Search This Blog

16.4.09

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சு




குழந்தைகளின் மனதில் தூவப்பட்ட நஞ்சு எத்தகைய விளைவை ஏற்படுத்தியது என்பதை கோத்ரா கலவரத்தின்போது நாடு கண்டது. அதனைத் தொடர்ந்து ஒரிசா கலவரத்திலும் காணப்பட்டது.

"அவர்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் கையில் வாளோடுதான் போனார்கள். அவர்களுடைய படை நான்கு பக்கங்களிலும் சென்றது. எதிர்ப்பட்ட நாடுகளெல்லாம் தாக்கி அழிக்கப்பட் டன. வழிபாட்டு இடங்களும் அழிக்கப்பட்டன. நூல் நிலையங்கள் கொளுத்தப்பட்டு மத நூல்கள் எரிக்கப்பட்டன. தாய் மார்களும் சகோதரிகளும் களங்கப்படுத்தப் பட்டனர். இரக்கமும் நீதியும் அவர்கள் அறி யாதவை - இதுதான் ஆர்எஸ்எஸ் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் 9 வயதிலிருந்து இசுலாம் பற்றிப் படிக்கப் போகும் பாட நூலான கவுரவத்தின் கதை என்கிற நான்காம் வகுப்புப் பாடப்புத்தகத் தில் உள்ளவை. சரசுவதி சிசு மந்திர் பிரகாசம் எனும் பதிப்பகம் (ஆர் எஸ்எஸ் இயக்கம் நடத்து வது) பாட நூலை வெளி யிட்டுள்ளது.

இசுலாமியர்களின் கொடுமைகள் என்ற தலைப்பில் அதே புத்தகம் கற்றுத் தருவது இவை தான்:

டில்லியின் குதுப்மினார் இன்றைக்கும் குத்புதீன் அய்பக்கின் பெயரால் பேர் பெற்றது. இதை அவர் கட்ட வில்லை. அதைக் கட்டும் ஆற்றலும் அவர்க்கிருந்த தில்லை. சமுத்ர குப்த சக்ரவர்த்தியால்தான் உண்மையில் அது கட்டப் பட்டது. அதன் உண்மை யான பெயர் விஷ்ணு ஸ்தம்பம்... இந்த சுல்தான் அதன் சில பாகங்களை இடித்துக் கட்டியதால் அதன் பெயரை மாற்றி விட்டனர்.

இந்த அளவுக்கு முசுலிம் களைப் பயங்கரமாகச் சித்திரித்த இவர்கள் - இந்து வகுப்புவாதிகள் - குஜராத், புனே, அயோத்தியாவில் அண்மைக் காலங்களில் செய்தவை இவர்களையும் அப் படியே சித்திரிக்கும் வகை யில் அமைந்திருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். புனேயில், பந்தர்கர் இன்ஸ்டி டியூட்டின் நூல் நிலையம் அடித்து நொறுக்கப் பட்டு - குஜராத்தில் தாய்மார்களும் சகோதரிகளும் களங்கப்படுத்தப் பட்டுக் கொல்லப்பட்டு - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

பரிவார் அல்லது குடும்பம் என்பது நாகரிகமான, மனிதப் பற்றுள்ளவை எனத்தான் பொருள் படுமேயல்லாது, வெறுப்பையும் விரோதத்தையும் விதைத்து கொலையைத் தூண்டுபவற்றைக் குறிக்க முடியாது. ஆர்எஸ்எஸால் வழி நடத்தப்படும் சங்கக் கூட்டு இயக்கங்களைப் பொறுத்தவரையில் முசுலிம்களை விடக் கிறித்துவர்களின் நிலை மேலானதல்ல.

ஆர்எஸ்எஸ் நடத்தும் வித்யாபாரதி சன்ஸ் தான் சிறார்களுக்கு மதம், பண்பாடு, நாட்டுப்பற்று போன்றவற்றைக் கற்றுத் தருகிறோம் எனக்கூறும் புத்தக எண் 12இல் கிறித்துவர்கள் நாட்டுக்கு விரோ தமானவர்கள் எனவும் இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் என்றும் வருணிக்கப்பட்டுள்ளது. சதி எண்ணத்துடன் கூடிய கொள்கைத் திட் டங்களைக் கொண்ட இந்த மதக்காரர்களால் தான் நாடு துண்டாடப்பட்டது. இன்றைக்கும் கூட, நாகாலாந்து, மேகா லயா, அருணாசலப்பிர தேசம், பிகார், கேரளா மற்றைய பகுதிகளில் கிறித்துவ மிசினரிகள் தேச விரோதத்தை வளர்க் கின்றன; அதனால் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இளம் மாணவர்களின் மனதில் இப்படி ஏற்றப்பட்ட நஞ்சு, எத்தகைய கொடூர விளைவு களை நாட்டில் ஏற்படுத் தியது என்பதை குஜராத் தில் கோத்ரா சம்பவத் தைத் தொடர்ந்து நடத் தப்பட்ட இனப் படு கொலைகளும், ஒரிசா வில் சமீபத்தில் நடந்த வையும் காட்டுகின்றன (ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் பாஜ கட்சி இத்தகைய நச்சுக் கருத்துகளை விதைத்தே வருகிறது). கோத்ரா நிகழ்ச் சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே டீஸ்டா செதல் வாட் போன்றவர்கள் எச்சரிக்கை விடுத்தனர் - குஜராத் சிறார்களுக்குக் கற்பிக்கப்படும் வகுப்பு வெறி தடுக்கப்படாவிட் டால், 2002இல் குஜராத் சந்தித்த இனப்படுகொலை போன்ற சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கும் என்று எச்சரித்தனர்.

குஜராத்தின் எல்லா மாணவர்களும் இதே மாதிரியான ஆர்எஸ்எஸ் பாடங்களைப் படித்த காரணத்தால் முசுலிம் களும் கிறித்துவர்களும் எதிரிகள் என்றே பார்ப்பதோடு, அவர்களை எப்படி எதிர் கொள்வது எனவும் கற்றிருக்கிறார்கள்.

குஜராத் மாநிலப் பாடத்திட்டத்தின்படி ஒன்பதாம் வகுப்பு மாணவர் படிப்பது இதுதான்.

முசுலிம்களைத் தவிர கிறித்துவர்களும் பார்சிகளும் மற்றவர்களும் சிறுபான்மையர் எனக் கரு தப்படுகின்றனர். பல மாநிலங்களில் ஹிந்துக்கள் குறைவாகவும், முசுலிம், கிறித்துவ, சீக்கியர் கள் பெரும்பான்மையாகவும் இருக்கும் நிலை உள்ளது.

இதே பாடத்திட்டத் தில் பத்தாம் வகுப்புப் பாடத்தில் பாசிசம், நாசிசம் ஆகியவற்றைப் புகழ்ந்து எழுதப்பட்டு உள்ளன. ஹிந்துக்களை சிறுபான்மையராக்கும் இத்தகைய வெளிநாட்ட வரை எப்படி எதிர்கொள் வது என்பதுபற்றியும் இவர்கள் கற்றுக்கொள் வார்கள்.

நாஜிசத்தின் சாதனைகள்: ஜெர்மன் அரசுக்கு இட்லர் பெருமையையும் கவுரவத்தையும் ஏற்படுத்தித் தந்தார். மிகக் குறுகிய காலத்திலேயே வலிமையான ஆட்சி நிருவாக முறையை அமைத்ததன் மூலம் இது நடத்தப் பட்டது. அகண்ட ஜெர்மனி (பெரியநாடு) எனக் கூறத்தக்கவண்ணம் நாட்டின் பரப்பைப் பெருக்கினார். ஜெர்ம னிய இனத்தின் பெரு மையை எடுத்துக்கூறி யூத இன மக்களுக்கு எதிராகக் கொள்கைத் திட்டங்களை ஏற்படுத் தினார். புதிய பெருளா தாரத் திட்டத்தை ஏற் படுத்தி ஜெர்மனியை மேம்படுத்தினார். சாதா ரண மக்களிடையே கூட, வீரசாகசச் செயல்களுக் கான ஆர்வத்தை உண்டாக் கினார்.

ஆரிய இனத்தின் தூய் மையையும் உயர்வையும் உயர்த்தி லட்சக்கணக் கான யூதர்கள் கொல்லப்பட்டதை அவர்கள் குறிப் பிடவேயில்லை.


எல்லாவற்றையும் விட ஆர்எஸ்எசின் குரு கோல்வால்கர் அவருடைய நாம் அல்லது நம்முடைய இனம் பற்றிய விளக்கம் எனும் நூலின் 55-56 பக்கங்களில் பின் வருமாறு எழுதியுள்ளார்.

ஜெர்மனி மக்களின் இனஉயர்வு பற்றி இன்று விவாதிக்கப்படுகிறது. அந்த இனத்தின் தூய்மை யையும் பண்பாட்டை யும் காப்பதற்காக செமிட் டிக் இனமக்களாகிய யூதர்களைத் தீர்த்துக் கட்டும் செயல்களின் மூலம் உலகைக் கலக்கி விட்டது ஜெர்மனி. இனப் பெருமை மிகவும் உயர் வாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இனங் களும் கலாச் சாரங்களும் அடிப்படையில் வேறு பட்டு இருக்கும் போது, செரிமானம் செய்து கொண்டு ஒரே குடியாக வாழ்வது என்பது எவ் வளவு கடினம் என்பதைக் காட்டிய ஜெர்மனி, ஹிந் துஸ்தானத்திற்கான பாட மாகவும், கற்றுப் பயன் படக்கூடியதாகவும் உள்ளது. ஆர்எஸ்எசும் அதன் கூட்டாளிகளும் எந்த மாதிரியான நச்சுக் கொள் கையைப் பரப்புகின்றனர் என்பதற்கான சில மாதிரி கள் இவை. ஆர்எஸ்எஸ், பள்ளிப் பாடப்புத்தகங் கள், மகாத்மா காந்தியின் கொலை ஆகியவற்றில் இவை உள்ளன; (ஹிந் துக்களின் வகுப்புவாதத் திட்டம், சேஜ்பதிப்பு புது டில்லி 2008 - ஆசிரியர் ஆதித்ய முகர்ஜி, சுசேதா மகாஜன், மற்றும் ஜவகர் லால் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கள்) இந்நூலில் வகுப்பு வாதப் பிரச்சாரம் - வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய ஹிந்துவா கிய மகாத்மா காந்தி யைக் கொலை செய்யும் அளவுக்குச் சென்றது என்பதையும் இன்றள வும் கூட இந்திய விடு தலைப் போராட்ட நோக்கங்களான, மதச் சார்பின்மை, பன்முகக் கலாச்சாரம்கொண்ட மக்கள் அரசு ஆகிய வற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளன என்பனபற்றி யெல்லாம் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

இனவாதத்தை நாகரி கமுள்ள நாடு எதுவும் உலகில் அனுமதிக்காது, இனவாதத்தையும் செமிட்டிக் இனத்திற்கு எதிர்ப்பானதையும் ஒத்தது தான் வகுப்புவாதம் என் பது) இதனைப் பரப்புவ தையும் அதிலும் குறிப் பாகச் சிறார்கள் மத்தி யில் பரப்புவதையும் எந்த நாடும் அனுமதிக்காது. முசுலிம்களின் கைகளை வெட்டுவேன் என்பன போன்ற வெறிப்பேச்சு கள் விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆன பின்பும் கூட பொது இடங்களில் பேச அனுமதிக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

கல்வி முறையில் நச்சுக் கலப்பைத் தடுப்பது என் பது குறித்து மதச்சார் பற்ற அரசுகள் வாக்குறு திகள் தந்திருந்தாலும் நம் சிறார்கள் மற்ற இனத் தவர்க்கு எதிரான வெறுப் பேற்றும் வெறிப்பேச்சுகளைச் சந்திக்க நேரிடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

கடந்த 2004 இல் மதச்சார்பற்ற சக்திகள் வெற்றி பெற்ற நேரத்தில் வகுப்புவாதத்தை ஒழிப்ப தற்கான வரலாற்றுச் சிறப்பான நேரம் அமைந்து பாஜக ஆட்சியால் அழிக் கப்பட்ட நாகரிக மாண் புகள் மீண்டும் புதுப்பிக் கப்படும் என்கிற வாக் குறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும், நான்கு ஆண்டு கள் கழிந்து விட்ட நிலை யில் பள்ளிகள் பாடப் புத்தகங்களைத் தேர்ந் தெடுப்பதில்அவரவர் விருப்பத்திற்கேற்பச் செயல்படுவதும் - அதனை வரைமுறைப்படுத்திட ஒரு அமைப்பு இல்லா ததும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

-------- ஆதித்ய முகர்ஜி, மிருதுளா முகர்ஜி - ஜவகர்லால் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர்கள் - (தி ஹிந்து 15.4.2009) தமிழில்: அரசு - நன்றி "விடுதலை" 16-4-2009

1 comments:

beernuts said...

its all ok hinduism is bad dream as your point its secondary, what about the book of 'THANGAIN KADHAL' its about incest which is wrote by 'THANDAI PERIYAR' did you guys (periyar followers) studied?