Search This Blog

26.3.09

நமக்குக் கிடைக்காதது நாசமாகப் போகட்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் அணுகுமுறை

"சிதம்பர இரகசியம்!"

சிதம்பர இரகசியம் என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. அது எதுவாகயிருந்தாலும் இன்னொரு சிதம்பரத்தின் குட்டு உடைபட்டுவிட்டது.

சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சிதர்கள் சொத்து என்றும், இதில் அரசு தலையிட அதிகாரம் இல்லையென்றும் பூணூலை முறுக்கிக் கொண்டு ஆவேசமாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

நீதிமன்றங்களின் தடைகளால் அவர்களின் சுரண்டல் சாம்ராஜ்ஜியம் தங்கு தடையின்றி நடைபெற்றது.

மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அதற்கொரு விடிவு ஏற்பட்டது. சிதம் பரம் கோயில் தனிப்பட்ட தீட்சிதர்களின் உடைமையல்ல. அது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு பானுமதி மாண்புமிகு மிஸ்ரா ஆகியோர் அரியதோர் தீர்ப்பினை வழங்கினார்.

அதன் அடிப்படையிலே தீர்ப்பு கிடைத்த அன்றிரவே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் சென்று பொறுப்பை ஏற்றனர். அப்பொழுதுகூட தீட்சிதர்கள் ஒத்துழைக்க முன்வரவில்லை.

அரசு அதிகாரிகள் கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்ற நிலையில் ஏதோ இறங்கி வந்தனர்.

முறைப்படி கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. தொடக்கத்தில் அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தீட்சி தர்கள் ஆதிக்கத்தில் பக்தர்கள் கொட்டும் காணிக்கை யெல்லாம் தீட்சிதர்களின் வீட்டுக்குத்தான் சென்று கொண்டிருந்தது. அதில் மண் விழுந்துவிட்டதே என்று ஆத்திரத்தில் அவர்கள் அப்படி நடந்துகொண்டனர்.

இந்து அறநிலையத்துறை ஆணையின்படி நாற்பது நாள்களுக்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்பட்டு அந்தத் தொகை இந்து அறநிலையத்துறையின் கணக்குக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

அப்படி உண்டியலை எண்ணிட முயன்றபோதும், தீட்சிதர்கள் ஒத்துழைக்க மறுத்தனர். கடைசியில் வேறு வழியின்றி இசைய நேர்ந்தது. அதிகாரிகள் மத்தியில் எண்ணப்பட்ட உண்டியல் தொகை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 929 ரூபாய்.

இதில் என்ன கொடுமையென்றால், உண்டியலுக்குள் எண்ணெய்யையும், நெய்யையும் ஊற்றி ரூபாய் நோட்டுகளைப் பாழ்ப்படுத்தினர் தீட்சிதர்கள்; ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்ட நிலையில், ரூபாய் நோட்டுகளைப் பிரித்து எடுப்பதற்கு அதிகாரிகள் படாத பாடுபட்டனர்.


நமக்குக் கிடைக்காதது நாசமாகப் போகட்டும் என்பதுதானே பார்ப்பனர்களின் அணுகுமுறை.

இந்த இடத்தில் இன்னொன்று மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது உண்டு. தீட்சிதர்கள் நடராஜன் கோயிலின் ஓர் ஆண்டு வருமானமே ரூ.37,199 என்றும், கோயிலுக்கு ஆகும் செலவு ஆண்டுக்கு ரூ.37,000 என்றும், மீதித் தொகை ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகத் தெரிவித்தனர். பேட்டா கம்பெனி செருப்பு விலை போல இந்தப் புள்ளி விவரம் இருக்கிறதல்லவா!

திருவிழாக் காலம் அல்லாத இந்த 40 நாள்களிலேயே சிதம்பரம் நடராஜன் கோயில் வருமானம் கிட்டத்தட்ட ரூபாய் இரண்டு லட்சம் என்றால், திருவிழாக் காலத்தில் இந்தத் தொகை எத்தனை மடங்கிருக்கும் என்பதைப் பக்தர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

40 நாள்களில் இரண்டு லட்சம் என்றால், ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு தொகை வருமானம் என்பதைக் கணக்கில் கொண்டால் இத்தனை நூறு ஆண்டுகாலமாக எத்தனை எத்தனைக் கோடி ரூபாய்களை இந்தத் தீட்சிதப் பார்ப்பனர்கள் கூட்டம் சுருட்டியிருக்கும் - ஏப்பமிட்டி ருக்கும்? இந்தக் கொள்ளையைக் கணக்கிட்டு, தீட்சிதர்களிடமிருந்து பறிமுதல் செய்ய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

பக்தர்கள் அளித்த பணத்தைப் பாழ்படுத்தும் நோக்கத்தில் உண்டியலுக்குள் எண்ணெய்யையும், நெய்யை யும் கொட்டி கிரிமினல் வேலையில் ஈடுபட்ட கோயில் தீட்சி தர்கள்மீதும் சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பக்தி என்பதும், திருவிழா என்பதும், சடங்குகள் என்பதும், காணிக்கை என்பதும் எந்தத் தரத்தில் கோயில்களில் நடந்துகொண்டு இருக்கின்றன என்பதை இந்தப் புகழ் பெற்ற சிதம்பரம் கோயிலின் நடவடிக்கை களைக் கொண்டு பக்தர்கள் தீர்மானிக்க வேண்டாமா?

திராவிடர் கழகத்துக்காரர்கள் குற்றம் சொன்னால் அதனை வேறு கண்ணோட்டத்தில் அணுகுவோர், இந்த சிதம்பர ரகசியக் குட்டு உடைந்ததற்குப் பிறகாவது சிந்தனைக் கண்களைத் திறந்து விசாலப் பார்வையால் கணிக்கவேண்டாமா?

பக்தர்களே சிந்திப்பீர்!

------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 26-3-2009

1 comments:

ttpian said...

நாற்காலிக்காரர்கள்!
நாசமாக போகட்டும்!