Search This Blog

9.4.09

ஈழப் பிரச்சினையில் தி.க.விற்கு ஆலோசனை சொல்ல முயற்சிப்பது அறியாமையே!


குரல் கொடுப்போம் வாரீர்!

தமிழக அரசு, மத்திய அரசு ஆகியவை அழுத்தம் கொடுத்தும், அய்.நா. செயலாளர் எடுத்துக் கூறியும், உலக நாடுகள் பல தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் இலங்கை இட்லர் ராஜபக்சே, அவற்றையெல்லாம் மலம் துடைக்கும் காகிதமாகக் கருதி, பாசிசத்தின் கொடும் வடிவமாக, சிங்கள இராணுவத்துக்கு நேரிடையாகவே ஆணை பிறப்பித்து, யுத்த நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து ஒட்டுமொத்தமாக தமிழினத்தை ஒழித்தே தீருவது என்கிற மூர்க்கத்தனத்தில் ஆடித் தீர்க்கிறார்.

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று கூடி, இந்நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில் வரும் 12 ஆம் தேதி ஞாயிறன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையேற்கிறார்.

திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் உடனடியாக செயல்களில் இறங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. மிக முக்கியமான இந்தக் காலகட்டத்தில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சி எரிமலையின் கொந்தளிப்புக் குரலாக - அதேநேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடைபெற்றாக வேண்டும்.

எந்தக் காரணத்தைக் கூறியும் ஒரே ஒரு கழகத் தோழர்கூட - இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கவே கூடாது - கலந்துகொள்வதை கருஞ்சட்டையினர் கடமையாகக் கருதவேண்டும்.

சந்தர்ப்பச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெறுவதற்காக - போராட்டங்களை நடத்தக் கூடியது திராவிடர் கழகம் அல்ல! கொள்கையையும், இலட்சியத்தையும் முன்னிறுத்தி, அவற்றிற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கக்கூடிய தொண்டர்களைக் கொண்ட எழுச்சிப் பாசறைதான் திராவிடர் கழகமாகும்.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரை தொடக்கக் காலகட்டத்திலிருந்தே தொடர்ச்சியாக - சீராக - தொடர்ந்து பயணித்து வருவது திராவிடர் கழகமே!

ஈழ விடுதலை மாநாட்டை எழுச்சி குலுங்க மதுரையில் நடத்தி, ஈழ விடுதலைக் கொடியையே ஏற்றிக் காட்டிய தீரர்களின் கோட்டம் திராவிடர் கழகம் (1983). நாடெங்கும் கண்காட்சிகளை நடத்திக் காட்டி தமிழக மக்கள் மத்தியிலே எழுச்சித் தீயை அணையாமல் காப்பாற்றிய காரியத்தை கடமையாகக் கருதி செயல்பட்டு வந்திருக்கிறோம்.

தொடர் பயணங்கள் மூலம் பிரச்சாரங்களை மேற் கொண்டு இளைஞர்கள் இதயத்தை இலட்சிய ஒளி விளக் காக உருவாக்கி வந்திருக்கிறோம்.

கட்சி வளர்ச்சிக்காக அல்ல - வாக்குகளைப் பெறுவதற் காகவும் அல்ல. நேற்று வரை ஈழத் தமிழர்கள் பிரச்சினை யைக் கொச்சைப்படுத்தி, கீழறுப்பு வேலைகளைச் செய்துகொண்டிருந்தவர்கள் தேர்தலை மய்யப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதுபோல பாசாங்கு- தந்திரங்கள் செய்பவர்களை நாடறியும்.

தனித்தமிழர் ஆட்சி நடத்தும் கலைஞர் ஆட்சியின் மீது சேற்றை வாரி இறைக்க சந்தர்ப்பவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு மக்கள் முன் பவனி வர முயற்சிக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினை என்பது தமிழர்களின் உயிர்ப்பிரச்சினை - அதனைத் தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவது என்பது அந்தப் பிரச்சினையையே காயப்படுத்துவதும், கொச்சைப்படுத்துவதுமாகும்.

ஈழப் பிரச்சினைபற்றி எழுத்துக்கள் வடிவத்தில், நூல்கள் வடிவத்தில் மக்களிடத்தில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். அதன்மூலம் ஈழப் பிரச்சினையின் உண்மையான வடிவத்தை தமிழர்கள் அறிந்துகொள்ளச் செய்வதில் திராவிடர் கழகம்தான் அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டி ருக்கிறது.

திராவிடர் கழகம் அந்த அடிப்படைப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோதெல்லாம் ஈழப் போராளிகளை மனம்போன போக்கில் கிறுக்கிக் கொண்டிருந்த சிறு பையன்கள் எல்லாம், திராவிடர் கழகத்திற்கு புத்தி சொல்ல முயற்சிப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும். பார்ப் பனத் தலைமையைக் கொண்ட இளைஞர்கள் உணர்ச்சி வயப்படாமல் சிந்திக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.


இந்த நேரத்திலும் கழகம் தன் கடமையைச் செய்ய முன்வந்திருக்கிறது. ஏப்ரல் 12 ஆம் தேதிய ஆர்ப்பாட்டம் தான் அது.

அதுபோல, தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை மாலை 4 மணியளவில் சென்னை மன்றோ சிலையிலிருந்து முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடக்கவிருக்கும் பேரணியிலும் பங்கேற்குமாறு தமிழர் களை நாமும் கேட்டுக்கொள்கிறோம்.

கழகத் தோழர்கள் கழகக் கொடியுடன் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவும் கோருகிறோம்.


-----------------"விடுதலை"தலையங்கம் 8-4-2009

6 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அது யாரு கு.ப.கிருஷ்ணன் மாதிரி இருக்கு!?
கிகிகிகிகிகி!
ஆரோக்கியமான அரசியல் வாதிகள்!
அதான் குனிச்சு உடற்பயிற்சி செய்கிறார்கள்!

Bagath said...

திராவிடர் கழகம் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது என்ன செய்த்து.

பாப்பனத் தலைமை இருக்கட்டும். சட்டமன்றத்திலேயே தான் ஒரு பாப்பாத்திதான் என்று சொன்னவளுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என பட்டம் தந்த்து உங்களது இயக்கம்தான். உங்களது மூளையிலே பாப்பன்ன் இருக்கற மாதிரி இருக்கே...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிபாரதி

தமிழ் ஓவியா said...

//பாப்பனத் தலைமை இருக்கட்டும். சட்டமன்றத்திலேயே தான் ஒரு பாப்பாத்திதான் என்று சொன்னவளுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என பட்டம் தந்த்து உங்களது இயக்கம்தான். உங்களது மூளையிலே பாப்பன்ன் இருக்கற மாதிரி இருக்கே...//

பார்ப்பனியம் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் மக்களின் மூளையில் விலங்கு போட்டுள்ளது. அந்த விலங்கை உடைக்கத்தான் பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் உழைத்து வருகிரார்கள்.

நீங்கள் சொல்லுவது போல் எங்கள் மூளையில் பார்ப்பனியச் சிந்தனை இல்லை.

கீழ் வரும் விளக்கம் உங்களுக்கு தெளிவு ஏற்படுத்தும்.

"சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தது ஒரு நல்ல செயலைசெய்ததற்க்காக. அதற்கும் இதற்கும் முடிச்சுப் போடுவது அவ்வளவு சரியல்ல.


அதே போல் இடஒதுக்கீட்டுக்காக போரடியவர்களை அந்த ஜெயில் இந்த ஜெயில் என்று அலைக்கழித்தது அன்றைய கலைஞர் அரசு. அதே போல் சேலத்தில் பகுத்தறிவு வாசகங்கள் அடங்கிய தட்டியை வைத்ததற்க்காக வயதான தோழர்களை கைவிலங்கு போட்டு நீதி மன்றத்திற்கு அழைத்து வந்ததும் க்லைஞர் அரசுதான் தோழரே. பாரட்ட வேண்டியதை பாட்டுவதும் கண்டிக்க வேண்டியதை கண்டிப்பதிலும் தி,க, ஒரு போதும் தயங்கியதில்லை


கொள்கை(principles) வேறு திட்டங்கள்(policies) வேறு

என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு எந்தக் குழப்பமும் வராது பகத்.

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Bagath said...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் படுகொலை நிகழ்ந்த ஆண்டில் பெரியார் திடலில் மாநாடு போட ஒரு அமைப்பு இடம் கேட்டதற்கு இடம் மறுத்த்து யார் ஏன் .....

Anonymous said...

தமிழ் ஓவியா உங்கள் பதில்கள் மிகச் சாதாரண்மாக இருக்கிறது. இன்றைய திராவிடர் கழகம் என்பது இங்கிருக்கிற எந்த திராவிடக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக் கட்சியுடன் இணைந்து கொள்வதுதான் வரலாறு. சமூகநீதிகாத்த வீராங்கனை விருதை பார்ப்பன ஜெ வுக்கு கொடுத்தது. எவளவு கீழத்தரமானது என்பதற்கு இன்று வரை உங்கள் தலைவரிடம் பதில் இல்லை. அது மட்டுமல்ல, ஜெ எவளவு பாசிஸ்டோ அதே அளவுக்கு பாசிஸ்டுதான் காருணாநியும். காலமெல்லாம் மூத்திரச் சட்டியைச் சுமந்து தமிழனுக்காகவே செத்துப் போன அய்யாவின் வாரிசு என்றூ சொல்லும் கருணாவோ எப்போதும் தன் உடம்பைப் பற்ரி மேட்டுமே பேசிக் கொண்டிஉக்கிறார்க, இத்தனையாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசும் கருணாநிதியுமே காரணம். ஆமால் இந்திய அரசு இன்று வரை போரை நிறுத்த இலங்கையிடம் சொல்லவே இல்லை. போரை நிறுத்தச் சொல்லி சோனியா கருணாவுக்கு கடிதம் எழுதுகிறார். கருணாநிதியோ சோனியாவுக்கு அக்டிதம் எழுதுகிறார்.
கீழத்தரமான வக்கிரமான கருணாவின் மனநிலை இப்போது உலக்த் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்களின் மரணத்தை எதிர்பார்க்கிறாது.த்யாவு செய்து இதைவாசிக்கவும்

http://ponnilajudy.blogspot.com/2009/04/blog-post_09.html