குகையில் புலியைப் பிடிக்க முடியுமா?
1987 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஒரு நாள். புதுடில்லியின் ஆடம்பர விடுதி ஒன்றின் அறையில் - இந்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் குழாய்ப்புகை பிடித்தபடி கோபம் கொப்பளிக்க நின்று கொண்டிருந்தார். ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சம்மதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந் திய அரசும் இலங்கை அரசும் ஈழத்தில் அமை தியை ஏற்படுத்தத் திட்டம் போட்டிருந்த ஒரு யோசனைக்கு அவரின் சம்மதத்தை அளிக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் திட் டத்திற்கு நிபந்தனை - புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பதுதான் திட்டம். தனி நாடு கோரிக்கையைக் கைவிடவேண்டும் என்பதும் மற்றொரு நிபந்தனை. எதையும் ஏற் றிட பிரபாகரன் தயாராக இல்லை.
நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், இந்தப் புகைக் குழாய்ப் புகையிலை தீர்வதற்குள் உம்மைத் தீர்த்துக் கட்டி விடுவோம் என்று அந்த அதிகாரி கூறினார். அவர் இலங்கைக்கான அன்றைய இந்தியத் தூதர் ஜே.என். தீட்சித்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு விடுதலைப் புலிகளிடம் வசமாகச் சிக்கிக் கொண்டது இந்திய ராணுவம்தான்! ஒரே வாரத்தில் தீர்த்து விடுவோம் என்று போனவர்கள் - மூன்று ஆண்டுகள் போராடி னார்கள் - 1155 இந்திய ராணுவ வீரர்களைச் சாகக் கொடுத்தனர்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளை முற்றி லுமாகத் தீர்த்துக் கட்டி விடும் என்றும் பிரபாகரனை உயிருடனோ, இல்லாமலோ பிடித்து விடும் என்றும் கூறுகிறது. புதுக்குடியிருப்பைப் பிடித்துவிட்ட தாக ஏப்ரல் 5 இல் அறி வித்தது. 420 புலிகளின் உடல்களைக் கைப்பற்றியதாகக் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங் களாக ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போர் இல்லாப் பகுதியில் 20 கி.மீ. பரப்பிற்குள் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆன்டனி, பொட்டு அம்மான் போன்ற தலைவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதயா நானயக்கரா கூறுகிறார்.
அவர்கள் தப்பிப்பதற்கு வழியே இல்லை என்று கொழும்பிலிருந்து தெகல்கா இதழுக்குக் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் இதனை ஏளனமாகப் புறந்தள்ளுகிறார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கடல் வழியாக பிரபாகரன் தப்பிச் சென்று விட்டார் எனக் கூறினார்.
ஏப்ரல் முதல் நாளன்று பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி சண்டையில் காய மடைந்தார் என்றனர். புலிகள் இதனையும் மறுக்கின்றனர். இப்போது இலங்கை ராணுவம் ஆன்டனியைத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது. அவர் போர் முனையில் படையை நடத்துகிறார் எனத் தெரிகிறது.
ஆன்டனி இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளைத் தயாரித்துள்ளார் என இணைய தளத்தில் செய்தி வெளி யிட்ட இலங்கை ராணுவம், இதுபற்றிய விவரங்களைச் சொல்லவில்லை. 2007 முதல் பல் வேறு குற்றங்கள் தொடர் பாக அவரைச் சம்பந்தப் படுத்துகிறது ராணுவம்.
அவர் சிறந்த தொழில் நுட்ப அறிவுள்ளவர்; அவர்தான் பிரபாகரனின் லட்சிய தீபத்தைத் தொடர்ந்து தூக்கிப் பிடிப்பவராக இருப்பார்.
இலங்கையின் நிலப் பரப்புக்குள், ஈழம் எனும் பெயரில் தனி மாநிலத்தை பிரபாகரன் அமைத்துவிட்டார். 150-க்கு 100 கி.மீ. என்ற அளவில் இலங்கையின் வடபகுதியில் அமைத்து தங்களது நிருவாகம், நீதிமன்றம், ராணுவம், கடற்படை, விமானப் படை போன் றவற்றை அவர்கள் வைத் திருந்தார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ராஜபக்சே அரசு மீறி விட்ட 6 ஆண்டுகாலத்தில் இவற்றைத் தாக்கி வந்து, கடந்த 2008 ஜனவரியில் நேரடியான போரையே தொடுத்து விட்டது.
குசால் பெரரா எனும் இலங்கையின் இதழாளர் ஒருவர் கூறுவது போல, இந்தக் குட்டி மாநிலத்தைச் சிறுகச் சிறுக அழித்துவிட்டார்கள். அதில் கடைசியாக அழிக்கப்பட்ட பகுதி தான் புதுக்குடியிருப்பு என அவர் கூறுகிறார். மறுதலிக்கும் லங்கா (Lanka Dissent) எனும் ஏட்டின் ஆசிரியர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வெளியேற்றப்பட்ட இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து, கொரில்லா தாக்குதலைத் தொடங்க விடுதலைப்புலிகள் திட்ட மிட்டிருப்பதாக நம்புகிறார். (அரசின் கொள்கைகளைக் கண்டித்து எழுதிய காரணத்திற்காக பத்திரிகை ஆசிரியர் வசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதன் பின்னர், இவரும் தன் இணைய தளத்தை மூடிவிட்டார்).
சிறீலங்காவின் கிழக்குப் பகுதிகளான பட்டி கோலா, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதி களுக்கு விடுதலைப்புலி கள் ஊடுருவிச் சென்றுள் ளதாகப் பெரரா கூறுகிறார். கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து அவர்கள் காவல்துறை, ராணுவம், அரசுக்கு ஆதரவான கரு ணாவின் கூட்டம் ஆகியவற்றைத் தாக்கி வருகின்றனர்.
அம்பாறையில், ஏப்ரல் 5 ஆம் நாள் காவல் அதிகாரி எச்.எல். ஜமால்தீன் என்பவரைப் புலி கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதற்கு 2 நாள்கள் முன்பாகத்தான் 13 புலிகளைக் கொன்றதாக ராணுவம் கூறியது. ஏப்ரல் 1 இல் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்; ஒருவர் கையெறி குண்டுத் தாக்குதலில் பட்டிகோலாவில் காயமடைந்தார். அதற்கும் சில நாள்கள் முன்னதாக, அதே பகுதியில் 6 சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். அம்பாறையில் மார்ச் 26 இல் கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கும் ஒரு வாரத் திற்கு முன்பு பட்டி கோலாவில் சிறப்புப் பாதுகாப்புப் படையினரைத் தாக்கி 3 வீரர்களைக் கொன்றுவிட்ட னர்.
இதுவரை அப்பாவி மக்கள் 3 ஆயிரம் பேர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
இலங்கை ராணுவத் திற்கு ஏற்பட்ட சாவுக் கணக்கு பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுவது கிடையாது. இலங்கை எதிர்க்கட்சியான அய்க்கிய சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் சிறீதுங்க ஜயசூரியா, இது வரை 10 ஆயிரம் படை வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளில் கொல்லப்பட்டனர் எனக் கூறுகிறார். ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலில் இவர் போட்டியிட்டவர்; அரசின் கொள்கைகளைக் கடுமையாகத் தாக்குபவர்.
ராணுவத்தின் இணைய தளத்தில் உள்ள செய்தி இது: சமீப காலத்தில் திரிகோணமலை, பட்டி கோலா, அம்பாறை ஆகிய பகுதிகளில் நுழைந்துள்ள புலிகள் தாக்குதலில் ஈடுபட்டு மக்களை யும், படையினரையும் ஆத்திரமூட்டுகின்றனர்.
பல விடுதலைப்புலிகள் அடர்ந்த முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் 1980 களில் இந்தியப் படையுடன் புலிகள் மோதிப் பலரையும் கொன்றனர். உண்மையிலேயே, இந்தப் பகுதி புலிகளின் (குகைகள்) வாழ்விடம்தான். இந்தி யப் படையின் வலுவான தடுப்பு நடவடிக் கைகளுக்குப் பின்னரும் புலிகள் நிறைய படைக் கலன்களைக் கடத்தி வந்தனர் என்று 1987-இல் இப்பகுதியில் போர்ப் படைக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.
இதே கருத்தை யாழ்ப் பாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என் சிறீகாந்தா எதிரொலிக் கிறார். ஆயிரக்கணக்கான புலிகள் காட்டுக்குள் கலந்து உறைகின்றனர் என்று தெகல்கா ஏட்டுக்கு சிறீகாந்தா தெரிவித்தார்.
சிறீலங்கா படையினரைத் தாக்கும் கொரில்லா போரை பிரபாகரனின் மகன் ஆன்டனி தலைமை தாங்கி நடத்துவார் என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.
பிரபாகரனைப் பேட்டி கண்டு பெயர் பெற்ற அனிதா பிரதாப், என்றாவது ஒரு நாள் ஆன்டனி தன் தந்தையிடம் இருந்து தலைமைப் பொறுப்பைப் பெறுவார் என்று கூறுகிறார்.
தலைமைப் பொறுப்பைப் பெறுவது எளிது: ஆனால், அவரின் லட்சியத்தை வரித்துக் கொள் வது எளிதானதல்ல எனக் கூறும் இவர், அந்த ஆசைகளை நிறை வேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்று கூறுகிறார்.
------------------தரவு: தெகல்கா, 18.4.2009 -தமிழில்: அரசு -"விடுதலை" 30-4-2009
Search This Blog
1.5.09
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஊம்--ற நாய்க்கு --- என்ன --என்ன? நீங்க ---- ங்க. மற்றவங்களுக்கு மட்டும் வாயால வடிஞ்சால் படமெடுத்து போட்டு நல்லாப் பண்ணத் தெரியலயே என்று புலம்புங்கள்.
உங்கள் புலம்பல் ம்ம்ம் தாங்க முடியவில்லை.
Post a Comment