Search This Blog

8.3.09

பா.ஜ.க.வுக்குத் துணை போகும் ம.தி.மு.க.வுக்குக் கண்டனம்



மாணவர்கள் மத்தியில் பரவி வரும் ஜாதி உணர்வைத்
தடுத்திட மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் ஜாதி ஒழிப்பு மாநாடு
கோவை மண்டல கழக மாணவரணி மாநாட்டில் தீர்மானம்



சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வின் அடிப்படையில் ஏற்பட்ட வன்முறையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் மத்தியில் ஜாதீய எண்ணங்களை ஒழிக்கும் வகையில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் விரைவில் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. கோவை மாவட்ட திராவிடர் கழக மாணவரணி மாநாடு திருப்பூரில் 7.3.2009 அன்று மாலை, மாணர் கழக மாநில அமைப்பாளர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

முன்மொழிதல்: இ. தமிழரசன், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவரணி செயலாளர்

தீர்மானம் 1:

இன அழிப்பைத் தடுத்திடுக!

இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக நடை பெற்றுவரும் இன அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும், அதிகாரப்பூர்வமாக உடனடியாக மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிதல்: ப. கவிநிலவு மாணவரணி பொறுப்பாளர்

தீர்மானம் 2: (அ)

பல்வேறு மொழி, இனம், மதம், மதச் சார்பின்மை, பண்பாடுகளைக் கொண்ட இந்தியாவை ஹிந்து ராஷ்டி ரமாக உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில் நாட்டில் மதவாதத் தீயைக் கிளப்பி, மக்கள் மத்தியில் பிளவுகளையும், வெறியையும் ஊட்டி, மக்களின் அன்றாட வாழ்வை அமைதியற்ற அமளி தாண்டவமிடும் கலவர பூமியாக உருவாக்கி வரும் ஹிந்துத்துவா சக்திகளைப் புறக்கணிக்குமாறு அமைதியை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களையும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிதல்: ஆர். யுவராஜ் பட்டுக்கோட்டை மாவட்ட மாணவரணி துணைத் தலைவர்

தீர்மானம் 2 (ஆ):

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்குத் தண்டனை தேவை!

நடக்க இருக்கும் 15 ஆவது மக்களவைத் தேர் தலில் பாரதீய ஜனதா கட்சி ராமன் கோயிலைக் கட்டு வோம்! என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டு இருப்பது இந் திய அரசமைப்புச் சட்டத் துக்கு விரோதமானதும், மக்களிடத்திலே மதவாதத் தீயைக் கிளப்பி கலகம் செய்ய முயற்சிப்பதுமாகும். இத்தகு திட்டத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் இறங்க சட்டமும், விதிகளும் இடமளிக்காத நிலையில், பா.ஜ.க. தேர்தலில் போட்டி யிட அனுமதிப்பது எந்த வகையில் சரியானது என் பதை தேர்தல் ஆணையம் சிந்திக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது!

17 ஆண்டுகளுக்குமுன் அயோத்தியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்தவர்கள்மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்படாத நிலையில், அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களே, இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டுவோம் என்று புறப்படு கிறார்கள் - தேர்தலில் இந்த முழக்கத்தை முன்னெடுக்கிறார்கள் என்றால், இந்தியாவின் நீதி, நிருவாக முறைகளுக்கு விடுக்கப் பட்ட சவால் என்றே இம் மாநாடு கருதுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளி களுக்கு உரிய தண்டனை அளிக்க தேவையான நட வடிக்கைகள் அனைத்தை யும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசையும், நீதி, நிருவாகத் துறைகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிதல்: சுப்ரமணியம் பி.காம்., கோவை புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்

தீர்மானம் 2 (இ):

ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் வன்முறையைத் தூண்டும் பயிற்சியாதலால் அவற்றை சட்ட ரீதியாகத் தடுக்கவேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளை கேட்டுக் கொள் கிறது.

முன்மொழிதல்: ம.திராவிட எழில் தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர்

தீர்மானம் 3:

சங்கராச்சாரியார்கள்மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்துக!

காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந் திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டு கள் ஓடியும், அவர்கள்மீதான வழக்கு விசாரணை தாமதப் படுத்தப்பட்டு வருகிறது. சாட்சிகள் கலைக்கப்படு கிறார்கள் - அச்சுறுத்தப் படுகிறார்கள் என்ற தகவல் களும் வெளியாகி வருகின்றன. தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்புக்கு ஒப்பாகும் ஆகையால், இந்த வழக்கினை விரைந்து விசாரித்து உரிய நீதியை வழங்குமாறு புதுவை அரசினை யும், நீதிமன்றத்தையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிதல்: க. மாரிமுத்து சேலம் சட்ட கல்லூரி மாணவரணி செயலாளர்

தீர்மானம் 4:

பா.ஜ.க.வுக்குத் துணை போகும் ம.தி.மு.க.வுக்குக் கண்டனம்

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி வந்தாலும் பரவாயில்லை என்று ம.தி. மு.க. பொதுச்செயலாளர் கூறியுள்ளது - திராவிட இயக்க உணர்வுக்கும், கொள்கைக்கும் முரணா னது மட்டுமல்ல; நாட்டின் மதச் சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைத்து மதக்கலவரங்கள் நடைபெறு வதற்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

மறுமலர்ச்சி தி.மு.க. என்ற பெயர் சூட்டிக் கொண்டு, பெரியார், அண்ணா படங்களையும் முத்திரையாகப் பயன்படுத்திக் கொண்டு மதவாதத்துக்கு நடைபாவாடை விரிப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது.

முன்மொழிதல்: சு. ஈஸ்வரன் கோபி மாவட்ட மாணவரணி தலைவர்

தீர்மானம் 5:

அ.தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தை அடையாளம் காண்பீர்!

ஈழத்தில் போரை நிறுத்தச் சொல்வது விடுதலைப்புலிகளைப் பாதுகாப்பதற்கே என்று கருத்துத் தெரிவித்தும், இலங்கை இராணுவத்தினர்க்கு ஈழத் தமிழர்களைக் கொல்லும் நோக்கம் கிடையாது என்றும், போர் என்று வரும் போது பொதுமக்கள் பலியாவது சகஜம் என்றும் அறிக்கைகளை வெளியிட்டு, ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து துரோகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா, திடீர் என்று ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதற்காக உண்ணா விரதம் இருக்கப் போவதாக (மார்ச் 9 அன்று) அறிவித்திருப்பது அசல் சந்தர்ப்பவாதமும், நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டு மேற்கொண்ட தந்திரமுமாகும் என்பதை இம்மாநாடு அம்பலப்படுத்துகிறது. அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தமும் இதில் அடங்கி யிருக்கிறது என்பதை தமிழக வாக்காளர்கள் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு தமிழர்களைக் கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிதல்: ஆ. மனோகரன் கோவை மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர்

தீர்மானம் 6:

கல்வியில், மதச்சார்பின்மை, சமூகநீதி பாடங்கள் தேவை

பாடத் திட்டங்களில் மதச் சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை, சமூக நீதி ஆகியவற்றிற்கு முக்கி யத்துவம் கொடுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிதல்: ரூ.சா. பிரேம்குமார் (மா.மா.து.அ) திருச்சிக் கல்லூரி

தீர்மானம் 7:

சென்னையில்
ஜாதி ஒழிப்பு மாநாடு


அண்மையில் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஜாதி உணர்வு காரணமாக எழுந்த வன்முறை பெரிதும் வருத்தத்திற்குரியதாகும். பாடத் திட்டங்களில் மாணவர்கள் மத்தியில் முற்போக்குச் சிந்தனைகளை வளர்க்கும் பாடங்கள், கருத்துகள் கண்டிப்பாக இடம்பெறச் செய்யவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சென்னையில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் விரைவில், ஜாதி ஒழிப்பு மாநாடு ஒன்றை திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

முன்மொழிதல்: கி. செந்தளராசன் தஞ்சை ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்

தீர்மானம் 8:

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுக!


மதவாதத்தைப் புகுத்தி தமிழர்களின் நீண்ட நாள் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதில் மேலும் காலதாமதம் செய்யாமல் ஏற்கெனவே தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை விரைந்து முடிக்க ஆவன செய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிதல்: எஸ். கருப்பையன் அரியலூர் மாவட்ட மாணவரணி பொறுப்பாளர்

தீர்மானம் 9:

சென்னை - உயர்நீதிமன்றத்தின் கூடுதல் மொழியாகத் தமிழ் இடம்பெற ஒப்புதல் வழங்குக!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழைக் கூடுதல் மொழியாகக் கொண்டு வரும் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தந்து ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அரசையும், உச்சநீதி மன்றத்தையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

முன்மொழிதல்: தி. பன்னீர்செல்வம் மன்னர் சரபோஜ் அரசு கல்லூரி மாணவரணி தலைவர்

தீர்மானம் 10:

வழக்கறிஞர்கள் - காவல்துறை மோதல்: சுமூகத் தீர்வு தேவை!

வழக்கறிஞர்கள் - காவல்துறையினர்களுக்கிடையே மோதல் என்பது இந்த இரு தரப்பினரின் பிரச்சினை மட்டுமல்ல; சமூகத்தையே பாதிக்கச் செய்யும் பிரச்சினை என்பதால், இருதரப் பினரும் ஒரு சுமூகச் சூழலை உருவாக்க ஒத்துழைக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

-------------------நன்றி:-"விடுதலை" 8-3-2009

4 comments:

Unknown said...

//ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் வன்முறையைத் தூண்டும் பயிற்சியாதலால் அவற்றை சட்ட ரீதியாகத் தடுக்கவேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளை கேட்டுக் கொள்கிறது.//

4 முறை தடை செய்யப்பட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்று கேள்விப் பட்டுள்ளேன். அது சம்பந்தப்பட்ட பதிவு இருந்தா ஒரு பதிவு போடுங்க.

Suresh Kumar said...

இன்னும் ஒரு தீர்மானம் போடலாமே தமிழினத்தை அழிக்கும் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு தோள் கொடுக்கும் பெரியார் வழி வந்த தலைவர் கீ. வீரமணி அவர்களை கண்டிக்கிறேன் என்று .

முத்துகுமரன் said...

மதிமுக விற்கு கண்டணம்!! இந்திய அரசிற்கு கனிவான வேண்டுகோள்! காங்கிரஸ் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை!! பலே பலே! பிரமாதம். திமுக வை விஞ்சுகிறது திக. காங்கிரஸிற்கு கண்டனம் செய்தால் மேனி வலித்துவிடுமோ??. துரோகிகளே பெரியாரை பயன்படுத்தும் போது மதிமுக பயன்படுத்துவதால் எந்த தவறும் இல்லை. உண்மையில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை மத்தியில், அடக்குமுறையிலும் அதிக வித்தியாசமில்லை அதிமுகவிற்கும் திமுகவிற்கும்.

தாளச்சத்தத்தை மிஞ்ச உங்களை விட வேறு யாருமல்ல

Thamizhan said...

உணர்வின் உச்ச கட்டத்தில் தமிழர்கள் உள்ளனர்.சகோதரர்களைப் பிரித்து வைத்துப் புது டில்லி விளையாடுகிறது.

ம.தி.மு.க.வும்,
பா.ம.க.வும் அம்மாவின் ஊஞ்சலில் ஆடாமல்,
கலைஞரைக் குழிதோண்டி விட்டுத் தேர்தல் இல்லாமலேயே ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற சூழ்ச்சி வலையில் விழாமல் இருந்திருந்தால்

ஆம்!உண்மையாகவே நாம் கலைஞரைக் குறை கூறலாம்.ஏன்,இன்னும் காங்கிரசுடன் கொஞ்சுகிறீர்கள் என்று கேட்கலாம்.

ஈழத் தமிழர் போராட்டம் நாட்கமாகவும்,கலைஞரைக் கவிழ்ப்பதையேக் குறிக்கோளாகவும் ம.தி.மு.க.வும், பா.ம.க வும்
கொண்டுள்ளதே இன்றையக் காங்கிரசுக்கும்,அமமையாருக்கும்
பகடைகளாகப் போய் விட்டது.

புரிந்து கொண்டால் வேதனைதான் மிஞ்சுகிறது.