Search This Blog

8.5.09

பெரியாரின் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஏடு!




பத்திரிகா தர்மம் - பேசுவது யார்?

தி.மு.க. ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதாக பஞ்சத்துக்காக அரசியலுக்கு வந்த பா.ம.க. நிறுவனர் புலம்புகின்றார்.

இந்து ஏடு தலையங்கம் எழுதிவிட்டது என்று இறும்பூதெய்துகிறார்.

இதே இந்து ஏட்டை என்ன பாடுபடுத்தினார் ஜெயலலிதா என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியுமே!

இந்து அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து ஆளைப் பிடிக்கும் வேலையில் இறங்கவில்லையா? மைசூர், பெங்களூர்வரை இந்து முரளியை ஜெயலலிதாவின் போலீஸ் படை விரட்டிக்கொண்டு ஓடவில்லையா?

நக்கீரன் நிருபர் என்ன பாடுபட்டார்?

ஆனந்தவிகடன் ஆசிரியர் அச்சுறுத்தப்பட்டதும், உள்ளே தள்ளப்பட்டதும் எந்த ஆட்சியில்?

இந்து ஏடு குடும்பத் தொல்லையில் சிக்கி இறந்துவிடும் என்றிருந்த நிலையில், அதற்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது யார்? அறிஞர் அண்ணாவின் கட்டளைப்படி அதனைத் தீர்த்து வைத்தவர் கலைஞர் அல்லவா? (இது தவறு என்றுகூட இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறது).

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அன்னை மணியம்மையார் மறைவுகளை ஆபிச்சுவரி காலத்தில் போட்ட இந்து ஏடு - இப்பொழுது மருத்துவர் ராமதாசு போன்றவர்களுக்கு இனிப்பாக இருக்கிறது.

பனகல் அரசர், ஆர்.கே. சண்முகம் மறைவு குறித்து ஒரு வரிகூட எழுதாத ஏடு இந்து என்று தெரியுமா?

தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான ஆதித்தனார் மறைவு குறித்து இரண்டு வரிகள் எழுதிவிட்டு, மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் மறைவினை முதல் பக்கத்தில் போட்டு தன் இனவுணர்வை இந்து வெளியிட்டதே!

இந்துவை தேள் என்று முரசொலி எழுதிவிட்டதாம் - தேள் கொட்டியதுபோல துடிதுடிக்கிறார் மருத்துவர்.

தந்தை பெரியாரின் மறைவிற்குத் தலையங்கமே தீட்டாத ஒரே ஏடு இந்து என்கிற விவரம் எல்லாம் மருத்துவருக்குத் தெரியுமா?

இட ஒதுக்கீடு கொள்கையில் இந்துவின் நிலை என்ன? ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் இந்துவைவிட கொலைகார ஆயுதம் வேறு உண்டா? சிங்கள ரத்னா பெற்றவராயிற்றே!

இந்துவின் வரலாறு என்பது - தமிழினத்தை குழிதோண்டிப் புதைக்கும் குல்லுகப்பட்டர் வரலாறு.


இவையெல்லாம் மருத்துவருக்கு எங்கிருந்து தெரியப் போகிறது? அர்த்தராத்திரியில் குடை பிடித்ததுபோல அவசரத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசக் கூடாது!


-------------------"விடுதலை" 7-5-2009

8 comments:

Unknown said...

//தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான ஆதித்தனார் மறைவு குறித்து இரண்டு வரிகள் எழுதிவிட்டு, மிருதங்க வித்வான் பாலக்காட்டு மணி அய்யர் மறைவினை முதல் பக்கத்தில் போட்டு தன் இனவுணர்வை இந்து வெளியிட்டதே!//

பார்ப்பனர்களிடம் உள்ள இன உணர்வு தமிழர்களிடம் இல்லை. காரணம் தமிழர்களை ஜாதியால்,மதத்தால்,கடவுளால் , சாம,தான,பேத, தண்ட முறைகளைப் பயன் படுத்தி பிரித்து சின்னாபடுத்தி பார்ப்பனர்கள் உயர் வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

இதைப் புரிந்தவர்கள் பார்ப்பன பத்திரிக்கைகளுக்கு வக்காலாத்து வாங்க மாட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மு. மயூரன் said...

ஜெயலலிதாவின் அரசியல் மாய்மாலங்களுக்கு மயங்கி, அவரது கடந்த கால அரசியலையே மறந்துவிட்டு விசிலடிக்கும் கூட்டத்துக்கு இப்படி அடிக்கடி சில உண்மைகளை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

ஜெயலலிதாவாகட்டும் கருணாநிதியாகட்டும் இன்னும் ராமதாஸ் தொடக்கம் திருமா வரைக்கும் எவருமே மக்களுக்கு எதிரானவர்கள்தான் என்பதை மக்களுக்கு நினைவூட்டவேண்டிய பணி முக்கியமனாது.

பெரியார் வழிவந்த தோழர்கள் முன்னாலுள்ள கடமையும் அதுவே.

பாராளுமன்ற அரசியலில் தின்று கொழுக்கும் தி. மு. க தொடக்கம் அ.தி.முக வரையான கட்சிகளை நிராகரித்து மக்கள் நலன் முன்னிறுத்தி மக்களை சரியாக நெறிப்படுத்த வேண்டியுள்ளது.

அத்தோட்டு பெரியார் என்ற மகத்தான முன்னுதாரணத்தை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தை நம்பாமல், ஓட்டுக்கடசி அரசியலை நிராகரித்து மக்களைத் திரட்டி, மக்களை அரசியல் மயப்படுத்தி, மக்களுக்கு தேவையான உரிமைகளை மக்கள் போராடி மட்டுமே பெற முடியும் என்ற உண்மையை செயலில் காட்ட வேண்டிய வரலாற்றுத் தருணத்தில் தி. க வ்ந்து நிற்கிறது.

திராவிடத்தோழர்கள் இதனை முன்னின்று நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

தமிழர்களை டில்லியிடம் காட்டிக் கொடுத்து இன ஒற்றுமைக்கு ஆப்பு வைத்ததே கருணாநிதிதான். துரோகி கருணாவின் செயல்பாடுதான் பார்ப்பன ஜேவை இன்று தமிழினத் தலைவர் ஆக்கியிருக்கிறது.

Unknown said...

இந்து ஏடு தேர்தல் கமிஷன் முன்னாள் தலைமை ஆணையர் கோபல்சாமியின் கோரிக்கை சரியானது அல்ல என்று எழுதிய போது அதை எடுத்துப் போட்டு வெளியிட்ட விடுதலைக்கும்,வீரமணிக்கும் அப்போது இதெல்லாம் தெரியவில்லையா. இந்து கோபால்சாமியின் கருத்தை எதிர்த்தது,ஆகவே நாங்கள் கோபால்சாமியை ஆதரிப்போம் என்றா
எழுதினீர்கள். இந்து சொன்னால் என்ன யார் சொன்னால் என்ன சொல்வது உண்மையா என்று பார்பதுதானே பகுத்தறிவு.

Thamizhan said...

இந்து ஏட்டிற்குச் சப்பைக் கட்டுக் கட்டும் அம்பிக்கு,அல்லது அம்பியாக நடிப்பவருக்கு...

ஒரு சவுண்டிப் பார்ப்பனருக்குத் தரும் மரியாதையை தமிழினத் தலைவர்களுக்கு இந்தத் தமிழரைச் சவுண்டியடித்து வாழும் நரசிம்மன் பரம்பரை தருவதில்லை.
ஈழத்தமிழருக்கு எதிராக எழுதி,பிரபாகரனை எத்தனை முறை கொன்று படம் போட்டது என்பதைப் பார்த்தாலே தெரியும்.

vijay tiruppur said...

///இதே இந்து ஏட்டை என்ன பாடுபடுத்தினார் ஜெயலலிதா என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரியுமே!

இந்து அலுவலகத்துக்குள்ளேயே நுழைந்து ஆளைப் பிடிக்கும் வேலையில் இறங்கவில்லையா? மைசூர், பெங்களூர்வரை இந்து முரளியை ஜெயலலிதாவின் போலீஸ் படை விரட்டிக்கொண்டு ஓடவில்லையா?இந்து ஏடு குடும்பத் தொல்லையில் சிக்கி இறந்துவிடும் என்றிருந்த நிலையில், அதற்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது யார்? அறிஞர் அண்ணாவின் கட்டளைப்படி அதனைத் தீர்த்து வைத்தவர் கலைஞர்
அல்லவா//// அதனாலதான் கருனா வுக்கு ஜெயா மேல்,,,,
சன்கராசாரி மட வாட்ச்மேன்ன கூட கருனா வால கைது பண்ண்முடியாது