Search This Blog

11.4.09

ஜாதிகளை உருவாக்கியது யார்?


பிரம்மாவும் அத்திமரமும்

ஆண்டவனே சாதிகளைப் படைத்தான் என்று ஒரு காலத்திலே எழுதி வைத்தார்கள். பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன்: தோளில் பிறந்தவன் சத்திரியன்: தொடையில் பிறந்தவன் வைசியன்: காலில் பிறந்தவன் சூத்திரன் என்றெல்லாம் ஒரு காலத்தில் எழுதி வைத்தார்கள். அப்படியே அவர்கள் எழுதி வைத்தது உண்மை என்றால் அதை நாம் ஒப்புக் கொண்டால் அப்படி பிறந்திருப்பார் களேயானால் அதில் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்.

பிரம்மா என்பது ஒரே கடவுள் தானே? அந்தக் கடவுளின் நெற்றியும் தோளும் தொடையும் காலும், அந்தப் பிரம்மாவின் அங்கங்கள்தானே? இவைகள் யாவும் அந்தப் பிரம்மாவின் உடற்கூறு கள்தானே? எங்கே பிறந் தாலும் அவர்கள் மனிதர்கள் தானே?

காலில் காயம்பட்டால் வலிப்பதில்லையா? தலையில் காயம்பட்டால் வலிப்பதில்லையா? அதைப் போல் பிரம்மாவின் உடலில் எந்தப் பகுதியில் பிறந்தாலும் அத்தனை பேரும் மனிதர்கள் என்கின்ற அந்த நியாயம் எடுத்து வைக்கப்படவில்லை, என்ன காரணம்?

பிரம்மாவைப் போல ஓர் உவமை சொல்லவேண்டுமேயானால்; அத்திமரம் என்று ஒன்று இருக்கிறது. அதன் உச்சியிலுள்ள கிளைகளிலும் காய் காய்க்கிறது; அதன் அடித்தண்டிலும் காய் காய்க்கிறது; வேரிலும் காய் காய்கிறது.

வேரிலே காய்த்த காய் பூசணிக்காய், அடி மரத்திலே காய்க்கிற காய் பாகற்காய், கிளையிலே காய்க்கிற காய் வெண்டைக்காய், உச்சியிலே காய்க்கிற காய் மிளகாய் என்று யாரும் சொல்வதில்லை. எங்கு காய்த்தாலும் அத்தனையும் அத்திக்காய்தான்.

அதைப் போலப் பிரம்மாவின் தலையிலே பிறந்தாலும், தோளிலே பிறந்தாலும், தொடையிலே பிறந்தாலும், காலிலே பிறந்தாலும் அத்தனை பேரும் மனிதர்கள்தான் என்கிற அந்த எண்ணம் அந்தப் பகுத்தறிவுச் சிந்தனை பரப்பப்படவில்லையா? பரப்பப்பட்டது. ஆனால் அப்படிப் பரப்பப்பட்ட அந்தக் கொள்கைகள் அந்த இலட்சியங்கள் அந்த எண்ணங்கள் இடையிலே ஒரு பத்தாண்டுக் காலத்தில் மாறி, சாதியை வைத்தே வாழ வேண்டும். தமிழகத்திலே இருக்கின்ற வகுப்பு ஒற்றுமையைக் குலைத்தே தாங்கள் வாழ வேண்டும் என்று சிலர் மனப்பால் குடித்ததன் காரணமாக இன்றைக்குச் சாதி பேதங்கள், சாதிச் சண்டைகள் நாட்டிலே உருவாகியிருக்கின்றன.


--------------------நூல்: "பகுத்தறிவுப் பயணத்தில் கலைஞர்"

6 comments:

Raju said...

சரியான சாட்டையடி!

Unknown said...

//பிரம்மாவின் தலையிலே பிறந்தாலும், தோளிலே பிறந்தாலும், தொடையிலே பிறந்தாலும், காலிலே பிறந்தாலும் அத்தனை பேரும் மனிதர்கள்தான் என்கிற அந்த எண்ணம் அந்தப் பகுத்தறிவுச் சிந்தனை பரப்பப்படவில்லையா? பரப்பப்பட்டது. ஆனால் அப்படிப் பரப்பப்பட்ட அந்தக் கொள்கைகள் அந்த இலட்சியங்கள் அந்த எண்ணங்கள் இடையிலே ஒரு பத்தாண்டுக் காலத்தில் மாறி, சாதியை வைத்தே வாழ வேண்டும். தமிழகத்திலே இருக்கின்ற வகுப்பு ஒற்றுமையைக் குலைத்தே தாங்கள் வாழ வேண்டும் என்று சிலர் மனப்பால் குடித்ததன் காரணமாக இன்றைக்குச் சாதி பேதங்கள், சாதிச் சண்டைகள் நாட்டிலே உருவாகியிருக்கின்றன.//

அவாள் வாழ அடுத்தவர்களை அழிக்க பார்ப்பனர்கள் செய்த சதி தான் ஜாதி.
நல்ல ஒப்புமை. சிறப்பான பதிவு

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

கோவி.கண்ணன் said...

//தொடையில் பிறந்தவன் வைசியன்://

ஆக வைசியன் மட்டும் தான் சரியான இடத்தில் பிறந்திருக்கிறான். தொடையில் இருந்து என்பதற்கு பதிலாக, தொடைக்கு இடையில் இருந்து என்றிருந்தால் சரியாக இருக்கும்.

:)

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்ம் கருத்துக்கும் மிக்க நனறி டகளஸ்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நனறி இன்பா


$$$

கோவி. கண்ணன்