Search This Blog

27.3.09

இந்தி படித்தால் வட நாட்டில் வேலை கிடைக்குமா?


'இந்தி' பக்தர்களுக்கு அர்ப்பணம்

"பம்பாய் சர்க்காரில் பம்பாய்க்காரருக்கே வேலை தரப்படும்"


பம்பாய் சட்டசபையில் வெளிமாகாண வாசிகளுக்கு பம்பாய் மாகாண சர்க் காரில் வேலை தரப்படுகிறதா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, பம்பாய் மாகாண முதல்மந்திரி கனம் கெர் கூறியதாவது:

"பம்பாய் மாகாண வாசிகளைப் புறக்கணித்துவிட்டு, வெளிமாகாண வாசிகளுக்கு சர்க்கார் இலாகாக்கள் சிலவற்றில் வேலை கொடுக்கும் நோக்கம் இருப்பதாக கூறப்படுவது உண்மையல்ல. மாகாண சர்க்காரிலோ, கீழ்த்தர சிப்பந்திகள் இலாகாவிலோ சாதாரண மாக பம்பாய் மாகாண வாசியல்லாதவரை நியமிக்கக்கூடாதென்பதற்கு திட்டம் ஏற்கனவே போட்டாகிவிட்டது.

பம்பாய், மார்ச் 23

இந்தி பாஷை படித்தால் தென்னாட்டு வாலிபர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்குமென ஒரு ருசிகாட்டப்படு கிறதல்லவா? இது வெறும் ஹம்பக் என்பது பலமுறை நம்மால் எடுத்துக்காட்டப்பட்டது. வட நாட்டில் தென்னாட்டாருக்கு இந்தி படித்தாலும், வேலை கிடைக்காது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

------------------"விடுதலை"-26.3.1938

3 comments:

Unknown said...

இன்றும் கூட இந்தி படித்த பலபேர் அங்கு வேலையில்லாமல் தவிப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தாமிரபரணி said...

//***இந்தி படித்தால் வட நாட்டில் வேலை கிடைக்குமா? ***//
படித்தால் வேலை கிடைக்கும் என நம் மக்களை ஏமாற்ற அன்று இந்தியா என்கின்ற ஆரிய அரசு கொண்டுவந்த சூழ்ச்சியாகும்
இங்கே இன்னொன்றையும் நான் உங்களிடம் சொல்லிகொள்ள விருப்புகிறேன் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய வங்கிகளிலும், இரேயில்வே துறையிலும், தபால் துறையிலும், விமான நிலையங்களிலும், எல்.ஐ.சியிலும் என அனைத்து தேசிய துறைகளிலும் இந்தியும் ஆங்கிலமுமே முதன்மையாக செயல்படுகிறது, மேலும் இந்தி தெரிந்தவர்களுக்கே முக்கியதுவம் கொடுக்கபடுகிறது இது தமிழர்களுக்கிடையே உட்புசல் உருவாக்கி அவர்கள் மொழியை வளர்த்துகொள்ள அவர்கள் தேடிய சுலபமான வழி, வேலை கிடைக்காதவன் மனநிலை எவ்வாறு இருக்கும், அடடா நாம் இந்தி படிக்காம இருந்திட்டோமே அதனால்தான் வேலை கிடைக்கவில்லை என தமிழ்மொழியை தாழ்வாகவும் இந்தி மொழியை உயர்வாகவும் நினைத்துகொள்கிறான் இதன் விளைவு தம் குழந்தைகளை ஆங்கிலத்திலும், இந்தியிலும் படிக்க வைக்கிறான். இந்தி என்பது ஒரு அறிவியல் மொழியோ இல்ல கணனியில் சிறந்த மொழியோ அல்ல, இருந்தாலும் அவன் இப்படி ஒரு தாழ்வுமனப்பாமைக்கு வர என்ன காரணம் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய துறையிலும் இந்திகாரர்களுக்கே அல்லது இந்தியை தெரிந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது
இது மட்டும் அல்ல நிங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய துறையிலும் உள்ள வவ்ச்சர், பாரம்/Form , அச்சிட பட்ட கோப்புகள்(All printed documents), தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் 0.0001% சதவித மக்களுக்குகூட தேவைபடாத இந்தியை வலுகட்டாயமாக வைத்திருக்கிறார்கள் என்றால் இதற்கு பெயர்தான் அடக்குமுறை, தமிழகத்தில் உள்ள ஒரு தேசிய வங்கிளில் புதிய கண்கை தொடங்க வேண்டுமானால் அப்பிளிகேசன் ஃபாம் தருவார்கள் அது ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் இருக்கும் நான் அவனிடம் ஃபாம் ஒன்று தமிழி
இருந்தது நான் அவனிடம் ஏம்ப்பா தமிழில் இல்லையா என்றால் சார் நிங்க படிச்சவர்தானே உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதா என என்னை திருப்பி கேட்கிறான், ரொம்ப தமிழ்பற்று உள்ளவரானு கிண்டல்வேற. நான் அதற்கு அவனிடம் அது எல்லாம் எனக்கு தெரியாது ஃபாம் ஒன்னு தமிழ்ல இருக்கனும் இல்ல தமிழும் ஆங்கிலமுமாக இருக்க வேண்டும் என அவனிடம் மல்லுகட்டி,சண்டைபோட்டு வாங்க வேண்டியநிலைக்கு தள்ளபட்டேன், இது தான் இந்திய அரசாங்கம் தமிழுக்கு கொடுத்த அடி,இப்படிதான் அனைத்து தேசிய துறைகளிலும் நடைபெருகிறது
இதை எப்ப மக்கள் தாங்களாக உணரபோகிறார்கள், இல்லை இதை எவ்வாறு மக்களிடம் எடுத்து சொல்வது என தெரியாமல் வழித்துகொண்டிருக்கிறேன்