Search This Blog

16.3.09

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" -6

ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------ஈ.எம்.எஸ். ஒப்புக்கொள்கிறார்!


புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.

சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும்போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும், ரோமிலும் இருந்தது போன்ற அடிமை முறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் , அடிமைகள் - எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணாங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.

இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கே உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாததுமான சுரண்டல் முறைக்குப் பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆச்சாரங்களுடையவும் இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கைகளுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.


--------------- ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்திலிருந்து

(குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தைவிட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.)

------------------- நன்றி:-"விடுதலை" -13-3-2009

4 comments:

PRINCENRSAMA said...

அவசியம் செய்யப்படவேண்டிய பணி! தொடர்க!
இன்னும் ஆரிய மாயையில் விழுந்து கிடந்தபடி, பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் என்று பிலாக்கனம் பாடும் பதர்கள் புரிந்துகொள்ளட்டும்!

RV said...

ஒருவன் எந்த ஜாதியில் பிறந்தவன் என்பதை வைத்து பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லாரையும் இழிவாக பேசும், எதிர்க்கும் நீங்கள் எந்த விதத்தில் பிறப்பை வைத்து பறையன் என்று இழிவுபடுத்திய, ஒடுக்கிய அந்த கால ஜாதீய வாதிகளிடமிருந்து வேறுபடுகிறீர்கள்?

மாசிலா said...

//RV சொன்னது… "நீங்கள் எந்த விதத்தில் பிறப்பை வைத்து பறையன் என்று இழிவுபடுத்திய, ஒடுக்கிய அந்த கால ஜாதீய வாதிகளிடமிருந்து வேறுபடுகிறீர்கள்?"//

RV அவர்களே, முதலில் 'பறையன்' என்பது ஒரு சாதி அல்ல, செய்த கலை மற்றும் குலத்தொழிலின் அடிப்படையில் உருவாகிய ஒரு குலம். இதை கூட நீங்கள் இன்றும் புரிந்துகொள்ளாதது உங்கள் சாதிகள் பற்றிய அறிவு பற்றாக்குறையைத்தான் காட்டுகிறது.


நீங்கள் குறிப்பிடும் அந்த கால ஜாதீய வியாதிகள் எனும் இன அழிப்பு ஆயுதங்களை உருவாக்கியதே இங்கு நாம் எதிர்த்து போராடும் அந்த வந்தேறி பார்ப்பனர்கள்தான். சமுதாயத்தை கட்டுப்படுத்த தங்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர மேல்சாதி கீழ்சாதி என பிளவுபடுத்தி பிரிவினைகளை உண்டாக்கி அடிமைபடுத்தி அவர்களின் வியர்வை துளிகளின் சாரலில் குளிர்கண்டு இலவசமாக சுகம் அனுபவிக்க உருவாக்கப்பட்டதுதான் சாதிகள்.

சீர்திருத்த கருத்தாழமிக்க பகுத்தறிவு பதிவினை பகிர்ந்தமைக்கு தமிழ் ஓவியருக்கு மிக்க நன்றி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரின்ஸ்