Search This Blog

31.3.09

தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியை ஆதரிக்க வேண்டும் ஏன்?




மதச்சார்பின்மை, சமூகநீதி காக்கப்பட
தி.மு.க. தலைமையிலான அணியையே ஆதரிப்போம்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானம்

நடக்க விருக்கும் 15 ஆம் மக்கள வைக்கான தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பது என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

31.3.2009 செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு சென்னை பெரியார் திட லில் துரை.சக்கரவர்த்தி நினைவரங்கில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1:

மக்களவைத் தேர்தலும் - தமிழர்களின் கடமையும்

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் குறைந்த பட்சம் மூன்று அணிகளாகப் பிரிந்து தேர்தலை சந்திக்கவிருக்கின்றன.

(1) காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியாகும்.

5 ஆண்டு காலம் நிலையான ஆட்சியைத் தந்துள்ளது. இடையில் இவ்வாட்சியைக் கலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நிலைத்த தன்மையை (Stability) நிரூபித்துக் காட்டி யுள்ளது.

இந்த ஆட்சி அமைந்த தன் மூலம் மத்தியில் மதவாத சக்திகள் ஆளும் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது.

ஏற்கெனவேயிருந்த மதவாத சக்தியான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார்பின்மை தகர்க்கப்பட்டது. கல்வித் திட்டங்களில் மத வாதக் கருத்துகள் திணிக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களில் ஜோதிட மூடநம்பிக்கைகள் பாடங்களாக வைக்கப்பட்டன. வேதக்கணிதம் என்ற பார்ப்பனீயத் தன்மையுள்ள பாட முறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டன.

வரலாறுகள் திரித்து எழுதப்பட்டன. சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்று - கணினி மூலம் எருதைக் குதிரையாக்கிக் காட்டி திரிபு வேலை செய்யப்பட்டது.

மத்தியில் இத்தகு ஆட்சி வீழ்த்தப்பட்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்றது. கீழ்க்கண்ட நலன்கள், வளங்கள் நாட்டுக் குக் கிடைத்துள்ளன.

அ) மதச் சார்பின்மை உறுதி செய்யப்பட்டது.

ஆ) சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பிற்படுத்தப் பட்டோருக்கு உயர்கல்வியில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு முதன் முதலாக அளிக்கப்பட் டது. அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ மேற்படிப்புகான (Post Graduate) தேர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு முதன் முதலாக இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டது.

பயிற்சிக் காலத்திலும் (Apprenticeship) இட ஒதுக்கீடு உண்டு என்று உறுதி செய்யப்பட்டது.

மெட்ரிக் கல்வியளவிலான அகில இந்தியத் தேர்வினை (Staff selection Commission) இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் எதில் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வேலை வாய்ப்பில் காலியிடங்களை நிரப்பும் (Back Log) என்ற முறை மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார அளவு கோலை (Creamy Layer) நாம் ஏற்காதவர்கள் என்றாலும் கூட, பெரும்பாலான பிற்படுத் தப்பட்டவர்கள் ஓரளவு பயன் பெறும் வகையில் பொருளாதார அளவு என்பதில் ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் என்பது நான்கரை லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.

சிறுபான்மையினர் நலனுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கம்; 15 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பெண்களுக்கு முழு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. (இத்தகு சட்டம் ஒன்றைக் கொண்டு வர சட்ட அமைச்சராகயிருந்த டாக்டர் அம்பேத்கர் முயற்சி தோல்வி யடைந்த நிலையில் அமைச் சர் பதவியை உதறி வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.)

"பெண்களை வீட்டு வன் முறையிலிருந்து தடுக்கும் சட்டம்- 2005" நிறைவேற்றப் பட்டது

(இ) தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (100 நாள்களுக்கு வேலை வாய்ப்பு - நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம்) நடைமுறைப் படுத்தப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மத்திய அரசின் உதவிகள் பல வகைகளிலும் பாராட் டத்தக்க அளவில் இருந்து வந்திருக்கின்றன. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், கடல்சார் பல்கலைக் கழகம், மத்திய பல்கலைக் கழகம், நெடுஞ்சாலைகள் வளர்ச்சி, பிருமாண்டமான மேம்பாலங்கள், மகத்தான தகவல் தொடர்பு வசதி சாதனைகள் என்று அடுக்கடுக்கான திட்டங்கள் செயல்படுத் தப்படுகின்றன.

2004 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டில் மானமிகு கலைஞர் அவர்கள் மதி நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளடக்கிய 40 இடங்களிலும் பெற்ற வெற்றிதான் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 5 ஆண்டு காலம் உறுதியாக நிலை பெற்றதற்கு முக்கிய அடிப்படையான காரணமாகும்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அய்ந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்களையெல்லாம் மூன்றாண்டு காலத்திலேயே நிறைவேற்றி தமிழ்நாட்டினை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அரிய சாதனைகளைச் செய்து வருவதோடு, மத்திய ஆட்சிக்கும் வழி காட்டும் மூத்த தலைவராக முதல் அமைச்சர் கலைஞர் பரிணமித்துக் கொண்டு இருக்கிறார்.

நடக்க இருக்கும் 15 ஆம் மக்களவைத் தேர்தலில் அதே தன்மையில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைப்பதன் மூலம் மேலும் பிருமாண்டமான வளர்ச்சியியை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லும் வாய்ப்பினை தமிழ்நாடு வாக்காளப் பெருமக்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டுமாய் திராவிடர் கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


(2) இரண்டாம் அணி என்று கருதப்படும் பா.ஜ.க. தலை மையிலான அணி மக்களிடம் எதை முன்னிறுத்துவது என் பதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அண்மையில் நாக்பூரில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தலைமைக் குழுக் கூட்டத்தில் ராமன் கோயில் பிரச்சினையை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளனர். எந்த நிலையிலும் அது தோற்கடிக் கப்பட வேண்டியதேயாகும். தமிழ் நாட்டைப் பொறுத்த வரை அந்த அணி முகவரி யின்றி முடக்கப்படும் என்பதில் அய்யமில்லை. தமிழ் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமனைக் காட்டி முடக்கியது பா.ஜ.க. என்பதைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.


(3) இடது சாரிகளின் முயற்சியால் முன்னிறுத்தப் படும் மூன்றாம் அணி என்பது முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட கலவையாகும். தேர்தலுக்குப் பின் அந்த அணிகள் வெவ்வேறு திசை நோக்கிப் பறக்கக் கூடியவை என்பதற்கான அடையாளம் இப்பொழுதே தெளிவாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது.

தமிழ்நாட்டில் மிக முக்கிய பிரச்சினையான ஈழத் தமிழர் வாழ்வுரிமை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றில் கூட ஒருமைப்பாடு இல்லாத அ.இ.அ.தி.மு.க. வின் தலைமையிலான கட்சிகளின் கூட்டணி அது. பொடா போன்ற சட்டத்தை விருப்பு - வெறுப்பு அடிப்படையில் முதல் அமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா பயன்படுத்தியதையும் எளிதில் யாரும் மறுக்க முடியாது. அந்த அநியாயத் தாக்குதலுக்கு ஆளானவர்களே அந்த அணியில் இருப்பது எந்த அடிப்படையில் என்பதையும் சிந்திக்க வேண்டும். தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்று இரு வேறு முரண்பட்ட நிலைகளை எடுக்கக் கூடிய அணியாகவே இது அமைந்துள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பதில் அவர்களுக்குள்ளாகவே கடுமையான மோதல் இருப்பதையும் வாக்காளர்கள் கவனிக்கத் தவறக்கூடாது. இந்தக் குழப் பத்தால், மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மத்தியில் திணிக்கும் ஒரு நிலை ஏற்படாமல் தவிர்க்கவும் இந்த மூன்றாவது அணியைத் தோற்கடிக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

நடைபெறவிருப்பது மத்திய ஆட்சிக்கான நாடாளுமன்றத் தேர்தல். இதில் தனியாகப் போட்டியிடுவேன் என்று சிலர் திரைப்படத்தில் துள்ளிக் குதிப்பது போல வீர வசனம் பேசலாம். வசீகரத்துக்கோ, ரசனைக்கோ பலியாகி அவர்களுக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றவையாகி விடும். இவர்களுக்கு வாக்காளர்கள் என்பவர்கள் விளையாட்டுக் கருவிகளைப் போன்றவர்கள். அப்படியே ஒரு சிலர் வெற்றி பெற்றாலும்கூட பதவி, பொருள், ஆதாயம் என்கிற கண்ணி வெடிகளில் சிக்கிக் கொள்வார்கள். இதனையும் முக்கியமாகக் கருத்தில் கொள்ளுமாறு தமிழக வாக்காளப் பெருமக்களை, குறிப்பாக இளைஞர்களை இச்செயற் குழு கேட்டுக் கொள்கிறது.


(4) தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலை யோடும், பொறுப்புணர்ச்சி யோடும் அணுகப்படக் கூடியது ஈழத் தமிழர்களின் பிரச்சினையாகும்.

இரண்டாம் அணி, மூன்றாம் அணி ஆகியவற்றில் அடங்கியுள்ள கட்சிகளுக்கிடையே இது குறித்து முரண்பட்ட கருத்துக்களும், அணுகு முறைகளும் உண்டு என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தி.மு.க.வைப் பொறுத்த வரை தொடக்க முதல் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்ட திராவிடர் இயக்க மாகும். இந்தப் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட் சியைக் கூட இழந்திருக்கிறது.


தமிழ்நாடு சட்டசபை மூலமும், மக்கள் போராட்ட மூலமும், நேற்றுவரைகூட மத் திய அரசிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து மத்திய அரசைப் பல வகைகளிலும் செயல்பட வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள் அளிக்கப்படவேண்டும் என்பது நமது கோரிக்கைகளில் முக் கியமானதாகும் -அது நிறை வேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் செயல்பாடுகள் காரணமாக வெளி நாடுகளும் இந்தப் பிரச்சினையில் தலையிடும் ஒரு சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல திருப்பமாகும். நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணிக்கு முழு வெற்றியை ஈட்டிக் கொடுப்பதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினையில் மேலும் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வாய்ப்பு அதிகமாகும் என்பதையும் திராவிடர் கழகச் செயற்குழு தொலைநோக்குப் பார்வையோடு தெரிவித்துக் கொள்கிறது.

செய்தியாளர்கள் கூட் டத்தில் நேற்று (30.3.2009) பேசிய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தமிழ் ஈழம் மலரு வதை முதலாவதாக வர வேற்று மகிழ்வதில் நானாக வேயிருப்பேன் என்று கூறி யுள்ளதையும் தமிழின வாக் காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லா வகைகளிலும் சீர்தூக்கி - நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார்பின்மை உறுதிப்பட, கல்வி வேலை வாய்ப்புகளுக்கு உத் தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சம பகுதியின ரான பெண்களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலாபம் உள்ள தொழிலாக உருவாக்கப்பட, (காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம் பெற, மதவாதம் தோற்கடிக்கப்பட, வரும் 15 ஆம் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலும், இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலும் அணி வகுக்கும் கட்சிகளுக்கு வாக்குகள் அளித்துப் பிரமிக்கத்தக்க வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகச் செயற்குழு தமிழ்நாடு வாக்காளப் பெரு மக்களை ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.

தி.மு.க., காங்கிரஸ், விடு தலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களையே ஆதரித்து, வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகம் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம், களப்பணிகள் ஆற்றுமாறு கழகத் தோழர் களை இச்செயற்குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

(ஆ) மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழ் நாடு அரசின் சாதனைகளையும், மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளையும் விளக்கும் நூல் ஒன்றினை கழகத்தின் சார்பில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

(இ) வரும் 7-4-2009 அன்று திருச்சியில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


-------------------நன்றி:-"விடுதலை" 31-3-2009

11 comments:

தாமிரபரணி said...

ஓவியா தங்கள் கூறிய கருத்தில் ஒரு சிலவற்றுடன் மாறுபடுகிறேன், என்னுடைய நிலைபாடு
தி.மு.க நிற்கும் அனைத்து தொகுதிகளுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும், டில்லிக்கு வால்பிடித்து தமிழர்களுக்கு பச்சை வஞ்சகம் செய்யும் சதிகாரர்களான காங்கிரசு கட்சி நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் டிப்பாசிட்டை இழக்கவேண்டும், மேலும் தேசிய கட்சியை தமிழகத்தில்யிருந்து வேறோடு பிடிங்கி எறிய வேண்டும், அப்படியே தமிழர்களுக்கு என்றுமே துரோகம் இழைத்துகொண்டிருக்கும் இந்த பார்பணர்களையும் இந்த தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும்
தலைவன் அண்ணாதுரை சொன்னதுபோல நம் தமிழகத்துக்கு இந்த ஆரியவர்கத்திடம் இருந்து விடுதலை கிடைக்க போராடவேண்டும். இலங்கையும் இந்தியாவும் ஒரே வகைதான்
அவன் தமிழின மக்களை அழித்துகொண்டிருக்கிறான், இந்த ஈன இந்தியா தமிழ்மொழியை தேசியம், இறையாண்மை போன்ற வாசகத்தால் இந்தியை தமிழகத்தில் முலைமுடுக்கெல்லாம் நுழையவிட்டு தமிழை மேலும் பின்னுக்குதள்ளி கொண்டிருக்கிறது இப்படியே போய்கொண்டிருந்தால் தமிழ்மொழி தமிழகத்தில் காணாமல் போய்விடும்!!!
ஒருத்தன் கருப்பா பயங்கரமா இருக்கான்
இன்னொருத்தன் பயங்கர கருப்பா இருக்கான்
//**தமிழ்நாடு சட்டசபை மூலமும், மக்கள் போராட்ட மூலமும், நேற்றுவரைகூட மத் திய அரசிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்து மத்திய அரசைப் பல வகைகளிலும் செயல்பட வைத்துள்ளது **//
ஏன் ஓவியா, அங்க ஒரு இனம் அழிந்துகொண்டிருக்கிறது அதை பலவழிகளில் நாம் எடுத்து சொல்லியும் இவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் நாம் இந்தியா என்று சொல்லி கொள்வதில் என்ன அர்த்தம் உள்ளது, இன்னமும் நாம் இந்தியாவை நம்பிகொண்டிருந்தால், தமிழர்களைவிட வேறு முட்டாள்கள் இருக்க மாட்டார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையிலும் அணி வகுக்கும் கட்சிகளுக்கு வாக்குகள் அளித்துப் பிரமிக்கத்தக்க வெற்றியை ஈட்டித் தருமாறு திராவிடர் கழகச் செயற்குழு தமிழ்நாடு வாக்காளப் பெரு மக்களை ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.//

-:( ஐயகோ!

ராவணன் said...

தானைத் தலைவி செல்வி ஜெயலலிதாவிற்கு சமூக நீதி காத்த வீரங்கனை என்ற பட்டம் வழங்கி தமிழ் சமூகத்திற்கு தொண்டாற்றிய மானமிகு.கி.கி.வீரமணி, இத்தாலிய அம்மையாருக்கு மகுடம் சூட்டி இந்திய சமூகத்திற்கு தொண்டாற்றத்துடிக்கும் மானமிகு.கி.கி.வீரமணியின் சமூக அக்கறை வியக்க வைக்கிறது.

ஆழிக்கரைமுத்து said...

தாமிரபரணி , ராவணன் , ஜோதிபாரதி அவர்களே என்ன இருந்தாலும் நீங்கள் ஓவியா விடம் இப்படி கேட்கக்கூடாது. கேட்டதற்கு எனது கண்டனத்தினை தெரிவிக்கிறேன்.

ஏனென்றால் அவர் சுயமாக இதுவரை எதையும் சொன்னது கிடையாது டம்ளர் டலைவர் சொல்வதையும் பிறர் எழுதியதியதையும் copy and paste மட்டுமே செய்யத்தெரிந்தவர். சுயமாக அவர் சிந்தித்தால் அவர் என்றோ வீரமணி திராவிடர் கழகத்திலிருந்து விலகி இருப்பார்.. தமிழ் ஓவியா என்பதே அவர் விருப்பமில்லாமல்தான் வைத்துள்ளார் போலுன் வீரமணி திக வின் கொள்கைபடி அவர் இந்திய ஓவியா என்று வைக்கவேண்டும்.

ஆழிக்கரைமுத்து said...

தமிழர் தலைவர் என்ற பெயருக்கு போட்டியாக ஈழத்தில் ஒருவர் வருவது தவறல்லவா....

அதைத்தான் டம்ளர் டலைவர் காங்கிரஸிடன் இணைந்து தமிழர் தலைவர் என்று வேறு யாரும் இருக்க கூடாது தான் மட்டுமே என்பதை நிலை நாட்ட வேலை செய்கிறார்.

Unknown said...

காங்கிரசை தோற்கடித்தால் பி.ஜே.பி. வர வாய்ப்பு உள்ளது.பி.ஜே.பி. வந்தால் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே நடந்தவைகளை அறிவோம். தி.க. போட்ட தீர்மானத்திலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

காங்கிரஸ்,பி.ஜே.பி.க்கு மாற்று எதுவும் இல்லாத நிலையில் யாரை ஆதரிப்பது. மூன்றாவது அனியோ முடங்கிக் கிடக்கிறது.

இப்போதைய சூழலில் தி.மு.க. அணியை ஆதரிக்க வேண்டியது கட்டாயமாகிறது. இதை தி.க. தீர்மானம் தெளிவாகவே விளக்கியுள்ளது என்றே நான் கருதுகிறேன்.

Unknown said...

//தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவலை யோடும், பொறுப்புணர்ச்சி யோடும் அணுகப்படக் கூடியது ஈழத் தமிழர்களின் பிரச்சினையாகும்.

இரண்டாம் அணி, மூன்றாம் அணி ஆகியவற்றில் அடங்கியுள்ள கட்சிகளுக்கிடையே இது குறித்து முரண்பட்ட கருத்துக்களும், அணுகு முறைகளும் உண்டு என்பதை இச்செயற்குழு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

தி.மு.க.வைப் பொறுத்த வரை தொடக்க முதல் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்ட திராவிடர் இயக்க மாகும். இந்தப் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட் சியைக் கூட இழந்திருக்கிறது.//

இம்முறையும் தி.மு.க. பல வழிகளிலும் ஈழப்பிரச்சினைக்காக குரல் கொடுத்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் அதனால் ஒரு சில நன்மைகள் ஏற்பட்டாலும் முழுமையான நன்மைகள் ஏற்படவில்லை என்பதையும் மறுக்க முடியாது.

தி.மு.க. ஆட்சியை இதற்க்காக இழந்திருந்ததலும் ஈழப்பிரச்சினையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்காது.

தமிழ் ஓவியா said...

நான் சுய சிந்தனையாளன் இல்லைதான். பெரியார் தந்த புத்தி வழியாக சிந்திப்பவன். என்னுடைய புலமையைக் காட்ட வலைப்பதிவு நடத்த வில்லை. பெரியார் சிந்தனைகள் பரவ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த வலைப்பதிவு .

உங்களைப் போன்று மிகப்பெரிய சுயசிந்தனையாளன் இல்லாதவனான என்னால் இயன்ற அளவு ஏதோ பெரியாரியல் பரப்பும் பணியைச் செய்து வருகிறேன்.



//சுயமாக அவர் சிந்தித்தால் அவர் என்றோ வீரமணி திராவிடர் கழகத்திலிருந்து விலகி இருப்பார்.. //

விலகி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ஆழிக்கரை முத்து.

மீதி உங்கள் பதில் கண்டு.....

தமிழ் ஓவியா said...

//தமிழ் ஓவியா என்பதே அவர் விருப்பமில்லாமல்தான் வைத்துள்ளார் போலுன் வீரமணி திக வின் கொள்கைபடி அவர் இந்திய ஓவியா என்று வைக்கவேண்டும்.//

முதலில் பெரியாரின் கொள்கையைப் படியுங்கள். தமிழ் ஓவியாவா? இந்திய ஓவியா? என்பது பற்ரி பின்பு ஆராயலாம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தாமிரபரணி.

எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழனிடம் ஒற்றுமை இல்லாததுதான் இங்கு பிரச்சினையே.

தமிழ் ஓவியா said...

தோழர் ஜோதிபாரதி வருத்தப்பட்டு அய்யகோ என்கிறார். என்ன செய்வது? தாமிரபரணிக்கு அளித்த பதில்தான் தங்களுக்கும்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிபாரதி