Search This Blog

3.5.09

ஏசு உயிர்த்தெழுந்தது எப்போது?

டவுட்டிங் தாமஸ்

ஏசு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் ஆணி அறையப்பட்டு அன்று மாலை மரித்தார். புதைக்கப்பட்டார். மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார். மரித்த நாள் பெரிய (நல்ல) வெள்ளிக்கிழமை. துக்க நாள். உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் நாள். மகிழ்ச்சியான நாள். இதுதான் வழமை. நம்பிக்கை. கடைப்பிடிப்பு.

சிலபேர் இதில் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். இவர்களும் கிறித்துவ மதத்தவர்களே. அம்மதத்தில் இருக்கும் 1008 பிரிவுகளில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். 3 நாள் என்றால் 72 மணி நேரமாயிற்றே, அவர் 36 மணி நேரத்திலேயே உயிர்த்து எழுந்து கல்லறையை விட்டு வெளியே போய்விட்டாரே! அவர் சொன்ன படி 72 மணிநேரம் புதைந்து இருக்கவில்லையே! கணக்குச் சரியாக வர வில்லையே என்கின்றனர்.

இப்படிப்பட்ட சந்தேகத்தை இவர்கள் மட்டும் கிளப்பவில்லை. ஏசுவின் சீடர்கள் 12 பேர்களிலேயே ஒருவர் கிளப்பிவிட்டார். ஏசு உயிர்த்தெழுந்து வெளியே வந்தார் என்பதை அவர் நம்பத் தயாராக இல்லை. காலியாகக் கிடந்த கல்லறையைத் திறந்து காட்டிய போதும் நம்பவில்லை. ஏசு இருந்த இடத்திற்குக் கூட்டிப்போய்க் காட்டியபோதும் நம்பவில்லை.

ஏசுவைத் தொட்டுப் பார்த்தபின்தான் நம்பினார். என் அய்யனே! என் தேவனே! என்று தொட்டுப் பார்த்த பிறகு புலம்பினார். அதனாலேயே அவரை சந்தேகத் தாமஸ் (டவுட்டிங் தாமஸ்) என்கிறார்கள்.

அப்படிப்பட்ட டவுட்டிங் தாமஸ்கள் தனி அமைப்பாகவே ஆகிவிட்டனர்.

அவர்கள் ஒரு சம்பவத்தை மட்டும் சந்தேகப்படுகிறார்கள். பகுத்தறிவாளர்களாகிய நாம் எல்லா (மத) சம்பவங்களையும் சந்தேகப்படுகிறோம். அதுதான் வேறுபாடு.

------------------------- 2-5-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: