Search This Blog

7.3.09

பகுத்தறிவு பித்தலாட்டாமா? பக்தி - ஆன்மிகம் பித்தலாட்டமா?


பகுத்தறிவு என்றால் பித்தலாட்டமாம்!



"திருவாரூரையடுத்த திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தனி லாக்கரில் வைத்துப் பூட்டப்பட்டு வந்த மரகதலிங்கமும் திருடப்பட்டு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பாமணி என்ற ஊரிலும் கோவில் விக்ரகம் திருட்டுப் போயிருக்கிறது. பக்தர்களை சமாதானப்படுத்த தனிப்படை அமைப்பதாக செய்திகள் மட்டும் வெளியிடப்படுகின்றன. இந்துக்கள் வன் முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் நீதி கிடைப்பதில்லை."

- இராம. கோபாலன் - "மாலைமுரசு" 25.2.2009



சர்வ சக்தி வாய்ந்தவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் டமாரம் அடிக்கிறார்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அந்தக் கோயில் கடவுள்களின் வீரப் பிரதாபங்களை அள்ளி விடுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்களையும் கொடுத்து வைத்துள்ளனர். துவார பாலகர்களையும் வேறு காவலுக்கு வைத்துள்ளனர்.

இவ்வளவுக்கும் பிறகும் கோயில்களில் பொருள்கள் திருடு போகின்றன என்றால், அந்தச் சாமிகளுக்கு சக்தி என்பது வெறும் சைபர் என்பதும் அம்பலமாகிவிடவில்லையா?


இதை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் இந்து முன்னணிப் பிரமுகர் வெறும் சவடால் அடிப்பதால் யாது பலன்?

கோயில் திருட்டுகள் பெரும்பாலும் அக்கோயிலில் இருக்கும் அர்ச்சகர்களால்தான் நடக்கின்றன என்று நிரூபணம் ஆகியுள்ளன. சிதம்பரம் நடராசன் கோயிலில் அம்மன் தாலியை அபகரித்த அர்ச்சகப் பார்ப்பான் உண்டே அந்தக் கோயிலில் இருந்த கலசத்தின் தங்கங்களையெல்லாம் சுரண்டியவர்களும் தீட்சிதப் பார்ப்பனர்களே! கோயிலில் திருட்டுப் போவதைப் பற்றி சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைந்த குழு விலாவாரியாகத் தெரிவித்துள்ளதே! கோயில் அர்ச்சகர்களின் கொள்ளை, தீயொழுக்கம் பற்றியும் புட்டுப் புட்டு வைத்துள்ளாரே.

கடவுளாவது - சக்தியாவது - மண்ணாங்கட்டி என்று பக்தர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்பதை உதறலில் - ஆட்சிமீது திசை திருப்புகிறார் இந்தத் திருவாளர்.

உண்மைகள் இவ்வாறு இருக்க ஆட்சியிடம் போய் முட்டிக் கொள்வானேன்?

ஓ, பெரியார் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. கடவுளை மற மனிதனை நினை! ஆம், இந்து முன்னணி இராம. கோபாலன் கடவுளை மறந்துவிட்டு கலைஞரை நினைக்கிறார்! பெரியார் வழியில் வந்து விட்டாரோ!


இன்னொன்று, இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்களாமே! அட, அண்டப்புளுகாகவே உள்ளவர்தான் இராம. கோபாலனா? எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியவர்கள் யார்? குஜராத்தில் ஈராயிரம் முசுலிம்களைக் கொன்றவர்கள் யாராம்?


கேள்வி: பகுத்தறிவு என்று சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

பதில்: ஏன் நிறுத்தி விட்டீர்கள்? பித்தலாட்டம் என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? மோசடி, ஏமாற்று வேலை, போலி வேடம் என்றெல்லாம்... சொன்னால் உங்களுக்கு ஏன் கசக்கிறது? என்று கேட்க வேண்டியது தானே! அப்போதுதானே உங்கள் கேள்வி முழுமை அடையும்.

----------------------துக்ளக் 4.3.2009

திருவாளர் சோ ராமசாமியின் கூற்றுப்படி -பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம், மோசடி, ஏமாற்று வேலை என்று பொருள் சொல்கிறார். இதன் மூலம் பகுத்தறிவு இல்லாத முண்டமாக இந்த ஆசாமி இருப்பதால் அவருக்கு அது பித்தலாட்டமாகவும் மோசடியாகவும் தெரிகிறது.

மனிதர் என்றால் பகுத்தறிவுவாதி - அது இவருக்கு இல்லை என்பதால் இவர் யார்?

உருவத்தில் மனிதராக இருக்கிறாரே என்று கேட்டு விடாதீர்கள். உருவத்தில் அப்படியிருந்தாலும் பகுத்தறிவு இல்லாத ஒரு ஜந்தாகத் திரிகிறார் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

ஆன்மிகம் என்றால் அயோக்கியத்தனம், பக்தி என்றால் பைத்தியக்காரத்தனம், கோயில் என்றால் விபச்சார விடுதி (காந்தியார் சொன்னதுதான்) சங்கராச்சாரியென்றால் சங்கர்ராமன் (கொலை) செய்வது! தீட்சிதன் என்றால் திருடன் ஆவான்; புரோகிதன் என்றால் புரட்டுக்காரன். இவையெல்லாம் பகுத்தறிவு கொண்டு சிந்தித்ததால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்!

பக்தியின் யோக்கியதை என்ன? இதை நாம் சொல்லத் தேவையில்லை. சோவின் அபிமான தந்தையாகிய காஞ்சி சங்கராச்சாரியார் எடை போட்டுச் சொல்லயிருக்கின்றாரே!

கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகப் பேர் பக்தர்களாகவேயிருந்து, ஆண்டவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள்வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொதுவாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது. பணமுடை அதிகரித்துள்ளது.

(குமுதம் 12.9.1996)


பகுத்தறிவு பித்தலாட்டாமா? பக்தி - ஆன்மிகம் பித்தலாட்டமா?

சோ அய்யர்வாள் பதில் சொல்வாரா?

கேள்வி: இலங்கைத் தமிழர்கள் என்பதைவிட, இலங்கை இந்தியர்கள் என்ற சொல் கூடுதல் பலம் பெறுகிறது அல்லவா?

பதில்: அஸ்கு புஸ்கு! அப்புறம் கழகக் கண்மணிகளோட அரசியல் எதிர்காலம் பலவீனமாயிடுமே!

----------------------------கல்கி 22.2.2009

பைத்தியம் பிடித்த பார்ப்பனைக் கேட்டுப் பாருங்கள் - இப்படித்தான் பேசுவான். அவர்களில் மெத்த படித்த பார்ப்பானைக் கேட்டுப் பாருங்கள்! அவனும் இப்படியே நகல் எடுத்ததுபோல் பேசுவான். வேப்பெண்ணெய்யைக் குடித்ததுபோல.

பார்ப்பனர்கள் ஆசைப்படி தமிழன் இருக்கக் கூடாது. இந்தியன் (அதிலும் இந்து வருகிறதல்லவா) தான் இருக்க வேண்டும். தமிழன், திராவிடன் என்று சொன்னால் பார்ப்பான், ஆரியன் என்ற பிரச்சினை வரும். அவை தமக்கு எதிராகக் கிளம்பும் - இந்தியர் என்று சொன்னால் ஏய்த்துப் பிழைக்கலாம். அடுத்தவன் தலையில் மிளகாய் அரைக்கலாம்.

தமிழன் என்று சொன்னால் தமிழ் வரும். இந்தியன் என்று சொன்னால் இந்தி வரும் - அதன் தாய்க் குரங்கான சமஸ்கிருதம் வரும். அதற்குத்தான் இந்த மாய்மாலம் எல்லாம்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழைப் பேசிக் கொண்டு, தமிழிலேயே ஏடுகளை, இவர் நடத்திக் கொண்டு, தமிழர்களிடத்திலே விற்று காசாக்கிக் கொண்டு, அந்தத் தமிழனையும் தமிழையும் பழிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் தமிழனின் அளவிறந்த பொறுமையை என்னவென்று சொல்லுவதோ! அஷ்டமி, நவமி - 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதி நாட்களால் அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் கலங்கிப் போயுள் ளனர். அஷ்டமி அன்று எந்த சுப காரியத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள். அப்படியே செய்தால் தொட்டது துலங்காது என்றும், நவமி அன்று வெளியூர் பயணம் சென்றால் இழப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் நம்புகின்றனர்.

நாத்திகன் என்று வாய் கிழியப் பேசுபவர்கள்கூட அஷ்டமி அன்று தங்களது சுபகாரியச் செயல்பாடுகளை தள்ளிப் போட்டு விடுகின்றனர். இதெல்லாம் மூடநம்பிக்கை என்று ஒரு பக்கம் மார்தட்டிக் கொண்டாலும் அஷ்டமி பீதி இன்னும் உணரப்படுகிறது.

----------------------------மாலை மலர் 4.3.2009

மூடத்தனத்தில் கிடந்து புரளும் ஆசாமிகள் எப்படியோ அஞ்சி அஞ்சி சாகட்டும்; இதில் தேவையில்லாமல் எதற்கு நாத்திகர்களை இழுக்க வேண்டும் என்று தெரியவில்லை.

அஷ்டமி, நஷ்டமி என்று எழுதுகிறார்களே, இவை இந்து மதக்காரர்களுக்கு மட்டும்தானா? மற்ற கிறித்தவ, இஸ்லாமிய, பவுத்த மதக் காரர்களுக்கெல்லாம் உண்டா? இந்த நாள்களில் அவர்கள் எல்லாம் எந்த சுபகாரியத்தைச் செய்தாலும் கெட்டது ஆகிவிடுமா? கடவுள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரங்கள் எல்லாம் இவர்களின் குண்டு சட்டிக்குள் மட்டும் தான் மேயுமா?

இந்தியாவுக்கு மட்டும்தான் இந்த அஷ்டமி, நவமிகளா? வேறு நாடுகளில் இந்த நாள்களில் சுபகாரியங்கள் ஏதும் செய்யக் கூடாது என்று ஏதாவது அறிக்கை கொடுப்பதாக உத்தேசம் உண்டா?

மாலைமலர் சொல்லுகிற இந்த நாள்களில் சுபகாரியங்கள் நடப்பதே இல்லையா? நவமி நாளில் வெளியூருக்கு பயணம் செய்யக் கூடாதா? இந்த நாளில் எல்லாம் இரயில்களும், பேருந்துகளும், வெறிச் சோடிக் கிடக்கின்றனவா?


இந்த நாள்களில் எல்லாம் வியாபார நிறுவனங்கள் பூட்டிக் கிடக்கின்றனவா? அந்த நாள்களில் வியாபாரம் எல்லாம் நடக்கவே நடக்காதா? ஏடுகளை அச்சிடமாட்டார்களா? அப்படியே அச்சிட் டாலும் விற்பனை செய்ய மாட்டார்களா?

இவர்கள் அஞ்சி நடு நடுங்கும் இந்த நாள்களிலும் சரி, இராகு காலம், எம கண்டம் என்று நம்பப் படுகின்ற நாள்களிலும் நேரங்களிலும் சரி, திராவிடர் கழகத் தோழர்கள் வீடுகளில் திருமணங்கள் உள்ளிட்ட சுப காரியங்கள் ஆயிரக்கணக்கில் நடக்கின்றன என்ற உண்மை தெரியுமா? தெரியாவிட்டால் அடக்கமாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டாமா? எதற்காக நாத்திகர்களை வம்புக்கும் இழுக்க வேண்டும்?

இதில் இன்னொரு முக்கியமான வினா தீப்பிழம்பு போல் இருக்கிறது.

அஷ்டமி என்றால் கிருஷ்ணன் பிறந்த நாள். (கோகுலாஷ்டமி) நவமி என்றால் ராமன் பிறந்த நாள் (ராமநவமி) அப்படி இருக்கும் போது இவை ஏன் கெட் நாள்கள் ஆயின?

அப்படி என்றால் கிருஷ்ணனும், ராமனும் கெட்ட பிறவிகள் என்பதுதான் ஆஸ்திகர்களின் எண்ணமா?


மாலைமலர் ஏடு விளக்கம் அளிக்கும் என்று எதிர் பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.


--------------- மின்சாரம் அவர்கள் 7-3-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதியுள்ள கட்டுரை

2 comments:

Unknown said...

//பகுத்தறிவு பித்தலாட்டாமா? பக்தி - ஆன்மிகம் பித்தலாட்டமா?//

பக்தி - ஆன்மிகம் தான் பித்தலாட்டம்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி