Search This Blog

12.3.09

சிதம்பரம் நடராஜர் கோயிலைப்பற்றி 1980 இல் கொடுத்த தீர்ப்பு என்ன?

கலைஞர் ஆட்சிக்கு முன்பு சிதம்பரம் நடராஜர்
கோவிலில் தாலி களவு - காசு மூட்டைகள் கொள்ளை

சிதம்பரம் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்


சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு எடுத் தமைக்கு முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து சிதம்பரத்தில் 28.2.09 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சிதம்பரத்தில் நிர்வா கத்துறையில் பெரிய அதிகாரி யார் என்றால், ஆர்.டி.ஓ. எனவே, அவரை முன்னிலையில் வைத்துக் கொண்டு - இந்து அற நிலையத்துறை துணை ஆணையர் கோயில் கருவூலத்திற்குள் சென்று இதைக் கண்டுபிடித்தார். ஆர்.டி.ஓ. மட்டுமல்ல - கூடயாரை வைத்துக் கொண்டார்கள் - மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் அதிகாரியையும் வைத்துக் கொண்டார்கள்.

எனவே, மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர், ஆர்.டி.ஓ. இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு கண்டு பிடித்திருக்கின்றார்கள்.

பழைய நகைகளை உருக்கியிருக்கின்றார்கள். அதில் 860 கிராம் தங்கம் இழப்பு ஏற்பட்டிருக் கிறது. இதை குறிப்பில் எழுதியிருக்கின்றார்கள்.

கோவிலுக்கு காணிக்கை என்று கொடுத்தார்கள் - பாருங்கள். எல்லாவற்றையும் பகவான் பார்த்துக் கொண்டிருக்கிறார். நடராஜர் என்ன பண்ணு வார்?

காலைத் தூக்கி நின்றவர் - நின்று கொண்டே யிருக்கின்றார். நகையை உருக்கியவன் உருக்கிக் கொண்டேயிருக்கின்றான். பெருக்குகிறவன் பெருக்கிக் கொண்டேயிருக்கின்றான்.

இதைப் பார்த்த கலைஞர் சும்மா இல்லை. உத்தரவு போட்டு இதை முடி என்று சொன்னார். இதை செய்ததற்குத்தான் முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு தெரி விப்பதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய் திருக்கின்றோம்.

அதுமட்டுமல்ல, கணக்குக் கொடுங்கள் என்று கேட்டிருக் கின்றார்கள். கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். எவ்வளவு வருமானம் வந்தது? என்பதைப் பார்க்க வேண்டும். இது ரொம்ப தமாஷாக இருக்கிறது. உதாரணம் சொன்னார்கள்.

நான் நீதிபதி அவர்கள் கொடுத்த தீர்ப்பிலிருந்து தான் சொல்கின்றேன். இதில் எதுவும் என்னு டைய சொந்த கற்பனை அல்ல. உயர்நீதிமன்றத் தீர்ப்பினுடைய ஒரு பகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதற்காக சொல்கின்றேன்.

தனியே சட்டக் கல்லூரியிலே வகுப்பெடுப்பதற்குப்பதிலாக, பொதுமக்களுக்கு இப்பொழுது நாங்கள் வகுப்பெடுக்கின்றோம்.

நீங்கள் இந்த விசயத்தை தெரிந்துகொண்டு ஒவ்வொருவரும் பத்து பேரிடம் இதைச் சொல்ல வேண்டும். இப்படிச் சொன்னால்தான் உங்களுக்கு மோட்சத்தில் முன்சீட்டு (கைதட்டல்). நடராஜரே ரிசர்வ் பண்ணி விடுவார்.

இல்லையென்றால், எங்களோடு நீங்கள் வரவேண்டியிருக்கும். (சிரிப்பு - கைதட்டல்)

அடிஷனல் அட்வ கேட் ஜெனரல் கோர்ட்டில் சொல்லுகின்றார்.

மயிலாப்பூர் கபாலீ சுவரர் கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.10 கோடி யாகும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உலகம் முழுவதிலுமிருந்தும் பக்தர்கள் இருக்கிறார் கள். உலகம் பூராவும் ஈழத் தமிழரிலிருந்து ஏமாளித் தமிழர்வரை எல்லோரும் வரக் கூடியவர்கள் இந்த நடராஜன் கோயிலுக்கு.

எந்த இடத்திலும் நடன நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் பொம்மையைத் தூக்கிக் கொண்டுவந்து வைப்பார்கள். டான்ஸ் கற்றுக்கொடுத்தவன் பின்னால்தான் இருப்பான்.

சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயி லுக்கு ஆண்டு வருமா னம் எவ்வளவு என்று சொன்னால், இவர்கள் காட்டியிருக்கின்ற கணக்கு - 2007 இல் வந்த வருமானம், இந்த ஊர்க் காரர்களாகிய நீங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரையில் இந்தத் தகவல்கள் எல்லாம் தெரி யாது. 37,199 ரூபாய் - ரொம்ப கரெக்டாக கணக்கு வைத்திருக் கின்றார்கள் - இது ஒரு வருடம் பூராவும் வந்த வருமானம்.

அடுத்த கட்டம்தான் சுவையானது. எல்லா டெலிவிஷனிலும் இப் பொழுது காமெடி, சிரிப்பொலி, நகைச்சுவை நேரமெல்லாம் வருகிறது. அந்த நகைச்சுவை நேரத்தை இதிலே அனுபவிக்கலாம் நீங்கள்.

வரவு எவ்வளவு ரூ. 37,199. இவ்வளவு கரெக் டாகக் கணக்குக் கொடுத்தவர்களைப் போய் இந்தப் பாவிகள் பழி சொல்லுகிறார்கள் என்று சொன்னார்கள்.

அதேநேரத்தில், ஒரு ஆண்டில் செலவான தொகை ரூ. 37,000 (கை தட்டல்). இது மட்டும் ரவுண்டாக செலவு செய்திருக்கின்றார்கள். செலவு போக மீதி கையிருப்பு ரூ.199. வரவு ரூ.37,199. செலவு ரூ.37,000. நிகர இருப்பு ரூ.199. சரி யாக கணக்கு வைத்திருக் கின்றார்கள்.

என்னய்யா சர்வதேசப் புகழ்பெற்ற ஒரு கோயிலில் மீதி இவ்வளவு தானா?

வெளியே தெரியாத சென்னை கபாலீசுவரர் கோயிலில் ரூபாய் பத்து கோடி. ஆனால், சிதம் பரம் கோயிலில் வெறும் 37 ஆயிரம் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

இந்தக் கோயிலின் வருமானம் - செலவுக் கணக்கு எதுவும் சரியாக முறையாக இல்லை.

ரொம்பத் தெளிவாகத் தீர்ப்புக் கொடுத்திருக் கின்றார்கள்.

இதை எல்லாம் பார்த்தால் பக்தர்கள்தானே எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உள்ளபடியே பக்தர்கள், நகர மக்கள் தானே பதில் சொல்ல வேண்டும்.

இந்தக் கோயிலை இந்து அறநிலையத்துறை யின்கீழ் எடுத்தது சரியா? தவறா? என்று அர சாங்கம் சொல்ல வேண் டாம்.

இந்தக் குழுவெல்லாம் சேர்ந்து நாங்கள் இரண்டு பெட்டி வைக்கின்றோம். கலைஞர் அரசாங்கம் செய்தது சரி என்று சொல் கிறவர்கள் எல்லாம் ஒரு பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். இதில் ஒன் றும் கள்ள ஓட்டெல் லாம் கிடையாது. இந்தக் கோயிலை எடுத்தது தவறு என்று சொல்கிற வர்களும் ஓட்டு போடட் டும்.

எல்லோரும் பார்க்கிற மாதிரி போலீஸ் பந்தோபஸ்தோடு சுற்றி நாம் பாதுகாப்பு கேட்டு வைக்கலாம். அதற்கு தீட் சிதர்கள் தயாராக இருக் கிறார்களா?

ஏனென்றால், மக்களுடைய விருப்பத்தைத் தான் மக்களாட்சியான கலைஞர் அரசு செய் திருக்கிறது.

இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலைப்பற்றி 1980 இல் கொடுத்த தீர்ப்பு என்ன?

குற்றச்சாற்றுகள் என்னென்ன வருகின்றன? அன்றைக்குக்கூட இதே போல பல வகையான குற்றச்சாற்றுகள் வந் திருக்கின்றன. பல வகை யான கோளாறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை இந்த நூலிலே தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.

பழைய நிலையிலிருந்து இரண்டே இரண்டு உதாரணங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இரண்டு மூன்று விசயம் நான் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் பல வருடங்கள் படித்திருந்தாலும்கூட, சிதம்பரம் கோயிலுக்குள் நாங்கள் போனதே கிடையாது.

ஆனால், அதேநேரத் தில், இந்த ஊர்க்காரர் கள் அந்தக் கோயிலுக்குள் நுழைந்து பார்த் திருப்பீர்கள். உள்ளூர்க்காரர்களுக்குப் புரியும். வெளியூர்க்காரர் களுக்குப் புரியாது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாண்டி நாயகம் அம்பாள். 1982 இல் அம்பாள் கழுத்தில் கிடந்த பவுன் தாலி களவு போய் விட்டது. தாலி கட்டினவர் அதைப்பற்றிக் கவ லைப்படவில்லை.

அதுமட்டுமல்ல, இன்னும் சில விசயங்களைப் பார்ப்போம். பாஸ்கர சேனாதிபதி கொடுத்த நெற்றிப் பச்சை வைரம் ஆகியவை இப்பொழு தும் கோயிலில் இருக் கின்றன. ஆகவே, இவை களவு போய்விடாமல் பாதுகாக்க வேண்டுமா னால், நிர்வாக அமைப்பை முற்றிலும் மாற்றி, தமிழக அரசே பரிபாலனம் செய்யவேண்டுமென்று தீட்சிதர்களிலேயே சில பேர் அறிக்கை விட்டார்கள் - எப்பொழுது 1982 இல். இது பழைய செய்தி.

அதோடு நடராஜருக் குப் பக்கத்தில் பரமானந் தர் கூடம் என்று ஒரு கிணறு இருக்கிறது. பக் தர்கள் யாராவது நாணய மாக உண்டியலிலே பணம் போடவேண்டும் என்று சொல்லுபவர்கள் அந்தக் கிணற்றிலே போடுகின்ற வழக்கம் உண்டு.

அந்தக் காசை, இரண்டு மூன்று மாதம் கழித்து ஏலம் விடுவது வழக்கம்.

அப்படி ஒரு நாள் பொது ஏலம் விடாமல் சில பேர் கிணற்றிலே ஆட்களை மூழ்க வைத்து, ஒரு துணியைப் போட்டு மூட்டைகளாகக் கட்டி வெளியே எடுத்திருக் கின்றார்கள்.

இதைப்பற்றி வெளியில் சொன்ன ஆர். கிருஷ்ணசாமி தீட்சிதரை தாக்கும் வன்முறை முயற்சி யில் அங்கு இறங்கியிருக் கின்றார்கள்.

இன்றைக்கு அந்த கிருஷ்ணசாமி தீட்சிதர் இருக்கிறாரோ, இல் லையோ எனக்குத் தெரி யாது. இது நடந்த சம்ப வம். ஏற்கெனவே நடந்த கூட்டத்தில் நான் இதை சுட்டிக்காட்டிப் பேசி யிருக்கின்றேன்.

இதை சட்டமன்றத் திலே உறுப்பினர்கள் எடுத்துப் பேசியிருக் கின்றார்கள்.

இதுமாதிரி ஒன்று, இரண்டு அல்ல. ஏராள மான அளவுக்குச் செய்தி கள் உள்ளன. அந்த அள வுக்கு நிலைமைகள் வளர்ந் திருக்கின்றன.

எனவேதான் 1888 ஆம் ஆண்டிலிருந்தே இந்த வழக்குகள் நடந்து வந் திருக்கின்றன.

இன்றைக்கு இவை கள் எல்லாம் சாத்தியம் என்று சொன்னால், காலம் காலமாக நமக்குக் கிடைக்காத ஒரு பொற் கால ஆட்சியை கலைஞர் தலைமையில் அமைத் திருக்கின்ற காரணத் தால் தான் 150 வருட மாகக் கனவு கண்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - இன்றைக்கு முடியக்கூடிய நிலை யிலே அதற்கு மதம் முட்டுக்கட்டை போட்டு 25 கி.மீ. தூரத்தில் நிறுத்தி யிருக்கிறது.

காரணம், அரசியல் உள்ளே போயிருக்கிறது. நீதிமன்றம் அதை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால், அது நிறை வேறும். அதில் எந்த வொரு சந்தேகமும் இல்லை.

அதேபோலத்தான் 120 ஆண்டுகளுக்கு மேலான பிரச்சினை. சிதம்பரம் கோயில் பிரச்சினை முடிந்திருக்கிறது.

அதேபோலத்தான் கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுந்ததைப் போல, வடலூர் வள்ள லார் - (சத்திய ஞானசபை) யார் அங்கு இருக்கக் கூடாது என்று நினைத் தாரோ - அந்த இடத் திற்கே பார்ப்பனன் உள்ளே நுழைந்து விட்டான்.

ஆக, இவ்வளவு நாட் களாகப் பிரச்சினையை மூடி மூடி வைத்திருந் தான். இப்பொழுதுதான் அறநிலையப் பாதுகாப் புத் துறையின் கீழ் இந்த அரசு எடுத்து எல் லோருக்கும் தெரியும் படியாக எல்லோரும் பாருங்கள் என்று சொல்லி, அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணையைப் பார்க்கத் திறந்துவிட்டிருக்கின்றார்கள்.

எல்லோரும் பார்க்கக் கூடிய வாய்ப்பை உருவாக் கியது கலைஞர் அரசு தான் என்று சொல்லும் பொழுது நாம் மிகுந்த பெருமையடைகின்றோம்.

வடலூர் வள்ளலார் மனம் நொந்து - கண் மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக வேண் டும் என்று சொன்னார். அவரையே மண் போட்டு மூடும்படி அந்த அள வுக்கு ஆக்கிவிட்டான்.

எனவேதான், இப் பொழுது நடப்பது மிகப் பெரிய புரட்சி - சாதாரணப் புரட்சியல்ல.

நந்தன் வந்தார் - சிதம் பரம் நடராஜரை தரி சிக்க. அப்பொழுதுகூட தீ குளிக்கச் சொல்லி யிருக்கின்றான்.

தீ குளிப்பதற்கு முன் னோடியாக இருந்தவன் அவன்தான்.

அவன் தானாக வந் திருக்க முடியாது. வலுக் கட்டாயமாகப் பிடித்து பார்ப்பானே தீயில் தள்ளியிருப்பான். இப்பொழுது மாதிரி உணர்ச்சிப்பூர்வமாக இருந் திருக்க முடியாது.

இந்த சூழ்நிலையிலே நந்தனை நடராஜர் என்ன கட்டிப் பிடித்துக் காப் பாற்றினாரா? இல்லை. அல்லது உள்ளே வரச் சொன்னாரா? இல்லை.

ஆனால், நந்தியே சற்று விலகியிரும் பிள்ளாய்! என்று அவ்வளவுதான் நடராஜர் சொன்னார்.

நடராஜனைப் பார்க்க முடியாமல் இருந்தத் தடை இருக்கிறது பாருங் கள் - அந்தத் தடையை மட்டும்தான் நீக்கினான். ஆனால், அன்றைக்கு நந்தன் பரம்பரை உள்ளே மணியடிக்கத் தடுத்தார்கள்.

நந்தன் பரம்பரை யினரிடமிருந்து பூசை மூலம் பிரசாதம் வாங்கக் கூடிய நிலை இன்றைக்கு வந்துவிட்டது.

தமிழகத்தினுடைய பல கோயில்களிலே ஆதி திராவிடர் உள்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று சொல்லக் கூடிய அந்த சரித்திரம் ஒரு சமூகப் புரட்சியாக இன்றைக்கு வந்து விட் டது.

ஈழத்திலே தமிழர்கள் தினம், தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கின்றது என்பதற்காக நாம் எல் லோரும் கதறிக் கொண்டு இருக்கின்றோம் - பதறிக் கொண்டிருக்கின்றோம்.

இதுவரை மத்திய அரசுக்குப் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை யென்று நமக்கு ஆதங் கங்கள் உண்டு.

அந்த ஆதங்கத்தை அவ்வப்பொழுது சொல் லிக் கொண்டிருக்கின்ற பொழுது இப்பொழுது தெளிவாக ஆகிவிட்டது.

ராஜபக்சே அரசு - இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற நெருக்கடியை நாம் எல் லோரும் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம்.

இதுவரை மத்திய அரசு அவ்வளவு வேக மாக சொல்லவில்லையே. போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல் லக்கூடிய அளவிற்கு வரவில்லையே என்று சொல்லி - அழுத்தம் கொடுக்கக் கொடுக்க இன்றைக்கு என்ன நிலவரம் என்றால், இன்று மாலை தொலைக்காட்சியில் செய்தி வந்திருக்கிறது.

தூத்துக்குடி வந்த பிரணாப் முகர்ஜி தெளி வாகச் சொல்லியிருக் கின்றார்.

விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று சொல்லிவிட்டார் கள்.

இலங்கை அரசே, நீங்கள் போர் நிறுத்தம் செய்து அவர்களோடு பேசுங்கள் என்று முதல் முறையாக இந்திய அர சினுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் சொன் னார் என்று சொன்னால், நாம் கொடுக்கின்ற அழுத்தங்கள் வீணா காது.

நாம் நினைக்கக் கூடி யது நடக்கும். ஈழத்திலே அழிந்து கொண்டிருக் கின்ற தமிழ் இனம் காப்பாற்றப்படும்.

இங்கே கொள்ளை போகின்ற பொருள்கள் எப்படி காப்பாற்றப்படு கின்றனவோ, அதுபோல அழிந்துகொண்டிருக்கின்ற இனம் தடுத்து நிறுத்தப் பட்டு காப்பாற்றவேண் டும் என்று சொன்னால், தமிழர்களே உள்ளூர்ப் பிரச்சினையாக இருந் தாலும், ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந் தாலும் கட்சியில்லை, ஜாதியில்லை, மதம் இல்லை, எல்லோரும் ஒருங்கிணைந்து உண் மைக்குப் போராடு வோம். உரிமைக்குப் போராடுவோம் என்று சொல்லி, ஒன்று திரளுங் கள் என்று சொல்லி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர் களுக்கு நன்றி கூறி, நீண்ட நேரம் கேட்ட உங்களுக் கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்

1 comments:

Unknown said...

பழைய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்காட்டி பேசிய சொற்பொழிவு மூலம் பல த்கவல்களை அறிந்து கொண்டேன்.