"குடும்பப் பெயரையோ, பட்டப் பெயரையோ வைத்து ஒருவரின் ஜாதியை தீர்மானித்து, அவருக்கு சான்றிதழ் அளிக்கக் கூடாது; முறைப்படி விசாரணை செய்து திருப்தி அடைந்தால் மட்டுமே சான்றிதழ் தரவேண்டும்" என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஜாதிச் சான்றிதழ் அளிப்பதில் இன்னமும் துல்லியமான நடைமுறை தேவை என்றும் நீதிமன் றம் வலியுறுத்தியுள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்குடியினர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. உண் மையில் அந்த சமூகத் தினர் எண்ணிக்கை உய ரவில்லை. பழங்குடியினருக்கான சான்றிதழ் பெற்றால் சலுகைகள் கிடைக்கும் என்று சிலர் திட்டமிட்டு சான்றிதழ் பெற்றுள்ளனர் என்று தெரிகிறது. அரசு தரப்பில் கூறியதைப் போல பெயரை வைத்து மட்டுமே ஒருவரது ஜாதியை நிர்ணயம் செய்துவிட முடியாது. திட்டமிட்டு, தவறான ஆவணங்களைத் தந்து, ஜாதிப் பெயரை மாற்றி சலுகைகளை அனுபவிப்பவர்களை சும்மா விடக்கூடாது; அவர்களைத் தடுக்க முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெயரை வைத்து மட்டுமே ஜாதியை முடிவு செய்ய முடியாது. குடும்பப் பெயர், பட்டப் பெயர், சிறப்புப் பெயர் போன்றவற்றை ஜாதியை உறுதி செய்யும் ஆதாரமாக கருதக்கூடாது. அதை வைத்து சம்பந்தப் பட்டவர்களுக்கு சமுதாய சான்றிதழ் தரக் கூடாது.
சான்றிதழ் தரும் முன் முழுமையாக உறுதி செய்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால், புலனாய்வுத் துறை உதவியைக் கேட்டு, விசாரணை நடத்தலாம்.
குடும்பத்தில் உள்ள உறவுகள், திருமணத்திற்குப் பின் உள்ள உறவு போன்றவற்றைத் தீர்மானித்து அதன் பேரில் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
சமுதாய மற்றும் மூதாதையர்களின் பின்னணியை வைத்துத்தான் விசாரணை நடத்த வேண் டும்; அதன் மூலம்தான் ஒருவரின் ஜாதியை தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில், இது தொடர்பான நடை முறைகளை உருவாக்க வேண்டும். மனித இனத்தைப் பொறுத்தவரை, ஒருவரின் பிறப்பு இறப்புக்கு இடையே திருமணத்துக்கு முன், திருமணத்திற்குப் பின் உள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சடங்குகள், வழிபாடு, விழாக்கள், அது தொடர்பான நடைமுறைகள் போன்றவை ஜாதியைக் கண்டறிவதில் ஒரு அளவு கோலாகப்பயன்படும்.
இப்படி அடிப்படையிலான நடைமுறைகளை உருவாக்கி, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லாமல், இயந்திரம் போல இயங்கி, பெயர் போன்றவற்றை மட்டும் அடிப் படையாகக் கொண்டு சான்றிதழ் அளிப்பது தவறான வழிக்கு அடி கோலிவிடும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.
--------------------"விடுதலை"13-5-2009
Search This Blog
13.5.09
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment