இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?
ஜெயலலிதா தலைமையில் தனி ஈழம் பெறுவோம் என்று மார்தட்டும் "மகாபெரிய மேதை"களே! உங்களைத்தான்...
1. அந்தத் தனி ஈழம் விடுதலைப்புலிகளுக்குத் தொடர்பே இல்லாத சுதந்திர நாடா?
2. தனி ஈழம் பேசினாலும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு - உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பு - இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் என் பதை நாங்கள் நம்பவில்லை என்று ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறியுள்ளாரே - இவருடன் கூட்டணி சேர்ந்துள்ள தனி ஈழ ஆதரவாளர்களின் பதில் என்ன?
3. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு, அதன்பின்னர் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி நாடு வாங்கி, யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்?
4. விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் போடுகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்ததற்கு நான் தான் காரணம். இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்தியா வில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்படுவதும் என்னால்தான் என்று சட்டமன்றத்திலேயே இறுமாப்புடன் தீர்மானம் போட்டாரே - இதன்மீது அதன் கூட்டணியில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களின் பதில் என்ன?
5. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு முதல்வர் கலைஞர் இரங்கல் கவிதை எழுதினார் என்பதற்காக தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று சொன்னாரே - அந்த நிலையிலிருந்து ஜெயலலிதா மாறுபட்டுள்ளாரா? அப்படி ஜெயலலிதா அறிக்கை விட்டபோது, அது தவறு என்று கண்டித்து அறிக்கை விடுவதைத் தடுத்தது எது?
6. ஆன்டன் பாலசிங்கம் மருத்துவ உதவிக்கு இந்தியாவுக்கு வருவதைக்கூட எதிர்த்து அறிக்கைவிட்ட மனிதாபிமானமற்ற ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காக இப்பொழுது விடுவது நீலிக் கண்ணீரா அல்லது கிளிசரின் கண்ணீரா?
7. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததைக்கூட, கருணாநிதியும் - திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு ஆடிய நாடகம் என்றாரே ஜெயலலிதா - அப்போது தோழர் திருமாவளவன் உண்ணா விரதத்தை ஆதரித்து - இப்பொழுது ஜெயலலிதாவின் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் கூட்டணித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அந்தக் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிடாதது ஏன்? அப்படியென்றால், அந்த நாடகத்தில் இவர்கள் வகித்த பாத்திரங்கள் என்னென்ன? கோமாளிப் பாத்திரமா - வில்லன் பாத்திரமா? காட்டிக் கொடுக்கும் எட்டப்பர் பாத்திரமா?
8. ஈழப் பிரச்சினைக்காகத்தான் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்ததாக இவர்கள் சொல்வார்களேயானால், இவர்கள் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நேரத்தில், அந்த அம்மையார் தனி ஈழத்துக்கு ஆதரவாகப் பேசியது கிடையாதே - அப்படி இருக்கும்போது இந்தக் கருத்து எப்படி உண்மையாக இருக்க முடியும்?
9. ஜெயலலிதா தலைமையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்டோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டோ தனி ஈழம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்தக் கூட்டணியின் கொள்கை தனி ஈழம்தான் என்று எப்படி சொல்ல முடியும்?
10. ஈழப் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சினையாக நாங்கள் முன்வைக்க மாட்டோம் என்று தோழர் தா. பாண்டியன் பேட்டி அளித்துள்ளாரே - அப்படி இருக்கும்போது இந்தக் கூட்டணியின் பொதுக்கொள்கை தனி ஈழம்தான் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
11. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைக்கவில்லையே - இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக உயிரையே கொடுப்போம் என்று தோழர் வைகோ முழங்குவதில் சாரம் உண்டா?
12. ஈழப் பிரச்சினையில் ஒத்த கருத்தோடு பணியாற்றும் பா.ம.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து தனிக் கூட்டணி வகுத்துத் தேர்தலைச் சந்திப்போம் என்று தோழர் திருமாவளவன் அவர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஜெய லலிதாவின் பக்கம் ஓடி கூட்டணி வைத்துக் கொண்டதன் மர்மம் என்ன?
13. தேர்தலுக்கு முன்பே காங்கிரசைக் கூட்டணிக்கு அழைத்த செல்வி ஜெயலலிதா, தேர்தலுக்குப் பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பதற்கு இப்போது அந்த அம்மையாருடன் கூட்டணி சேர்ந்துள்ள தலைவர்கள் உத்தரவாதம் கொடுப்பார்களா?
14. தேர்தல் முடிந்ததற்குப் பின்னால் பாரதீய ஜனதா கூட்டணியில் ஜெயலலிதா சேர்வார் என்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி கூறியதற்குப் பதிலாக ஒரு நல்ல அரசியல்வாதி எதையும் நிராகரிக்க மாட்டார் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே - இதன் பொருள் என்ன?
15. என்.டி.டி.வி. விவாதத்தின்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குப் பிறகு உங்கள் கட்சிக் கூட் டணியில் மாற்றம் ஏற்படுமா? என்று அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவைக் குழுவின் தலைவர் டாக்டர் மைத்ரேயனை நோக்கி விடுத்த வினாவுக்கு, இதற்கு நான் பதில் சொல்ல மறுக்கிறேன் என்றாரே - இதன் பொருள் என்ன?
காங்கிரசுடனோ, பா.ம.க.வுடனோ அம்மையார் கூட்டணி வைத்துக்கொள்வதாகவே வைத்துக் கொள்வோம் - அந்த நிலையில், திடீரென்று அம்மையார் கூறத் தொடங்கியுள்ள தனி ஈழம் எப்படி சாத்தியமாகும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சித் தலைவர்கள் பதில் சொல்லமாட்டார்கள் - பதில் சொல்லவும் முடியாது. வாக்காளர்ப் பெருமக்களே! இந்தச் சந்தர்ப்பவாதி
களைத் தோற்கடிப்பதன்மூலம் செயல்பாட்டால் பதில் சொல்லுங்கள்.
------------------- மின்சாரம் அவர்கள் 2-5-2009 "விடுதலை" இதழில் விடுத்துள்ள வினாக்கனைகள்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
கேள்விகள்ஒவ்வொன்றும் மின்சாரம் பாய்ந்தது போல் ஷாக் அடிக்கிறது
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தமிழையும் தமிழர்களையும் காப்பதற்காக தன்னை அர்பணித்துள்ள மு.க வும் அவருடைய ஜால்ரா கி.வீயும் பேசி வரும் கேவலத்திற்கு இது எவ்வளவோ மேல்
ஆமாம் ,பாப்பாத்தியும் ,நாயக்கரும் தான் தமிழையும் தமிழர்களையும் காப்பதற்காக அவதாரம் எடுத்துள்ளார்கள் .Tamil
அதுவும் தேர்தல் அவதாரம் .
16ம் தேதிக்குப்பின் வேசம் கலைக்கப்படும் .
kuripida vendiayathu onru ullathu thozharkalea.. pazha. nedumaranum seemanum than thesathurokikalaga thallapattu vittanar.. unmaiyileyea.. intha katchigal anaithum..(incl. thi.ka) therthalai pukkanikka nadavadikai edukkathathen.. thamizharkal unarvai(inthiya kudimakkalin) mathikkatha thesiam.. etharkku..thesiam.. enpathu pithalattam enru kooria PERIYARn vazhi vantha.. thiravida iyakkangalal enru ennum thalaivar pathavi periyarukke enru koorikollum entha suyanalmikal..thesiathai..tharpodhu MNC company kala karuthukirarkalo.. intha vizhayathil en periyar vazhiyil neegal IPC 49(o) payanpadutha makkalidam piracharam seiyalamea.. nangalum ungaludan.. inaiya thayar!
வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அவரவர்களின் பின்னூட்டங்களுக்கு வரும் காலம் பதில் அளிக்கும். அதுவரை...
அப்படியே கருணாநிதி புடுங்கியத்தையும் கொஞ்சம் கத்தை கட்டவும்.
மக்களுக்கு சிம்பிள் அனா கருத்து என்னன்னா , மொக்க கருணாநிதியை விட , தைரியமான ஜெயலலிதா எவ்வளவோ பெஸ்ட்.
//அஹோரி said...
அப்படியே கருணாநிதி புடுங்கியத்தையும் கொஞ்சம் கத்தை கட்டவும். //
புடுங்கும் போது நன்றாக வலித்திருக்குமே...பொணந்திண்ணிக்கு வலிக்கவேயில்லையா? புடுங்கிய இடம் வழுக்கையாகி இருக்குமே!
வழுக்கை! மேல் எலி! வந்து புழுக்கை போட்டிருக்குமே! அதன்மேலேயே டோப்பா (விக்) வைத்து கொண்டால் சரியாகப் போய்விடும்...கத்தை எதுக்கு..? ரெடிமேடாகவே இருக்கிறது.
Post a Comment