Search This Blog

2.5.09

தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை


நீங்கள் வேறொருவரை உங்கள் சங்கத்திற்குத் தலைவராக வைத்துக்கொண்டு காரியங்களைச் செய்வதும், உங்களுக்குச் சம்பந்தமில்லாதவைகளைப் பின்பற்றுவதுமாகும். வெளியி-லிருந்து உங்களுக்கு தலைவராய் வருபவர்களுக்கு - முதலாவது உங்கள் வேலையிலுள்ள கஷ்டமும், உங்களுக்கு இருக்கும் கஷ்டமும் எப்படித் தெரியும்?

உதாரணமாக, இதுசமயம் நமது நாட்டுத் தொழிலாளர் சங்கத் தலைவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யாருக்காவது உங்கள் தொழிலின் அருமை தெரியுமா? உங்கள் கஷ்டத்தின் கொடுமை தெரியுமா! அவர் தனது கீர்த்திக்காக உங்களுக்குத் தலைவராய் இருப்பார். அவர் ஒரு தொழிலும் செய்யாமல் மாதம் 500, 1000, 5000, 10,000 என்று பொது ஜனங்களின் பணத்தை உங்கள் முதலாளிகளைப் போலவே கொள்ளையடித்துக் கொண்டு, சுகபோகம் அனுபவித்துக்கொண்டு, தனது சுயநலத்தை நாடிக் கொண்டிருப்பவராயிருப்பார். அவர்களால் உங்களுக்கு எந்த விதத்தில் அனுகூலம் கிடைக்கக் கூடும்? அவர்களைக் கண்டால் உங்கள் முதலாளிகள் எப்படி மதிக்கக்கூடும்? இதே முகாந்திரங்களால்தான் நமது நாட்டுத் தொழிலாளர் சங்கங்கள் இதுவரை உருப்படியாகாமல் போயின.

அனேக இடங்களில் வேலை நிறுத்தம் (Strike) - வெளியேற்றம் (Lock-out) நிகழ்கின்றன. இவைகள் ஏற்பட்டு என்ன பலன் கிடைத்தது? எவ்வளவு தொழிலாளிகளுக்கு வேலை போய் கஷ்டம் உண்டாயிற்று? இவற்றை எந்தத் தலைவர் கவனித்தார்? எவ்வளவு தொழிலாளிகள் தம் தலைவர்களின் வார்த்தைகளைக் கேட்டதின் பலனாய், வயிறாரக் கஞ்சி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்? மற்றும் பல தலைவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உங்கள் முதலாளிமார்களிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவதைப்போல, வெளியார்களை உங்கள் சங்கத் தலைவர்களாக வைத்திருக்கின்றீர்கள்.

---------------- தந்தைபெரியார்- நாகையில் 25.5.1926இல் சொற்பொழிவு,' குடிஅரசு', 30.5.1926

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நீண்ட காலமாக இந்த வலைப்பதிவினைப் படித்து வருகிறேன்...மிகவும் பயனுள்ளதாகவுள்ளது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா