Search This Blog
14.4.09
ராமாயணம், மகாபாரதம் பெயரில் 25 ஆயிரம் ஆபாச குறுந்தகடுகள் பறிமுதல்
போலி சி.டி.கள், ஆபாசக் குறுந்தகடுகள் விற்பனையில் ஈடுபடும் சர்வதேசக் கும்பலால் கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் குறுந்தகடுகள் சென்னையில் ஆனைக்கவுனி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.
ஆபாச சி.டிகள் சீன நாட்டிலிருந்து கள்ளத்தனமாக புதுடில்லிக்குக் கொண்டு வரப்பட்டு முகேஷ் என்பவரால் ஆயிரக்கணக்கில் நகல் எடுக்கப்பட்டு சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படு கின்றன. இத்தகவல் அறிந்த சென்னை காவல் துறையினர் ஆனைக் கவுனியில் வீட்டைச் சோதனை செய்து குறுந்தகடுகளையும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூவரையும் கைது செய்தனர்.
வேடிக்கையான சேதி என்னவென்றால், ராமா யணம், மகாபாரதம் என்று திரைப்படங்களின் பெயரைப் போட்டு விற்பனைக்கு ஆபாச குறுந்தகடுகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்துமத இதிகாசங்கள் எதற்கெல்லாம் பயன்படுகின்றன, பாருங்கள்!
-----------------நன்றி:-"விடுதலை" 13-4-2009
Labels:
பொதுவானவை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இராமாயனம் மகாபாரதக் கதைகளை விடவா அந்த குறுந்தகடுகள் ஆபாசம்.
ராமனும் கிருஸ்னனும் புரியாத புதிர்கள் புத்தகம் எழுதிய மாமேதை அம்பேத் கரும் பெரியாரும் இந்த புராணங்களின் புரட்டுக்களை புரட்டி எடுத்துவிட்டார்கள்
மாமேதை அம்பேத்கர் பிரந்த தின வாழ்த்துக்கள் தோழர்களே
//இராமாயனம் மகாபாரதக் கதைகளை விடவா அந்த குறுந்தகடுகள் ஆபாசம்.//
--------வழிமொழிகிறேன்----------
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment