கேள்வி: சில தொலைக்காட்சிகளில் பிரபாகரன் உடல் என்று காட்டப்படுகிறதே அது உண்மையாக இருக்கும் என்று ஏன் நம்ப மறுக்கவேண்டும்?
பகுத்தறிவாளர் பதில்: இது மின்னணுயுகம்; தொலைக்காட்சியில் எத்தனையோ முறைகளைக் கையாள வாய்ப்புண்டு. முதன் முதலில் இது பற்றி இலங்கையில் உள்ள தொலைக் காட்சி மூலம்தான் இப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது (பிரபாகரன் தப்பிச் செல்லுகையில் சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியது) என்ற தகவல் உண்மை என்றால், உடனே உடலைக் காட்டுவதில் அதற்கென்ன தயக்கம்? மற்றவர்கள் சொன்னபோதும், இராணுவம் மவுனம் காத்ததே - துவக்கத்தில் - ஏன்?
சில ஆங்கில தொலைக் காட்சிகள் கூறுகிறபடி விடையளிக்கப்படாத வினாக்கள் (Unanswered questions) பல எழுந்துள்ளன.
1. சம்பவம் நடந்தது என்றைக்கு என்பதில் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்
ஞாயிறு (17) திங்கள் (18) செவ்வாய் (19) தான் உடல் கிடைத்ததா?
2. மரபு அணு DNA சோதனை மூலம் உடனடியாக உறுதிப்படுத்த இயலுமா? எப்படி உடனே DNA Test மரபு அணு சோதனை முடிந்து உறுதி செய்யப்பட்டு விட்டது என்று செய்தி வந்தது?
3. தப்பிச் செல்லும் எவராவது முழு இராணுவ உடையோடு, அது அவரது அடையாள அட்டையையும் தொங்கவிட்டுக் கொண்டு தப்பிக்க முயலுவார்களா?
4. முதலில் வந்த செய்தி, ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்து அவர் தப்பிச் செல்லுகையில் சிங்கள இராணுவம் அவரைக் குறிபார்த்துச் சுட்டது என்பதாகும்.
பிறகு டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் கூறுவது பிரபாகரனே தன்னைத் தானே சுட்டுக் கொண்டார் என்பது இன்னொரு செய்தி. இரண்டில் எது சரி?
யார் பொய்யர்கள்? முன்னே சொன்னவர்களா? பின்னே சொன்னவர்களா?
5. இவ்வளவு பெரிய தேடப்பட்ட ஒருவரை நாங்கள் உயிருடன் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்போம் என்று இராஜபக்சே சில மாதங்களுக்கு முன்பு கூறினாரே; அப்படி நடக்கவில்லை என்றால், பிரபாகரன் பற்றி அவர் நாடாளுமன்ற முக்கிய உரையில் - உலகமே பார்க்கும் கேட்கும் அவ்வுரையில் - ஏன் எதுவுமே சொல்லவில்லை?
6. சிங்கள இராணுவத் தளபதி பொன்சேகா என்ன சொல்லுகிறார்? பிரபாகரன் சுடப்பட்டு, அவர் உடல் யுத்தப் பகுதியில்(War Zone) கண்டெடுக்கப்பட்டது என்கிறார்.
ஆம்புலன்ஸ் வண்டி, ஆற்றோரம் என்றெல்லாம் இதற்கு முன் சொன்னவை எல்லாம் என்னவாயிற்று?
கெட்டிக்காரன்கள் புளுகு எத்தனை நாளோ!
------------------"விடுதலை"21-5-2009
Search This Blog
22.5.09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment