முத்துமாரி!
ஜமதக்கினி முனிவனின் மனைவி ரேணுகைக்குத் திடீரென்று இன்னொருவன் மீது காதலாம். கங்கைக்குக் குளிக்கச் சென்ற அவள் வானத்தின்மீது சென்று கொண்டிருந்த சித்திரசேனன் என்னும் காந்தருவனின் உருவத்தை ஆற்று நீரில் கண்டுவிட்டே ஆசைப்பட்டு விட்டாள். (அவளருகில் அவன் இருந்து அவளிடம் சிக்கியிருந்தால் என்ன பாடுபட்டிருப்பான் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்) கங்கையிலிருந்து திரும்பிக் கணவன் முன்னிலையில் வந்த ரேணுகையின் மயக்கமும் தயக்கமும் கலந்த நடத்தையில் கணவருக்கு அய்யம் பிறந்தது.
ரிஷிகளுக்கு ஞான திருஷ்டி உண்டல்லவா? அந்தப் பார்வையால் நடந்தது அனைத்தையும் உணர்ந்து கொண்டான். வந்தது குருதிக் கொதிப்பு. தன்னுடைய மகன்களை அழைத்து ரேணுகையைக் கொன்றுவிடும்படி ஆணையிட்டான். மற்ற மகன்கள் மறுத்துவிட, பரசுராமன் என்பவன் தந்தையின் கட்டளையை நிறைவேற்ற முன் வந்து, அவளைக் கொல்ல முனைந்தபோது பலர் தடுக்க வர, அவர்களைக் கொன்று ரேணுகையின் தலையையும் அறுத்துத் தன் தந்தையிடம் வந்து பாராட்டுப் பெற்றான்.
என்னதான் இருந்தாலும் பெற்ற அன்னையின் தலையையே அற்றுப்போட நேர்ந்தமை குறித்து ஆழ்ந்த கவலை வயப்பட்ட மகன் தன் தந்தையிடம் தனது மனநிலையை வெளிப்படுத்த, முனிவன் மந்திர நீர் கொடுத்து, உன் தாயை எழுப்பி வா என்று கூறியனுப்பினான்.
இறக்கப்பட்டு, பல பேர் முண்டமும் தலையுமாய்க் கிடந்ததால் தாயின் உடலைச் சரியாகக் கண்டறிய முடியாமற் போய் ஏதோவொரு உடலின் மேல் அதன் தலையினைப் பொருத்தி ரேணுகையை உயிர்ப்பித்து தந்தையிடம் சேர்ப்பித்தானாம் பரசுராமன்.
கணவனும் மனைவியுமாய் மறு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தபோது ஜமதக்கினி முனி கார்த்த வீரியன் என்பானின் மக்களால் கொலையுண்டு போக, ரேணுகை தீப்புகுந்தபோது, உடனடியாக இந்திரன் வருணனைக் கொண்டு மழை மாரி பெய்விக்க, தன் ஆடை மட்டும் எரிந்துவிட்ட நிலையில் அரைவேக்காட்டுக் கொப்புளங்களுடன் இடையில் வேப்பந்தழையைச் சுற்றிக் கொண்டு ஊர்ப்புறச் சேரி மக்களிடம் உணவும், சலவையாளரிடம் துணியும் பெற்று மீண்டும் இறந்த கணவனிடம் சென்று புலம்பிக் கொண்டிருக்கையில் சிவபெருமான் தரிசனம் தந்தான்.
எங்கள் முத்து மாரியம்மா என்று பாடியபடி கோடை காலத்தில் நடெங்கிலும் விழாவெடுத்துக் கடன்படுகிறார்களே அறியாமையின் திருவுருவங்களாகிய மக்கள், அது இவளுக்காகத்தான்!
--------------------நன்றி: "விடுதலை"22-5-2009
Search This Blog
22.5.09
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
அப்போ இன்னோருத்தனை சைட் அடிச்சா முத்துமாரி ஆகிறலாம்னு சொல்லுங்க!
Post a Comment