Search This Blog

22.3.09

அண்ணல்அம்பேத்கர் படத்தை அப்புறப்படுத்தியவர் வாரிசின் வாலாட்டம்

பன்றியோடு சேர்ந்த கன்றுகள்நேரு குடும்பத்தில் பிறந்ததால் மதச்சார்பற்ற தன்மையில் இருப்பார்கள் என்று வருண்காந்தியைப்பற்றி நம் பிக்கை கொள்ள முடியாது. அவரது அன்னையார் மேனகா காந்தி மத்திய அமைச்சராக வாஜ்பேயி அமைச்சரவையில் இருந்தபோது தனது அலுவ லகத்திலிருந்து அண்ணல்அம்பேத்கர் படத்தை அப்புறப்படுத்தியவர்.

அவர் மகன் வருண்காந்தி பாரதிய ஜனதாவில் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. எப்பொழுது அவர் பா.ஜ.க.வுடனும் சங்பரிவார் கூட்டத்துடனும் இழைய ஆரம்பித்தாரோ, அப்பொழுதே ஒன்றைத் தீர்க்கமாகத் தெரிந்து கொள்ளலாம். சிறுபான்மையினரை எதிர்த்து வன்முறை ஆயுதத்தைத் தூக்கத் தயாராகி விட்டார் என்றுதான் பொருள்.

மேனகாகாந்தி கடந்த நான்கு முறையாக நின்று வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசத்தில் பீலிபட் தொகுதியைத்தன் மகன் வருண்காந்திக்காக விட்டுக் கொடுத்துள்ளார்.

அங்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டத் தில் அவர் கக்கியவை (17.3.2009) நிச்சயமாக உரையல்ல - பாசிசம் பெற் றெடுத்த பச்சையான நரவேட்டையே!

அவர் ஆற்றிய உரை இதோ:

இது எனது கை (தனது கையை உயர்த்திய படி) காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை அல்ல. இது தாமரையின் சக்தி. இது தலைகளை துண்டிக்கும். ஜெய்ஸ்ரீராம். யாராவது இந்துக்களை நோக்கி விரலை நீட்டினால், யாராவது இந்துக்கள் பலவீனமானவர்கள் என்று நினைத்தால், கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன் இவ்வாறு பேச்சு உள்ளது. அதில் ஒரு இடத்தில் முஸ்லிம் என்ற பேச்சும் இருக்கிறது. இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு வருண்காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பி இருக்கிறது. வருண்காந்தி பேச்சுக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கண்டனம் தெரிவித்து உள்ளார். பாரதீய ஜனதா கட்சியில் அவர் இருப்பதால் அந்த கட்சியின் கொள் கைகளை அவர் கூறி இருக்கிறார் என்றார். பாரதீய ஜனதா கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, வருண் காந்தி காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் அந்த கட்சி கலாச் சாரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது பாரதீய ஜனதா கொள்கை அல்ல என்றார். பாரதீய ஜனதாவில் உள்ள இன்னொரு முஸ்லிம் தலைவரான ஷாநவாசும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த பேச்சு உத்தரப்பிரதேசத்தில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கி உள்ளது. ஆனால் வருண் காந்தி நான் இப்படி பேசவில்லை. என் பேச்சை திருத்தி மோசடி செய்து சி.டி.யாக தயாரித்து உள்ளனர். இதுபற்றி டெல்லியில் விளக்கம் அளிக்கப் போகிறேன் என்றார். வருண்காந்தி பேச்சு பாரதீய ஜனதாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எனவே கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று பாரதீய ஜனதா கட்டளையிட்டு உள்ளதாம். வருண்காந்தியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் ஆணை யின்படி பிலிபட் மாவட்டத்தின் பர்கேரா காவல் நிலையத்தில் வருண் காந்திமீது 153(ஏ) மற்றும் 188 அய்.பி.சி., 125 ஆரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிலிபல் மாவட்ட நீதிபதி எம்.பி. அகர்வால் வருண்காந்தியைக் கைது செய்யச் சொல்லி, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்டைப் பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்குக்கு ஆதாரமாக வருண்காந்தியின் பேச்சு அடங்கிய குறுந்தகடு (சிடி) ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வருண்காந்தி சமாதானமாக ஏதேதோ சொல்ல முயற்சி செய்கிறார். குறுந்தகடில் உள்ளது தன் குரல் அல்ல திரிபு, வேலை நடந்திருக்கிறது என்று திணறுகிறார்.

சின்ன பையன் கிறுக்குத் தனமாகப் பேசப் போய் திருகுவலியில் சிக்கிக் கொண்டு விட்டார். கட்சியும் அவரை கை விட்டு விட்டது. டெல்லியில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க வருண்காந்திக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டது! (அந்தோ பரிதாபம்!)

கட்சிக்குள்ளும் கண்டனம் கிளம்பியிருக்கிறது. பெருந்தலைகளோ கண்டு கொள்ளவில்லை. சிவசேனா தலைவர் பால்தாக்கரே மட்டும் வக்காலத்து போட்டு தமது கட்சி ஏடான சாம்னாவில் தலை யங்கமாகவே எழுதியுள்ளார்.

வருண்காந்தி தவறாக ஒன்றும் பேசிடவில்லை. இப்படிப்பட்ட காந்தியைத் தான் நாங்கள் விரும்புகிறோம். எனவே, அவர் பேசிய பேச்சுக்காக மன்னிப்புக் கோர வேண்டியதேவையில்லை. அவசியமும் இல்லை. அவர் உண்மையைத்தான் பேசி யிருக்கிறார் என்று எழுதி யுள்ளார்.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பீகார் முதல் அமைச்சரும் அய்க்கிய ஜனதாதள முன்னணித் தலைவருமான நிதீஷ்குமார் வருண்காந்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வருண்காந்தியின் பேச்சு மீது துரித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பிலிபிட் மாவட்ட ஆட்சியர் எம்.பி. அகர்வால், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆர்.கே. சதுர்வேதி ஆகியோரை இட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. அதையும் தாண்டி உதவி கலெக்டர் எஸ்.எஸ். கமல், கூடுதல் காவல் துறைக்கண்காணிப்பாளர் சவுரவ்குஷ் ஆகியோர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படவில்லை.(Suspension) துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் ஆணை பிறப்பிக் கப்பட்டுள்ளது.

பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் நிறைந்த இந்தியா என்கிற ஒரு துணைக் கண்டத்தில் ஒரு இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவ வேண்டும் என்கிற வெறியில் துடித்துக் கொண் டிருக்கிற ஒரு கட்சி மக் களாலும் அரசமைப்புச் சட்டத்தாலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றே!

இவ்வளவு வெளிப்படையான கொள்கைகளை வைத்துக் கொண்டுள்ளவர்கள், இந்திய அரசமைப்புச் சட் டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையை ஒப்புக் கொள்வதாக சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதே அறிவு நாணயக் கேடுதானே! இவர்களில் அற நெறி - தார்மீகம், பண்பாடு எல்லாம் எந்தத் தகுதியில் உள்ளன என்பதற்கு இது ஒன்றே போதாதா?

குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் (2002-இல்) கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குப் பின்பும் இந்தக் கட்சி நாட்டில் நடமாடுவது எந்த வகையில் நியாயமானது. சட்ட ரீதியானது? உச்சநீதிமன்றம் அந்த முதல் அமைச்சரை நீரோ மன்னன் என்று விமர்சித்ததற்குப் பிறகும், அந்தக் கூட்டம் கை வீசி நடப்பது எந்த வகையில் ஏற்புடைத்தது?

அந்த நீரோ மன்னனை இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஒரு கூட்டம் இங்கே ஆசைப்படுகிறது என்றால் இதைவிட அவமானகரமான கீழிறக்கம் வேறு உண்டா? வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!


வருண்காந்தி என்ன சோட்டா பையன்! அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் என்று பா.ஜ.க., அறிவித்துள்ள அந்தப் பெரிய மனிதர் அத்வானியின் தரம்தான் என்ன! அவர் முன்னே நின்றுதானே 450 ஆண்டு வரலாறு படைத்த இன்னொரு மதக்காரர்களின் மசூதி அடித்து நொறுக்கப் பட்டது. அந்த வழக்கில் முதல் குற்றவாளி அந்தப் பெரிய மனிதர்தானே?

என் வீட்டில் இருக்கும் பிள்ளைகளிலேயே அதோ கூரை ஏறி கொள்ளி வைக் கிறானே அவர்தான் மகா யோக்கியன்! என்று ஒரு அப்பன் சொன்னால், மற்ற பிள்ளைகளின் யோக்கியதை எவ்வளவு விபரீதமாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமே.

நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக் குத் தெரியாது. கூரிய கற்க ளின்மீது அமர்ந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணை சமப் படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும் (15.12.1992) என்று பேசியவர் பிரதமர் வாஜ்பேயிதானே! இதன் உட்பொருள் சொல்லா மலே விளங்கக் கூடியதுதான். பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்குங்கள் சமன் செய்யுங்கள் என்று ஒரு கவிஞராகப் பேசியிருக்கிறார்.

இந்தப் பேச்சு சிடியாகவும் வெளிவந்தது. இதுபற்றி அவுட் லுக் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் மகாஉத்தமர் (?) வாஜ்பேயி என்ன சொன்னார்?

நான்லக்னோவில் அவ்வாறு பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காகக் கூறப்பட்டது வேடிக்கையான பேச்சு என்றாரே! அடுத்த மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தை இடிக்கச் சொல் லுவது வேடிக்கையான பேச்சாம் - மகா உத்தமர் என்று தூக்கிப் பிடிக்கும் ஆசாமியின் தரமே இந்த வகையில் இருக்கிறது என் றால் இந்தச்சின்னப் பையன் வருண்காந்தி ஆவேசமாகப் பேசியதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்!

விசுவ இந்த பரிஷத் என்கிற சங்பரிவாரின் சாமியார் கூட்டம் நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது?

திரிசூலங்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார்களே அதன் தாத்பரியம் என்ன? ஒன்றும் இரகசியமாக அவர்கள் பேசுவதில்லையே!

திரிசூலத்தின் ஒரு முனை கிறித்தவர்களையும் இன்னொரு முனை முசுலிம் களையும், மூன்றாவது முனை மதச் சார்பின்மை பேசுபவர் களையும் பதம் பார்க்கும் - குத்திக் குடலைக் கிழிக்கும் என்று பேசுகிறார்களே - அந்த அமைப்பின் மீதும் ஆசாமி கள் மீதும் எடுக்கப்பட்ட நடடிக்கைகள் என்ன? இதே அத்வானி ரத யாத்திரை நடத்தினாரே - அதனால் ஏற்பட்ட கலவரத் தில் எத்தனைப் பேர் பலி யானார்கள்? அதன் எதிர் விளைவுதானே மும்பைக் கலவரம்? அதில் எத்தனை உயிர்கள் பலியாயின?

மக்களிடையே பிளவு ஏற்படுத்தி, அவர்களின் கபா லத்தைப் பிளந்து ரத்தம் குடிக்கத் துடிக்கும் ஓநாய்கள் அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டு வலம் வருகிற போக்கை எப்படி அனுமதிக்க முடியும்?

இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பிணிகள் ஆக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜனிக் கட்டும் என்று பேசியவர் ஒரு ஆண் அல்ல; ஆர்.எஸ்.எஸின் தீப்பொறிப் பேச்சாளர் என்று மகுடம் சூட்டப்படும் சந்நியாசிப் பெண்ணான சாத்வி ரிதம்பரா.

முதுபெரும் அரசியல் தலைவரான ஜோதிபாசு இந்தக் கூட்டத்தைப் பற்றி மிகச்சரியாகவே சொன்னார். “Uncivilised Brute Force” அநாகரிகமான காட்டு மிராண்டிக் கூட்டம் என்றாரே - அந்தக் கூட்டத்தில் யார் இணைந்து கொண் டாலும் வருண்காந்தி போலத் தான் பேசுவார்கள் அது அந்த வட்டாரத்தில் இழிவு அல்ல - சபாஷ்! சபாஷ்!! என்று ஜரிகைக் குல்லாய் வைத்து முடி சூட்டப்படும் சமாச்சாரமாகும்.

வசதியாக வாழ்ந்த பிள்ளை. கொஞ்சம் சிறைக் கொட்டடியையும் பார்த்து வரட்டும்! - அப்பொழுதாவது நல்ல புத்தி வருகிறதா என்று பார்ப்போம்! திராவிடர் கழகத் தலைவர் மிகச் சரியாக சொன்னதுபோல பன்றியோடு சேர்ந்த கன்றுகள் பாடம் கற்றுக் கொள்ளட்டும்!

கடைசிச் செய்தி: வருண் காந்தி டில்லி உயர்நீதிமன்றத் தில் முன் ஜாமீன் வாங்கி விட்டார்.

-------------- மின்சாரம் அவர்கள் 21-3-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

unearth.com said...

Munivanin (thamathu pakthanin) manaiviyai urumaari emaatri katpai sooraiyadi udalelam 1000 pirar kankalukku mattum punkalai sapamaaha vaankikattikonda Thevar thalaivan Inthiranai kumpiduvorthaane. Kadavulare thevaloha kannihai maaru vedaththil anuppi Visuvamiththira muniyudan sallapam seythu avarathu thava valimaiyai keduththavarhalai konda mathathaiyudaiya paktharthaame, Ramarukkumunne kalavaaha Karnanai petru tholaitha valivanthorthaame, oru pennai 05 per pendilaakki kondor valiyinarthaame ivarhal vaayilirunthu veru nallavaihala varum. Naaru saakkadaiyil narumanaththai muharamudiyumaa?

Pesiyathai etka thunivilla pedaihalaa Inthiya mannai aala thudippathu. Avamaanam. Avarathu katchi ippadiyaana pechchukkalai medaihalil ulara vendaamenru tham ankaththavarhalukku kooriyathilirunthu varun enum thari kettathu than vaay naatraththai medaiyetri pesiyathu unmaithaan enru niroopanam aahivittathe! ini enna visaaranai aathaaram ithatkumel. siraiye avarukkuriya idam. ankum matha vaatham pesvendaamenru koori anuppavidil aniyaaymaaha kollappattuviduvaar ankulla kiriminalhalaal.