Search This Blog

3.3.09

சாதியை ஒழியாமல் பாதுகாப்பது எது?


உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள்.


------------------ தந்தைபெரியார் 93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971

6 comments:

கோவி.கண்ணன் said...

காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு பெரியார் ஒரு நீண்ட கட்டுரையை விடுதலையில் வெளி இட்டாராம் அது கிடைத்தால் பதிவேற்றுங்கள். இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து பெரியாரின் பரிந்துரைகள் அதில் அடங்கி இருக்கிறது

Unknown said...

//நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.//

வழிமொழிகிறேன்.

rvelkannan said...

"நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது."

அதிகாரவர்க்கங்கள் இவை நான்கையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்து வருகின்றன.எவ்விதமான சுழ்நிலையிலும் தன்னுடைய பதவி,புகழ்,செல்வம் போன்றவற்றை பாதுகாப்பிற்கு இச்செயலை தொடர்ந்து செய்கின்றன.





இது எக்காலத்திற்கும் பொருத்தம் என்பதையும் மேலும் சாதி ஒழிப்பில் ஈடுபட்டுள்ள தோழர் அனைவரும் மனதில் நிறுத்திகொள்ள வேண்டிய முக்கியமான குறிப்பை தந்தை பெரியார் அன்றே (1971) கூறியுள்ளார்

தமிழ் ஓவியா said...

முயற்சி செய்கிறேன் தோழர் கோவி. கண்னன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

velkannan

வித்யா said...

ungal katturai arputham!
anaal .. keelsaadhi makkalai mele kondu varum muyarchiyil mele iruppavargalai kele ilukka muyarchigal nadakkinranave....
engalai kaapatrungal[i'm a brahmain]
enakku oru salugaiyum engum kidaippadhillai
naan nooru mark eduthaallum en thanthai melum eduthal than collegil seet kedaikkum engirar[i'm in 10 standard now]
enakku enna vazhi???