இப்பொழுது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அய்வரையும் அன்று விடுதலை செய்வதாக அறிவித்தாரே ராஜபக்சே - அது என்னாயிற்று? (26.5.2014) பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்கக் கூடாது - அவரை அழைக்கக் கூடாது என்று தமிழ்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பைத் திசை மாற்ற ஏமாற்றிட அந்த அறிவிப்பா? இது ஒரு முக்கியமான விஷயம்! - மக்கள் மறந்திருந்தால் அதனை நினைவூட்டு வதுதான் எங்கள் முக்கிய வேலை. இது மிகப் பெரிய பிரச்சினை! இலங்கை அரசின் இந்த ஏமாற்று நயவஞ்சக செயலைக் கண்டிக்க உலக நாடுகள் எல்லாம் முன் வர வேண்டும்.
அய்வரையும் விடுதலை செய்யக் கோரி தமிழர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தியே வந்துள்ளனர். இந்நிலையில் கொழும்பு உயர்நீதிமன்றம் தமிழக மீனவர்கள் அய்வர், இலங்கை மீனவர் மூவர் உட்பட எட்டு பேருக்கும் நேற்று (30.10.2014) தூக்குத் தண்டனை  விதித்துத் தீர்ப்புக் கூறியுள்ளது.


உலகமே கொந்தளிக்கிறது!

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும் கடந்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அளவுக்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு தொடர்ந்து காட்டி வரும் அலட்சியப் போக்கு - எவ்வளவு பெரிய விபரீதமான விலையைக் கொடுக்க வைத்துள்ளது  என்பதை நினைத்தால் வேதனையும், கோபமும் பீறிட்டுக் கிளம்புகின்றன.
கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்ததன் விளைவே!
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான  கச்சத் தீவைத் தாரை வார்த்த இந்தியா இதற்குப் பதில் சொல்லியாகவேண்டும். இதற்குப் பிறகாவது கச்சத் தீவு பிரச்சினையில் மறு பரிசீலனைக்கு ஆட்பட வேண்டும். மத்தியில் ஆட்சி மாறியிருக்கலாம்;  அது பொருட்டல்ல; நம் நாட்டு மக் களுக்குத் தூக்குத் தண்டனை இன்னொரு நாட்டில் சட்ட விரோதமாக - நியாய விரோதமாக அளிக்கப்பட்டுள்ளது  என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கேரள மீனவர் இருவரைக் கொன்ற இத்தாலியர் விஷயத்தில் இந்திய அரசு எப்படி நடந்து கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!
இந்தியப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இதுவரை வாய் திறக்கவில்லை. மேல் முறையீடு செய்யப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாம். இது போதுமானதல்ல.
தேவை கடுமையான அணுகுமுறை
எந்தளவுக்குக் கடுமையான அணுகுமுறை மேற் கொள்ளப்பட வேண்டுமோ, அந்த எல்லை வரைக்கும் செல்ல இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை அங்குள்ள நீதிமன் றங்கள் எல்லாம்  அதிபரின் கைப்பாவைகள்தாம். இலங்கை உச்சநீதிமன்ற தலைமைப் பெண் நீதிபதியாகவிருந்த சிராணி பண்டார நாயகா - தனக்குத் தாளம் போடவில்லை என்பதற்காக அதிபர் ராஜபக்சே என்ன செய்தார்? அவர்மீது குற்றச்சாற்றுகள் சுமத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, தலைமை நீதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டாரே!
எனது 54 ஆண்டு வாழ்க்கையில் 32 ஆண்டுகள் என்னுடைய தாய் நாட்டுக்காக பல்வேறு வழிகளில் சேவை செய்துள்ளேன்;  சட்டத்தின் ஆட்சியும் இயற்கை நீதியும் தூக்கி எறியப்பட்டதுடன் காட்டுமிராண்டித்தனமாக சின்னா பின்னம் செய்யப்பட்டுள்ளது!  என்று அந்நீதிபதி கூறினார்.
தலைமை நீதிபதி சில்வா என்ன கூறினார்?
முள்வேலியில் முடக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் ஏதிலிகளைப் பார்வையிட்ட அன்றைய தலைமை நீதிபதி சரத் என்சில்வா வெளிப்படையாகவே சொல்லவில்லையா?

இலங்கைத் தீவில் ஒரே இனம்தான் உள்ளது என்றோ பெரும்பான்மை என்றும், சிறுபான்மை என்றும் ஏதுமில்லை என்று  நாம் கூறுவோமேயானால் அது அப்பட்டமான பொய்யாகும். இந்த நாட்டின் சட்டங்களிலிருந்து தமிழர்களின் இன்னல்களும், துயரங்களும் நமது நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படுவதில்லை. இதை நான் வெளிப்படையாகக் கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று கூறினாரே - 2005 ஆண்டு தேர்தலுக்கு முன் ஒரு வழக்கில் மகிந்தராஜபக்சேவை சிறையில் அடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பு நீதிபதி என்கிற முறையில் எனக்குக் கிடைத்தது; அப்படி சிறையில் அடைக்காமல் இருந்ததற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன் என்றும் அந்த நீதிபதியே சொன்னதுண்டு.

இப்பொழுது தூக்குத் தண்டனை வழங்கியுள்ள நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன என்பவர் அரசு வழக்குரைஞராக இருந்தவர் தானே! அதிபர் கோலெடுத்தால் ஆடுபவரே(His Master’s Voice).

இலங்கையில் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்றவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்னாயிற்று?
1987 ஜூலை 29ஆம் தேதி அன்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்றார். மறுநாள் அங்கு இராணுவ அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிங்களக் கடற்படை வெறியன் விஜிதரோகன விஜய முனி துப்பாக்கியின் பின் பகுதியால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கினான். குனிந்து கொண்டதால் உயிர் தப்பினார்.

தோள் பட்டையில் பலத்த அடி விழுந்தது. இராணுவச் சட்டப்படி அவனுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுக் குள்ளேயே அவனுக்கு விடுதலை வழங்கப்பட்டது. சிறையில் நான் நன்றாக நடத்தப்பட்டேன் என்று கூடக் கூறினான்.

ராஜீவ் தாக்கப்பட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் என்ன கூறினான்?

மரணத்தைக் கொடுக்கும் தாக்குதலைத்தான் தொடுத்தேன். ஆனால் உயிர் தப்பி விட்டார் ராஜீவ்காந்தி. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை நான் விரும்பவில்லை என்று கூறினான்.

இந்தியப் பிரதமர் ராஜீவைத் தாக்க முயன்றது - கொலை செய்வதற்கே என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த வருக்குச் சட்டப்படி கொலை முயற்சியின் கீழ் கடுந் தண்டனையைக் கொடுத்திருக்க வேண்டும்.  இலங்கை நீதிமன்றமோ கண் துடைப்புக்காக ஆறு ஆண்டுகள் தண்டனை என்று அளித்தது. ஆனால்,  இரண்டாண்டுக் குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டாரே!


இந்திய அரசை அச்சுறுத்துவதே நோக்கம்!
தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை என்பது இந்திய அரசை அச்சுறுத்தவே என்பதில் அய்யமில்லை.
மக்கள் எரிமலை வெடிக்கும்முன் மத்திய அரசு செயல்படட்டும்!
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? தமிழ்நாடே கட்சிகளை மறந்து பொங்குமாக்கடலாக பொங்கி எழுந்து விட்டது - அரசு ரீதியாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
இன்னும் ராஜ தந்திரம்தானா? வெளிநாட்டுப் பிரச்சினை என்ற நெளிவு சுளிவுக்குள் பதுங்கிக் கொள்ளப் போகிறதா?

மக்கள் எரிமலை வெடிக்குமுன் மத்திய அரசு விரைந்து செயல்படட்டும்! செயல்படவும் வேண்டும்.
      --------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்-" விடுதலை"1-11-2014
------------------------------------------------------------------------------------------------------------------


5 பேர்களையும் விடுதலை செய்வதாக மே 26இல்
அறிவித்தபிறகு இப்பொழுது தூக்குத் தண்டனையா?

For the family members of the five fishermen — P. Emerson (39), P. Augustin (32), R. Wilson (42),
K. Prasad (32) and J. Langlet (22) of Thangachimadam near Rameswaram — the news of the order came as a “bolt from the blue.”
“I have been yearning to see my son; God has answered my prayers. Rajapaksavukku Koodana Kodi Nandri [Many thanks to Rajapaksa],” said Ms. Infanta, mother of Langlet.
U. Arulanandham, president of the Alliance for the Release of Innocent Fishermen, and fishermen leaders P. Sesu Raja and N. J. Bose hoped the gesture would pave the way for release of all Indian fishermen from Pakistani and Sri Lankan jails.
-     ‘The Hindu’  May 26 2014

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுதலைச் செய்ய ஆணையிட்ட ராஜபக்சேவிற்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ராஜபக்சேவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகைதரும் முன் இலங்கை சிறையில் இருக்கும்  தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கூறி அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். ராஜபக்சேவின் உத்தரவை அடுத்து அனைத்து தமிழக மீனவர்களும் விடுதலையாகின்றனர்.

இவர்களில் 2011 போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பி.எமர்சன் (39), பி.அகஸ்டின் (32), ஆர்.வில்சன் (42) கே பிரசாத் (32), ஜே.லாங்லெட் (22) இந்த அய்ந்து பேரும் அடங்குவர். 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக-இலங்கை கடற்பகுதியில் போதைமருத்து கடத்தியதாகக் கூறி இலங்கை கடற்படையினால் கைதுசெய்யப்பட்டவர்கள். தனுஷ்கோடியில் இந்த அய்வரின் விடுதலைச் செய்தி தொடர்பாக லாங்லெட்டின் தாயார் இன்ஃபந்தா கூறியதாவது எந்தக் குற்றமும் செய்யாத எனது பையனை போதைப்பொருள் கடத்தியதாக கைதுசெய்து இலங்கை சிறையில் வைத்துள்ளனர்.

எனது பையனை மீட்டுத் தரும்படி அன்றாடம் கடவுளிடம் மன்றாடிக்கொண்டு இருந்தேன். எனது பிராத்தனைகளை கடவுள் கேட்டுவிட்டார். அவர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்ட ராஜபக்சேவிற்கு கோடான கோடி நன்றிகள் என்று கூறினார். மீனவர் சங்கத் தலைவர் பி.சேசுராஜ், என்.ஜே.போஸ் போன்றோரும் மீனவர்களை விடுதலை செய்த ராஜபக்சேவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
(தி இந்து 26.5.2014)
--------------------------------------------------------------------------------------------------------------------------
Read more: http://viduthalai.in/e-paper/90357.html#ixzz3HpZdkoqC

21 comments:

தமிழ் ஓவியா said...

'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள்ள ஏழை,எளிய அடித்தட்டு மக்கள்,கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது.

இப்போது சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம்.அதற்கு தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களின் மகத்தான தியாகமும்தான் காரணம்.''

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் (ஜூனியர் விகடன் 29.10.14.பக்.20.)

தமிழ் ஓவியா said...

'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள்ள ஏழை,எளிய அடித்தட்டு மக்கள்,கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது.

இப்போது சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம்.அதற்கு தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களின் மகத்தான தியாகமும்தான் காரணம்.''

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் (ஜூனியர் விகடன் 29.10.14.பக்.20.)

தமிழ் ஓவியா said...

நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?
அண்ணா .: இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.

நிருபர் : இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?
அண்ணா .: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துவிடலாம்.

நிருபர் : அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.
அண்ணா .: இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?
அண்ணா .: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.

நிருபர் : ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணா .: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.

நிருபர் : மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.

அண்ணா .: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.

காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.

- இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா
அளித்த பேட்டியிலிருந்து ( 11 - 10 1950 )

தமிழ் ஓவியா said...

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

கலைவாணரும், பழைய சோறும்…!
...........................................................

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!”

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு,

“இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர்,

“ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்…

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்…

அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர்

சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி…

மதுரமும் அசந்து விட்டார்.

தமிழ் ஓவியா said...

ஒன்றுமே இல்லை

பார்ப்பனரின் பதவிக் கொள்கை யெல்லாம், எல்லாம் தனக்கே வரவேண்டும். தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக் கூடாது - கீழே கொட்டிவிடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என் பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
(விடுதலை, 17.10.1954)

Read more: http://viduthalai.in/page-2/90470.html#ixzz3I14YgJTt

தமிழ் ஓவியா said...

இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பூண்டு


கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புத மான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

பூண்டின் மருத்துவக் குணங்களால் ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள் வோருக்கு பலவித நோய்கள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர்.

நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும். பூண்டு இருக்கும் போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது. இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் உண்ணும்போது செரிமான சக்தியைத் தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. இது வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிடவேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.

இதன் தோலில் அல்லிசின் என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும் போது நமக்கு முழுமையான பலனைத் தரும். கொழுப் பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லை எனலாம். அதனால் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும் இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும் படியும் கிடைக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/90445.html#ixzz3I15YXi98

தமிழ் ஓவியா said...

காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்பு கிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகி விடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்து விடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்குப் பசி அதிகமாகும்.

காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் அதிகமாகும்.

தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக் குத்தீனிகளால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்ட காலை உணவை தவிர்க்காதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15hAQiz

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை உடனே நீக்குக


விடுதலைப்புலிகள் அமைப்பு ஒன்றும் பயங்கரவாத ஒன்றல்ல; எனவே, பயங்கரவாத அமைப்புப் பட்டியலி-லிருந்து நீக்கி அந்த அமைப்பை விடுதலை செய்ய வேண்டும் என்று அய்ரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன் வைக்கப்படுகிறது.

நம்மைப் பொறுத்தவரையில் இந்தியாவில் விடுதலைப்-புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது நீக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டோம் (7.10.2010) அந்த அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமைப் பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர் பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங்-களாக்கப்-படும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

இலங்கை அரசே இங்கே விடுதலைப்-புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படை-யிலோ என்று நமக்குப் புரியவில்லை.
காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சலைட்கள் பெருகிய பல வடமாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்-கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினைத் (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுக வேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிட வேண்டும் _ முன்னுரிமை அதற்குத் தான் தரப்பட வேண்டும் என்று இன்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.

இந்த நியாயத்தை, சட்டப்படியான நிலையை இந்திய அரசு கவனம் செலுத்தத் தவறினாலும், அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருப்பது _- வரவேற்கத்தக்க-தாகும்.

தமிழ் ஓவியா said...

இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அந்த அமைப்பைப்பற்றி தவறான புரிதல் இருந்திருக்குமேயானால், அதிலிருந்தும் விடுபட இத்தீர்ப்புப் பெரிதும் பயன்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் திடீரென்று ஒரு நாள் காலையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுவிடவில்லை.

ஈழத் தமிழினமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இனப்படுகொலையில் ஈடுபட்டது சிங்கள அரசு.

தமிழீழப் பெண்களைக் கதறக் கதறப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்களே சிங்கள இனக் காடையர்கள்! தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகளைத் தொங்க விடவில்லையா சிங்கள வெறியர்கள்?

தந்தையின் முன் மகளையும், அண்ணன் முன் தங்கையையும், மகன் முன் தாயையும் நிர்வாணப்-படுத்தி வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டதைப் பார்த்த பிறகும் மானமுள்ள எந்த மனிதன்தான் ஆயுதம் தூக்காமல் அமைதியாய் -_ சோற்றாலடித்த பிண்டமாய் இருப்பான்? அதுதானே ஈழத்தில் நடந்தது!

காலங் கடந்தாலும் விடுதலைப்புலிகளின் உண்மையான போராட்டம் என்ன என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!

இந்த நேரத்தில் இந்திய அதிகாரிகள் வர்க்கம்பற்றி அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது -_ சரியானது!

விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான மோதல் பிரச்சினையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக இந்தியத் தரப்பிலான தகவல்கள் நம்பத் தகுந்ததாகக் கருத முடியாது என்ற அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் கருத்தும், கணிப்பும் சாதாரண-மானதல்ல!

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பு எந்த வகையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்று சொல்லத் தேவை-யில்லை.

அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாக, இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகு-முறையில் புதிய மாற்றம் வருமேயானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...


பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.

- அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்

-----------

பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

-----------

தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்

-----------

பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.

- டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்

-------

ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.

- ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவி

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!

தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.

- மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்

----------

ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.

- சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

-----------

சொல்றேங்க!

ஓ... இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?

ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஜீவகாருண்யம் படும்பாடு!

ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?

அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!

காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?

காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்... அதுவல்லவோ உயிர் வதை!

சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைகளின் அடிப்படையில்....


நம்பிக்கைகள் பிறக்கின்றன
நம்பிக்கைகள் சாகின்றன
நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்

ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது
இன்னொருவனின் நம்பிக்கை
ஒருவனின் கழுத்தை அறுக்கிறது
ஒரு நம்பிக்கை
அசுரனைக் கொல்கிறது
இன்னொன்று அந்தணன் கொன்றால்
அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது

நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்
அவைகளுக்குப் பெயரிடுகிறோம்
ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி
இன்னொன்றின் பெயர் கட்சி
நம்பிக்கை மதமாகிறது
சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன
சில தன்னை மாற்றிக்கொள்கின்றன

கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை
செத்து சுண்ணாம்பாகிவிட்டது
கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது
ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை
உலகத்தை விட்டு ஓடிவிட்டது
என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!

நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்
இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை
எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை
உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்...?

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...

காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு

காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்... என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.

கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.

விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்

என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.

இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?

நன்றி: வினவு

தமிழ் ஓவியா said...என்றும் பெரியார்தான் தலைவர்

{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}

வீர வணக்கம்!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.

கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.

இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

*****

பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.

அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க... போங்க... என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.

*****

சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.

*****

மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.

தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.

*****

என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

நேர்காணல்: மணிமகன்
தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)

தமிழ் ஓவியா said...

யார் பொறுப்பு?கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 23) அர்மேனியாவில் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்தார். முதலாண்டுக்கான கல்விக் கட்டணம் நிலத்தை விற்று சரி செய்யப்பட்டது.

இரண்டாம் ஆண்டுக் கட் டணத்தைக் கட்ட முடியாத நெருக்கடி. ஒன்றரை ஆண் டுக்குமுன் போச்சம்பள்ளி யில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கேட்டாராம். வங்கி விண்ணப்பமே தரவில்லையாம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரூ.20 லட்சம் கடன் தர நீதிமன்றம் உத்தர விட்டும் கடன் தராததால், மாணவன் கண்ணதாசன் அர்மேனி யாவிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? பெரும் பண முதலைகள் வாங்கிய கட னைத் திருப்பிக் கொடுப்ப தில்லை; தள்ளுபடி செய்யும் வங்கி கல்விக் கடனைக் கொடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம்?

Read more: http://viduthalai.in/e-paper/90496.html#ixzz3I6iJ6u3p

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் பரப்பக் கூடாது கருநாடக முதல்வர் வேண்டுகோள்

பெங்களூரு, நவ.4- கருநாடக மாநில முதல் வர் சித்தராமையா ஊட கங்கள் மூடநம்பிக்கை களைப் பரப்பக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின்னணு ஊடகங்கள் பல்வேறு வகையிலான மூடநம்பிக்கைகளைப் பரப் புவதிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விஜய கருநாடகா 15ஆம் ஆண்டு விழாவில் கரு நாடக முதல்வர் சித்தா ராமையா கலந்துகொண்டு பேசும்போது, ஊட கங்கள் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புவதில் கவனம் கொள்ளவேண்டும் என்று பேசினார்.

கெட்ட வாய்ப்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஜோதி டம் மற்றும் வாஸ்து, அற்பமான குடும்பப் பூசல் கள் குறித்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக ஒளி பரப்பிக் கொண்டிருக்கின் றன. இடைக்காலத்தில் நவீன, அறிவியல் காலத்தை நோக்கிய பார்வை ஊட கங்களுக்கு இருக்க வேண் டும் என்றார்.

அவர் கூறும்போது, குறைந்தது ஒரு மணி நேரம் முக்கிய செய்தித் தாள்களை வாசிப்பதிலி ருந்தே அந்த நாளுக்குரிய பணிகளைதான் தொடங் குவதாகக் கூறினார். உண்மையான பிரச்சி னைகளில் ஊடகங்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மற்றும் முதிர்ச்சியுடன் வளரும் உணர்வு மற்றும் தங் களையே உள்ளாய்வு செய்துகொள்ளவும் வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/90495.html#ixzz3I6idz700

தமிழ் ஓவியா said...

கூட்டு முயற்சியாம்

இலங்கை - இந்தியா இராணுவங்களுக்கிடையே கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் யுவா - குடோயா ராணுவ முகாமில் தொடங்கியது. நவம்பர் 22 வரை நடைபெறுமாம்.

இந்தியாவில் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று இலங்கையில் இந்தப் பயிற்சி நடந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். இலங்கைக்குச் செய்யப்படும் தூசி அளவு உதவியாக இருந்தாலும் அது ஈழத் தமிழர் ஒழிப்புக்கே பயன்படும் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-----------

விளையாட்டைப் பார்ப்பது குற்றமா?

இரானில் வாழும் கலானி என்ற பெண்மணி, இரானில் உள்ள ஆஸாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியைக் காணச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார்.
கைப்பந்துப் போட்டியை ஒரு பெண் பார்ப்பது கூடக் குற்றமா? இதில்கூடவா மதம்?

-----------

தந்திரம்!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாத பி.ஜே.பி. காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் 11 முசுலிம் வேட்பாளர்களை நிறுத்துகிறதாம். வேறு வழியில்லை என்கிற பட்சத்தில்தான் இந்த முடிவு என்பதை மறந்து விடக் கூடாது.

Read more: http://viduthalai.in/e-paper/90499.html#ixzz3I6inRVKX

தமிழ் ஓவியா said...

நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்


தமிழ்நாட்டில் இவ்வாண்டு அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுக் காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலை. இவ்வாண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டாலும், தண்ணீர் கடைமடை போய்ச் சேரவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.

ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்படாதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பாக பொதுப் பணித்துறை மீது விவசாயிகள் ஒரு மனதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

விவசாயம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையாக இருக்கும் பொழுது, அதற்கான முன் கூட்டியே செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி களைச் செய்வதைவிட அரசுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? அதுவும் அதற்கென்றே ஒருதுறை இருக்கும் பொழுது திட்டமிட்ட வகையில் செயல்பாடு இல்லை என்பது எந்த வகையிலும் மன்னிக் கப்படவே முடியாத குற்றமாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஏன் உறக்கமோ தெரியவில்லை.

காலந் தாழ்ந்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு அறுவடை செய்யப்படும் கால கட்டத்திலோ கன மழை பொழிந்து பயிர்கள் நீரில் மிதந்து அழுகும் நிலைக்கு ஆளாகி விட்டன. போதிய வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். இந்த விவசாயத் தொழில் என்ன பாவம் செய்ததோ என்று விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் புலம்பி வருகின்றனர்.

கருநாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அதனால் விவசாய தொழில் தமிழ்நாட் டில் நசிந்து விட்டது என்று நியாயமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம். ஆனால், தமிழ்நாடு அரசோ, அந்த விவசாயம் நிமிர்ந்து நிற்பதற்கான வழிமுறை களை, திட்டங்களைச் செயல்படுத்துவதில்லையே இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?

ஒன்று காஞ்சி கெடுக்கும் அல்லது பெய்து கெடுக் கும் இயற்கை என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாகும்.

விவசாயத்தையே தம் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இயற்கையின் உற்பவத்தின்மீது இத்தகு நேரத்தில் கோபம் கொள்வதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நமது கவலையெல்லாம் பருவ காலச் சூழலுக்கு ஏற்ப அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஏன் சோம்பிப் போயின என்பதுதான்!

இது ஒருபுறம் இருந்தால், கன மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அவலம் - குறிப்பாக தலைநகரமாகிய சென்னையோ அவலத் தின் உச்சமாகும். இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஒரு தலைநகரம் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தால் அதனைத் தாக்குப் பிடிக்கும் வலுவில் இல்லை; பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு!

எப்படியோ சமாளித்து பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்றாலும் பள்ளிகளைச் சுற்றியே குளம் மாதிரி தண்ணீர்த் தேக்கம்.

வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்து ஏழை எளிய மக்கள் அல்லாடும் அவலத்தைத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

பாம்புகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் விருந் தினர்களாக வரும் கொடுமை! வறுமைதான் எவ்வளவு பெரிய கொடிய நோய்!

தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் அதன் காரணமாக தொற்று நோய்கள், டெங்குக் காய்ச்சல் பரவி வருவதாக அபாய அறிவிப்பு. மாநகராட்சி நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பஞ்சம் என்ற நிலைமை.

கிபீமீஹ் கிமீரீஹ்ஜீவீ வகைக் கொசுக்களால் டெங்கு பரவுகிறது வீட்டைச் சுற்றி நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஏடுகளிலும் அந்த அறிவிப்பு வந்து கொண்டுதானிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குவதற்கு அங்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களா பொறுப்பு? அவர்களால் என்னதான் செய்ய முடியும்? தேங்கிய தண்ணீரை இறைக்கும் வேலையையும் மாநகராட்சி தானே செய்ய வேண்டும்?

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் முதன்மையான இடம் கோயில்களுக்குதான் ஆக்கிர மிப்புகளால் வடிகால் அடைபட்டுப் போகும் நிலையில் தண்ணீர் வெளியேற வாய்ப்பு எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எல்லாம் அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?

ஓர் ஆண்டு ஏற்படும் அவலங்களைக் கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டிலாவது அந்தக் குறை பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திட முன் கூட்டியே திட்டமிட்டு தேவையான பணிகளைச் செய்து முடிக்க வேண்டாமா?

கடும் மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளான நிலை யில் கடுமையான பணிகளைப் போர்க்கால அடிப் படையில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ சொந்த கட்சிப் பிரச்சினை என்னும் சூழலில் சிக்கிச் செயலிழந்து கிடக்கிறது!

எத்தனை நாட்கள் தான் துக்கத்தை அனுசரித்துக் கொண்டு இருக்க முடியும்? அதிலிருந்து விடுபட்டு, அரசு தன் கடமையைச் செய்ய முன் வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வேண்டுகோள்!

Read more: http://viduthalai.in/page-2/90503.html#ixzz3I6j0CFb6

தமிழ் ஓவியா said...

நமது பணி...

மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

Read more: http://viduthalai.in/page-2/90502.html#ixzz3I6jCq4au