திறக்கலாம் கள்ளுக்கடையை!
"கள் இறக்கும் தொழிலாளர்கள் அமைதியான முறையில் தங்களுடைய கோரிக்கைகளை பல அமைப்புகளின் மூலமாக அரசுக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். கள் இறக்குவதற்கு ஆதரவும், அதே நேரத்தில் ஒரு பக்கத்திலே எதிர்ப்பும் இருப்பதை அறிய முடிகிறது. எனவே, அவசரப்பட்டு எந்த முடிவும் இப்போது எடுக்காமல் தேர்தல் காலத்து - தேர்தல் ஆணையத்து விதிமுறைகளை மதித்து - தேர்தல் முடிந்த பிறகு அந்தக் கோரிக்கையை எழுப்புகின்றவர்களின் சார்பாகவும், எதிர்ப்போர் சார்பாகவும் முக்கியமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து - அந்தக் குழுவின் யோசனைப்படி சமுதாய நலன் கெடாத முறையிலும் யாருக்கும் உடல் நலன் கெடாத முறையிலும் - உழைக்கும் தொழிலாளர்களுக்கு உடல் சோர்வை அகற்ற குறைந்த விலையில் கிடைக்கும் எளிமையான டானிக் என்று தந்தை பெரியாரே ஒருமுறை சொல்லி யிருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு எப்படி அதனை நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவு செய்வதுபற்றி அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் தெரிவித்துள்ளார் ("முரசொலி", 2.5.2009).
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் (2.5.2009) பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கள்ளுக்கடைகள் திறக்கப்படுவதை ஆதரித்து கருத்துக் கூறியுள்ளார்.
உழைப்பாளிகள் உடல்நலனுக்கு அறிவியல் அடிப்படையில் உடலியல் அடிப்படையில் கள் நலம் பயக்கும். எந்த அளவுக்கு கள்ளுக்கடைகளைத் திறக்கிறோமோ அந்த அளவுக்குச் சாராயக் கடைகளை மூடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் கருத்துக் கூறியுள்ளார்.
இதுபற்றிய வாத - பிரதிவாதங்கள் நடக்கத்தான் செய்யும்; ஏடுகளுக்கும் அடுத்த தீனி கூட அதுவாகவே இருக்கவும் கூடும்.
ஆனாலும், நடைமுறை சாத்தியத்தோடும், இன்றைய நிலையில் சாராயத்துக்கு அடிமையாகி தங்கள் உடலையும், பொருளையும் பாழடிடத்துக் கொள்ளும் நிலையிலிருந்து கரையேற சாத்தியமான துடுப்பு என்பது கள்தான்.
இதுபற்றி தந்தை பெரியார் அவர்கள் கூறுகிறார், மது விலக்கு என்பது உயிர்ச்சத்துள்ள மதுவை விலக்கிவிட்டு விஷச் சத்துள்ள மதுவை குடிகாரர்களுக்கு உதவுவது போலாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ("விடுதலை", 29.11.1962).
மதுவிலக்கினால் ஜாக்கிரதையான குடிப்பழக்கமுள்ளவர்கள்தான் கஷ்டப்பட நேரிடுமே ஒழிய சாதாரண குடிகாரர்களுக்குக் கும்மாளம்தான் என்றும் தந்தை பெரியார் கூறுகிறார்.
இன்றைய மதுவிலக்கினால் சர்க்கார் வருமானம்தான் கெட்டதே தவிர, அதனால் ஏற்படும் செலவு ஒன்றும் குறைந்தபாடில்லை என்கிறார் தந்தை பெரியார்.
கள் விற்பனை என்பது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? அதுபற்றியும் கருத்துகள் செலுத்திக் கூறியிருக்கிறார்.
மது ஆட்சி என்பது கர்ப்ப ஆட்சி; பர்த் கண்ட்ரோல் என்பதாக - குடிஆட்சி டிரிங்க் கண்ட்ரோல் என்பதாக நடத்தலாம் - இதனால் உடல் உழைப்பாளிகள் நலம் பெறுவார்கள். உரம் பெறுவார்கள். மதுவிலக்கு விலை நிர்ணயம் ஏற்பாடு செய்யவேண்டும். பழைய கள் புளிச்ச கள் இருக்கக் கூடாது. சுகாதார (நாணயமான) அதிகாரிகளை வைத்து மதுக்கடை மதுவைப் பரீட்சித்து சோதனை செய்யவேண்டும். சர்க்கார் அதில் அதிக வரும்படி எதிர்பார்க்கக் கூடாது என்பவைகளைக் கவனித்தால் மது மக்களுக்கு நன்மை பயப்பதாகலாம் (விடுதலை, 29.11.1962) என்று தந்தை பெரியார் மிகவும் நுணுக்கமாக ஆய்ந்து கருத்தினைக் கூறியிருக்கிறார்.
மதுவிலக்கு என்று ஒரு பக்கம் கூறிக்கொண்டு, காப்பிக் கடையும், சினிமாக் கொட்டகையும் பெருகி என்ன பயன்? கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால் கண்டிப்பாக இந்த வீண் செலவுகள் மிச்சமாகும் என்று எழுதி வைத்துக்கொள்ளலாம்.
சாராயம், அதுவும் விஷ சாராயம் குடித்து ஆண்டு ஒன்றுக்கு எத்தனை ஆயிரம் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள்? கள்ளுக் குடித்து செத்தார்கள் என்ற செய்தி உண்டா?
செலவும் குறைவு - உடலுக்கும் நல்லது என்கிற ஒன்றை ஏன் அரசு பரிசீலிக்கக் கூடாது? மருத்துவ அறிவியல்படியே கூட கள் உடல் நலனுக்கு ஏற்றது என்று தானே கூறப்படுகிறது. மக்கள் உடல்நலம் என்ற ஒரு கண்ணோட்டத்தோடுகூட இதனைப் பரிசீலிக்கலாமே!
முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து - இதற்கு அவர் உடன்பாடு கொண்டிருக்கிறார் என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.
கள்ளுக்கடைகள் அமலில் இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில் சாராயம் குடித்துச் செத்தார்கள் என்ற செய்தி கிடையாதே! பொதுமக்களும் கள்ளுக்கடை திறப்பதற்கு ஆதரவு கொடுக்கலாம் என்பதே நம் கருத்தாகும்.
-------------- "விடுதலை" தலையங்கம் 4-5-2009
Search This Blog
4.5.09
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
very nice pathivu..I am a new blogger"http://malarkootam.blogspot.com/2009/05/3.html"
திறந்தால் உள்ளூர் உற்பத்தி எருகும். நிறைய மக்கள் பிழைப்பார்கள். கள்ளிலே கலப்படம் என்பவர்களுக்கு -இப்பொழுது அரசுக் கடைகளில் என்ன ஒரிஜினலா கிடைக்குறது?
ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
அடப்பாவிகளா, உங்க அயோக்யத்தனத்துக்கு எல்லையே இல்லையா? ஏற்கெனவே திராவிட போதையில் மூழ்கி சொறி நாய்களா வாழும் கழகக் கண்மணிகள் மேலும் கள்ளுண்டு வெறி பிடித்து சமுதாயத்தை கன்னாபினாமாக சீரழிக்கவேண்டுமா?தமிழர்கள் சொமாலியாவிலிருந்து வந்தேறிய உங்களுக்கு வாழ்வளித்து கெளரவித்தார்களே அதற்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனா இந்த கேடுகெட்டத்தனம்.
தமிழ்க் குடிதாங்கி,மரம் வெட்டி ,மருத்துவர் அய்யா சொல்வதை கேளுங்கடா நாய்களா..கள்ளை விட பதப்படுத்தி பதநீராக விற்பது மேலல்லவா?பூரண மது விலக்கு என்பதை கொளகையாக வைத்து அவர் சொன்னதை கேட்டு உங்கள் திராவிட அயோக்யத்தனத்தை விட்டு விட்டு மனிதர்களாக வாழ முயற்சி செய்யுங்களேன் முண்டங்களே.
பாலா
பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் என்று ஏமந்து கொண்டிருக்கும் தமிழர்களின் பார்வைக்கு .....
இந்தப் பார்ப்பனர்களின் பின்னூட்டங்களைப் பாரீர்.
Post a Comment