Search This Blog

12.3.09

பூணூலைப் போலப் பெண்களுக்கு..... காரடையான் நோன்பு !

மடமையில் ஆழ்த்தவே மாதந்தோறும்...

மக்களை மடையர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, மாதந்தோறும் பல பண்டிகைகளைக் கற்பித்து விட்டனர் பார்ப்பனர்கள். அதில் ஒன்று காரடையான் நோன்பு என்பதாகும்.

பங்குனி மாதத்தில் முதல் நாளன்று இந்த நோன்பாம் (14.3.2009) சுமங்கலிகளாகவே வாழ வேண்டும் என்பதற்காகவாம். நோன்பு இருந்தவர்கள் எல்லாருமே சுமங்கலிகளாக நீடித்தார்களா?

கன்னிப் பெண்களையும் விட்டு வைக்க வில்லை. அவர்களும் செய்யலாமாம். மாசிக் கயிறு பாசி படியுமாம். எனவே தாலிக் கயிறைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமாம். ஆண்கள் பூணூலைப் போலப் பெண்களுக்கு இதுவாம்.

சத்தியவான் சாகக் கூடாது என்று சாவித்திரி வெற்றி பெற்றதற்குக் காரணம் இந்த நோன்பு என்றொரு கதை.

-------------------- "விடுதலை" 12-3-2009

0 comments: