Search This Blog
25.5.09
பாரதியார் இலக்கணப் பிழையுடன் பாடல்கள் எழுதினாரா?
அங்குப் போனான்
புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது நெருக்கமான நண்பர்களாக, சால்வே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பூ.ஆ.பெரியசாமி, பங்காரு பத்தர், திருப்புளிசாமிஅய்யா, பாரதிதாசன் போன்றோர் இருந்தனர்.
சில சமயங்களில் பாரதியார் இலக்கணப் பிழையுடன் எழுதுவது கண்டு பூ.ஆ.பெரியசாமிக்கு வருத்தம் இவரெல்லாம் பாட்டெழுத வரலாமா - இலக்கணம் தெரியாமல் என்று குமுறுவாரே தவிர, பாரதியிடம் வெளிப்படையாக சுட்டிக்காட்டத் தயக்கம். எவருக்கும் அஞ்சாப் பாவேந்தர் பாரதிதாசன், நால்வரில் இவர் மட்டும் துணிந்தார்.
அங்கு + போனான் என்பதை அங்குப் போனான் என்றே எழுத வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, சுட்டுச் சொல்லுக்கு பின் வல்லினம் மிகும் என்ற இலக்கண விதியை எடுத்துக்காட்டினார். அதற்கு பாரதி, அங்குப் போனான் என்று எழுதினால் என்னவோ போல் உள்ளதே! இயற் கைக்கு முரணாக ஒலிக்கிறதே! என்றார். அதற்குப் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார். நீங்க இலக்கணத்திற்குக் கட்டப்பட்டவரே தவிர, இயற்கைக்கு அல்ல என்று பாரதிதாசன் அடித்துக் கூறி, பாரதியை இலக்கண வேலிக்குள் கொண்டு வந்தார்.
--------- சந்தன் - அக்டோபர் 16-31 2008 "உண்மை" இதழிலிருந்து
Labels:
பாரதியார்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வித்தியாசமான தகவல்.
அந்த இடத்தில் ‘ப்’ வர வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.
இந்த மாதிரி ஆயிரம் கதைகளை நீரும் எழுதலாம். நானும் எழுதலாம். பாரதி பார்பனன் என்ற உனது மன கோணலை விட்டு விட்டு பாரதியை படி....புரியலாம். உன்மாதிரி ஆட்கள் சொல்லி பாரதி தமிழ் தெரியாதவன் ஆகிவிடுவானா? பாரதிக்கு என்னயா நஷ்டம்... அவன் காலம் கடந்தவன்.
\\புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது நெருக்கமான நண்பர்களாக, சால்வே கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பூ.ஆ.பெரியசாமி, பங்காரு பத்தர், திருப்புளிசாமிஅய்யா, பாரதிதாசன் போன்றோர் இருந்தனர்.//
உன்னைப்போன்ற வெத்துவேட்டு புண்ணாக்குகள் எல்லாம் பாரதியை பற்றி கதை விடுவது வெட்கக்கேடு.
அது சால்வே கல்லூரி இல்லை கலவை கல்லூரி.. வந்து விட்டான்கள் எழுத. தூத்தேரி....
http://www.maraththadi.com/article.asp?id=988&print=1
இந்தச் சுட்டியைப் பார்க்கவும். அச்சுப் பிரதியை வைத்து எழுதியவரை குறைச் சொல்லல் ஆகாது.
தமிழ் இலக்கணத்தில் பாரதியாருக்கு இருந்த ஈடுபாடு எத்தகையது என்பதை கீழ்வரும் ஆதாரம் எடுத்துக்காட்டும் என்பதால் அதை அப்படியே இங்கு தருகிறேன். படியுங்கள்
"பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா.குறிப்பிடுவதாவது : “தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழி மூவிடத்து மாகும்
இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.” (21)
ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக்கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா எவ்வளவு உண்மை” (22) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்."
---------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து ஒருபகுதி.
மேற்கொண்டு பாரதியை அறிந்து கொள்ள இவ்வலைப்பூவில் உள்ள பாரதியார் என்ற சுட்டியைச் சுட்ட வேண்டுகிறேன்.
நன்றி
Harish
நீங்களும் பாரதியை பார்ப்பனன் என்றே பார்க்கிறீர்கள்? வேரு ஏதாவது ஒரு கவியைப் பற்றி இப்படி எழுதப்பட்டிருந்தால், நமக்கென்ன என்று விட்டிருப்பீர்கள்.
//Blogger கொற்கை said...
Harish
நீங்களும் பாரதியை பார்ப்பனன் என்றே பார்க்கிறீர்கள்? வேரு ஏதாவது ஒரு கவியைப் பற்றி இப்படி எழுதப்பட்டிருந்தால், நமக்கென்ன என்று விட்டிருப்பீர்கள்.
May 25, 2009 10:23 PM//
பஞ்ச்...
முதலில் பாரதியாரே தன்னை ஒரு பார்ப்பனனாகத்தான் பார்த்தார்...அவர் ஜாதியத்திலிருந்து வெளியேவந்தவராக தன்னை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளவில்லை...ஜாதிய அடையாளங்களை கழட்டவும் இல்லை.
''பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே''
பார்ப்பனீயத்தை விடவும் இல்லை, பூணூலை விடவும் இல்லை...மாறாக ஒரேயொரு அரிஜனருக்கு பூணூலை மாட்டிவிட்டார்..அதாவது மனிதனை மேலேத்துகிறாராம் (எவனுக்கும் கீழே இறக்கும் அதிகாரமில்லை...லெவல் மெய்ன்டெய்ன் பன்றார்...).ஏன் அந்த பிரித்தாளும் பூணூல்? கயிறு...
பெண்ணடிமைத்தனத்தையும் அவர் விடவில்லை. விவேகானந்தரின் சீடர் நிவேதிதா அதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.(பாரதியார் திரைப்படம்)
பார்ப்பனர்கள் அவரை பார்ப்பனராகத்தான் பார்க்கின்றனர்.
பார்ப்பன இயக்குநர் பாலச்சந்தர் வானமே எல்லை என்ற படத்திலும் பாரதியாரை பாப்பனராகத்தான் காட்டியிருப்பார்...பாரதியாரே நீ வேலைக்கு அப்ளிக்கேஷன் போட்டிருந்தால் உன்னை ஐயர் என்று வேலைத்தர மறுத்திருப்பார்கள் என்பது போன்ற வசனம் பின்பு அது பெரிய சர்ச்சயை உண்டு பண்ணியது...(இதற்கப்புறம் படிப்படியாக அவருடைய எல்லாபடங்களும் ஊத்திகிச்சு அது வேறு விஷயம்...)
இதனடிப்படையில் எதிர்த்து உருவாக்கப்பட்ட படம் கடவுள்...ஒளிப்பதிவாளர் மற்றும் பகுத்தறிவாளர் வேலுப்பிராபாகரனால் உருவாக்கப்பட்ட படம்.
இதை இயக்குநர் வேலுப்பிரபாகரனாலும் பல நேரங்களில் ஊடகங்கள் மூலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இப்பொழுது தொலைக்காட்சிகளில் அந்த படத்தினை (வானமே எல்லை) ஒளிபரப்பும் பொழுது கூட அந்த குறிப்பிட்ட காட்சி வரும்பொழுது வசன ஒலிப்பதிவு நீக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.
இப்பொழுது புரிகிறதா? பார்ப்பனீயம் எப்படி கொழுந்து விட்டு எரிகிறது என்று. வெறி வெறி ஆரிய வெறி.....எதிர்க்கும் எதிர்க்கும் திரவிடம்...எதிர்த்துக்கொண்டேயிருக்கும்.
வழுவமைதி என்ற ஒரு கோட்பாடு தமிழ் இலக்கணத்தில் இருப்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளவும்...
வழுவமைதி என்ற ஒரு கோட்பாடு தமிழ் இலக்கணத்தில் இருப்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளவும்...
Post a Comment