Search This Blog

11.5.09

யாருக்காவது வருடா வருடம் திருமணம் நடக்குமா?

சாமிக்கு மொய்யாம்!

மதுரை - மீனாட்சி திருக்கல்யாணம் என்பது பெயர் பெற்ற ஒன்றாம். வருடா வருடம் சுந்தரேஸ்வரருக்கும் மீனாட்சிக்கும் இந்தக் கல்யாணம் நடக்கிறது. யாருக்காவது வருடா வருடம் திருமணம் நடக்குமா? நடக்காது; ஆனால் கடவுளுக்கு நடக்கிறது - அதனால்தான் திருக்கல்யாணம் என்ற பெயரோ! மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரர் சார்பில் அர்ச்சகர்ப் பார்ப்பனர் தாலி கட்டும்போது (இது என்ன கேவலம்!) பெண்கள் தங்கள் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார்களாம். இதனால் பெண்கள் பூ, பொட்டுடன் நீண்ட காலம் வாழ்வார்களாம். (மதுரையில் எதற்கு மருத்துவமனைகள்?) மீனாட்சி கல்யாணம் நடந்தபிறகு தடபுடலாக விருந்து நடைபெறுமாம். இதில் கலந்து கொள்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுவார்களாம். விருந்தில் கலந்து கொண்டு விட்டு சும்மா போகலாமா? மொய் எழுதுவார்களாம் பக்தர்கள். எப்படியோ புரோகிதச் சுரண்டல் நடந்தால் சரியே!)

----------------"விடுதலை" ஞாயிறுமலர் 9-5-2009

5 comments:

MiniLorry said...

தலைவா இதுஒன்றும் பயங்கர குற்றமில்லை!

நேற்று இரவு 3000 தமிழர்கள் கொள்ளப்படவில்லைஎன்று ஒரு பதிவு போடுங்கள், ரொம்ப தமாசா இருக்கும்!

யட்சன்... said...

வருசாவருசம் தந்தை பெரியார் பிறந்தநாளுக்கு அவர் சிலைக்கு மாலைபோட்டு மரியாதை செய்வது மாதிரியான மனப்போக்கின் அழுக்கேறிய நிலையை இந்த திருக்கல்யாணாம் என சொல்லலாம்.

பெரியாருக்கும் இன்னும் நூற்றாண்டுகள் கழித்து இத்தகைய அவலங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

MyDreams said...

அட உங்களுக்கு புரிஞ்சது, நீங்கள் ஜால்ரா அடிக்கும் கருனாநீதிக்கு புரியாமல், அவர் நிஜ வாழ்க்கையில் செய்துவிட்டார் பாருங்கள்!

Payam Ariyan said...

கலைஞர் >> ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தேர்தலுக்கு அப்புறம் பாத்துக்கலாம்...

தமிழ் ஓவியா said...

பெரியாருக்கு சிலை ஏன்? என்பது தொடர்பான பதிவுகள் இதே வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
தேடிப்படிக்க வேண்டுகிறேன் யட்சன் அவர்களே.