Search This Blog

29.3.09

பத்திரிகைகளுக்குப் பூணூல் இருக்கிறதா, இல்லையா? வாதம் செய்யத் தயாரா?


பூணூல் பார்வை

புரட்சிக்கவிஞர் பாடலில் எழுதியதில் கல்கிக் கூட்டம் கலக்கிய சேறு இருக்கிறது. தினமணிப் பாம்பு திரட்டிய நஞ்சு இருக்கிறது.கலைமகள் தேளின் கடுக்கும் கொடுக்கு இருக்கிறது. சுதேசமித்திரன் தான் தொலைந்து போனது. அவ்விடத்தை நிரப்ப வந்துள்ளது துக்ளக்.

அது எழுதுகிறது - மதம், ஜாதி, ஆகியவற்றைப் பேசாமல் அவரால் (கலைஞரால்) எந்தப் பிரச்சினையையும் பார்க்க முடியாது என்பதுதான் தெரிந்த விஷயமாயிற்றே! பத்திரிகைகளுக்குப் பூணூல் போடுகிற புரோகிதரான அவரிடமிருந்து இதைவிட உயர்வான அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது - என்று எழுதியுள்ளது.

கலைஞரைப் பற்றி எழுதும் போது கூட, எவ்வளவு திமிர்? பத்திரிகைகளுக்குப் பூணூல் இருக்கிறதா, இல்லையா? வாதம் செய்யத் தயாரா?

இவர் பத்திரிகையையே எடுத்துக் கொண்டால் கூட - எல்லாப் பார்வையும் பூணூல் பார்வையாக - பூணூல் போட்ட பார்ப்பனப் பார்வையாகவே இருக்கிறது என்பது உண்டா, இல்லையா? அதைச் சுட்டிக் காட்டுவது தவறா?

பருத்திச் செடிக்கு நன்றி சொல்லி ரிக்வேதப் பாடல் இருக்கிறதே அதைப் பற்றிப் பேச துக்ளக் தயாரா? பருத்திச் செடி, பருத்திப் பஞ்சு, பருத்தி நூல், பருத்தித் துணி என்று வரிசையாக மனித குலத்திற்கு உதவிடும் பருத்திச் செடிக்கு நன்றி - என்றா ரிக்வேதப் பாடல் எழுதியவன் கூறி இருக்கிறான். இல்லையே? மாறாக - பூணூலுக்குத் தேவைப்படும் பஞ்சைத் தருவதற்காகப் பருத்திச் செடிக்கு நன்றி - என்றுதானே இருக்கிறது.

பருத்தியின் பயன்பாடே பூணூலுக்கு எனக் கூறிய புளகாங்கிதம் அடையும் பூசுரக் கும்பலைச் சேர்ந்த சோ ஏன் அதைச் சுட்டிக்காட்டும்போது கலைஞரிடம் கோபம் அடைகிறார்.

சோ விடம் இருப்பது - கலைஞரிடம் இல்லை - கலைஞருக்குப் பூணூல் இல்லை என்பதால்தானே, கோபம்?

-------------28-3-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் செங்கோ எழுதியது.

1 comments:

Unknown said...

"பருத்திச் செடிக்கு நன்றி சொல்லி ரிக்வேதப் பாடல் இருக்கிறதே அதைப் பற்றிப் பேச துக்ளக் தயாரா? பருத்திச் செடி, பருத்திப் பஞ்சு, பருத்தி நூல், பருத்தித் துணி என்று வரிசையாக மனித குலத்திற்கு உதவிடும் பருத்திச் செடிக்கு நன்றி - என்றா ரிக்வேதப் பாடல் எழுதியவன் கூறி இருக்கிறான். இல்லையே? மாறாக - பூணூலுக்குத் தேவைப்படும் பஞ்சைத் தருவதற்காகப் பருத்திச் செடிக்கு நன்றி - என்றுதானே இருக்கிறது."

அடக் கொடுமையே பார்ப்பனர்கள் பூணூலுக்காக ஒரு பாட்டே எழுதி அவர்களை உயர்த்திக் கொள்கிறார்களா?

பூணூலுக்கு அவ்வளவு மரியாதையா?