Search This Blog

8.5.09

எம்.ஜி.ஆர் - கி.வீரமணி - திராவிடர் கழகம்




உண்மைக்குத்தான் இறதி வெற்றி


தந்தை பெரியார் அவர்கள் நன்றியுரை ஆற்றுகையில், பிறந்த நாள் விழாக்கள் என்பதே முதன்முதலில் பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டவைகளாகும். கடவுளுக்குப் பிறந்தநாள் என்றும் ஏற்பாடு செய்தவர்கள் ஆரியர்கள். பின்பு எந்தக் கடவுளும் பிறக்கவில்லை, சாகவில்லை. பின் ஏன் ஏற்பாடு செய்தார்கள் என்றால், அந்த அளவில் அந்தக் கொள்கைப் பிரச்சாரம், தீவிரப்பிரச்சாரம் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவே ஆகும்.

பிறகு, படிப்படியாக மனிதர்களுக்கும், அவர்களது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதாகும் என்றும் ஆக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டு எனக்கு வழங்கிய இந்த வெள்ளிச் சிம்மாசனம் இதை நான் என்ன செய்வது? என்னவோ சொல்வார்களே, ஏழைக்கு யானை அளித்த கதை அதைப்போன்று இது உள்ளது. ஓர் ஏழை யானையைக் கொண்டு என்ன செய்வான்? அதுபோலத்தான் எனக்கு இந்த வெள்ளிச் சிம்மாசனம் என்றாலும், உங்கள் அன்பின் காரணமாக இதனை ஏற்றுக் கொள்வதாக அய்யா அவர்கள் அந்தக் கொள்கை விழாவில் முழங்கினார். விழாவில் நான் உரையாற்றுகிறபோது, தந்தை பெரியார் அவர்களை வெண்தாடி வேந்தர் என்றும், தமிழக மக்கள் அழைக்கின்றார்கள். ஆனால், சேலத்து மக்களாகிய நாங்கள் வெண்தாடி வேந்தர் அவர்களை வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்த்தி நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுப் பேசினேன்.

வெண்தாடி வேந்தர் அவர்களை வெள்ளிச் சிம்மாசனத்தில் அமர்த்தி இருப்பது மட்டுமல்ல, வேந்தருக்குப் பக்கத்தில் ஆளாக்கிவிடப்பட்ட அமைச்சர் பெருமக்களையும் அமரச் செய்துள்ளார்கள். இந்தக் கண்கொள்ளாக் காட்சியை உருவாக்கிய பெருமை இந்தச் சேலத்திற்கு உரியதாகும்.

நண்பர் முத்துசாமி அவர்கள் கூறினார், கலைஞர் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து தலைசிறந்த மருத்துவர்களை அழைத்து, அய்யா அவர்களின் ஆயுளை வளர்க்க வழிசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். எனவே, அய்யா அவர்களின் ஆயுளை வளர்க்க டாக்டர்கள் வெளிநாட்டு மருத்துவர்களை நாடவேண்டிய அவசியமில்லை. ஆனால், அய்யா அவர்களின் ஆயுள் நீள ஏற்ற மருந்து அய்யாவின் அன்பார்ந்த சீடர் டாக்டர் கலைஞருக்கு நன்றாகத் தெரியும். கழகத்தோழர்களாகிய எங்களுக்கும் தெரியும்.

இன்றைக்கு திமுக ஆட்சி - கலைஞரின் ஆட்சி செய்கின்ற செயற்கரிய காரியங்களை-யெல்லாம் கண்டு தந்தை பெரியார் அவர்கள் ஆயுள் நீள்கின்றது - நீள இருக்கின்றது. நாளுக்கு நாள் ஆட்சியின் செயல் கண்டு பூரித்த வண்ணம் இருக்கின்றார்கள் என்றும், சாக்ரடீசுக்கு - பிளேட்டோ சீடர் ஆவார். அதுபோல் தந்தை பெரியார் தமிழகத்தின் சாக்ரடீஸ் ஆவார். அவருக்கு கிடைத்த பிளேட்டோ (சீடர்)தான் அண்ணா ஆவார்!

பிளேட்டோவுக்கு அரிஸ்டாட்டில் என்ற ஒரு சீடருண்டு. அந்த வரிசையில், அரிஸ்டாட்டில் (சீடர்)தான் கலைஞர் அவர்கள் என்று குறிப்பிட்டேன்.

சேலத்தில் தரப்பட்ட இந்த வெள்ளிச்சிம்மாசனம், சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தந்தை பெரியார் அவர்களுக்கு, அவர்தம் பிறந்தநாள் விழா அல்லது சிறப்புமிகு விழாக்களில் தந்த பொருள்களை அன்னை மணியம்மையர் அவர்கள் திருச்சி பெரியார் மாளிகையில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள்!

1932இல் இலங்கை வழியாக அய்ரோப்பிய நாடுகளுக்கும், சோவியத் ரஷ்யா உட்பட பாஸ்போர்டில் - விசா பெற்று சென்று திரும்பிய தந்தை பெரியார் அவர்களுக்கு இலங்கை வடிவம் அமைத்த வெள்ளித்தட்டை இலங்கைவாழ் தமிழ்ப் பெருமக்கள் தந்தார்கள்! இலங்கை உபந்நியாசம் என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் அய்யா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு ஒரு சிறுநூலாக வெளியிடப்பட்டு பல பதிப்புகள் வெளிவந்துவிட்டன!

ஒரு வரவேற்பு நிகழ்வில், கல்லூரி நிகழ்வு என்று இலங்கைத் தமிழர் வாழ்வுரிமை வீரர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் மாணவர்மன்ற செயலாளராக இருந்து வரவேற்புக் கொடுத்துள்ளதாகவும், அக்கூட்டத்திற்குப் பின்னாளில் இலங்கைப் பிரதமரான பண்டாரநாயகே அவர்கள் தலைமை தாங்கியதாகவும் குறிப்பிட்டார்கள்!

இந்நிகழ்ச்சி லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவினை ஒட்டிய நிகழ்வில் குறிப்பிட்டார்கள். நானும், அதற்கு அழைக்கப்பட்டு கலந்துகொண்டேன்.

அப்போது இலங்கை வழங்கப்பட்ட பொருள்; ரஷ்யாவிலிருந்து திரும்பியபோது தாடியில்லாத சுயமரியாதை வீரராக அய்யாவின் உருவம் இவை போன்றவைகளும், வெற்றிச் சிம்மாசனம், யுனஸ்கோ விருது, தாமிரப்பத்திரம் - (மத்திய அரசு வழங்கியது!) உட்பட பல பொருள்களை அம்மாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற நான் அவைகளை ஒரு காட்சியகமாக்கி சென்னை பெரியார் திடலில் அய்யா தங்கிய அறையை அதற்கு ஒதுக்கி அந்நாள் பிரதமர் சவுத்திரி சரண்சிங் அவர்களைக் கொண்டுவந்து திறக்க வைத்தோம்.

1977வாக்கில் முதல் அமைச்சரான திரு.எம்.-ஜி.-இராமச்சந்திரன் அவர்கள் அய்யா வழியில் அம்மா தலைமை, கலைஞரை ஆதரிப்பதாக இருந்ததால், திராவிடர் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிலரை வைத்து - இயக்கத்தினைப் பிரிப்பதாகக் கருதி, திராவிடர் கழகம் (சிதம்பரம் கிருஷ்ணசாமி பிரிவு) திராவிடர் கழகம், (திருவாரூர் தங்கராசு பிரிவு) திராவிடர் கழகம் என மூன்று அமைப்புகள் இருப்பதுபோல செய்து அய்யா கண்ட இயக்கத்தை ஒழிக்க அல்லது அடக்க முயன்றார். அவர் அதில் வெற்றிபெற முடியவில்லை. அதனால், ஆட்சியில் இருந்தபோது இயக்கத்திற்குச் சில தொல்லைகள் தந்தார்; அதை சட்ட ரீதியாகவும், சமாளித்து வெற்றிகண்டேன் - அம்மாவுக்குப்பின்!

அய்யாவின் நூற்றாண்டு விழாவை அவரது அரசு ஓராண்டு நடத்திடத் திட்டமிட்டு அறிவித்து, எங்களுக்கும் (தி.க.விற்கு) அழைப்பு அனுப்பியது.

நான் பதில் எழுதினேன். திராவிடர் கழகம் என்பது தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டது; அது மூன்று அமைப்பாகத் தாங்கள் ஆக்கி, எங்களையும் அழைப்பது சரியான நிலை அல்ல; எனவே நாங்கள் அதில் கலந்துகொள்ள இயலாது! என்று எழுதிவிட்டு தாங்கள் யோசனைகளைக் கேட்டு உள்ளதால் எங்கள் யோசனைகளை உறுதியும் செய்து எழுத்துச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறோம்.

திராவிடர் கழகம் ஒராண்டுக்குரிய அய்யாவின் நூற்றாண்டினை மக்கள் விழாவாக நடத்தியது நாடு முழுவதும்!


17-.9.-1979அன்று அதன் நிறைவு விழாவினை ஈரோட்டில் நடத்தினார் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள். அதில் பேசிய கழகத்தைவிட்டு அன்னை மணியம்மையாரால் விலக்கப்பட்ட திருவாரூர் தங்கராசு, சேலத்தில் மக்களால் கொடுக்கப்பட்ட வெள்ளி சிம்மாசனம், பெரியார் அளித்திருந்த பச்சைக்கல் மோதிரம் இவைபற்றி எந்தத் தகவலும் இல்லை; எனவே இதுபற்றி முதலமைச்சர், அரசு விசாரணை நடத்தி உரியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று அபாண்டக் குற்றச்சாட்டினைக் கூறி அது ஒருவரால் வந்தது!

அதைப்பார்த்து நான் சிரித்துக்கொண்டேன். ஒராண்டுக்கு முன்பே அவைகள் இன்ஷியூர் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் தகவலை அவர் அரசு அறிவது நல்லதுதானே. அப்போதுதானே யார் உண்மையானவர்கள் என்ற செய்தி நாட்டுக்குள் பரவும் என்று எண்ணினேன். ஆத்திரப்பட்ட கழகத்தோழர்கள், பொறுப்பாளர்களையும் அமைதிப்படுத்தினேன்!

11-.12.-1980 அன்று பெரியார் திடலில் பழைய இராதா மன்றத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் ஈ.வெ.கி.சம்பத்தின் புதல்வர்களில் ஒருவரான கவுதமன் அவர்கள் திருமணம் செய்வதாக இருந்தபோது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல் அமைச்சரான பின்பு அவர் பெரியார் திடலுக்கு இந்த மணவிழாவிற்குத் தலைமை தாங்க வருகிறார்.

அன்று காலையே நான் அவரது எண்ணுக்குத் தொலைபேசியில் பேசினேன். எதிர்பாராமல் அவரே எடுத்துப்பேசினார். முதல்முறையாக நீங்கள் பெரியார் திடலுக்கு வருவதால் உங்களை முறைப்படி வரவேற்க வேண்டியது எங்கள் கடமை என்று அவசியம் அதற்கேற்றவாறு எங்கள் வரவேற்பினையும் பெற்றுத் திரும்பவேண்டும் என்று கூறினேன்.

அவர் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்; அவருக்கு அதிர்ச்சியாகக்கூட இருந்திருக்கக்கூடும்; நாம் பெரியார்தம் அடிச்சுவற்றைப் பின்பற்றி நமது இடத்திற்கு வரும் பெரியவர்களை வரவேற்பது நமது பண்பாடு ஆகும் என்பதால் இதைச் சொன்னேன்.

அவர் மகிழ்ச்சியுடன் அவசியம் வருகிறேன் என்று சொன்னார்கள்.

அவர் திருமணத்தை இராதாமன்றத்தில் முடித்துவைத்துவிட்டு, தந்தை பெரியார் காட்சியகத்திற்கு வருகை தந்தார்; உடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களும் வந்தார். வரவேற்று சால்வை அணிவித்துவிட்டு, உள்ளே அந்தப் பொருள்கள் உள்ள மியுசியத்தை சுற்றிப்பார்த்தார். கண்ணாடியில் பிணைக்கப்பட்ட வெள்ளிச் சிம்மாசனம் அருகே வந்தவுடன், இதுதாங்க அய்யாவுக்கு சேலத்தில் கொடுத்த வெள்ளிச் சிம்மாசனம், பத்திரமாக எல்லாப் பொருள்களும் இன்ஷியூர் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன!

பச்சைக்கல் மோதிரம் பத்திர வங்கி பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரத்தின் லாக்கரில் உள்ளன என்றவுடன் பண்ருட்டியார் சிரித்தார் - அதன் பொருள் புரிந்து,

பிறகு வழக்கம்போல் கைகளைப்பிடித்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துச் சென்றார்; பொய்யுரைகள் எத்தனைக் காலத்திற்கு நிற்க முடியும்? உண்மைக்குத்தான் இறுதி வெற்றி!!

-------------------------------நினைவுகள் நீளும்...


-------------- கி.வீரமணி அவர்கள் மே 01-15_2009 "உண்மை"இதழில் எழுதி வரும் அய்யாவின் அடிச்சுவட்டில்.... - இரண்டாம் பாகம் 18

5 comments:

Anonymous said...

கலைஞர் நல்லாத் தான் சொல்லி இருக்கார். மழை விட்டாலும் தூவானம் நிக்கவில்லை. எப்ப தான் இவங்க இதை நிப்பாட்டு வாங்களோ?

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

மானமிகு முண்டம்,தேர்தலுக்குப் பின்,அன்பு சகோதரி,புரட்சித் தலைவி,பொன்மனச் செம்மலின் வாரிசு பக்கம் கண்டிப்பாக தாவும் நாள் வரப் போகிறது,அப்போது ஆஸ்தான பாசறை சொறி நாய்களான,ஓவியா மற்றும் தமிழன் அய்யாமார்கள் வேறு மாதிரி காமெடியா குரைப்பாங்க.வாழ்க வாழ்க.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் என்று ஏமந்து கொண்டிருக்கும் தமிழர்களின் பார்வைக்கு .....

இந்தப் பார்ப்பனர்களின் பின்னூட்டங்களைப் பாரீர்.

Thamizhan said...

கூழைக் கும்பிடு கீழ்ப்பாக்கம் அதன் ஆசையை வெளிப் படுத்தியுள்ளது.
அம்பி, சுப்புணி மாதிரி இன்னும் எத்தனை உங்களவா கொலை,கொள்ளைக் குற்ற வாளிகள் உள்ளே போகப் போகிறார்களோ!அப்போ அலறாதே அய்யோ அவாளே பரவாயில்லை என்று!!!

அசுரன் திராவிடன் said...

பரதேசி சவுண்டி பார்ப்பன் பாலா (இவனை கேவலப்படுத்தி சொல்ல ஒரு கேவலமான விலங்கு கூட இல்லை) இதற்கு பதில் சொல்வானா ?
***********************************

மகன்:
அப்பா,நம்ம பாட்டி போன மாசம் செத்து சொர்கத்துக்கு போனாலே ,ஏன் இன்னும் திரும்பி வரலே ?

அப்பா :
சொர்க்கத்து போனவா எல்லாம் திரும்ப வரமாட்டா ,சாமியிண்டே இருப்பாடா!

மகன்:
நேற்று பெருமாள் கோயில் திறந்து சொர்க்க வாசல் போனவா நிறைய பேரை இன்னைக்கு டாஸ்மாக் கடையாண்டே பார்த்தேனே !!!