Search This Blog

31.5.09

சமுதாய இழிவு நீங்க... பெரியார் அறிவுரை







சாதி முறைகள் என்பவையெல்லாம் மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமே தான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் - மத சாத்திரங்களுக்கும் மதத்திற்கும், வேதாந்தமும் தத்துவார்த்தமும் சொல்லி இவற்றை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளையாக ஆவதற்கு முயற்சிப்பார்கள்.

இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதை அடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால், உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையை சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டுமென்று உண்மையாய் ஆசைப்படுவீர்களேயானால் மதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாத்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளிவாருங்கள்.

நீங்கள் அதைச் செய்யவில்லையானால், இனியும் ஓராயிரம் ஆண்டிற்குக் கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும், சங்கங்களும், பிரசாரங்களும், கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும், பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும், உங்கள் சமுதாயத்திலுள்ள இழிவு நீங்கப் போவதில்லை! இது உறுதி! உறுதி!

---------------தந்தைபெரியார் - "இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை" என்ற நூலிலிருந்து

0 comments: