Search This Blog

11.4.09

தா.பாண்டியன் கலைஞர்மீது பாய்வது சரியா?

"மாற்றி யோசிக்கத்" தவறிய
பதில் தேடும் பாண்டியனின் பரிதாபம்!


போரஸ் மன்னன் பிரபாகரன் என்றால் போரஸ் மன்னனைப் பிடிக்க உதவிய அம்பி யார் என்று தோழர் தா.பா. கேட்டுள்ளார்.

பலே, பலே, நல்ல கேள்வி! நமதுஆபீஸ் பையன், அவருக்கு மறந்து விட்ட ஒரு செய்தியையே அவரது சந்தேகம் தீர, பதில் கூறியுள்ளார். அம்பி யார் நினைவில்லையோ! இந்திய இராணுவத்தை அனுப்பி, பிரபாகரனை உயிருடன் பிடித்து கைது செய்து இந்தியா கொண்டுவந்து தண்டனை தர வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் மிகவும் கவலை யோடு தீர்மானம் (16.4.2002) நிறைவேற்றிய அம்மா(மி) தான் அந்த அம்பி அம்-மா(மி) என்று அறிந்து கொண்டு,

அந்த அம்மா(மி)வுடன் கைகோத்து மூன்று இடங்களுக்கு தவங்கிடந்து பெற்றவர்கள் முற்றாய் உணர்ந்து கொள்வது நல்லது.

அது பழைய கதை, அப்புறம் அம்மா மாறி விட்டார் என்று கூறியாவது பாண்டியன்கள் இதில் தப்பிக்க முடியுமா என்றால், முடியாது! காரணம், சேப்பாக்கத்தில் ஈழத் தமிழருக்காக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி உண்ணாவிரதம் இருந்த போது,வருவார்; யாரையாவது அனுப்பி வைப்பார் என்று காத்திருந்து, காத்திருந்து கண்கள் பூத்து கடைசியில் முகம் தொங்கப் போட்டு பழரசம் அருந் திய பரிதாபத்திற்குரிய, திடீர் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரவை அமைத்தவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள்.

எனவே அம்பி ஆராய்ச்சிக்குப் பதில், அம்மா (மி) எப்படியாவது தேர்தல் பிரச்சாரத்திற்காவது வருவாரா? ஏன் அவரது சுற்றுப் பயணத் திட்டத்தில் வட சென்னை இடம் பெறவில்லை என்பதுபற்றி கவலைப்படுவதை விட்டு, கலைஞர்மீது பாய்ந்திட முன் வரலாமா?

ஒரே கூட்டணியில் உள்ள வைகோவின் பேச்சு எங்களுக்கு உடன்பாடல்ல என்று அவசர அவசரமாய் மறுப்புத் தெரிவித்த பாண்டியன்கள் - இப்போது முரண்பட்டுள்ளவர்களின் கவலைதானே அக் கூட்டணி! மக்கள் மறந்தா விடுவர்?

விடுதலைப்புலிகள்பற்றியும் அவர்களை ஆதரித்த வர்களையும்பற்றிய பாண்டியன்களின் கடும் விமர்சனங்கள் என்ன பாண்டியன் ராஜ்யத்தில் உய்ய லாலா...! தானோ?

---------------நன்றி:-"விடுதலை" 11-4-2009

13 comments:

Osai Chella said...

நீங்கள் ஆயிரம் சொன்னாலும் உணர்வாளர்களின் மனது கலைஞரிடமோ அவரது கூட்டணியிலோ இல்லை! இந்த நேரத்தில் எதிரிகளை மன்னிக்கவும் துரோகிகளை இனங்காட்டவும் கிடத்த தடியை எடுத்து துரோகிகளை அடிக்கவும் நாங்கள் தயாராகிவிட்டோம்! உங்கள் விடுதலை வாதங்கள் மீது அவநம்பிக்கை வந்துவிட்ட போர்க்காலம் இது! மக்கள் மனங்கள் கொதித்துப்போன நிலையில் மாற்றங்கள் எப்படியும் நிகழலாம்!

வலைபூக்களின் அரசன் said...

உங்கள் வலைத்தளத்த தினமும் படிக்கும் ஒரு வாசகன் நான். ஆனால் வர வர உங்கள் ஜால்ரா தங்க முடியவில்லை!

அடுத்த சட்டசபை தேர்தலில் அம்மா வெற்றி பெற்றால் உங்கள் தலைவர் அவருடன் சேர்ந்து கொள்வார், அப்போதும் இதே நடுநிலைமையோடு எழுதுவீர்களா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//OSAI Chella கூறியது...

நீங்கள் ஆயிரம் சொன்னாலும் உணர்வாளர்களின் மனது கலைஞரிடமோ அவரது கூட்டணியிலோ இல்லை! இந்த நேரத்தில் எதிரிகளை மன்னிக்கவும் துரோகிகளை இனங்காட்டவும் கிடத்த தடியை எடுத்து துரோகிகளை அடிக்கவும் நாங்கள் தயாராகிவிட்டோம்! உங்கள் விடுதலை வாதங்கள் மீது அவநம்பிக்கை வந்துவிட்ட போர்க்காலம் இது! மக்கள் மனங்கள் கொதித்துப்போன நிலையில் மாற்றங்கள் எப்படியும் நிகழலாம்!//

செல்லா அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

திராவிடர் கழகம், ஒன்று திமுகவை ஆதரிக்கும் அல்லது அதிமுகவை ஆதரிக்கும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து உண்டா?
திமுக பா.ச.கவுடன் கூட்டணி வைத்தால் திமுகவை தி.க ஆதரிக்குமா?
அந்த சூழ்நிலையில் ஜெயலலிதா தலைமையில் உள்ள அதிமுகவை தான் ஆதரிக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்தது.

திராவிடர் கழகம் என்பது தமிழர்களின் அவலங்களுக்கு குரல் கொடுக்கும் சமூக இயக்கமாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
கட்சிகளை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று சொன்னால் ஏன் திக தேர்தலில் போட்டியிடக்கூடாது, அல்லது இப்போது வைக்கிறார்களே கூட்டணி அதுபோல் கூட்டணி வைத்து குழம்பிப் போகலாமே!

கருத்துக்களைப் பொதுவில் வைப்பதால், அதை பலர் படிப்பதால், அதற்கான விளக்கங்களை தெரிவிப்பது அவசியம் ஆகிறது. மனதில் மட்டும் வைத்திருப்பவர்களுக்கு யாரும் மாற்றுக் கருத்தோ விமர்சனமோ வைக்கப் போவதில்லை.
நன்றி!
அன்புடன்,
ஜோதிபாரதி.

தமிழர்கள் சிந்தனைக்கு! said...

For this useless blog and comment for supporting Karunanidhi, it is shame u r using Periyar's Photo

abhara said...

SAMOOKA NEETHI KAATHTHA VEERANGANAI..........!.........?
JANAGI RAMACHANDRAN RULED 21 DAYS!SHE SIGNED A FILE IN FAVOR OF K.VEERAMANI!
PEOPLE LIKE KOVAI RAMAKRISHNAN AND KOLATHTHOOR MANI ARE MUCH BETTER THAN VEERAMANI!

Anonymous said...

அவ்வப்போது பெரியாரை கேள்வி பதில் அறிக்கைக்கு அழைத்துக் கொள்ளும் கலைஞரை பற்றிக் கொண்டிருக்கும் வீரமணியும், அவரது சகாக்களும் ஐயோ பாவம்...கலைஞர் குடும்பத்து வாடிக்கையை பாருங்கள். கலைஞரின் ஆயுள் நீடிக்க அமிர்தகடேஸ்வரரிடம் யாகம செய்தாராம் ராசாத்தி அம்மாள்.............
கருணாநிதியின் பிறந்த ராசி கடகம், நட்சத்திரம ஆயில்யம். அவருக்கு ராசியான நிறம் மஞ்சள்( மஞ்சள் துண்டு அல்ல).அவரது இஷ்ட தெய்வம் தடசிணா முர்த்தி. இந்த ராசி, நட்சத்திர பலன்கள் எல்லாம் அமிர்தகடேஸ்வரர் கோவில் குருக்களை விட கலைஞருக்கு நன்றாகவே தெரியும். காரணம், கலைஞர் நாத்திகரான பெரியாரின் வழித்தோன்றல் அல்லவா? ராமர் என்று ஒருவர் எங்கே இருந்தார்? அவர் எந்த கல்லூரியில் என்ஜினியரிங் படித்து விட்டு ராமர் பாலத்தை கட்டினார் என்றெல்லாம் வினா எழுப்புவார்?
இப்படி வினா எழுப்புவர் தனது குடும்பத்தினர் தனக்காக அமிர்தகடேஸ்வரரை வணங்கி ஆயுள்விருத்தி கேட்பதை அனுமதிப்பது என்ன நியாயம்? அண்ணாவும், பெரியாரும் இன்று இந்தக்காட்சியை பார்க்க உயிருடன் இல்லை..இருந்திருந்தால்....நாக்கு வறண்டு போயிருப்பார்கள். அய்யோபாவம்....கழக உடன்பிறப்புகளே...கழக வெற்றிக்கு சனிபகவனை வேண்டிக் கொள்ளுங்கள். காரணம், இப்போது சனிபகவான் தான் கலைஞரின் ராசிப்படி அவருக்கு எதிரி. கடகராசிக்காரர்களுக்கு இப்போது ஏழரைச்சனி நடக்கிறது. இது கடகராசிக்காரரான கலைஞருக்கும் சேர்த்து தான். எனவே கலைஞருக்கு அமிர்தகடேஸ்வரர் ஆயுளை கொடுக்கலாம். ஆனால் தொழில் ஸ்தான பலாபலன்களை பார்க்கும்போது சனி கலைஞருக்கு எதிராக தான் இருக்கிறது.
கழக உடன்பிறப்புகள் சனிபகவானின் வாகனமான காக்கைகளுக்கு ( காங்கிரஸ்காரர்களுக்கு அல்ல) தினமும் காலை, மாலை சோறு, எள் அன்னம் வைக்கலாம். கலைஞரை பிடித்திருக்கும் சனிபகவான் அருள் தருவார் என்று நம்பலாம்.
மற்றபடி பாச்சா எல்லாம பலிக்க போவதில்லை
இன்றைக்கு பெரியார் உயிருடன் இருந்திருந்தால்..வீரமணியை தத்து எடுத்து பாவத்துக்கு நொந்து நூலாகியிருப்பார்.கலைஞருக்கு வால் பிடிக்கும் காட்சியை காண தந்தை பெரியார் இல்லை.வாழ்க பெரியார்.

தமிழ் ஓவியா said...

//இந்த நேரத்தில் எதிரிகளை மன்னிக்கவும் துரோகிகளை இனங்காட்டவும் கிடத்த தடியை எடுத்து துரோகிகளை அடிக்கவும் நாங்கள் தயாராகிவிட்டோம்! //

எதிரி யார்? நண்பர் யார்? என்று உங்களால் இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அப்புரம் எங்கே துரோகிகளைக் கண்டு கொள்ளப்போகிறீர்கள் செல்லா.

நேற்றுவரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டவர்களின் வசீகரப்பேச்சுக்கு மயங்கிவிடாதீர்கள் என்பதுதான் எனது அன்பு வெண்டுகோள்.

தமிழ் ஓவியா said...

// ஏன் திக தேர்தலில் போட்டியிடக்கூடாது//

தி.க. தேர்தலில் போட்டிய்டுவதில்லை ஏன்? என்பது பற்ரி ஒரு பதிவு இந்த வலைப்பதிவிலேயே உள்ளது ஜோதிபாரதி.
படியுங்கள்.

விமர்சனம் என்பது கலை. அதை கண்டபடி பயன்படுத்தினால் அதற்கு பெயர் வேறு ஜோதிபாரதி.

விடுமுறையில் அத்திவெட்டிக்கு சென்றால் அன்பழகனிடமும், பெரியார் செல்வனிடமும் கேளுங்கள் விளக்கமாகச் சொல்வார்கள்.

இரா.சுகுமாரன் said...

//"தா.பாண்டியன் கலைஞர்மீது பாய்வது சரியா?"//

தா.பாண்டியன் உங்கள் கூட்டணியில் இருந்து பேசினால் சரி.

மற்ற கூட்டணியில் இருந்து பேசினால் அது தவறாகும்.

தமிழ் ஓவியா said...

தா.பா. மீது எப்போதும் எனக்கும் மரியாதை ஒரு ஈர்ப்பு உண்டு. அனால் ஜெயலலிதாவிடம் ஈழப்பிரச்சினை இப்போது ஆரம்பிப்பதர்கு முன்னால் முதலில் கூடடணி அமைத்தவர் அவர், அப்போதே இது தவறு என்று சுட்டிக்காடி பதிவு செய்துள்ளேன்.

கூடடனி பற்றியெல்லலம் எனக்கு கவலை இல்லை .கொள்கை அடிப்படியிதான் எதிர்ப்பும் ஆதரவும்.

இது குறித்து வீரமனி அளிக்கும் தகவல் இதோ;
தோழர் சுகுமாறன் அவர்களின் சிந்தனைக்கு....

இன்றைக்கு ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். ஜெயலலிதா அம்மையார் திடீரென்று உண்ணா விரதம் நாடகம் நடத் தினார். அதன் மூலம் உலகத்தமிழர்களுடைய கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விடலாம் என்று நினைக் கிறார்கள். ஏதோ மற்றவர்கள் எல்லாம் ஏமாந்து விடுவதைப் போலவும் ஏதோ கலைஞரோ திராவிட முன்னேற்றக் கழகமோ, திராவிடர் கழகமோ அதைப்பற்றிக் கவலைப்படாத நிலை யில் இருப்பதைப்போல இன்றைக்கு ஒரு படத்தை வரையலாம் என்று நினைக்கின்றார்கள்.

தயவு செய்து அப்படி நினைக்கிறவர்களுக்குச் சொல்கின்றோம். மற்றவர்கள் ஈழப்பிரச்சினை யைப் பற்றி சிந்திக்காத முன்பே சிந்தித்த ஒரு இயக்கம் இருக்கிறதென்றால் அதுதான் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஆகும். (பலத்த கைதட்டல்)

1939 லே இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் இன்னல்கள் பட்டதற்காக அவர்களு டைய துன்பம் போக்கப் படவேண்டும் என்று திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுவிலே தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

இதே மேடையிலே பல கூட்டங்களிலே சொல்லியிருக்கின்றோம்.

பிறகு 1956 இலே சிதம்பரத்திலே அண்ணா அவர்களுடைய தலைமையிலே கலைஞர் அவர்களுடைய முன்னிலையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தீர்மானம் நிறைவேற்றிருக்கின்றார்கள்.
எனவே எங்களுக்கு இப்படிப்பட்ட வரலாறு உண்டு. ஆனால் அப்பொழுதெல்லாம் இதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். இப்பொழுது திடீரென்று கவலைப் படுகிறார்கள்.

இலங்கையிலேபோர் நிறுத்தம் நடைபெற வேண்டும். ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற வேண்டும் என்பதற்காக முதல் முறையாக அக்கறை எடுத்துக்கொண்டு இந்தப் பிரச்சினையை மற்றவர்களிடத்திலே கொண்டு வந்த முயற்சி திராவிடர் கழகத்தையே சாரும்.

இதே பெரியார் திடலிலிருந்து தான் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை கோரி ரயில் மறியல் போராடடம் நடத்தி அதற்காக கைது செய் யப்பட்டோம்.

23.09.2008 இல் இந்த பிரச்சினைக்காக நாங்கள் கைது செய்யப்பட் டோம். அதுவரை எந்தக் கட்சியும் கவலைப்படாத ஒரு நிலை இருந்தது. ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாயிரம் பேர் நாங்கள் கைது செய்யப்பட் டோம்.

எங்களோடு விடு தலைச் சிறுத்தைகளைச் சார்ந்த சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் வட எங்களை வாழ்த்து வதற்கு வந்திருந்தவர் அவரும் எங்களோடு கைதானார்.

அதற்குப் பிறகுதான் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி உண்ணாவிரதம் ஆரம்பித்தது.

இன்றைக்கு அ.தி.மு. கவோடு கூட்டணி சேர்ந்திருக்கின்றார்களே அந்த நண்பர்கள் கூட, அவர்கள் சார்பில் வருவார்கள்.
ஆள் அனுப்புவார் கள் (அதிமுக சார்பில்) ஆதரவு காட்டுவார்கள் என்றெல்லாம் எதிர் பார்த்து கடைசி வரையிலே காத்திருந்து, காத்திருந்து பார்த்து ஏமாந்தார்கள்.

காக்க வைப்பது அவர்களுடைய தர்மம். காத் திருப்பது இவர்களுடைய சகிப்புத்தன்மை.
அன்றைக்கும் காத் திருந்தார்கள். இன்றைக்கும் இப்பொழுதும் காத் திருக்கின்றார்கள். ஆகவே காத்திரக்கட்டும். நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை.

-----கி.வீரமணி-விடுதலை" 12-4-2009
"

இரா.சுகுமாரன் said...

///3.09.2008 இல் இந்த பிரச்சினைக்காக நாங்கள் கைது செய்யப்பட் டோம். அதுவரை எந்தக் கட்சியும் கவலைப்படாத ஒரு நிலை இருந்தது. ரயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாயிரம் பேர் நாங்கள் கைது செய்யப்பட் டோம்//

மகிழ்ச்சி

தி.க. வைப்பற்றி மிக நன்றாக தெரியும். பல்வேறு போராட்டங்களை நடத்திய கட்சி ஈழத்தமிழர்களுக்காக அந்த கட்சி ஆற்றிய பணிகளை நாங்கள் மறுக்கவில்லை.

இப்போது ஏன் அந்த கொலைகார கூட்டணியில் இருந்து கொண்டு ஆதரிக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம்.

நாங்கள் என்ன செயலலிதா கட்சிக்காரனையா இந்த கேள்வி கேட்கமுடியும்.

நீங்கள் ஆதரவானவர்கள் என்பதால் தான் இந்த கேள்வி. இல்லையெனில் உங்களிடம் பேச்சுக்கே இடமில்லையே!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//// ஏன் திக தேர்தலில் போட்டியிடக்கூடாது//

தி.க. தேர்தலில் போட்டிய்டுவதில்லை ஏன்? என்பது பற்ரி ஒரு பதிவு இந்த வலைப்பதிவிலேயே உள்ளது ஜோதிபாரதி.
படியுங்கள்.//

திரு தமிழ் ஓவியா,
நான் ஒன்றும் தங்களிடம் தவறான அல்லது முறை கெட்ட விமர்சனத்தை வைக்க வில்லை. நீங்கள் பொறுமையாக அல்லது விருப்பப் பட்டால் பதில் சொல்லலாம். இல்லை என்றால் ஏன் பதில் சொல்லவில்லை என்று கேட்க போவதில்லை. சமூக தீர்த்திருத்த இயக்கம் இலங்கைக்கு ஆயுதங்களை கொல்லைப்புறமாக அனுப்பிவைக்கும் சோனியாவின் காங்கிரசுக்கு கூவி வாக்கு கேட்கும் அளவுக்கு போகவேண்டிய தேவை என்ன என்பது தான் என்னுடைய கேள்வி. பெரியார் சொன்ன விடயங்கள், கி.வீரமணி சொல்லும் விடயங்கள் எல்லாம் பெரும்பாலும் எனக்கும் தெரியும்.நானும் 80-களில் கி.வீரமணி அவர்களின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தேன். உரையைக் கேட்க ஓடிவருவேன்.நான் சுட்டியில் போய் படிக்க வேண்டியதில்லை. இப்போது, ஈழத்தமிழரின் இக்கெட்டான நிலையை பற்றித்தான் பேசுகிறோம். பெரியார் கொள்கைகளில் நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை.


//விமர்சனம் என்பது கலை. அதை கண்டபடி பயன்படுத்தினால் அதற்கு பெயர் வேறு ஜோதிபாரதி.//

விமர்சனம் மட்டுமல்ல.
எல்லாமே ஒரு கலைதான். பதிவு எழுதுவதும் ஒரு கலைதான்!

வேறு பெயர் என்னவோ???
என்னுடைய மறுமொழிக்கு வேறு பெயரை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்! திறந்த புத்தகம் தான் அது. பொருந்தி வருகிறதா என்று எல்லோரும் பார்க்கட்டும்.


//விடுமுறையில் அத்திவெட்டிக்கு சென்றால் அன்பழகனிடமும், பெரியார் செல்வனிடமும் கேளுங்கள் விளக்கமாகச் சொல்வார்கள். //

உனக்கு ஒன்னும் தெரியவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

அதிரடி அன்பழகனும், பெரியார் செல்வனும் சிறந்த பேச்சாளர்கள் தான். எனக்கு
பகுத்தறிவு இருப்பதால் ஓரளவுக்கு நல்லது கெட்டது தெரிகிறது. மற்றபடி யாரிடமும் கேட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

நன்றி,
அன்புடன்,
ஜோதிபாரதி.

தமிழ் ஓவியா said...

////விடுமுறையில் அத்திவெட்டிக்கு சென்றால் அன்பழகனிடமும், பெரியார் செல்வனிடமும் கேளுங்கள் விளக்கமாகச் சொல்வார்கள். //

உனக்கு ஒன்னும் தெரியவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

அதிரடி அன்பழகனும், பெரியார் செல்வனும் சிறந்த பேச்சாளர்கள் தான். எனக்கு
பகுத்தறிவு இருப்பதால் ஓரளவுக்கு நல்லது கெட்டது தெரிகிறது. மற்றபடி யாரிடமும் கேட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

நன்றி,
அன்புடன்,
ஜோதிபாரதி.//

ஏன் தோழர் தவராகப் புரிந்து கொள்கிரீர்கள். என்னைவிட அவ்ர்கள் நன்ராக விளக்கம் அளிப்பார்களளென்ற பொருளில் எழுதினேன். நீங்கள் தவராக புரிந்து கொண்டுவிட்டீர்கள். தவறாக பொருள் கொள்ள வைத்தமைக்கு வருந்துகிறேன்.

யாரையும் குரைத்து மதிப்பிடுபவனல்ல.