Search This Blog

10.4.09

திடுக்கிட வைக்கும் உ.வே.சாமிநாத அய்யரின் மறுபக்கம்

தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா

உ.வே.சா. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரை, தமிழ்த் தாத்தா என்றும் சுவடிகள் காத்த சுரங்கம் என்று உச்சி மீது வைத்து கொண்டாட தமிழகம் தயங்கியதே இல்லை. ஆனால் இப்பெரியவரின் மறுபக்கம் நம்மை திடுக்கிட வைக்கிறது. தமிழ், தமிழர் என்ற போர்வையில் தமிழ் இனமே வஞ்சிக்கப்பட்ட நடைமுறை நிகழ்வுகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு - ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்கண்ணன் கள் இறக்கும் மரபில் பிறந்தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.

பிரசண்ட விகடன் என்ற இதழை ஆனந்த போதினி அச்சகத்தில் அச்சிட்டு, ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சிறுகதை, நாவல், நாடகங்கள், படைப்பதில் வல்லவர். இவரது உயிரோவியம் என்ற நாவல் அந்தக் காலத்தில் 60,000 படிகள் விற்று சாதனை படைத்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிக்கும் பழக்கம் இவரால் ஏற்பட்டது; கல்கிக்கும் இவர் முந்தியவர்.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் என்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார்.

அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம் நம்மை சிலிர்க்கவும் வீறு கொண்டு எழவும் செய்கிறது.

நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.

இன்னொரு நிகழ்வு. திருவாவடுதுறை ஆதீனம் - சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தி நிதி உதவி செய்தார். ஆண்டு தோறும் வித்வான் படிப்பில் முதன்மையாகத் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் ஆயிரம் பரிசளிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.

1930இல் தெ.பொ.மீ. என்ற மீனாட்சி சுந்தரம் (பின்னை நாளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் - ஓய்வு பெற்றபின் மேலமருவத்தூரில் ஆன்மிகப் பணி) முதலாவதாக தேறி இருக்க, அவரை ஒதுக்கி விட்டு தனக்கு நெருக்கமான மாணவன் கி.வா.ஜ என்ற ஜகன்நாதனுக்கு அப்பரிசை தந்தார்.
தமிழ்ப் பற்றாளராக இருப்பதைவிட தன் இனப் பற்றாளராக பார்ப்பனர் இருந்தனர் என்பதற்கு பல நடப்புகள் உண்டு.

செந்தமிழ்ச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் அமராவதி (ஆந்திரம்) சிறையில் ஆங்கில அரசால் சிறைப்பட்ட போது, ம.பொ.சி. சிறையில் கம்ப இராமாயண வகுப்பு எடுப்பது பொழுதுபோக்கு. சத்தியமூர்த்தி அய்யரும் சொற்பொழிவை கேட்டார். ஆனால் இடையிடையே எழுந்து கம்பனை விட வால்மீகியே உயர்வு என வாதிப்பாராம். ம.பொ.சி. கம்பனே பண்பானவன், உன்னதமான படைப்பாளி எனப் பல சான்றுகள் கூறி, சத்தியமூர்த்தியின் வாயை அடைப்பாராம். இதைத் தாங்க முடியாமல், சத்தியமூர்த்தி ஒரு கட்டடத்தில் கை கலக்கவே முனைந்தாராம்.

பெரும்பான்மையோர் ம.பொ.சி பக்கம் என்பதால் அடங்கிப் போவாராம். இதெல்லாம் இனப் பற்றுக்கு எடுத்துக்காட்டு.

புதுவைக் குயில் பாவேந்தர் சிறக்கப் பாடியுள்ளார்:

வீட்டிலே தூத்தம் என்பார். வெளியிலே தண்ணீர் என்பார் பிழைப்புக்காக.
உன் போல் கிள்ளாய்!

அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும் அண்ணாவே சொன்னாரே - தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!

------------ சந்தனத் தேவன்- உண்மை மார்ச் 1-15 2008

14 comments:

Unknown said...

நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் எனச் சொன்ன உ.வே. சா வின் நக்கை அறுத்திருக்க வேண்டும். உ.வே.சா வைவிட அறிஞர் பெருமக்கள் தமிழ் இனத்தில் இருந்திருக்கிறார்கள்.

இனியும் உ.வே. சா என்ற சாமிநாத அய்யரை தமிழ்த்தாத்தா என்று அழைப்பது அயோக்கியத்தனம்.

Unknown said...

சங்கராச்சாரிகளும் பூஜை வேளையில் தமிழில் பேசமாட்டார்களாம்.

இந்த பார்ப்பனர்களுக்கு அப்படி என்ன அவ்வளவு திமிர்?

Machi said...

//இடையிடையே எழுந்து கம்பனை விட வால்மீகியே உயர்வு என வாதிப்பாராம். ம.பொ.சி. கம்பனே பண்பானவன், உன்னதமான படைப்பாளி எனப் பல சான்றுகள் கூறி, சத்தியமூர்த்தியின் வாயை அடைப்பாராம். இதைத் தாங்க முடியாமல், சத்தியமூர்த்தி ஒரு கட்டடத்தில் கை கலக்கவே முனைந்தாராம்.//

வால்மீகி வேடர் அல்லவா?

கோவி.கண்ணன் said...

உவேசா தாத்தா தான் திரட்டிய சங்க இலக்கியங்களில் கண்ட பார்பனர்கள் பற்றியை 'உண்மைகள்' பலவற்றை திருத்தி அமைத்தாராம்.

தமிழ் ஓவியா said...

//வால்மீகி வேடர் அல்லவா?//

இங்கே ம.பொ.சியா.? சத்திய மூர்த்தியா? என்பதுதான் பிரச்சினை குறும்பன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//குறும்பன் சொன்னது…

//இடையிடையே எழுந்து கம்பனை விட வால்மீகியே உயர்வு என வாதிப்பாராம். ம.பொ.சி. கம்பனே பண்பானவன், உன்னதமான படைப்பாளி எனப் பல சான்றுகள் கூறி, சத்தியமூர்த்தியின் வாயை அடைப்பாராம். இதைத் தாங்க முடியாமல், சத்தியமூர்த்தி ஒரு கட்டடத்தில் கை கலக்கவே முனைந்தாராம்.//

வால்மீகி வேடர் அல்லவா?//

முன்னாலைய திருடரும் கூட அல்லவா? :P
மொழிப் பற்றாக இருக்கலாம்? :P

Machi said...

இதில் தவறு இருப்பதாக(நான்)கருதவில்லை. கீ. வீரமணி முன்பு செயலலிதாவுக்கு (ஆட்சியில் இருந்த போது) சமூக நீதிகாத்த வீராங்கனை பட்டம் கொடுக்கவில்லையா?

Unknown said...

//தமிழ்ப் பற்றாளராக இருப்பதைவிட தன் இனப் பற்றாளராக பார்ப்பனர் இருந்தனர் //

இருந்தனர் என்பதை விட இன்னும் இருந்து இருகின்ரனர்.

செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக செலவழிப்பதைப் பார்க்கும் போது தெரியவில்லயா?

பரதேசி said...

இன்றைக்கு நாய்கள், நரிகள், எலிகள் தான் சாதி சங்கங்கள் தொடங்கவில்லை. மற்ற அத்தனை பேரும் தொடங்கி அவனவன் சாதிக்கு இல்லாத கணக்கை காட்டி தேர்தலில் சீட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறான். கந்துவட்டி களவாணிகள் நிறைந்த ஆதிக்க சாதிக் கூட்டம் மற்ற அப்பாவி சமுகத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறது. மாறனும், நிதிகளும் சேர்ந்து கொண்டு கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதுடன், நாட்டையும சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீஙகள் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த பார்ப்பனிய வாலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க போகிறீர்கள் என்பது தெரியவில்லை. உங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது ஓவியா அவர்களே!

Krithi said...

நான் ஒரு பார்பான், ஆனால் திருந்தி வாழ முயற்சிப்பவன். இது உண்மையா என்று கேட்க தோணுகின்றது. பார்பனர்களின் இன வெறி அதிகம் என்று
நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் உ வே சா அவர்களின் இந்த கருத்து என்னை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. தயவு செய்து ஆதாரத்தை
காண்பிக்கவும் (உங்களை நம்புவதர்க்கல்ல, நான் கற்றரிவதர்க்கு).