Search This Blog

17.5.09

பார்ப்பன ஊடகங்களுக்கு பாடம் கற்பித்தனர் மக்கள்!


பார்ப்பன ஊடகங்களுக்கு பாடம் கற்பித்தனர் மக்கள்!
உண்மை வேறு, ஒப்பனை வேறு என்பதை
உணர்ந்து மக்கள் வாக்களித்துள்ளனர்
தமிழர் தலைவர் அறிக்கை


பார்ப்பன ஊடகங்களின் கட்டுப்பாடான விஷம முயற்சிகளை தவிடு பொடியாக்கி, உண்மை வேறு, ஒப்பனை வேறு என்பதை மக்கள் புரிந்து வாக்களித்துள்ளனர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

15-ஆவது மக்களவைக் கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று (16.5.2009) வெளியிடப் பட்டன.

அதன்படி, மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமை யிலான அய்க்கிய முற் போக்குக் கூட்டணி அரசு 259இடங்களைப் பெற்று, இடதுசாரி மூன்றாவது அணி என்ற காணாமற் போகும் அணியில் உள்ளவர்களைக் கொண்ட ஓர் ஆட்சி அமைக்க தேவையின்றி - தொங்கும் நாடாளு மன்றமாக இல்லாமல், 5 ஆண்டுகளுக்கு தங்கும் நாடாளுமன்றமாக ஆட்சி அமைக்கும் நல்ல தெளிவான அரசியல் தீர்ப்பை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.

இதற்கு பல காரணங்கள்:

1. 2004-இல் நமது கலைஞர் வகுத்த வியூகத் தின் அடிப்படையில் மத்தி யில் மீண்டும் மதவெறி - பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி ஏற்படாமல் தடுக்கப்பட்டு மதச்சார்பற்ற, சமூகநீதியிலும், சிறு பான்மையினர் பாதுகாப்பிலும் அக்கறையும், கவ லையும் உள்ள ஓர் அரசு, அதன் கூட்டணிக் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி தலைமையில் அமைந்து சிறப்பான பல சாதனைகளைச் செய்ததோடு, 5 ஆண்டு காலத்தில் ஒரு நிலையான ஆட்சியைத்தந்தார்கள். இரு அரசுகளின் சாதனைகள்

2. தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் அவர்கள் தந்த உறுதி மிக்க ஆதரவு -மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஏற்பட்ட நல்லிணக்கம். இரு அரசுகளும் ஒன்றை மற்றொன்று போட்டியிட்டு மக்கள் நலம் பேணும் சாதனைகளைக் குவித்துள்ள நிலையில், இதனைக் கவிழ்க்க நினைத்த இடதுசாரிகளை மக்கள் தண்டித்துள்ளார்கள் அவர்கள் கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருப்பது அதற்குச் சான்று ஆகும்!

கூட்டணியில் இருந்தவர்களே கடைசி நேரத்தில் தனியே பிரிந்து சென்று மிகப் பெரிய சவால்களை ஏற்படுத்தியபோதும், துணிந்து காங்கிரஸ் (வடபுலத்தில்) தனியே நின்று வென்று காட்டியுள்ளது. மதவெறி பா.ஜ.க. வுக்கு மீண்டும் மகுடம் இல்லை என்பதை மக்கள் தீர்ப்பு மூலம் உறுதிப்படுத் தியுள்ளார்கள்!

ஊடகங்களும், ஏடுகளும், இந்தியா முழுமைக்கும் பா.ஜ.க.வின் ஊது குழலாகவும், முற்போக்கு முத்திரை குத்திக்கொண்டு, எப்படி எல்லாம் நடந்து கொண்டன? முழுக்க ஜாதி வெறி மதவெறி கொண்ட அமைப்புகள் மக்களிடையே பெருத்த செல்வாக்குள்ள பொது மக்கள், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி - அதேபோல் தமிழ்நாட்டிலுள்ள கலைஞர் ஆட்சி இவைகளை ஆதரிக்கவில்லை என்ற போலித் தோற்றத்தை உருவாக்கியதை மக்கள் குறிப்பாக தமிழர்கள் - 1971 தேர்தலைப்போல் - புரிந்து கொண்டனர்.

பார்ப்பன ஏடுகளின் பிரச்சாரம்

பார்ப்பன ஏடுகள் நமது கலைஞர் ஒரு சமுதாயப் புரட்சியாளராக இருந்து ஆளுகின்ற இந்த ஆட்சி சூத்திர, பஞ்சமர், ஏழை எளிய மக்களின் குறை தீர்த்து, வாட்டம் போக்கி அவர்களை வாழ வைக்கும் ஆட்சியாக இருப்பதால் அதனை நீடிக்க விடக் கூடாது என்பதற்காகவே, சட்டசபைக்கே போகாத எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவை எவ்வளவு உயர்த்திப் பிடிக்க முடியுமோ அவ்வளவு இந்த தேர்தலின்போது தூக்கிப் பிடித்து, அவர் அலை வீச்சில் வெற்றி பெறுவார் என்றும், அவ ருடன் இடதுசாரிகள், பா.ம.க., மதிமுக சேர்ந்து விட்டதால் அதுவே பலமான வெற்றிக் கூட்டணி என்றும் முகப் போவியமே தீட்டி, இடைவிடாத பிரச்சாரம்!

இந்து ராம்கள் 39-இல் ஒரு இடம்கூட திமுக வுக்கு வராது என்று ஒரு ஆரிய வடநாட்டு டி.வி.யில் பேட்டி கொடுத்து, அவாள்களின் ஆசையை குதிரையாக்கிப் பறந்தார் உயரே! நடந்ததா அவர் கூற்று?

தினமணி, எக்ஸ்பிரஸ், தினமலர், பார்ப்பன வார ஏடுகள் எல்லாம் கூட்டணி அமைத்துச் செயல்படுவது போல், திமுகவுக்கு எதிராக விடாமல் எழுதினார்கள்!

வாக்காளர்களை குழப்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்தும், படுதோல்வி அடைந் தார்கள்! மக்களின் நல்வாழ்வுபற்றி, அன்றாடம் கவலைப்பட்டு சாதனைகள் செய்யும் கலைஞர்மீது மக்கள் நன்றியை இதன் மூலம் குவித்துள்ளனர் என்பதுதான் இந்த வெற்றியின் ரகசியம்,

உண்மை வேறு; ஒப்பனை வேறு

அவரைத் தரக்குறைவாக, தாறுமாறாக, தனி மனித விமர்சனத்தைச் செய்து, கொச்சைக்குக் கூச்சப் படாத தலைவர்கள் - ஈழத் தமிழரின் வாழ்வுரிமையை இத்தேர்தலில் பணயம் வைத்தாவது தாங்கள் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று நினைத்ததைத் தமிழர்கள் புறந்தள்ளி விட்டனர்; உண்மையான கவலையும் அக்கறையும் உடையவர்கள் தி.க., திமுக அணியினர்தான் என்கிற உண்மையை உணர்ந்து, உண்மை வேறு, ஒப்பனை வேறு என்பதைப் புரிந்து கொண்டனர்!

தமிழ்நாட்டு ஆட்சி யைக் கலைப்பதில்தான் அதிமுக கூட்டணியினருக்கு மிகுந்த அக்கறை. அதற்கு ஒரு வழியாகவே, இந்தத் தேர்தலைத் தாங்கள் பயன்படுத்திட முயலுகிறோம் என்ற அவர்களுடைய உள்நோக்கம்பற்றி புரிந்துதான், தண்டனை தந்துள்ளனர்!

தாங்கள் சென்றால், அக்கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கூறியவர்களை, நாடாளுமன்றத்திற் குள்ளேயே விடாமல், அவர்களே வெட்கப்பட வேண்டிய தோல்வியை தமிழ்நாட்டு வாக்காளர் தந்து பாடம் புகட்டியுள்ளனர்!

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக நேற்று பிரதமருக்கு வாழ்த்துக் கூறி விட்டு, நமது முதல்வர் கலைஞர் அவர்கள் வற்புறுத்தி தெளிவாக ஒரு கடிதமும் எழுதியுள்ளார்களே - இந்த தேர்தல் முடிவுகள், அரசு அமைப்பு என்று நிலைமைகள் இருக்கும் போது, அவருடைய கவலை எப்படிப்பட்டது; ஈழத்தை நோக்கி அல்லவா? என் பதை இதிலிருந்தாவது உணர்ந்து கொள்ள வேண்டாமா?

மூன்றாவது அணியினர்

மூன்றாவது அணி, தாங்களே பல்லக்கில் ஏறுவோம் என்று கூறியவர்கள், இப்போது எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து பணிபுரிவோம் என்று கூறியுள்ளனர். காலங்கடந்தாவது ஞானோதயம் வந்தது நல்லது!

பா.ஜ.க.வின் தலைவர்கள் தோல்வியை ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் என்று கூறியது - ஜனநாயகப் பண்பு.

அதைவிட்டு இயந்திரம் கோளாறு, விலை கொடுத்து வாங்கிய வெற்றி என்று கூறுவது இன்னும் கேவலம் ஆகும்!

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் உதய சூரியன் விளக்கு எரி கிறது என்று ஜெயலலிதா கூறினாரே, அவரது கூட்டணிக்கு - 12 இடங்கள் எப்படி சாத்தியப்பட்டது? இது செய்தியாளர்களுக்கு நான் கூறிய பதிலின் ஒரு பகுதி.


------------------ "விடுதலை" 17.5.2009

0 comments: