Search This Blog

11.3.09

தீட்சிதர்களின் வரலாறு என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நகைகளைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை
வரலாற்று ஆதாரத்துடன் தமிழர் தலைவர் விளக்கம்


சிதம்பரம் நடராஜன் கோவிலை அரசு எடுத் தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.2009 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஆனால் அப்பொழுது மட்டும் எல்லாம் அவன் செயல் அல்ல. இது இவர் செயல் என்று கலைஞரைக் காட்டுவார்கள் அல்லது நீதியரசரைக் காட்டுவார்கள் அல்லது நீதிமன்றத்தைக் காட்டுவார்கள்.

இதிலேயிருந்து நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எங்களை விட அதிகமாகக் கடவுளை நம்பாதவர்கள் யார் என்றால் அவர்கள் தீட்சிதர்கள்தான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அருமை நண்பர்களே, இந்தத் தீர்ப்பு இப்பொழுது ஏற்பட்டதா? நீதிபதி அம்மையார் அவர்கள் தெளிவாகவே அந்தத் தீர்ப்பிலே சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

எந்தத் தீர்ப்பை நாங்கள் எடுத்துச் சொன்னோமோ, அதே போன்று அவர்களும் கொடுத்திருக் கின்றார்கள். அதை முதல் பகுதியிலேயே எடுத்துக் காட்டியிருக்கின்றோம் இன்றைக்கு நேற்று அல்ல.

எங்களைப் போன்றவர்கள், உங்களைப் போன்ற வர்கள் பல பேர் பிறக்காத காலத்திலேயே, நாம் பிறக்காத காலத்திலேயே, இந்தக் கோயில் சம்பந்தப்பட்ட வழக்கு 1890லே போடப்பட்டது.

இந்த வழக்கிலே அப்பொழுது தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பைத்தான் இங்கே சுட்டிக் காட்டினார்கள்.

திருவாரூர் முத்துசாமி அய்யர், அவரை விட இன்னொரு வெள்ளைக்காரர், ஜஸ்டிஸ் ஷெப் பேர்டு என்பவர். இந்த இருவரும் சேர்ந்த டிவிஷன் பெஞ்ச் கொடுத்த தீர்ப்பை எடுத்த எடுப் பிலேயே சொல்லியிருக் கின்றார்.

இந்தத் தீர்ப்பு ஏற்கனவே வந்திருக்கிறது. எனவே இந்தத் தீர்ப்பினுடைய அடிப்படையிலே இதை மாற்ற முடியாமல் எப்படி எப்படி எல்லாம் வழக்குகள் நடந்தன என்பதை ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொல்லி இவர்கள் இதைச் செய்ய வில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டி யிருக்கின்றார்கள். இப்பொழுது இதற்கென்ன அவசியம்?

மிக அருமையாகக் கேட்டார்களே, இந்த ஊரிலே உள்ளவர்களாகிய நீங்கள் உண்மையிலேயே உங்களுக்குப் பக்தி இருக்குமேயானால் உண்மையிலேயே நடராஜர் கோயிலிலே அக்கறை இருக்குமேயானால் மக்களுடைய பணம் சிறப்பாக இந்தப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டும். அது யாருடைய தனிப் பட்டச் சொத்தாகவும் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்றல்லவா நீங்கள் சொல்லி இவர்களுக்குப் பக்கத்திலே நீங்கள் நின்று கொண்டு இருக்க வேண்டும்?
மாறாக குருட்டுத் தனமாக, குறுக்குத்தனமாக சில கேள்விகளை கேட்கிறார்கள். என்ன? நிர் வாக அதிகாரி நியமனம் என்று தானே உத்தரவு இருக்கிறது.

உண்டியல் வைக்கச் சொல்லியிருக்கின்றார்களா? என்று கேட்டால் இதை விட வேடிக்கையான நிலை அதுவும் சில வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள் என்று சொன்னால் அவர்களைக் கண்டு நாம் பரிதாபப்பட வேண்டுமே தவிர வேறு சொல்வதற்கில்லை.

காரணம் என்ன? நிர்வாக அதிகாரியை நியமனம் செய்ய வேண்டு மென்று உயர்நீதிமன்றம் இவ்வளவு பிரச்சினைக்குரிய வழக்கிலே ஒரு நீண்ட சரித்திரத்திற்குரிய வழக்கிலே சொல்லுகிறது.

இவ்வளவு தவறுகள் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன என்றெல்லாம் தீர்ப்பிலே சொல்லி, இந்தத் தவறு கள் சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு நியமனங்கள் செய்து உடனடியாக பொறுப் பேற்றுக் கொண்டு செயல் படுங்கள் என்று சொல் கின்றார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

வெறும் நிர்வாக அதிகாரி போய் பேன் குத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமா? இல்லை மணி அடித்துக் கொண்டு வெளியே நிற்க வேண்டும், அம்பலத்தரசே, அரு மருந்தே என்று பாடிக் கெண்டிருக்க வேண்டும் என்று அர்த்தமா? அல்ல.

இதிலே தெளிவாகவே எப்படி எப்படி எல்லாம் தவறுகள் நடந்திருக் கின்றன என்பது இப்பொழு தல்ல - 1982லேயே இந்தத் தவறுகள் நடந்திருக் கின்றன - சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன என்பது 1982லே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.

1982லே சுட்டிக் காட்டப்பட்ட தவறுகள் அதை ஒட்டித்தான் மேலே இருந்தவர்கள் ஒரு தடை யாணை வாங்கி மற்ற அரசாங்கங்கள் வரும் பொழுதெல்லாம் சமாளித்து வருகிறார்கள்.
இங்கே கூட சொன் னார்கள் அல்லவா? தீட்சிதர்கள் எல்லாம் முதல் வரைப் பார்க்கப் போனார் கள் என்று இந்த செய்தி எனக்குத் தெரியாது. நான் கவனிக்கவில்லை.

முதல்வரைப் பார்க்கச் சென்ற பொழுது தி.மு.க. கரைவேட்டி கட்டிக் கொண்டு சென்றார்கள். அ.தி.மு.க. வைச் சார்ந்த எதிர்கட்சித் தலைவர் அம்மையாரைப் பார்க்கச் சென்ற பொழுது அ.தி.மு.க. கரை வேட்டியைக் கட்டிக் கொண்டு சென்றார்கள் என்று சொன்னார்கள்.
தி.மு.க. உறுப்பினர் உட்பட, இன்னும் கேட்டால் பொறுப்பிலே இருக்கிறார் என்பது இன்னமும் வெட்கத்திற்குரிய ஒன்று. அவர் உட்பட சென்று அம்மையாரைப் பார்த்தார்கள் என்று சொன்னார்கள்.

நல்ல வேளை வேட்டி கட்டிக் கொண்டு போயிருக்கின்றார்கள். அதற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும் (கை தட்டல்).

ஏனென்றால் அவ்வளவு பைத்தியம் பிடித்தவர்களாக இருக்கின்றார்கள். நீங்கள் என்ன மன் னர்களை விடப் பெரியவர்களா? ராஜாதி ராஜர்கள். 1947க்குப் பிறகு எத்தனை மன்னர்கள் இருந்தார்கள். நமக்குத் தெரியவே மைசூர் மகா ராஜா எவ்வளவு பெரிய மனிதர்!
அவர் நடந்து வந் தாலே தேர் அசைவதைப் போல இருக்கும். அவருடைய அரண் மனை தசரா பண்டிகை யின் பொழுது இன்னமும் கொண்டாடப்படு கின்ற அரண்மனை.
அதேபோல ஹைதரா பாத் நிஜாம் எவ்வளவு பெரியவர்! அதேபோல பல மாமன்னர்கள். அதே போல சமஸ்தானங் களைக் கெண்டவர்கள் எவ்வளவு பேர்! ஒரே நாளில் ராஜாக்கள் என்பவர்கள் இஸ்பேட் ராஜாக்கள் ஆக்கப்பட வில்லையா?


சர்தார் வல்லபாய் பட்டேலால் ஒரே நேரத்திலே கையெழுத்துப் போடுகிறீர்களா, இல்லையா என்று ஆரம்பித்தார். இருந்த எல்லா மன்னர்களும் ஒரே நேரத்தில் கையெழுத்துப் போட்டார்கள். ஒரு இரண்டு, மூன்று பேர் ஒதுங்கியவர்கள். தயங்கியவர்கள். ஜுனாகாட் என்று ஒரு சிறிய சமஸ்தானம். அந்த சமஸ்தானம் கூட பாகிஸ் தானை ஒட்டிய பகுதி. அதிலே இருந்தவர் கூட எதிர்த்தார். நிஜாம் கொஞ் சம் தகராறு செய்தார்.

புதுக்கோட்டை அரசர் கையெழுத்துப் போட்டு விட்டு உடனே வந்தார். நமக்குத் தெரிய புதுக் கோட்டை அரசரைப் பார்த்திருக்கின்றோம். இப்படி பல செய்திகள் உண்டு.

அந்த ராஜாக்களுக்கு ராஜமானியம் வழங்குவது என்று சொன்னார்கள். அந்த ராஜமானியம் கூட ஒரே உத்தரவிலே இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் இருந்த பொழுது ஒழிக்கப்பட்டு விட்டது.

எப்படி தனியார் மயமாக இருந்த வங்கிகள் தேசிய மயமாக நாட்டு டைமையாக 1970, 71லே அன்றைய பொதுத் தேர் தலுக்கு முன்னாலே ஆக்கப்பட்டதோ அதே போலத்தான் ராஜமானி யங்கள் ஒழிக்கப்பட்டன. ஆகா நீங்கள் கொடுத்த வாக்குறுதி உத்தரவாதம் என்னவாயிற்று என்றெல்லாம் கேட்டார்கள்.

பிரதமர் இந்திரா காந்தி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நீங்கள் என்ன ராஜாக்களை விட மேலானவர்களா? காலம், காலமாக அவர்களுக்காவது உரிமை இருந்தது. பாத்தியதை இருந்தது. வரலாறு இருந்தது.

ஆனால் உங்களுடைய வரலாறு என்ன? சிதம்பர ரகசியம் என்ற பெயரிலே அன்றைக்கு ஆற்றிய உரையிலேயே தெளிவாகச் சொல்லி யிருக்கின்றேன்.

இவர்கள் எல்லாம் ஏதோ நேரே கயிலாயத்திலிருந்து கீழே வந்தவர்கள். பாராசூட் இல்லா மலேயே அங்கிருந்து நேராக வந்தவர்கள். நேராக சிதம்பரத்திலே வந்து இறங்கியவர்கள்.
அதனால்தான் கைபர் கணவாய் வழியாக வந்த வர்களுக்கெல்லாம் பின்னாலே குடுமியிருக்கும். ஆனால் சிதம்பரம் தீட் சிதர்களுக்கு மட்டும் பல்பு மாதிரி குடுமி இருக்கும் (கைதட்டல்). இதற்கு விளக்கம் சொல்லிக் கொள்ளலாம்.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு அது ரொம்ப சாதாரணமாகத் தெளிவாகத் தெரியும்.

அந்த வகையிலே பேராசிரியர் வில்சன் என்ற வரலாற்று ஆசிரியர் இவர்களுடைய பூர் வீகமென்ன? இவர்கள் எவ்வளவு பெரிய புருடா விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் ஏதோ நடராஜ பரம்பரை மேலேயிருந்து குதித்துவிட்டார்களாம்.

2999 பேர் இருந்தார் களாம். அவர்கள் எப்படி கட்டுக்கதை விட்டார்கள் என்று இங்கே அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள் அல்லவா? உடனே ஆண்டவன் சிவ பெருமான் நான் ஒருவன் என்று சொல்லி கணக்கிலே சேர்த்தானாம்.

அந்த சிவபெருமான் இப்பொழுது எங்கே போனான்? வெளி நாட்டிற்குப் போய் விட்டாரா? கோயிலை அரசு எடுக்கும் பொழுது நேரடியாக கலைஞரிடம் போய் சொல்வதுதானே.
நேரடியாக உயர் நீதி மன்றத்திற்குள்ளே போக வேண்டியதுதானே. இப்பொழுது வேண்டு மானால் போக முடி யாது. சில நாட்களாக அங்கு சங்கடமான சூழல்.

ஆகவே கதவு பூட்டியிருக்கிறது. அப்பொழுது அவர் நேரடியாகச் சென்று நான்தான் வந்திருக்கின்றேன். இவர்களுக்கெல்லாம் பாதுகாவலன் கார்டியன் நான்தான். எனவே அதை எல்லாம் நீங்கள் எடுக்காதீர்கள் என்று திரிபுரம் எரித்த சிவபெருமான். அவர் நினைத்தால் அவரு டைய நெற்றிக்கண்ணை காட்டியிருக்கலாமே. சுற்றிப் பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

ஆனால், இவைகளை எல்லாம் கேட்டால் இவர்கள் நாத்திகர்கள். இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று பதில் சொல்லுவார்களே தவிர, எங்கள் கேள்விகளுக்கு அவர்கள் இது வரை பதில் சொன்னதே கிடையாது.

மற்றவர்கள் கேட்ட கேள்விக்குத்தான் நாங்கள் பதில் சொல்லிப் பழக்கப்பட்டவர்களே தவிர வேறு யாரும் கிடையாது. அந்த வகையிலே இந்த தீட்சிதர்களின் வரலாறு என்ன? பேரா சிரியர் வில்சன் இவர் களைப் பற்றிய ஒரு குறிப்பு எழுதியிருக்கின்றார்.

அதையும் நான் அன்றைக்கு ஆற்றிய உரை யிலிருந்து ஆதாரத்தோடு எடுத்துச் சொல்லியிருக் கின்றேன். இங்கே இருக் கின்ற தீட்சிதர்கள் எங்கேயிருந்து வந்தவர்கள் என்றால் கன்னோஜ் என்ற வடபுலத்திலே யிருந்து வந்தவர்கள்.

அதாவது வடநாட்டில் உள்ள உத்தரப்பிர தேசம் அலகாபாத்தில் இருந்து வந்தவர்கள் என்று நாங்கள் சொல்ல வில்லை. பேராசிரியர் வில்சன் அவர்கள் வரலாற்றிலே எழுதி வைத்திருக்கின்றார்கள்.
பிரயாகை, திருவேணி நதிகள் சங்கமிக்கின்ற இடம் என்றெல்லாம் சொல்லுகின்றார்களே அந்த இடம்தான் என்று தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்ல இவர்களைப் பாதுகாக்கிறோம், பாதுகாக்கிறோம் என்று இப்பொழுது சொல்லுகின்றார்களே - வெறும் நம்முடைய தோழர்கள் மட்டுமா குற்றம் சொல்லுகின்றார் கள்.
அ.தி.மு.கவோ, எம்.ஜி. ஆரோ அல்லது கலைஞரோ இவர்கள் மட்டுமா அவர்கள் மீது நோட்டீஸ் கொடுத்தார்கள். 1925லே ஷெப்பேர்டு, முத்துசாமி அய்யர் வழக்கு. அவர்கள் 1890இல் கொடுத்த தீர்ப்பு. அதை முதலிலே சொல்லி விட்டு அதற்குப் பிறகும் கூட இது தொடருகிறது.


அறநிலையப் பாது காப்புத் துறைக்கு ஒரு நல்ல நேர்மையான ஒரு பார்ப்பனர் - தந்தை பெரியார் அவர்களுக்குக் கூட பழக்கமானவர் ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர். அவர் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை கமிஷனராக அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் நியமிக்கப் பட்ட நேரத்திலேதான் அவர் நேர்மையானவர் என்று பெயர் எடுத்தவர்.

அவரிடம் போய் இவர்கள் மனு கொடுத்தார்கள். அப்பொழுது என்ன நடந்தது? 31.12.1925இல் இந்த மனுவைப் பார்த்து விட்டு ஒரு அறிக்கையை அவர் கொடுக்கிறார். இந் தக் கோவிலுக்கு நகைகள் தவிர, வேறு சொத்துகள் எதுவுமில்லை என்று பொது தீட்சிதர்கள் சொல்வதும், இந்த ஆலயத்திற்கு எவ்விதக் கட்டளைகளும் வருவாய் பெறும் இனங் களும், அல்லது வேறு நிரந்தர வருவாய் தரக் கூடிய வகையில் இல்லை யென்றும் பொது தீட்சிதர் கள் சொல்வது சரியல்ல.

இதை என்றைக்குச் சொல்லுகின்றார்? எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில் 1925 இல் இப்படிச் சொல்லுகின்றார். இன்று நேற்று அல்ல. 31.12.1925இல் சொல்லுகின்றார். இந்து அறநிலையப் பாதுகாப் புத்துறை வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும்.
1922லே சட்டம் வரு கிறது. நீதிக்கட்சி பனகல் அரசர் இந்த சட்டத்தைக் கொண்டு வருகின்றார். கடுமையான எதிர்ப்பு. சத்தியமூர்த்தி போன்றவர்களுடைய எதிர்ப்பு. இவ் வளவையும் தாண்டி அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

கோயில் பெருச்சாளிகளுக்கு இடமிருக்கக் கூடாது. கோயில் பூனைகளுக்கு இடமிருக்கக் கூடாது மக்களுடைய சொத்தை அபகரிக்கக் கூடாது. எந்தக் காரியத் திற்காக மன்னர்கள் விட்டார்களோ அந்தப் பணி நடக்க வேண்டும் என்று நீதிக்கட்சி இதை செய்தது. அப்பொழுது எதிர்த்த நேரத்திலேதான் தந்தை பெரியார் அவர் கள் காங்கிரசிலே இருந்த பொழுது பனகல் அரசர் அவர்களுடைய அந்த சட்டத்தை வரவேற்றார்.

இது கட்சிக் கண் ணோட்டத்தோடு பார்க்கக் கூடியதல்ல என்று சொன்னார். அப்பொழுதே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கிற வேறு பாடு ஒரு கோடு போட்டதைப் போல வந்து விட்டது.
--------------------தொடரும்.."விடுதலை' 10-3-2009

0 comments: