Search This Blog

18.5.09

"எஞ்சிய தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! இன்றைய உடனடி தேவை இதுதான்!"


"எஞ்சிய தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! இன்றைய உடனடி தேவை இதுதான்!"

நியுரம்பர்க் விசாரணைபோல ராஜபக்சே குற்றக்கூண்டில் நிறுத்தப்படுவது உறுதி
தமிழர் தலைவர் அறிக்கை

இன்றைய சூழ்நிலையில் எஞ்சியுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்! சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் முன்னிலையில் உணவு, மருந்துகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கச் செய்வது அவசியம்; முதலமைச்சர் தலையிட்டு இந்தியப் பிரதமர் ஆக்கப்பூர் வமான செயல்களில் இறங்கச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளார்.

அறிக்கை வருமாறு:-

ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மிகப்பெரிய சோகத்தினை சந்தித்துக் கொண்டுள்ள அவலம் - நம் இதயத்திலிருந்து இரத்தக் கண்ணீரை வடிக்கச் செய்கிறது.

விடுதலைப்புலிகளின் துப்பாக்கிகள் இனி முழங்காது; போர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.
தங்களால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் பட்டினியாலோ, போரினாலோ சாகும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்று இறுதி நெருக்கடியான கட்டத்தில், புலிகள் தரப்பிலேயே அறி விப்பு செய்துவிட்டனர்!

மறைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிலையில்,
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் - உயிரோடு இருக்கிறார் என்பது ஆறுதலான செய்தி யாகும்.

அமெரிக்கா, பிரிட்டன் உலக நாடுகள் இலங்கையை எச்சரித்துள்ளன!

நியுரம்பர்க் வழக்குகள்!

இராஜபக்சேவின் தமிழ் இனப் படுகொலை - இன்றைக்கில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் ஹிட்லரின் நியுரம்பர்க் வழக்குகள் போல், மனித இனப்படுகொலைக்காக விசாரிக்கப்படும் குற்றவாளியாகக் கூண்டில் ஏற்றப்படுவது சரித்திரக் கட்டாய மாகும்!
தமிழ்நாட்டையும், இந்திய அரசினையும் எதிர் நோக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பட்டினியைப் போக்கி, பிணிக்கு மருந்து கொடுத்து, வாழ்வாதாரத்திற்குரிய அத்துனையும் இவர்களால்தான் கிடைக்கும் என்று நம்புவது நியாயம்தானே - தொப்புள்கொடி உறவு அல்லவா?

சோனியா காந்தி அம்மையாரே, இது அரசியல் அல்ல; தேர்தல் பிரச்சினை அல்ல; மனிதாபிமானப் பிரச்சினை என்று அவர்களைச் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பாதுகாப்பு துணைக் (மேனாள் நீதிபதிகள் - சட்ட அறிஞர்கள் - பொதுவாழ்வுத் தொண்டர்கள் கொண்ட) குழுவிடம் நேரில் உருக்கமாக (நானும் கலந்துகொண்டவர்களில் ஒருவன்) கூறினார்களே!

அன்று சோனியா அளித்த வாக்குறுதி

ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு காண மிகவும் உறுதி பூண்டிருக்கிறோம் என்று முதல்வர் கலைஞருடன் 10.5.2009 சென்னைத் தீவுத்திடலில் சொற்பொழிவாற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் மும்முறை அழுத்தந்திருத்தமாகக் கூறினார்களே!

இதை நினைவூட்டி தக்க தருணத்தில் நேற்று முன் தினம் பிரதமருக்கு நமது முதல்வர் கலைஞர் அவர்கள் மிகவும் வேதனை தோய்ந்த உள்ளத்தோடு, இப்போது இக்கட்டான நிலையில் ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாகச் செய்யாவிட்டால், இதுவரை நாம் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடக் கூடும் என்பதை தமது பழுத்த அரசியல் அனுபவத்தினைக் கொண்டு வலியுறுத்தியுள்ளார்கள்.

அடுத்து செய்யவேண்டியது என்ன?

யுத்தத்தின் குண்டு மழையால் இறந்த பல்லாயிரம் தமிழர்கள் போக எஞ்சியுள்ள தமிழர்கள் வாழ்வுரிமையாவது காக்கப்படவேண்டுமானால் அதற்கு உடனடியாக வற்புறுத்தவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (அய்.ஆர்.சி.) கண்காணிப்பில் உணவு, மருத்துவம் மற்ற உதவிகளை, சர்வதேசப் பார்வையாளர்களின் உதவியோடும் செய்ய இந்திய - மத்திய அரசு வற்புறுத்தினால் ஒழிய, உடனடியாகத் பாதுகாப்பு ஏற்படாது.

இனி அரசியல் தீர்வு என்பது கூட அடுத்தகட்டம் தான்.

எஞ்சிய தமிழர்களைக் காப்பாற்றுங்கள்

எனவே, இப்போது தேவை ஆக்க ரீதியான தலையீடு, பன்னாட்டு மனிதாபிமானிகளின் உதவி! உதவி!!

நமது முதல்வர், பிரதமரிடம் பேசி ஆக்கப்பூர்வமான உதவிகள் செய்து எஞ்சிய தமிழர்களின் நெஞ்சில் பால் வார்ப்பார் என்பது உறுதி.

மத்திய அரசுக்கும், மற்ற அரசுகளுக்கும் நமது வேண்டுகோள் - காப்பாற்றுங்கள்! காப்பாற் றுங்கள்! காப்பாற்றுங்கள் என்ற குரலுக்குச் செவி கொடுங்கள் என்பதுதான்.


------------------"விடுதலை" 18.5.2009

4 comments:

அவன்யன் said...

அய்யா தயவு செய்து இனியாவது இந்த துரோகி கருணாநிதியை நம்பாதீர். அவன் சத்தியமா சொல்றன் என் வயறு எரிஞ்சு சொல்றேன் சாகும் பொது நல்ல விதமா சாக மாட்டன். இங்க தமிழன் கொத்து கொத்தா சகரன் இந்த பிணம்தின்னி காபினெட் மினிச்டெர் போஸ்ட் கேக்க டெல்லி போய் இருக்கான். இவன் எல்லாம் தமிழின தலைவரா தூ ....

வில்லங்கம் விக்னேஷ் said...

/நமது முதல்வர், பிரதமரிடம் பேசி ஆக்கப்பூர்வமான உதவிகள் செய்து எஞ்சிய தமிழர்களின் நெஞ்சில் பால் வார்ப்பார் என்பது உறுதி.

மத்திய அரசுக்கும், மற்ற அரசுகளுக்கும் நமது வேண்டுகோள் - காப்பாற்றுங்கள்! காப்பாற் றுங்கள்! காப்பாற்றுங்கள் என்ற குரலுக்குச் செவி கொடுங்கள் என்பதுதான்./

தூ! சுயமரியாதையும் பகுத்தறிவுமில்லாத புதுப்பார்ப்பனியக்கூட்டாமே, உங்களைப் போன்றவர்களையெல்லாம் எத்தால் அடிக்கலாம்? நீங்கள்தானே சென்ற ஒரு திங்களாக ஈழத்தமிழரைக் கொல்லும் கருவிகளுக்கு எண்ணெய் போட்டு மெருகேற்றினீர்கள். உண்மையான தமிழன் உங்களை மன்னிப்பானா? ஒழுங்காகத் தூக்கமாவது வருகிறதா பேடிகளே? இப்போது மட்டும் எதுக்குங்க நீலிக்கண்ணீர் வடிக்கறீங்க சுயமரியாதையற்ற அம்மணத்தாடிகாளா?

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,தமிழ் ஓவியா அய்யா,

ஆமாங்கய்யா.தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களைக் கப்பாற்றுங்கள் அய்யா.பாசறை ராஜ நாயான சூரமணியும்,உங்களைப் போன்ற பிரியாணிக்காக குரைக்கும் சிப்பாய் பாசறை சொறி நாய்களும் இலங்கைக்கு சென்று போர் புரியுங்கள் அய்யா.இங்குள்ள தமிழர்கள் உங்களைப் போன்ற வெறி நாய்க்களிடமிருந்து தப்பிப்பார்கள்.தயவு செய்து இலங்கைக்கு ஓடி விடுங்கள் அய்யா.ஈழத்தமிழர்களை கொடுமைப் படுத்தின சிங்கள கும்பலுக்கு உங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பது தான் தகுந்த தண்டனையாக இருக்கமுடியும்.

பாலா

நம்பி said...

//அவன்யன் said...

அய்யா தயவு செய்து இனியாவது இந்த துரோகி கருணாநிதியை நம்பாதீர். அவன் சத்தியமா சொல்றன் என் வயறு எரிஞ்சு சொல்றேன் சாகும் பொது நல்ல விதமா சாக மாட்டன். இங்க தமிழன் கொத்து கொத்தா சகரன் இந்த பிணம்தின்னி காபினெட் மினிச்டெர் போஸ்ட் கேக்க டெல்லி போய் இருக்கான். இவன் எல்லாம் தமிழின தலைவரா தூ ....
May 18, 2009 6:04 PM //

சரிய்யா! இங்க இந்திய நாட்டுல, இந்திய மக்கள்கிட்ட ஒட்டை வாங்கிட்டு இலங்கையில போய் கேபினட் மினிஸ்டர் பதவியையெல்லாம் வாங்க முடியாதுய்யா!

இலங்கை கேபினட் மினிஸ்டர் போஸ்ட்டை அங்கேயிருக்கறவங்கதான் வாங்க முடியும். அதான் அங்கேயே ஜெயுச்சு ரொம்ப காலத்துக்கு முன்னமேயே அமைச்சர் பதவியில இருக்குதே..ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி...!

வயிறு எரியனும்னு முடிவு பண்ணியாச்சு! அதை அங்கேயே போய் வயிறு எரியவிட்டுக்கலாமே!

ஹி ஹி என்ன செய்வது, தெரிஞ்ச ஈழம், தெரியாத ஈழம் ....???????????