Search This Blog
17.5.09
இன உணர்வு இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறது
கலைஞர் அரசின் சாதனை - இனஉணர்வுக்கு மக்கள் வரவேற்பு
ஜெயலலிதா கூட்டணி ஒப்பாரி முகமூடியை மக்கள் கிழித்தெறிந்தனர்
கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, மே 16- இன்று காலை 12 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு கலந்துரையாடலின் பொழுது செய்தியாளர் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-
கலைஞர் அரசின் சாதனைகளை இன உணர்வை மக்கள் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சியினரான ஜெயலலிதா, ராமதாசு, வைகோ, தா.பாண்டியன் கூறிய குற்றச்சாற்றினை மக்கள் நிராகரித்துள்ளனர் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக் காட்சிக்கு அளித்த தேர்தல் முடிவு பற்றிய பேட்டியில் கூறினார். தமிழ்நாட்டில் கலைஞர் அரசுக்கு அவருடைய ஆட்சித் திறனுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள் என் பதை இத்தேர்தல் முடிவு பிரதிபலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற் றியை பெற்றிருக்கிறது.
மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் அய்ந்தாண்டுகள் நீடித்த ஆட்சி அமைய வேண்டும். மதவெறியாளர்கள் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் தாங்கள் அளித் திருக்கின்ற வாக்குகள் மூலம் நிருபித்துள்ளனர். மக்கள் நிராகரிப்பு
கலைஞர் அரசுக்கு ஜெயலலிதா, ராமதாசு, வைகோ தா.பாண்டியன் ஆகியோர் ஆயிரம் எதிப் புகளை காட்டினர். ஆயிரம் குற்றச்சாற்றுகளை கூறினர். ஆனால் அந்த குற்றச்சாற்றுகள் எதுவும் எடுபடவில்லை. கலைஞர் அவர்கள் மீது கூறிய குற்றச்சாற்றை மக்கள் ஏற்கவில்லை நிராகரித்து விட்டனர்.
இன்று விடியற்காலை 2.30 மணிக்கு கூட
இன்றைக்கு கூட ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசுக்குத் தெரிவிக்க விடியற்காலை 2.30 மணிக்கு கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார் என்றால் தமிழர்கள் மீது அவர்களுக்கு எத்தகைய ஈடுபாடு உள்ளவர் என்பதைக் காட்டுகிறது.
ஈழப்பிரச்சினையில் திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மிக நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டுள்ள இயக்கங்கள். ஈழப்பிரச்சினையிலே திக, திமுக தீவிர மாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் பிறக்காத கட்சிதான் பா.ம.க போன்ற கட்சிகள்.
இந்த ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதா, ராமதாசு, வைகோ முதலியோர் ஆடிய நாடகத்தை மக்கள் தெளிவாகப் பார்த்துதான் இந்த தேர்தலில் தீர்ப்பு தந்திருக்கிறார்கள்.
தோழர் தா.பாண்டியன் அவர்கள் ஈழப் பிரச்சினைக்கும் அவருடைய கட்சிக்குமே சம்பந்தமில்லை என்று சொன்னவர்.
மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர்
எனவே மக்கள் ஈழப் பிரச்சினையிலே உண்மையாக ஈடுபாடு கொண்டவர்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டதால் தான் கலைஞர் தலைமையிலான தி.மு.க கூட்டணியை வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.
ஈழப்பிரச்சினையிலே வேடம் போட்ட ஜெயலலிதா, ராமதாசு, வைகோ, தா.பாண்டியன் போன்றவர்களுடைய அரிதாரம் இந்த தேர் தலில் கலைந்து போய் விட்டது. கலைஞர் அவர் கள் ஆட்சி அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களை செய்து கொண்டு வந்தார்.
திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றவர்களுக்குப் பாடம்
அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே ஒரே பல்லவி; கீறல் விழுந்த கிராமபோன் போல பாடியவர் ஜெயலலிதா. எனவே அவரது கூக்குரலை மக்கள் அகற்றி விட்டனர்.
கலைஞர் ஆட்சியிக்கு மேலும் அங்கீகாரம்
மேலும் இரண்டாண்டு காலம் சிறப்பான ஆட்சியை நீட்டிக்க கலைஞர் அரசுக்கு மேலும் அங்கீகாரம் அளித்துள்ளார்கள். கலைஞர் அவர்கள் பின்பற்றி வரும் பெரியார், அண்ணா கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.
மருத்துவர் இராமதாசு யார் ?
வி.பி.சிங் தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது அவரை யாரும் பார்க்கக் கூடாது. கதவை சாத் திக்கொள்ளுங்கள் என்று சொன்னவர் ராமதாசு. அவர் என்னென்ன முன்பு பேசினார்? இன் றைக்கு ஜெயலலிதா அவர்களுடன் சேர்ந்த பிறகு அவருடைய நிலை என்ன?
ராமதாசு அவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் பதவி சுகங்களை அனுபவித்துக்கொண்டு இடம் மாறிக்கொண்டே இருப்பவர். அணிமாறிக் கொண்டேயிருப்பவர் அவரைப்பற்றி ஒரு நூலையே நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம்.
இன்றைக்கு அவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இரண்டு திராவிட கட்சிகளும் கைவிட் டால் அவருடைய நிலை பரிதாபகரமான நிலையாகத்தான் என்றைக்கும் இருக்கும். இன்னொரு கட்சியுடன் (அதிமுக) சேர்ந்தும் கூட பா.ம.க அடையாளம் இல்லாமல் காணாமல் போயிருக்கிறது.
இனஉணர்வு அற்றவர்களை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அவர்களுடைய முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக, பாமக, மதிமுக, கம்யூ. கட்சி களின் அரிதாரம் இந்த தேர்தலில் கலைந்து போயிருக்கிறது.
ஜாதிக்கட்சி
ராமதாசு அவர்கள் ஜாதிக்கட்சியைத் துவக்கி இன்றைக்கு ஒரு லெட்டர் பேடு கட்சி என்பதை காட்டியுள்ளார். ராமதாசு கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை அவர்கள் போட்டியிட்ட அத்துணைத் தொகுதியிலும் தோல்வியையே தழுவியிருக்கிறார்கள். மாறி, மாறி ஒட்டிக் கொண்டிருந்த பா.ம.க கட்சி இன்று காணாமல் போயிருக்கிறது.
வைகோ - ராமதாசை நிராகரித்தனர்
18 மாதம் வைகோவை பொடா வில் கைது செய்து சிறையில் வைத்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட வைகோ ஜெயலலிதாவுடன் இந்தத்தேர்தலில் கூட்டு சேர்ந்து ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி என்பதைக் காட்டிக் கொண்டார்.
ஜெயலலிதா அவர்கள் தான் பிரதமர் வேட்பாளர் இதை நான் முன் மொழிகிறேன் என்று வைகோ முன்மொழிந்து முழங்கினார். ராமதாசு அதை வழிமொழிந்தார். அப்படிப்பட்ட இந்த கூட்டணியினரை மக்கள் நிராகரித்து தள்ளிவிட்டனர்.
ஈழப்பிரச்சினையிலே உண்மையிலே கண்ணீர் விட்டவர் கலைஞர். உண்மையிலே ஈடுபாடு காட்டியவர் கலைஞர்.
ஒரு வீட்டில் பறி கொடுத்தவர்கள் அழுவதற்கும் சிலர் கூலிக்கு மாரடிப்பதற்கும், ஒப்பாரி வைப்பதற்கும் நிறைய வித்தியாசத்தை நாம் நேரிலேயே கண்டு பிடித்து விடலாம்.
1971 தேர்தல் நிலை
1971 லே நடைபெற்ற தேர்தல் ஒரு இன உணர்வுத் தேர்தல் போல் தான் நடைபெற்றது.
நாங்கள் இந்த தேர்தல் (2009) பிரச்சாரத் திற்குச் சென்ற பொழுது கலைஞர் அவர்களுடைய ஆட்சியின் சாதனைகளை சொன்ன பொழுது பொது மக்களுடைய முகத்தில் மலர்ச் சியையும், கைதட்டலையும் பார்த்துதான் இது வெற்றிக் கூட்டணிதான் என்பதை அறுதியிட்டு பிரச்சார கூட்டங்களில் சொல்லி திரும்பினோம்.
அதே போல இன்றைக்கு வெற்றிக் கூட்டணியாக திமுக கூட்டணி திகழ்ந்துள்ளது. அந்த சாதனைக்கு, பெருமைக்கு முழு முதல் காணரமானவர் கலைஞர் தான். 1971 தேர்தலில் இதே போன்று தான் திமுக வராது வராது என்று அப்பொழுது பத்திரிகைகள் பிரச்சாரம் செய்தன.
இனஉணர்வு போராட்டம்
நாங்கள் அப்பொழுதே சொன்னோம். இது ஓர் இனவுணர்வு போராட்டம். தி.மு.க தான் வெற்றி பெறும் என்று சொன்னோம். அதே போலத்தான் இப்பொழுதும் பரம்பரை யுத்தம் என்று கூட சென்ற தேர்தலில் சொன்னார் ஜெயலலிதா அந்த யுத்தத்திலும் நம்முடைய இனஉணர்வு தான் வெற்றி பெற்றிருக்கிறது.
தமிழின உணர்வுதான் வெற்றி பெற்றிருக்கிறது. தன்னை பாப்பாத்தி என்று சட்டமன்றத்தில் ஜாதியின் பெருமையின் சொல்லி பேசிய ஜெயலலிதாவும் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார். எனவே இன உணர்வு இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
- இவ்வாறு பேசினார் தமிழர் தலைவர்.
---------------நன்றி:-"விடுதலை" 16-5-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
real wins for money not for democracy or Tamils
Post a Comment