Search This Blog

12.3.09

காந்தி கணக்குக் கூட சரியாக இருக்கும் ஆனால் தீட்சிதர்கள் கணக்கு என்பது நடராஜர் கணக்குதான்.!




சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இதுவரை
கணக்கே இல்லை தீட்சிதர்கள் தங்கத்தை பாளம்,
பாளமாக உருக்கிக் கொண்டு போய்விட்டனர்

தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கம்


சிதம்பரம் கோவிலில் இதுவரை எந்த கணக்கும் பின்பற்றப்படவில்லை. நடராஜர் கோவிலில் இருந்த தங்கத்தை உருக்கிக் பாளம், பாளமாக தீட்சிதர்கள் கொண்டு போய்விட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிதம்பரம் நடராஜன் கோவிலை அரசு எடுத்தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.09 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பார்ப்பன சத்திய மூர்த்தி காங்கிரசில் இருந்து அதை எதிர்க்கிறார். பார்ப்பனரல்லாதவர் களுக்குத் தலைவராக இருக்கக்கூடிய தந்தை பெரியார், நான் காங்கிரஸ்காரனாக இருந்தாலும் இந்து அறநிலையத் துறை என்பது பாராட்டப்பட வேண்டிய சட்டம்.

அதை எந்தக் கட்சி செய்தால் என்ன? இதை எந்த ஆட்சி செய்தாலும் வரவேற்க வேண்டியது தானே என்று தந்தை பெரியார் அவர்கள் துணிந்து எழுதினார்கள்.


அப்பொழுதுதான் இந்தச் செய்தியை தெளிவாகச் சொன்னார்கள். அது மட்டுமல்ல இன் னொரு செய்தி இதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பன நீதிபதி சொன்னார். இவர்கள் சிறுவனுக்கு மான்யம் என்ற பெயரால் 200 ஏக்கர்தான் இவர்களிடம் உள்ளது.

அதிலே 100 ஏக்கர் அரசாங்கம், மற்றவைகளுக்குப் போய்விட்டது. இன்னொரு 100 ஏக்கர் பல பேருடைய பெயர் களில் 75 ஆண்டுகளாக குத்தகையில் இருக்கிறது. ஆகவே அதிலிருந்து ஒன்றும் பணம் வருவ தில்லை. அதனால் எங் களுக்கே போதவில்லை என்பது நீதிமன்றத்திலே 1951இல் இந்த தீட்சிதர்கள் கொடுத்த வாக்கு மூலம். இது வரலாறு.

அதேபோல நண்பர்களே! இப்பொழுது நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும். ஊழலை ஒழிக்க வேண்டும். கையகப்படுத்தி, கபளீகரம் செய்து அந்தக் கோவில் சொத்தை தங்களுடைய தனிச் சொத்தாக இவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது எல்லா துறைகளிலும் இருப் பதைப் போல இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அந்தப் பணியை செய்கிறது.

இப்பொழுது நீதிபதி அம்மையார் அவர்கள் கொடுத்தத் தீர்ப்பிலே மிக முக்கியமான ஒரு பகுதியை எடுத்து இவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இன்றைய தீர்ப்பிலே 75வது பாரா.

இப்பொழுது எப்படித் தவறுகள் இழைக்கப்படுகின்றன? அறநிலையப் பாதுகாப்புத் துறை ஏன் நிர்வாக அதிகாரியைப் போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயிற்று. அவசியமென்ன? என்பதை நீதிமன்றத்திலே விலாவாரியாக அடிஷனல் அட்வகேட் ஜெனரல் அரசு சார்பான வழக்கறிஞர் அங்கே வாதாடுகிறார். தெளிவாகச் சொல்லுகிறார்.

முன்னாலே இருந்த பழைய காலத்து நிகழ்ச்சி. 1982, 1987 இவைகளிலே சுட்டிக்காட்டப்பட்டதையும் அம்மையார் அவர்கள் சொல்லியிருக்கின்றார். தொடர்ச்சியாக ஒரு மணல் கொள்ளை போல நடந்து கொண்டு வருகின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

இதைப்பற்றி விடுதலையில் விரிவாக வெளி வரும். இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. ஏதோ சில வழக்கறிஞர்களை கைக்கூலி போல பிடித்து விட்டார்கள். அவர்கள் தமிழர்களாக இருக்கக் கூடியவர்களாக இருந்தாலும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்று தயவு செய்து எண்ணி ஏமாந்து விடா தீர்கள்.

மக்கள் மன்றத்திற்கு முன்னாலே எந்த மன்றமும் சாதாரணம்தான். அதை நன்றாக நினைத் துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்).

பல செய்திகள் பல ஏடுகளில் வந்ததே. ஆட்சியை கொள்கையை கடுமையாக விமர்சிக்கின்ற ஏடுகள். கலைஞரை தினமும் தாக்கிக் கொண்டிருக்கின்ற ஏடுகளில் கூட செய்திகள் வந்தன.

சிதம்பரம் கோவிலை மக்களுக்குத் திறந்து விட் டார்கள். அந்த கோவி லில் உண்டியல் வைத் தார்கள். இந்த சிதம்பரம் கோவிலுக்குள் மக்கள் எவ்வளவு வேகவேகமாக மகிழ்ச்சியோடு போகிறார்கள் என்று கருத்துகளை கேட்டுக் கேட்டு பத்திரி கையில் போட்டிருந்தார் களே.

அதனுடைய விளைவு என்ன? எண்ணிப் பார்க்க வேண்டாமா? எனவே அன்றைக்கே சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.


சிதம்பரம் கோயிலில் வசூலிக்கப்படுகின்ற நன் கொடை எதற்குமே கணக்கு கிடையாது. எல்லாம் பகவான் கணக்கு தான்.

நடராஜர் கணக்கு. அந்த காலத்தில் காந்தி கணக்கு என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். ஆனால் காந்தி கணக்குக் கூட சரியாக இருக்கும். ஆனால் தீட்சிதர்கள் கணக்கு என்பது நடராஜர் கணக்குதான்.

இதை நான் சொல்ல வில்லை. நீதிமன்றத் தீர்ப்பினுடைய ஒரு பகுதி. அது மட்டுமல்ல, முக்கிய நகைகள், முக்கிய பொருட்கள் காணாமல் போயிருக்கின்றன.


இன்றைக்குத் தங்கம் விற்கின்ற விலை என்ன? அந்தக் காலத்தில் இருந்த ராஜா, நடராஜர் வெயிலி லேயும், மழையிலேயும் நனையக் கூடாது என்ப தற்காக பொன்னாலே தங்கை ஓட்டை செய்து வேய்ந்து விட்டான்.

ஏனென்றால் நம் முடைய ராஜாக் அந்த காலத்திலேயே புத்தி சாலி. ராஜாவுடன் பக்கத்தில் இருந்தவனி டம் ராஜா கேட்டான். நான் எப்பொழுதுமே ராஜாவாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.

நீ இந்த மாதிரி காரியங்களை செய்ய வேண்டும் என்று சொன்னவுடனே அவருடைய ஆசையை நிறைவேற்ற அரசன் நடராஜன் கோவிலுக்குப் பொன் ஓடு வேய்ந்தான் என்று சொல்லுகின்றார்கள்.

ஒரு பக்கத்திலே சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகள் காணாமல் போகிறது. இன்னொரு பக்கத்திலே வேறு நகைகள் இருக்கிறது. இதை ஏதோ பொத்தாம் பொதுவில் சொல்லுகிறார்கள் என்று நினைக்காதீர்கள். 1982லேயே இந்த புத்தகத்தில் ரொம்ப விரிவா கவே சொல்லியிருக்கின்றோம்.

அது மட்டுமல்ல - தங்கப் பாளங்கள் எல்லாம் எங்கேயிருக்கிறது. நடராஜரிடம் அல்ல. நடராஜ ருடைய மறுஉருவம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தீட்சிதர்களிடம் இருக்கிறது.

இதைக் கண்டுபிடித்துக் கேட்டவுடனே, என்ன பதில் சொன்னார்கள் தீட்சிதர்கள். இதெல்லாம் கோவிலுக்கு சம்பந்தமானது அல்ல. இதெல்லாம் எங்களுக்குச் சொந்தமானது என்று அப் பொழுதுதான் வாழ்நாளிலேயே உண்மையைச் சொல்லியிருக்கின்றார்கள்.

ஏனய்யா - கணக்குக்கே வராமல் இருக்கிறது என்று கேட்டால், அது எங்களுடைய கணக்கு என்று சொல்லி விட்டார் கள். நிறைய கோவில் நகைகளை தீட்சிதர்களே உருக்கி தங்கள் வசம் வைத்துக் கொண்டார் கள்.

கடவுளையே உருக்கி விட்டான் (கைதட்டல்). பக்தர்கள் உருகுகிறார்கள். நடராஜனை உருக் குகிறான். இன்றைக்கு ஏன் தங்கம் இவ்வளவு விலை விற்கிறது தெரியுமா? காரணம் இது தான். அந்த அளவுக்கு தங்கத்தை உருக்கும் இவர்கள் வைத்துக் கொண்டார்கள்.

வெளிநாட்டில் இருக்கிறவன் வேண்டுமானால் தங்கத்தை வாங்கட்டும் என்று ஒரு வேளை நடராஜர் நினைத்தாரோ என்னமோ தெரியவில்லை. ஏனென்றால் நம்புகிறவர்கள் அவர்கள் தான். நாங்கள் நம்பாதவர்கள்.

கடவுளை நம்பாத எங்களுக்கெல்லாம் எமராஜாவைக் காட்டிவிட்டான். நம்புகிறவர்களுக் குத்தான் நடராஜர் என்று சொல்லிவிட்டான்.

தீட்சிதர்கள் நகைகளை உருக்கிப் பாளம், பாளமாக வைத்துவிட்டார்கள் எடுத்துப் போவதற்கு சுலபமாக. இதைப் பற்றித் தீர்ப்பிலே நீதியரசர் சுட்டிக்காட்டி யிருக்கின்றார்கள்.

இங்கே கூட சொன்னார்கள் பாருங்கள். அரசியல் சட்டம் இருக்கிறது. மதச் சுதந்திரம் என்று இப்படியெல்லாம் இவர்கள் சொன்னார்கள் என்று இங்கே சொன்னார்கள். மதச் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது. எங்களுக்கு மதச் சுதந்திரம் என்ற பெயரில் சாதகமாக இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள்.

அரசியல் சட்டத்தில் உள்ள 25 பிரிவு, 26 பிரிவு பற்றி எங்களுக்குத் தெரியாதா? நாங்கள் படிக் காததா? தயவு செய்து அதை மறுபடியும் திரும்பிப் படிக்கும் போது பார்த்தால் தெரியும். அதைத் தொடங்கும் பொழுதே எப்படித் தொடங்கியிருக்கின்றார்கள் என்றால் முதலில் மதத்தில் தலையிடக் கூடாது என்ற விதியிருக்கிறது. இந்த அரசியல் சட்டத்திலே. பொது மக்கள் மத்தியிலே இருக்கிற அமைதியை ஒட்டியோ அல்லது ஒழுக்கத்தை பொறுத்தோ அல்லது மக்கள் சுகாதாரத்தைப் பொறுத்தோ அதைத் தாண்டி எதுவும் கிடையாது.

எனவே அதற்குள்ளே வரவேண்டும் எல்லாமே. ஆகவே இதற்கெல்லாம் கேடாக இருந்தால் எந்த மதம் எந்தப் பிரச்சினை யாக இருந்தாலும் அந்த விதி பொருந்தாது.

அந்த விதிகளை அமல் படுத்த முடியாது என்பது தான் சட்டம். அதற்குள்ளே இரண்டு வகை யாகப் பிரித்திருக் கின்றார்கள்.

அரசியல் சட்டத்தைக் காட்டித்தான் ஏமாற்றலாம் என்று பார்த்தார்கள். நீங்கள் அர்ச்சகராக நியமனம் பண்ணினால் யாரை வேண்டுமானாலும் நியமனம் பண்ணுவீர்கள். மதச் சுதந்திரத் தைப் பறிக்கிறீர்கள் என்று சொன்னார்கள்.

மதக்காரியங்களில் தலையிடக் கூடாது. அதற்குத் தான் நாங்கள் இதைப்படி, அதைப்படி என்று சொல்லிக் கொடுக்கின்றோம்.

இதற்கு முன்பு மணி யாட்டியவர்கள் ஒழுங்காக மந்திரம் சொன்னது கிடையாது. இப்பொழுது அர்ச்சகர் பள்ளியில் படித்து வந்த இவர்கள் தான் அந்த மந்திரத்தை ஒழுங்காகப் படித்திருக் கின்றார்கள் - இந்த 207 பேரும்.

மற்றவர்களுக்கு சமஸ்கிருதமே ஒழுங்காகத் தெரியாது. வைஷ்ணவ ஆகமம் என்றால் என்ன வென்று தெரியாது. சிவா கமம் என்றால் என்ன வென்றே தெரியாது. ஆகமம் தெரியாது. ஏதோ நடத்திக் கொண்டிருந்தார்கள் அவ்வளவுதான். இதைச் சொல்லும் பொழுது சாதாரண ஒழுங்கீனமல்ல - ரொம்ப மோசமான ஒழுங்கீனம் நடந்திருக்கின்றது.

நீதியரசர் அவர்களுடைய தீர்ப்பிலே உயர் நீதிமன்றம் என்ன சுட்டிக் காட்டியிருக்கின்றது என் பதை அருள் கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

இந்தத் தங்கத்தைப் பாளம், பாளமாக உருக்கினார்கள் பாருங்கள் உருக்கி, அதைப் பெருக்கி வைத்துக் கொண்டார்கள். அது கணக்கில் வரவில்லை.

நீதிமன்றத்தில் அதைத் தான் கேட்டார்கள். அந்த உருக்கிய தங்கத்தை எங்கே வைத்தார்கள்? நடராஜர் கருவூலம் எதற்குப் பயன் படுகிறது. கறுப்புப்பணம், கள்ளப் பணம் ஆகிய வற்றைப் பாதுகாப்ப தற்குத் தவறாகப் பயன் படுத்துகின்றார்கள் என்பதுதானே அர்த்தம்.

இந்து அறநிலைய கடலூர் கமிஷனர் இதை கண்டுபிடித்திருக்கிறார். சிதம்பர் ஆர்.டி.ஓ. முன்னாடி வைத்து கணக்கில் வராத தங்கத்தைக் கண்டுபிடித் திருக்கின்றார்கள்.

-------------------தொடரும்..."விடுத்லை" 11-3-2009

4 comments:

ttpian said...

natarajan is a good dancer:never cares for Dikshidhars:
Natarajan has closed his MOUTH:otherwise Dixithars will.....

தமிழ் ஓவியா said...

தமிழில் பின்னுட்டம் இடவும்.

Sivamjothi said...

ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமுகத்தை மட்டமாக பேசுவது வருத்தம் அளிக்கிறது.

சாதி சமய பிரச்சனைகள் அதிகம் உள்ள நம் நாட்டில், இந்த மாதிரி கருத்தை எழுதி பலர் மனதில் ஜாதி
வெறி கிளப்புவது நாகரீகமான செயலாக கருத முடியாது.

உண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள், மக்களுக்கு நல்லது நேரடியாக செய்யலாம். ஒரு
சமுகத்தை மட்டமாக பேசினால் மக்களிடம் உள்ள மூடனம்பிக்கையை
சரி செய்ய முடியாது.

பெரியார் மூடனம்பிக்கையை அழிக்க
முன்னுரிமை கொடுத்திருப்பார் என நம்புகிரேன்.

சமூகத்தில் பல தவறு நடக்கிறது.
அவர் கடமை/வேலை செய்ய கையூட்டு கேட்கிறார்கள். இதை எல்லாம் தட்டி கேட்க ஆட்கள் இல்லையா?

நம்பி said...

//Yaro said...

ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமுகத்தை மட்டமாக பேசுவது வருத்தம் அளிக்கிறது.//

குற்றத்தை செய்தவனை விட குற்றம் செய்தவனுக்கு அடைக்கலம் கொடுப்பது மிகப்பெரிய குற்றம்..என்று இந்திய குற்றவியல் சட்டம் சொல்லுதாம்....மேலே தீட்சிதர்கள் செய்த குற்றத்தை சமூகமே காபந்து பண்ணுகிறது.

சமூக விரோதத்தை காட்டிக்கொடுக்க மறுக்கிறது...அந்த குற்றத்திற்காக வக்கலாத்து வாங்குகிறது.

யார்? அந்த சமூகம்...? சாட்சாத் பார்ப்பனர் தான். வேறு யார்? யார் காபந்து பண்ணுகிறவர்கள் பார்ப்பன சமூகம்...? யார் வக்கலாத்து வாங்குபவர் அதுவும் பர்ப்பனர்.

பார்ப்பனம் இணையத்தில் முகத்தை காட்டாவிட்டாலும் சாதியத்தை வெளிக்காட்டிவிடும். தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடிவிடும்.

வேறு எவருக்காகவும் அது, இது மாதிரி வாதாடுமா? சமூகம் என்று எப்பவாவது சொல்லியிதுண்டா? ம்கூம் ம்கூம் சொல்லாது, அதெல்லாம் சமூகமா என்ன?.


Blogger Yaro said.
//சமூகத்தில் பல தவறு நடக்கிறது.
அவர் கடமை/வேலை செய்ய கையூட்டு கேட்கிறார்கள். இதை எல்லாம் தட்டி கேட்க ஆட்கள் இல்லையா?

March 13, 2009 10:12 AM//


கடவுள் முன்னாடி லஞ்சம் வாங்கிகொண்டு தான் ஊத்தை சமஸ்கிருத மந்திரம் ஒதப்படுகிறது. அப்புறம் என்ன? "யாரோ?" செய்த குற்றம்...தினம் தினம் குற்றம் செய்து கொண்டேதானே இருக்கிறான்.

வடிவேலு கூட காமெடியில கேட்டுக்கூட புத்தி வரவில்லையா...?

உனக்கு தான், பூசை பண்ணுவதற்கு கவர்ன்மென்ட் தனியா சம்பளம் கொடுக்குதே! (அது மக்கள் வரிப்பணம் தானே?) அப்புறம் என்ன? தனியா தட்டில காசு வாங்குற? இது பூரா கோயில் பணம் என்று புடுங்கி உண்டியலை போடுவார் பார்?


அதுக்காக பார்ப்பன பூசாரி, வடுவேலுவுடன் கட்டி புரண்டு சண்டை போடுவான் பார்?

இதெல்லாம் எதை குறிக்கிறது...? ஊழலைத்தான் குறிக்கிறது.

அடுத்த தடவை வரும்போது தட்டுல காசு இருக்கறதை பார்த்தேன் எடுத்து உண்டியலில் போட்டுறுவேன். (ஆனா இதுங்க அப்புறமா உடைச்சு எடுத்துக்கும். இல்லை திருட்டு கணக்கு எழுதிக்கும்...)

இதெல்லாம் "யாரோ" சிலர் செய்வதெல்லாம் கிடையாது 100 க்கு 100 சதவீதம் நடப்பது. கடவுள் முன்னாடியே நடப்பது. அது தான் கல்லாச்சே!

இது ஆரம்பம்...அப்புறம் பெரிய கைவரிசை தங்கம், வெள்ளி, உருக்கறது...அப்படியே போகும், அதுதான் நடக்கிறது. எல்லாம் வெளிப்படையாகவே தெரியுதே!

அதுக்குத்தான் அரசாங்கத்தை உள்ளே வரவிடாமல் தடுப்பதற்கான காரணம்.