Search This Blog

7.5.09

சென்னை அய்அய்டியில் அக்கிரமம்! 79 பார்ப்பனப் பேராசிரியர்களை அமர்த்த முயற்சி!

சென்னை அய்அய்டியில் அக்கிரமம்!
79 பார்ப்பனப் பேராசிரியர்களை அமர்த்த முயற்சி!


சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (அய்அய்டி) நீதிமன்ற ஆணையை மீறி 39 பேராசிரியர்களையும், 40 இணைப் பேராசிரியர்களையும் பணிய மர்த்துவதற்கான முயற்சிகளில் அதன் இயக்குநர் ஆனந்த் (அய்யங்கார்) ஈடுபட்டிருப்பதாகக் குற்றச் சாற்று எழுந்துள்ளது.

சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநராக ஆனந்த். சட்டத்திற்கு எதிரான வகையில் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டதாகக் கூறி அநநிறுவனத்தின் முன்னாள் மாணவர் முரளிதரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அவரைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்றம் பணி நீக்கம் செய்தது. அதை எதிர்த்து ஆனந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம், அதன் மீதான தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிக்கலாம் என்று இசைவளித்தது. அதே நேரத்தில் அவர் எந்தப் பணிக்கும் ஆள்களை அமர்த்தக் கூடாது என்று நீதிபதிகள் ஆணையிட்டனர். அதை ஆனந்தும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீறி சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 39 பேராசிரியர்களையும், 40 இணைப் பேராசிரியர்களையும் அமர்த்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற பணிகளுக்கு நாளிதழ்களில் விளம்பரம் செய்து இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நேர்காணல் நடத்திதான் ஆள்களைத் தேர்வு செய்யவேண்டும். ஆனால் அனைத்து விதி களையும் மீறி, தமக்கு வேண்டப்பட்டவர்களை அப்பணியில் அமர்த்த ஆனந்த் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இப்பணிகளுக்கு மொத்தம் 79 பேர் உத்தேசமாகத் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்களுக்கு விரைவில் பணியமர்த்தல் ஆணை அளிக்கப்பட இருப்பதாகவும் அய்அய்டி வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்வுசெய்யப் பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். எந்த இட ஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படாமல் இவர் கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இடஒதுக்கீட்டை பின்பற்றியாக வேண்டும். ஆனால் இதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் நாடாளுமன்றத்தையே அவமதிக்கும் வகையில் இடஒதுக்கீட்டு விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு தமக்கு வேண்டியவர்களை ஆனந்த் தேர்வு செய்திருக்கிறார். பேராசிரியர்களாகத் தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ள 39 பேரில் 34 பேர் சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஏற்கெனவே பணியாற்றி வருபவர்கள் ஆவர். அதேபோல் இணைப் பேராசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட இருக்கும் 40 பேரில் 30 பேர் ஏற்கெனவே அங்கு பணியாற்றி வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்ட விதிகளை மீறி ஆசிரியர், பணியாளர்களை ஆனந்த் தேர்வு செய்வதை எதிர்த்து அவர் மீது இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான முரளிதரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த பணியமர்த்தல்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், 79 ஆசிரியர், பணியாளர்களை அமர்த்துவதற்கான இசைவை வழங்க மறுத்துவிட்டது. எனினும் அந்த 79 பணியிடங் களையும் எப்படியும் நிரப்பிவிடுவது என்பதில் ஆனந்த் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.


இடஒதுக்கீடு மற்றும் நீதிமன்ற ஆணைகளை அப்பட்டமாக மீறி பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்குள் புகுத்த முயற்சி செய்யும் ஆனந்த் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

-------------------- "விடுதலை" 7-5-2009

9 comments:

Unknown said...

yesterday also i told you bastard why you always against them

Unknown said...

இதற்கு என்ன ஆதாரம்.சென்னை ஐஐடியின் இணையதளத்திலும், நாளிதழ்களிலும் விளம்பரம் கொடுக்கப்பட்டுத்தான் ஆசிரியர் பதவிக்கான தெரிவுகள் செய்யப்படுகின்றன. அனைத்து ஐஐடிகளிலும் இதுதான் நடக்கிறது.
அனந்த்தின் நியமனத்தினை முறைப்படி அங்கீகரித்து மனிதவளத்
துறை ஆணைப் பிறப்பித்துவிட்டது.
எனவே அவர் இயக்குனராக தொடர்கிறார்.தீர்ப்பினை எதிர்த்து
மேல்முறையீடு நிலுவையில்
உள்ளது.ஐஐடிகள் உலகப் புகழ்
பெற்றவை. அந்தப் புகழை வீரமணியோ விடுதலையோ குறைத்துவிட முடியாது.

தமிழ் ஓவியா said...

சாம் நேற்று கேட்ட கேள்விக்குத்தான் இந்தப் பதிவு.

சூத்திரன் என்று என்னை இழிவு படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். அது மட்டுமல்ல பார்ப்பனர்கள் செய்யும் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு முறை இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகளை படித்து விட்டு பின்னூட்டம் இடவும்.

தமிழ் ஓவியா said...

பதிவை நன்றாகப் படித்துவிட்டு விமர்சிக்கவும் பெரியார் விமர்சகரே

Thamizhan said...

இந்த்யாவுக்கு ஒரு சட்டம்.

பார்ப்பனர்களுக்குத் தனிச்சட்டம்.

ஆனந்தை விரட்டாமல் அவரது சட்ட மீறல்களைப் பொறுத்துக் கொண்டிருக்கும் சென்னை வாசிகளே,அந்த அயோக்கிய சிகாமணியை முதலில் விரட்டியடியுங்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா

அசுரன் திராவிடன் said...

*******************************************************************************************
பார்ப்பனர்களே இதற்க்கு பதில் சொல்லுங்கள்
*************************************************************************


எய்ம்ஸ்" மருத்துவமனையின் லட்சணம்!
பி.எச்.டி. படிப்புக்கான கேள்வித்தாள் அவுட்

தேர்வுக்குழு உறுப்பினர்கள் அம்பலப்படுத்தினர்

புதுடில்லி, ஜன. 26- ஆராய்ச்சி டாக்டர் (பி.எச்.டி.) பட்டத்திற்கான கேள்வித்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகிவிட்டது தொடர் பான தகவல்கள் கசிந்துள்ளன. கூடுதல் பேராசிரியர் ஆர்.கே. சர்மா, சுதிர்குப்தா ஆகியோர் இதுபற்றிக் கடிதம் எழுதியுள் ளனர்.

குற்றவியல் மருத்துவத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சிக்கு எழுத்துத் தேர்வு எழுதி நிறைய மதிப்பெண் வாங்கியதாகச் சொல்லப் படும் ஷைலேஷ் யாதவ் எனும் அய்.பி.எஸ். அதிகாரி நேர் முகத் தேர்வில் மருத்துவம் தொடர்பான மிகச்சாதாரணக் கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்கத் தெரியாமல் இருந் துள்ளார். இதனால் இவருக்கு நேர் காணல் நடத்திய இரு பேராசிரியர்களும் இவருக்கு சுழி மதிப்பெண் தந்து தேர்ந் தெடுக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்றே எழுதிவிட்டனர். இவர் எழுத்துத் தேர்வில் எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற அய்யத்தை எழுப்பிய இவர்கள் தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளிப்பட்டிருக்கவேண்டும் என்ற அய்யப்பாட்டினை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.

தகுதி, திறமை பேசி வரும் அகில இந்திய மருத்துவ அறி வியல் ஆய்வு நிறுவனத்தின் மாபெரும் ஊழல் நிலை இதன் மூலம் வெளிவந்துள்ளது. ஷைலேஷ் யாதவ் என்பவர் எய்ம்சில் பணிபுரியும் அய்.பி.எஸ். அதிகாரி ஆவார்.

AJAX said...

=>First of all, u cannot mention a person by his caste name,whether he is lower caste or higher caste (according to u)
=> Because of this caste system, this country is loosing enormous talent.Nearly 90% of top students in Anna university opt to study in foreign universities because they dont see caste,birth,status. They see only talent.

Because of this ****** caste allocation of professors and students, IIT admits students who score zero to 10 in their entrance exam while person scoring 40,50 marks is sitting outside.

THAT IS WHY COLLEGE EDUCATION IN INDIA IS THE WORST IN DEVELOPED COUNTRIES WHEREAS OUR SCHOOL EDUCATION is the BEST IN THE WORLD!

u ppl fight for the caste.u interpret the news according to your wish.
Even 50years back, IIT was the best but now,they are in pathetic state.
this is irrefutable truth.!

நம்பி said...

// Blogger AJAX said...
Because of this caste system, this country is loosing enormous talent.Nearly 90% of top students in Anna university opt to study in foreign universities because they dont see caste,birth,status.//

மற்ற கன்ட்ரியை (நாடுகளை) விடு, இந்த கன்டிரியோட எந்த கன்டிரியையும் ஒப்பிடாதே! இதுவே மிகப்பெரிய முட்டாள்தனம்.....

உலக மொத்த மக்கள் தொகையில் (700 கோடி) 40 சதவீத மக்கள் தொகையை இரண்டு நாடுகள் கொண்டுள்ளன.

ஒன்று சீனா, இன்னொன்று இந்தியா....
இதிலேயே கிளின் போல்ட்....


மொத்தமுள்ள 196 க்கும் அதிகமான நாடுகளில் இந்த இரண்டு நாடுகளே 40 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளன...பாக்கியுள்ள 60 சதவீத மக்கள் தொகையைத்தான் 194 நாடுகள் பங்கீட்டு உள்ளன....

இத்தனைக்கும் பரப்பளவும் மிகவும் குறைவு....வளங்களும் மிக மிக குறைவு....

மற்ற எல்லா விஷயங்களும் இங்குதான் அதிகம்...

(மதம், கடவுள்கள், மூடநம்பிக்கை, மண்ணாங்கட்டி, ஆதிக்க சக்திகள்...பெண்ண்டிமைத்தனம், இழிவுகள், சோம்பேறிக்கு சோறு எடுத்த கும்பல்களின் எண்ணிக்கை...எல்லாம் இங்கு தான் அதிகம்....)

இங்கு இதுங்களுக்குள்ளே ஒருவன் முட்டி மோதி மேலே வருவது எவ்வளவு கடினம்? என்பதை இந்த மக்கள் தொகையை பார்த்த பிறகுமா? ஒருவனுக்கு சந்தேகம் வருகிறது.

50, 60 மதிப்பெண் பெற்றவங்க எல்லாம் வறுமையில இருந்து கொண்டா இந்த மதிப்பெண்ணை பெற்றார்கள்?

இல்லை தாழ்த்தப்பட்ட, இழிவுப்படுத்தப்பட்ட, பழங்குடி இனத்திலிருந்தா வெளியே வந்தானுங்க ஒன்னும் இல்லை...

இந்த உழைக்கும் மக்கள் போட்ட பிச்சையில நீயும், உங்க குடும்பமும் பரம்பரையா உக்காந்து, அவன் உழைப்பில விளைந்ததை வைச்சு சோறு துன்னுட்டு, அவன் உழைச்சு கொடுத்தா வருமானத்தில படிச்சது....

இந்த மாதிரி வசதியில ஜீரோ மார்க் எடுத்தான்னு சொல்றே பாரு! அவன் அந்த வசதியில் இருந்தாலும் மிக நன்றாக படிக்க முடியும்? 90 சதவீதமே எடுக்க முடியும்.

வசதி வாய்ப்புகள் இல்லாததினால் சாதரண அரசுப் பள்ளிக்கூடத்தில் முட்டி மோதி அத்திப்பூத்தா மாதிரி இம்மாதிரி ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியே வர்றான்.

அவன் படிக்கட்டுமே அதுக்குத்தான் இட ஒதுக்கீடு....அவன் வேலை வாய்ப்பு பெறட்டுமே!

எங்கே எந்த? முதல் மதிப்பெண் எடுத்தவன், கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்திருக்கான்......

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை எல்லாம் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மாநில அளவில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களா?

உயிர் காக்கும் மருந்தை கண்டுபிடித்தவன் முதல் மதிப்பெண் எடுத்தவனா?

அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் தான் விஞ்ஞானிகளாக வருகிறார்களா?


Blogger AJAX said...
//Because of this ****** caste allocation of professors and students, IIT admits students who score zero to 10 in their entrance exam while person scoring 40,50 marks is sitting outside.//

கொஞ்ச நாளைக்கு நீ கொஞ்சம் வெளியே இறேன்...நீயே தான் படிக்கணுமா? அவனை படிக்க வைச்சுப் பாரு எப்படி? படிக்கிறான்னு தெரியும்?

நீ அந்த வசதியில்லா இடத்தில பொறந்து இருந்தா இந்தளவுக்கு கூட வந்திருக்க மாட்டே! அதுக்குத்தாய்யா வாய்ப்பு கொடுக்கறது...அதுக்குத்தாய்யா இட ஒதுக்கீடு.....

வெளிநாட்டில கட்டாய இராணுவப் பயிற்சி....ஏன்? தெரியுமா?

அங்கே மக்கள் தொகை குறைவு....இங்கே இராணுவத்துக்கு ஆள் எடுக்கறாங்கன்னா.... ஜீ...ஜீ...என்னு இந்திக்காரன் காலில விழுந்தாவது இராணுவத்துல சேர்ந்துடம்னு பல பேர் 3 நாளைக்கு முன்னாடியே ஆள் எடுக்கிற கிரவுண்டல வந்து படுத்துக் கிடக்கான்...

அதுல பல பேரை கழிச்சுட்டு, சொற்ப எண்ணிக்கையில தான் ஆளைத் தேர்வு செய்யறாங்க!...ஏன்னா? இங்கு மக்கள் தொகை அதிகம்....120 கோடி.....

இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே வந்தவனும் அடுத்து மேலே வர்றவனுக்கு வழி விடுவாங்கறே!? நிச்சயமா இல்லை!....

ஏறி வந்த ஏணியை இவனுங்களே எட்டி உதைப்பானுங்க...

வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில போடுவானுங்க...

அப்பா லஞ்சம் வாங்கின காசிலதான் என்ஜினியரிங் டிகிரி எல்லாம், அப்பாவின், அம்மாவின் ஊழல் பணத்திலதான் எல்லா வசதி வாய்ப்புகளையும் அனுபவிப்பாங்க!
அனுவபவிச்சுட்டு.... ஊழலை பத்தி பக்கம் பக்கமா இங்கே எழுதுவானுங்க....

எல்லோரையும் கீழே தள்ளிட்டு மேலே போவது எப்படி? என்பதை பத்தி மட்டும் தான் இவனுங்க யோசிப்பானுங்க...!

அப்படிப்பட்ட மேதாவிக் கூட்டம்! சுற்றி இருக்கிறவனைப் பத்தி என்றைக்கும் கவலைப்படாத கூட்டம்!

அப்புறம் எப்படி? நல்ல கல்வியை இந்த நாட்டில் கொடுக்க முடியும்...வரி ஏய்ப்பு செய்யற நாட்டில எப்படி?..... தன்னிறைவை அடைய முடியும்? இங்கு ஒவ்வொரு தனிமனிதனும் ''மிகப்பெரிய ஊழல்வாதி''.