Search This Blog

19.5.09

ஆணுக்கும் ஆணுக்கும் நடந்த திருமணம்


ஒரு பால் திருமணம்

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் ஒரு ஹிந்து திருமணம் நடந்துள்ளது. மணப்பெண்ஜோசிங் எனும் ஆண். மணமகன் வெஸ்லி நோலன் எனும் ஆண். திருமணம் ஆணுக்கும் ஆணுக்கும் நடந்தது.

சிவனும் விஷ்ணுவும் செய்து கொண்டதைப் போல! கிருஷ்ணனும் நாரதனும் நடத்திக் கொண்டதைப் போல!

ஜோசிங் - வெஸ்லி நோலன் விவாக சுப முகூர்த்தத்தை நடத்தியவர் ஹிந்துப் புரோகிதர். தம்பதியர் இருவரும் ஆண்கள் அணியும் ஷெர்வானி உடையை அணிந்து தீக்குண்டத்தின் முன் சங்கல்பம் செய்து உறுதி மொழி கூறி விவாகம் செய்து கொண்டனர். ஜோசிங் கழுத்தில் வெஸ்லி நெக்லேஸ் ஒன்றைப் பூட்டினார். இதன் டாலரில் பிள்ளையார் படம் பொறிக்கப்பட்டிருந்த தாம்.

ஏன் பிள்ளையார்? தெற்கே இதற்குத் திருமணம் ஆகவில்லை! வடக்கே இரண்டு பெண்களுடன் திருமணம்! ஆக, இப்படி இரண்டுங்கெட்டான் சாமி இந்த இரண்டுங்கெட்டான்களின் திருமணத்திற்குப் பொருத்தம்தான்! ஏண்டா பிள்ளையார் என்றால் இரண்டு பயல்களுமே சொன்னார்களாம், கெட்டதுகளை நீக்கி அவர்கள் போகும் பாதையைத் தூய்மையாக்கிட பிள்ளையார்தான் சரியாம்!

இந்த விவாகத்திற்கு பெண் வீட்டார் அமோக ஆதரவாம்!

சென்ற ஆண்டு, மென்பொருள் பொறியாளர் ஒருவர் (மும்பைக்காரர்) அய்ந்தாண்டுக் காலமாகக் காதலித்த வெள்ளைக்காரப் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். சியாட்டில் நகரில் நடந்த இந்த விவாக சுபமுகூர்த்தத்திற்கு 450 பேர்கள் மும்பையிலிருந்து வந்து கலந்து கொண்டு அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தனராம்!

இந்தக் கல்யாணங்கள் சட்டத்தின் முன் செல்லுபடியாகுமா? ஆகாது. இந்தப்படி உடல் உறவு கொள்வது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை தரக் கூடிய கிரிமினல் குற்றம் என்கிறது சட்டம். ஆனாலும் இது போன்ற விவாகங்கள் வாரம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன என்கிறது செய்திகள். இவற்றை ஹிந்து மதப் புரோகிதர்களே நடத்தி வைக்கின்றனர். புரோகிதப் பார்ப்பனர்களிடம் பெரிய காந்தி நோட்டுகளை நீட்டினால், பேஷா செய்யலாமே என்று பல்லை இளித்துக் கொண்டு, நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு மந்திரம் சொல்லத் தொடங்கி விடுவர். கிறித்துவ, முசுலிம் மதப் புரோகிதர்கள் செய்யமாட்டார்கள்.

16 ஆண்டுகளுக்கு முன்பு, ஆதித்யஅத்வானி எனும் இளைஞன் தன் தாயிடம் கூறினாராம் - அம்மா, நான் ஆண் புணர்ச்சியில்தான் நாட்டம் உள்ளவன் என்று! போடா என்று புறந்தள்ளிய தாய் -பிறகு வேறு வழி இல்லாமல் உனக்கு ஏற்ற பையனை விளம்பரத்தின் மூலம் தேடு என்று கூறினாராம். இரண்டு ஆண்டுகள் கழித்து 1993 இல் மைக்கேல் டார் எனும் பையனைத் தன் குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தான் ஆதித்ய அத்வானி! வழக்குரைஞரான அவனின் தாய் அவனுக்கும் மைக்கேல் டாருக்கும் விவாஹம் செய்து வைத்தார். மாலை மாற்றிக் கொண்டும், அரிஹர புத்திரனின் இரண்டு பித்தளைச் சிலைகளை மாற்றிக் கொண்டும் விவாஹம் செய்து கொண்டனர். செய்து வைத்தவர் சுவாமி போதானந்தா.

மற்றொரு ஜோடி. அரவிந்த குமார் அசோக் ஜெத்மலானி தம்பதியினர். கனடாவில் சான்ஜோஸ் நகரில் குடித்தனம் செய்கின்றனர். கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள அரவிந்தின் அண்ணனின் வீட்டில் வைத்து விவாஹம் செய்து கொண்டனர். வேட்டி கட்டி, அக்னி சுற்றிக் கல்யாணம் செய்து கொண்டனர்.

இவ்வாறு விவாஹம் செய்து கொண்ட இந்தியர்கள் எல்லாரும் இந்தியாவிற்கு வெளியேதான் வசிக்க முடிகிறது!

அரிகரபுத்திரனைக் கடவுளாகக் கொண்டாடும் நாட்டில் இவர்களுக்கு இடம் இல்லை என்பது அவலம்தான்!


------16-5-2009 "விடுதலை"ஞாயிறுமலரில் செங்கோ எழுதிய கட்டுரை

1 comments:

ரங்குடு said...

தமிழ் ஓவியா அவர்கள் உலக நடப்பு அறிவை வளர்த்து கொள்வது நலம்.

அமெரிக்காவில் ஆணும், ஆணும் சேர்ந்து வாழ்வதும், பெண்ணும், பெண்ணும் சேர்ர்ந்தூ வாழ்வதும் மிகவும் சகஜம்.

ஆணை ஆண் விரும்புவதும், பெண்ணை பெண் விரும்புவதும் பாலியல் உடற்கூறு தொடர்புடையது.

இது சிலரின் மரபணுக்களின் மாறு பாட்டினால் வருவது.

அமெரிக்கச் சட்டமானது திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடைபெறுவது என்று வரையறுத்திருந்தாலும், கடந்த சில வருடங்களாக ஒரு பால் திருமணம் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப் பட்டு வருகிறது. இது போன்ற திருமணங்களும் கிறித்துவ சர்ச்களில், பாதிரியார்களால் நடத்தி வைக்கப்பட்டு, அங்கீகரிக்கப் படுகின்றன. இது மூட நம்பிக்கையல்ல. காலத்தின் கட்டாயம். இது வரை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த சிலருக்கு அவ்வுரிமைகள் இப்போது வழங்கப் படுகின்றன. நம் நாட்டில் இவை போன்றவை அங்கீகாரம் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

கீழே உள்ள இணைப்பைக் கிளிக்கினால், மேலதிக விவரங்கள் பெறலாம்.

http://en.wikipedia.org/wiki/Federal_Marriage_Amendment

இது சம்பந்தமாக ஒரு ஆங்கிலப் படமும் வந்துள்ளது. 'Now I Pronounce you Chuck and Larry'.