Search This Blog

14.3.09

18000 நூல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட சாதனை
அய்யாவின் அடிச்சுவட்டில்...

ஒரு நூலின் தலைப்பல்ல-
அகிலத்திற்கே தேவையான கலங்கரை விளக்கம்!

திருச்சியில் தமிழர் தலைவரின் கருத்துரை


தந்தை பெரியார் பாதை என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அகிலத்திற்கே தேவையான பாதை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற "அய்யாவின் அடிச்சுவட்டில்" நூல் விற்பனைத் தொகை வழங்கும் விழாவில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

நான் விரிவுரையாற்று வதற்காக உங்கள் முன் நிற்கவில்லை. மாறாக நன்றி கூறவே வந்திருக்கிறேன்.

திராவிடர் கழக மாணவரணி தோழர்கள் பகுத்தறிவு ஏன் - எதற்காக? என்ற நூலை 10 ஆயிரம் எண்ணிக்கைகளை முதல் கட்டமாக மக்களிடம் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து 18,000 எண்ணிக்கையில் "அய்யாவின் அடிச்சுவட்டில்" என்ற நூலை பொதுமக்களிடம் கொண்டு சென்று, அதன் தொகையையும் இங்கு அளித்தனர்.

ஒரு மாத காலம் ஓய்வு இல்லாமல் உழைத்து இந்தச் சாதனையைச் செய்து முடித்திருக்கிற மாணவரணி, இளைஞரணி தோழர்களை வெகுவாகப் பாராட்டுகிறேன்.

பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் இருக்குமா? என்று கேட்டனர். இருக்கிறது - வலிமையாக இருக்கிறது. ஆக்க ரீதியாகச் செயல்படுகிறது என்பதற்கு அடையாளம்தான் இந்த விழா.

புரட்சிக்கவிஞர் எழுதியது போல தந்தை பெரியார் அவர்களின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் காலகட்டம் இது.


தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் நடக்கும் ஒரு சாதாரண தொண்டன் நான்.

நான் உயரமாகத் தெரிகிறேன் என்றால், நான் இலட்சோப லட்ச பெரியார் தொண்டர்களின் தோள்களின்மீது ஏறி நின்று என் உயரத்தைக் காட்டுகிறேன். அந்தத் தொண்டர்களோ தந்தை பெரியார் என்ற புரட்சியாளரின் தோள்களில் ஏறி நின்று தங்கள் பணிகளை ஆற்றி வருகின் றனர்
என்றார் கழகத் தலைவர் வீரமணி.

பெரியாரின் பாதை என்பது புதுப்பாதை - நடந்து நடந்து பழக்கப்பட்ட பழைமையான மூடப்பாதை யல்ல! பாதை இல்லாத ஊர்களுக்கெல்லாம் பாதை போட்டது ஈரோட்டுப் பாதை.

நூலின் தலைப்பல்ல!


அய்யாவின் அடிச் சுவட்டில் என்பது ஒரு நூலின் தலைப்பல்ல! அகிலத்திற்கே தேவைப்படும் கலங்கரை விளக்கம் அது.

அந்தப் பாதை தேவைப்படுவோர்க்குச் சொந்த புத்தி தேவையில்லை. நான் அவ்வாறு கூறும்போது சிலர் கேலி செய்வதுண்டு. ஆனால், அவர்கள் அதன் பொருளை ஆழமாகப் புரிந்துகொள்ளா தவர்கள் ஆவார்கள்.

பெரியார் தந்த புத்தி என்பது பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டக் கூடியது. சபலங்களுக்கு ஆளாகாத புத்தி அது. சபலங்களை வெறுக்கும் புத்தி.

தந்தை பெரியார் அவர்கள் தந்த புத்தி எல்லாத் திசைகளிலும் வெளிச்சத்தைத் தரக்கூடியது.

மதவாதச் சக்திகளை சிதறடிக்கக் கூடியது. அரசியலில்கூட இந்த நாட்டை யார் ஆளவேண்டும்? யாரை ஆளவிடக்கூடாது? என்று தெளிவுபடுத்தும் புத்தி அது.


நாட்டில் நடப்பது வெறும் அரசியல் அல்ல - அது ஆரிய திராவிடப் போராட்டம்-தேவாசுரப் போராட்டம் என்பார் தந்தை பெரியார்.

கடந்த தேர்தலில்கூட அதனைப் பார்த்தோமே. பரம்பரை யுத்தம் நடக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறவில்லையா?

அந்தப் பரம்பரைப் போராட்டத்தில், அய்யாவின் அடிச்சுவட்டை நாடே பின்பற்றியதால்தான் நாம் வெற்றி பெற்றோம்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் - புதுவையில் 40-க்கு 40 வெற்றி தேடிக் கொடுத்ததால் தானே பல சிறப்பான சாத னைகள் அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சி யில் நடைபெற்று இருக் கின்றன.

பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம், பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக் காடு இட ஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகளிர் பாதுகாப்புச் சட்டம் எல்லாம் எப்படி கிடைத்தன?

சேது சமுத்திரக் கால் வாய்த் திட்டம் நமது நீண்ட கால கோரிக்கை. 2500 கோடி ரூபாய் ஒதுக்கி அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, அதற்கு ராமனைக் காட்டி முட்டுக்கட்டை போட்டது யார்?

வடக்கே ராமன் போதை இருக்கிறது. தமிழ்நாட்டில் அது எடுபடாது - வடக்கே யும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.

அந்தத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந் தால்தான் அது நடக்கும். அதுவும் முதல் திட்டமாக அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்போம்!

மாற்று அணியா? ஏமாற்று அணியா?

நடக்க இருக்கும் மக் களவைத் தேர்தலில் மூன் றாவது அணி என்கின் றனர். மாற்று அணி என் கின்றனர். மாற்று அணியா? ஏமாற்று அணியா?

இது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும். உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி கெடு வைக்கிறார்.

தன்னைப் பிரதமராக ஆக்குவதாக ஒப்புக்கொண் டால்தான் மூன்றாம் அணியில் இருப்பேன் என்கிறார். பிரதமர் யார் என்று இப் பொழுது முடிவு செய்ய முடியாது. தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று மற்றவர்கள் கூறுகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு இந்த மூன்றாம் அணியில் உள்ளவர்கள் எந்தெந்த திசைகளுக்குச் செல்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

இது அணியல்ல - பிணி - இவற்றையெல்லாம் அம்பலப்படுத்துவதே நம்முன் உள்ள பணி என்று குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

------------------ நன்றி:"விடுதலை"14-3-2009

1 comments:

Unknown said...

18000 நூல்களை விற்பது என்பது மிகப்பெரிய சாதனைதான். நானும் பாராட்டுகிறேன்.