இலக்கிய மேதை ஜீவா நாரண.துரைக்கண்ணன்
முகம் மாமணி
29.5.2014 அன்று சென்னை பெரியார் திடலில்
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகம்
ஆசிரியர் மாமணி ஆற்றிய உரைத் தொகுப்பு
தமிழர் தலைவர் அவர்களே! கவிஞர் அவர்களே! அவையோரே வணக்கம்.
நான் உங்கள் வீட்டுப்பிள்ளை!
சென்னை - இராயபுரம் குப்பைமேட்டில் களிமண்
உருண்டையாக கிடந்த என்னை, மாணிக்கக்கல்லாக மாற்றிய பெருமை தந்தை
பெரியாரின் விடுதலை ஏட்டுக்குத்தான் உண்டு!
அறுபது ஆண்டுகளுக்கு முன் சென்னை மாவட்ட
திராவிடர் கழகத் தளபதிகளில் ஒருவராக இருந்த தி.வே. சுந்தரமூர்த்தி அவர்கள்,
சென்னை சிந்தாதிரிப்பேட்டை யிலிருந்த விடுதலை அச்சகத்தில் தந்தை
பெரியாரிடமும், குத்தூசி குருசாமியிடமும் என்னை அறிமுகப்படுத்தி
அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாகப் பணியில் சேர்த்து விட்டனர். அன்றுமுதல்
நாள் பெரியார் தொண்டனாகத் தடம் மாறாமல் இருந்து வருகிறேன்.
தோழர்களே! 32 ஆண்டுகளுக்கு முன் முகம்
இதழைத் தொடங்கினோம். முகம் அட்டைப்படத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
படமும், கடைசி நான்கு பக்கங்களில் வினா-விடைகளும் வெளியிட்டோம்.
கலைவாணரை நினைவு கூரும் வகையில் அந்தப் பதில்களுக்கு கிந்தனார் பதில்கள் என்று தலைப்பிட்டி ருந்தோம்.
அந்த இதழை நாரண.துரைக்கண்ணருக்கு அனுப்பினோம். மூன்றாம் நாளே ஒர் அஞ்சல் அட்டை பச்சை மையில் எழுதப்பட்டு வந்தது.
அதில் முகம் இதழ் வந்தது, அருமையாக
இருக்கிறது. கிந்தனார் பதில்கள், பம்பாயிலிருந்து வெளிவரும் மதர் இந்தியா
ஆங்கிலப் பத்திரிகையில் பாபுராவ் பட்டேல் என்பவர் எழுதும் பதில்கள் போல்
இருக்கின்றன! என்று எழுதப்பட்டிருந்தது.
அதை எழுதிய அய்யா நாரண.துரைக்கண்ணனைச் சந்தித்து நன்றி கூற இரண்டு நாள் கழித்துச்சென்றேன்.
அவரிடம் அய்யா, உங்கள் வரலாற்றை யாராவது எழுதியிருக்கிறார்களா? என்று கேட்டேன்.
சிறிய அளவில் வ.ரா.வின் தம்பி என்று ஒருவர் எழுதியிருக்கிறார் என்றார்.
நீங்கள் விரும்பினால் முகம் இதழில் தொடர்ந்து எழுதலாமே... என்றேன்.
என் கைகளில் நடுக்கம் வந்து விட்டது.
எழுத முடியாதே
நீங்கள் விரும்பினால், வாரத்தில் ஒரு நாள்
செவ்வாய்க் கிழமையன்று மாலை 5.30 மணிக்கு வந்து, நீங்கள் சொல்வதை எழுதி
வெளியிடுகிறேன் என்றேன்.
அவருடைய இசைவின் பேரில் மூன்றாண்டுகாலம் அவர் சொல்லியவாறு எழுதி முகத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம்.
அதன் பிறகே சிலர் அவரைப்பற்றி நூலாகக் கொண்டு வந்து விட்டனர்!
அவர் சொல்லிய சில உண்மைகளைச் சொல்கிறேன் .
துரை எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவர்
தந்தை இறந்து விட்டார். பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேட
ஆரம்பித்தார். அதே நேரத்தில் திருவல்லிக்கேணி, கிருஷ் ணாம்பேட்டை,
மயிலாப்பூர் பகுதிகளில் வாழ்ந்த அறிஞர் களை அணுகி, அவர்களிடம் தமிழ்,
ஆங்கில இலக்கணம், தமிழ் - ஆங்கில இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.
கிருஷ்ணாம்பேட்டையிலிருந்த ஓர்
அச்சகத்தில் பிழை திருத்துபவராகச் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது
தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் நூல் ஒன்று அச்சாகிக் கொண்டிருந்தது.
உ.வே.சா. நூலில் தவறைக் கண்டுபிடித்த நாரண.துரைக்கண்ணன்
இயந்திரத்தில் அச்சாகிக்கொண்டிருந்ததில்
ஒரு பாடல் வரி, தவறாக இருந்ததைக் கண்ட துரை இயந்திரத்தை நிறுத்தி
தவறைத்திருத்தி அச்சாக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது உ.வே.சா. வின் உதவியாளர் வந்தார். அவரிடம் செய்தியைச் சொன்னதும் அவர் துரையின் சமயோசித அறிவைப்பாராட்டினார்.
அப்போது அங்கே வந்த உ.வே.சா விடம் தகவல் சொன்னதும் அவர் துரையைப் பாராட்டினார்.
உனக்கு என்ன வேண்டும் கேள். அய்யர் உதவி செய்வார் என்றார் உதவியாளர்,
சாமி! எனக்கு தமிழ் இலக்கியங்களைப் பாடம் நடத்த வேண்டும் என்றார் துரை.
பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார் உ.வே.சா.
சூத்திரனுக்குச் சொல்லிக்கொடுப்பாரா உ.வே.சா?
பல நாட்களாகியும் அவரிடமிருந்து
எந்தத்தகவலும் வராததால் துரை. உ.வே.சா வின் உதவியாளரிடம் என்ன சாமி
சொன்னார் அய்யர்? என்று கேட்ட போது அவர் உ.வே.சா.விடம் கொண்ட கோபத்தைத்
கொட்டித் தீர்த்தார். அவர் சூத்திரனிடம் - மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம்
படிக்கலாம் ஆனால் இவரோ அபிராமணனுக்கு சொல்லித் தரமாட்டாராம்! என்ன
நியாயம்டா இது?
துரைக்கு முதல் அடி விழுந்தது, இதயத்தில்
அந்த அடி அவரை பெரியாரிடம் நெருக்கியது. பெரியார் அப்போது ஜஸ்டிஸ்
கட்சிக்காரர். கட்சிப்பத்திரிகை திராவிடன் அதில் உதவி ஆசிரியராகச்
சேர்ந்தார் துரை!
பரலி சு.நெல்லையப்பர், இவர் பாரதியார்,
வ.ரா., வ.உ.சி., திரு.வி.க., இராஜாஜி போன்றோரின் நண்பர். லேகோபகாரி என்ற
இலக்கியப் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர்.
அவர், துரையின் இலக்கிய ஆர்வத்தை உணர்ந்து
தன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்த்துக் கொண்டார்! அந்தப்
பத்திரிகை சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வெளிவந்தது. அந்த அலுவலகத்துக்கு
வரும் எல்லாத் தலைவர்களும் துரைக்கு அறிமுகமானவர்கள்! துரையின் எழுத்து
எல்லாரையும் கவர்ந்தது!
காந்தியடிகள் தீண்டாதார் பிரச்சினையைப்
பற்றிப் பேசுவதற்கு முன்பே 1927 ஆம் ஆண்டிலேயே தீண்டாதார் யார்? என்ற
நாடகம் எழுதினார். அதைச் சுயமரியாதை இயக்கத்தினர் நாடெங்கும் நடத்தி
விழிப்புணர்வை ஏற்படுத்தினர்!
ராஜாஜி ஏன் பெண் கொடுக்கவில்லை?
துரை, 1932 ஆம் ஆண்டே இராஜாஜியின்
வரலாற்றை எழுதினார். காரணம், மது விலக்குப் பிரச்சாரத்தை அவர் நடத்தி
வந்தார். மேலும் சேலம் நகராட்சித் தலைவராக அவர் இருந்தபோது துணைத்தலைவராக
ஆதிநாராயண செட்டி என்பவர் இருந்தார். இருவரும் முற்போக்குச் சிந்தனை
யாளர்களாக இருந்ததால், ஆதியின் மூத்த மகனுக்கு இராஜாஜியின் மூத்த மகளைத்
திருமணம் செய்ய இருந்தனர்.
இதை அறிந்த அக்ரகாரத்தினர் பெரும்
எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திருமணப்பேச்சு நின்று போனது. ஆனால்
பிற்காலத்தில் காந்தியின் மகனுக்குத் தன் இன்னொரு மகளைத் திருமணம்
செய்தபோது பார்ப்பனர்கள் எதிர்க்கவில்லை. அது மகாத்மாவின் மகன் என்பதால்!
அந்த வரலாற்றை எழுதியபோது இராஜாஜி எந்தப்
பதவியிலும் இல்லை! துரையைப் பாராட்டிவிட்டு அந்தத் திருமண விவகாரத்தை
மட்டும் நீக்கிவிடுமாறு கேட்டுக் கொண்டார்!
பாரதி விடுதலைக் கழகம்
பாரதி இறந்த பிறகு அவருடைய பாடல்களுக்குச்
சிலர் உரிமை கொண்டாடினர். டி.கே.சண்முகம் பில்ஹணன் என்ற படத்தில்
பாரதியின் ஒரு பாடலைப் பயன்படுத்திக் கொண்டார். அதைப் பார்த்த
ஏவி.எம்.செட்டியார், சண்முகத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதை
எடுத்துக்கொண்டு வந்து துரையிடம் முறையிட்டார் சண்முகம்.
துரை, அந்தக் காலத்தில் எல்லாராலும்
மதிக்கக்கூடிய மாமனிதராக இருந்தார்! பாரதியின் பாடல்கள் அப்போது மூவரிடம்
சிறைபட்டிருந்தது. அதை விடுவிக்க துரை, பாரதி விடுதலைக் கழகம் என்ற
அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் அப்போதைய தமிழக முதல்வர் ஓமந்தூராரிடம்
சென்று முறையிட்டார்!.
இதிலுள்ள சட்டப்பிரச்சினை தீர, நெல்லை
மாவட்டம் கடையநல்லூரிலுள்ள பாரதியின் மனைவி செல்லம்மாளிடம் சென்று தமிழக
அரசு பாரதி பாடல்களை நாட்டுடைமை ஆக்க, தான் சம்மதிப்பதாக ஒரு கடிதம்
எழுதித்தருமாறு வாங்கி வர, துரை தலைமையில் ஒரு குழு அனுப்பப்பட்டது.
அந்தக்குழுவின் மற்ற உறுப்பினர்கள்
டி.கே.சண்முகம், வல்லிக்கண்ணன், திரிலோக சீத்தாராம் என அய்வர் குழு ஒன்று
கடிதம் பெற்று வந்து பாரதியின் பாடல்களுக்கு விடுதலை வாங்கித்தந்தார்
துரை!.
எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு
தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாகத்
திணிக்கப்பட்டபோது, தந்தை பெரியார், மறைமலை அடிகள் தலைமையில் பெரும்
போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போரட்டங் களிலெல்லாம் துணை நின்றவர் துரை.
மேலும் 1948 ஆம் ஆண்டு சென்னை அரண்
மனைக்காரன் தெருவிலுள்ள செயின்ட்மேரீஸ் மண்டபத்தில் மறைமலை அடிகள்
தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவராக இருந்த திரு.வி.க.
கடைசி நேரத்தில் விலகிக்கொண்டதால் அந்தப் பொறுப்பை ஏற்று மாநாட்டைத்
திறம்பட நடத்தியவர் துரை. அந்த மாநாட்டில் நான் (மாமணி) இளம்
பார்வையாளனாகக் கலந்து கொண் டதும் குறிப்பிடத்தக்கது!
பிரசண்ட விகடன் ஆசிரியர் துரை!
1931 ஆம் ஆண்டில் ஆனந்த போதினி ஏட்டின்
ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டு அதே நிறுவனம்
பிரசண்டவிகடன் என்னும் பெயரில் ஆனந்த விகடன் ஏட்டிற்கு போட்டியாகத்
தொடங்கப்பட்டது.
அந்த இரண்டு ஏடுகளுக்கும் 32 ஆண்டுகள்
(1964 வரை) ஆசிரியராகப் பொறுப்பேற்று அவாள் ஏடுகளுக்கெல்லாம் ஒரு சவாலாக
நடத்தினார். அவாள் ஏடுகளில் கல்கி, ஆனந்த விகடன் ஏடுகளில் அவாள்
எழுத்தாளர்களுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டன ஆனால், எழுத்து வாய்ப்பு
மறுக்கப்பட்ட எழுத்தாளர்களையெல்லாம் பிரசண்டவிகடனில் எழுத வாய்ப்பு
அளித்தவர் துரை.
அவர் உருவாக்கிய எழுத்தாளர்களில் பலர்
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள், அவர்களே கூட அவரை மறந்துவிட்டு 1932
முதல் 6 ஆண்டுகள் மட்டுமே வெளிவந்த மணிக்கொடி பத்திரிகை மாபெரும் சாதனை
படைத்தது என்று பேசினர். சி.எல்.எஸ். அமைப்பு நடத்திய கருத்தரங்கில், நான்
(மாமணி) மட்டுமே எதிர்த்துக் குரல் கொடுத்து விளக்கினேன். தி.க.சி விரைந்து
வந்து என்னை அமைதிப்படுத்தினார்!
உயிரோவியம்: துரை அவர்கள் 78 நூல்கள்
எழுதியுள்ளார். அவை: கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வரலாறுகள்,
மொழி பெயர்ப்புகள் ஆகியன அடங்கும்.
முதலில் நாவலாக வெளிவந்த உயிரோவியம் ஒரு வகையில் அவருடைய தன் வரலாறே என்போரும் உண்டு! அது நாடகமாகவும் வந்து டி.கே.எஸ்.சகோதரர்களால் நடிக்கப்பட்டது.
முதலில் நாவலாக வெளிவந்த உயிரோவியம் ஒரு வகையில் அவருடைய தன் வரலாறே என்போரும் உண்டு! அது நாடகமாகவும் வந்து டி.கே.எஸ்.சகோதரர்களால் நடிக்கப்பட்டது.
பிரஞ்சு அரசாங்கம் ஆண்டு தோறும் நடத்தும்
உலக நாடகப் போட்டியில் உயிரோவியம் சிறந்த நாடகமாகத் தேர்வும், பரிசும்
பெற்றது, தமிழுக்குக் கிடைத்த பெருமை யாகும்.
தந்தை பெரியாருக்கு வரவேற்பு
1932 ஆம் ஆண்டு தந்தை பெரியார் சோவியத்
ரஷ்யாவுக்குச் சென்று திரும்பியபோது, துரை அவர்கள் முன்னின்று பெரியார்
குடி அரசு பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் பத்திரிகையாளர்கள் சார்பாக
மிகப்பெரிய வரவேற்பு அளித்தார்!
துரை, இலக்கியவாதி மட்டுமல்ல, கலைஞர்களுக்கும் நண்பரே!
துரை அவர்கள் திருவல்லிக்கேணியிலுள்ள
நடராஜா கல்விக் கழகத்தின் தலைவராக இருந்தபோது தான் நகைச்சுவை நடிகராக
இருந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கலைவாணர் என்னும் பட்டத்தினை வழங்கிப்
பெருமைப் படுத்தினார். அதே போல் பம்மல் சம்பந்தனாருக்கு நாடகத்தந்தை
என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்!
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எழுதித்தந்த பாடல்!
இந்தியப் பிரதம மந்திரி தமிழ்நாட்டுக்கு வந்த சமயம், சென்னை இராஜாஜி மண்டபத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வரவேற்பில் எம்.எஸ். அவர்களின்
பாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு குழந்தைகள்
நடனமாடும்போது அந்தப்பாட்டு பாடுவதாக இருக்க வேண்டும்.
அத்தகைய பாடலை எழுத எவரும் முன்வராதபோது
துரை அவர்கள் தாம் இரண்டு இசைப் பாடல்களையும் எழுதிக் கொடுத்தார்.
அந்தப்பாடலும், நடனமும் பலராலும் பாராட்டப்பட்டன. அந்தப்பாடலை எழுதியதற்காக
துரை எந்த அன்பளிப்பையும் பெற மறுத்துவிட்டார்!
இசையரசி அவர்கள் தன் உருவப்படத்தின் பின்புறம் நன்றி தெரிவித்து எழுதி கையொப்பமிட்டு அனுப்பி வைத்தார் துரைக்கு.
துரை அந்தப்படத்தை, தன் வீட்டில் தான் எழுதும் நாற்காலியின் பின்புறம் சுவரில் மாட்டியிருந்தார்!
இசையரசி அவர்கள் உலக அய்.நா அவையில் பாடிய
போது அவர் படத்தை முகம் முகப்போவியமாக வெளி யிட்டோம். அந்த படம் தான்
துரைக்கு இசையரசி அனுப்பியது!
தமிழகத்தின் எல்லா முதலைமைச்சர்களும் துரையிடம் அன்புடையவர்களே!
இராஜாஜி, ஓமந்தூரார், பக்தவத்சலம்,
காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் என எல்லாரின் நன்மதிப்பையும் பெற்ற
கலை, இலக்கியவாதி துரை ஒருவரே!
காமராஜர் பார்த்த நாடகம்!
பெரியாரின் பெருந் தொண்டர் எம்.ஆர்.இராதா!
அவர் நடிகவேள்! தன் கருத்தைச் சொல்ல அஞ்சாதவர். அவருடைய நாடகங்களுக்குத்
தலைமை வகிக்காதவர்களே இல்லை எனலாம். காமராஜர் மட்டும் தான்
ஒதுங்கியிருந்தார். அவரையும் துரையின் மூலம் தன் நாடகத்துக்கு அழைத்து
வந்து இருவரையும் பெருமைப் படுத்தினார் பெரியாரின் பெருந்தொண்டர் நடிகவேள்!
8 comments:
சாமி சாகுமா?
இன்றைய ஆன்மிகம்?
சாமி சாகுமா?
குஜராத் மாநிலம் துவார கையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கொடி மரம் (துவஜஸ்தம்பம்) இல்லை. இந்தக் கோயில் கருவறை யில் கண்ணபிரான கரிய நிறத்துடன், நான்கு கரங்க ளோடு, வெள்ளி மஞ்சத்தின் மீது நின்ற கோலத்தில் மேற்குமுகமாக அருள் புரிகிறார். இங்கு கிருஷ்னை கருவறைக்குள் சென்று துளசி இலைகளை வைத்து வழி படலாமாம்.
சரி, தலைக்கொரு சீயக் காய் தாடிக்கொரு சீயக் காயா? மற்ற இந்துக் கோயில் களில் பக்தர்கள் கருவறைக் குள் சென்று வழிபடத் தடை ஏன்? அப்படி என்றால் தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துவிடும் என்பானேன்?
Read more: http://viduthalai.in/e-paper/84079.html#ixzz37aiAVIOn
அழித்தாக வேண்டும்
மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.
(குடிஅரசு, 18.12.1927)
Read more: http://viduthalai.in/page-2/84081.html#ixzz37aiUx6nF
காமராசருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எது? எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து
சென்னை, ஜூன் 15_ அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப் படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடு தலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்து கிறது.
பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வரு கிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி வரு கிறது. கல்வியே சிறந்த செல்வம், கல்வியே மீட் சிக்கு வழி என்னும் உண்மையை அறிந்த நிலையிலும், எளிய மக்கள் எளிதில் பெற முடியாத அளவுக்கு கல்வியை மிகப் பெரும் விலைகொண்ட பொருளாக மாற்றி வரு வது பெரும் கவலையளிப் பதாக உள்ளது.
மழலை யர் வகுப்புகளிலிருந்தே பல்லாயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் கட் டணம் செலுத்தி கல்வி பெற வேண்டிய அவலம் பெருகியுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் புதிய தலைமுறையின ரிடையே மிகப்பெரும் முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மழலை யர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அளிக்க முடியாது என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிப் படையாக சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தமிழகத்தின் எதிர்காலத் தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
எனவே, தமிழக அரசு கல்வித் தளத்தில் ஏற் பட்டுள்ள தனியார்மயம் மற்றும் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். தனி யார் கல்வி நிறுவனங் களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரசே ஊதியம் வழங்கவேண் டும்.
கல்விக் கட்டணத் தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய சீர் திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் ஏழை எளிய மக் களும் எளிதில் கல்வி பெற வாய்ப்புகள் உருவா கும். அத்துடன், தமிழக அரசின் இலவசத் திட்டங் கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டு கல் வியை முழுமையாக கட் டணமில்லாமல் வழங்கு வதற்கு முன்வரவேண்டும்.
இதுவே பெருந்தலைவர் காமராஜருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை யாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
- இவ்வாறு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தெரிவித்துள்ளார்.
Read more: http://viduthalai.in/page-5/84078.html#ixzz37aoyjPEX
நுழையாதே!
திருநெல்வேலி மாவட் டம் களக்காடுப் பகுதியில் சுப்பிரமணியபுரம் என்ற ஊர் - அங்கொரு கரும் பலகையில்,
பொது அறிவிப்பு!
இந்துக்கள் தவிர பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் மற்றும் மத மாற்றம் செய்யவோ இந்த ஊரில் அனுமதி இல்லை!
- இந்து சமுதாயம்
என்று எழுதி வைக்கப்பட் டுள்ளது.
சட்டப்படி இந்த விளம் பரப்பலகை சரியானது தானா? மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தவுடன் தமிழ் நாட்டில்கூட இப்படியொரு விளம்பரப் பலகையை வைக்கலாம் என்ற துணிவு வந்துவிட்டதா?
தமிழ்நாட்டில் நடை பெறுவதும் ஒரு வகை யான (Soft) இந்துத்துவா ஆட்சிதானே - கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நினைப்பா? (மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தவர் அல்லவா செல்வி ஜெயலலிதா!).
ராமன் கோவிலை இந்தியாவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது? என்று கேள்வி கேட்டவரு மாயிற்றே! அந்தத் தைரியத் தில் இப்படிச் செய்ய ஆரம் பித்துவிட்டார்களா?
தந்தை பெரியார் பிறந்து பக்குவப்படுத்தப் பட்ட மண்ணில், மதமாச் சரிய எரிமலைக் குழம்புகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர் - ஆரம்பத்திலேயே இந்த முளையைக் கிள்ளி எறியா விட்டால், ஆட்சியே கூடக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரிப்பது மனிதநேயப் பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.
மோடி அரசாண்ட குஜராத் மண்ணிலே இப்படித் தான் ஒரு கிராமத்தின் நுழைவு வாயிலில் ஒரு விளம்பரப் பலகை இருந்தது.
நீங்கள் இந்து ராஷ்டி ரத்தில் நுழைகிறீர்கள்! என்பதுதான் அந்தப் பலகை.
இன்னொரு கிராமம்; குஜராத் தலைநகரமான அகமதாபாத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தனவாதா என்பது அதன் பெயர். அங்கு ஒரு தண்ணீர்த் தொட்டி - அதில் எழுதப்பட்டுள்ள திருவாசகங்கள் என்ன தெரியுமா?
காலை 9 மணிமுதல் 10 மணிவரை பிராமணர் மற்றும் உயர்ஜாதி படேல் இனத்தவருக்கு மட்டும்;
10 மணிமுதல் மதியம் 12 மணிவரை பர்வாதா வங்கிரீஸ் மற்றும் கும்பார் 12 மணிமுதல் ஒரு மணி வரை தலித் இனத்தவருக் காம் (ஆகா, எப்படிப்பட்ட மோடி ஆட்சி).
மறுபடியும் களக் காடுக்கு வருவோம் - இந்த ஊரில் படித்தவர்கள் பெரிய அரசுப் பணிகளில் உள்ள வர்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் எங்கே படித்தார்களாம்? கிறித்தவப் பள்ளிகளில்தான்! பாளையங்கோட்டை தூயயோவான் மற்றும் புனித சவேரியார் கல்லூரியில்தான். 40 ஆண்டுகளுக்குமுன் இத்தகைய கரும் பலகையை வைத்தி ருந்தால், இந்தக் கிராமத் தின் நிலை என்ன?
நீ, சூத்திரன் - உனக்கு ஏது, ஏன் படிப்பு? என்றது இந்து மதம். நீயும் படிக்கலாம் என்பதோடு, ஏற்பாடும் செய்தது கிறித்துவம் - தெரிந்து கொள்வீர்!
- மயிலாடன்
Read more: http://viduthalai.in/e-paper/84136.html#ixzz37eK7hOqI
பி.ஜே.பி. ஆட்சியில் வரலாற்றைக் காவிமயமாக்கத் திட்டம்!
சங் பரிவாரைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வுக்குத் தலைவராம்
- கண்டனங்கள் வலுக்கின்றன -.
புதுடில்லி, ஜூலை16- இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் Indian Council of Historical Research (ICHR) தலைவராக எல்லப்ரகதாசுதர்ஷன் ராவ் என்பவர் தற் போதைய மத்திய அரசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் இந்த நிறுவனத்தை காவிமயமாக்கியதை, இந்த நியமனம் நினைவுபடுத்துவதாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஒருவரை ஒரு பணியில் நியமிக்கும்போது, அவர்குறித்த தகவல்களை அறியாமல் இருந்தால் அரசு ஒன்றுமில்லாமல் ஆகிவிடாதா? என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ரொமீலா தாப்பர் எழுதியுள்ள கட்டுரையில் இந்த வினா வைத் தொடுத்துள்ளார்.
மனிதவள வளர்ச்சித்துறைசார்பில் இந்த வாரத்தில் ராவ் நியமனம் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே, இளங்கலையில் நான்காண்டு பட்டப்படிப்பு என்று யுஜிசி, டில்லி பல்கலைக் கழகம் முதலில் கூறிவிட்டு, பின்னர் பின்வாங்கி உள்ளது. ராவ் இணையத்தில் தன்னுடைய பிளாக்கில் (Blog) பல ஆண்டுகளுக்கு முன்பாக, சுற்றுலா மேலாண்மை மற்றும் வரலாற்றுத்துறைத் தலைவராக, ககாதியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியுள்ளார். அவருடைய கருத்துக்கள் அப்படியே தலைவரின் நாட்குறிப்பு (Chairperson’s Diary) என்கிற தலைப்பில் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் வாயிலாக நடத் தப்பட்ட மாதிரிப்பள்ளிகளில் மேற்குலகின் வரலாறுகள் என்னும் ஆய்வில், பூஜ்யசிறீ, மகாமகோபாத்யாயா டாக்டர் கே.சிவானந்த மூர்த்திஜி என்பவருக்கு எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதாக இந்த ராவ் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், அவரைப்பற்றிக்கூறுமபோது, தான் எப்போதுமே ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினர் அல்ல என்று கூறுகிறார். டி.என்.ஜா போன்ற வரலாற்றாசிரியர்கள் கூறும் போது, ராவ் சங்பரிவாரங்களின் கருத்துக்களைக் கொண்டு, இந்திய அறிஞர்கள் குழுவிலும் இருப்பது மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் இருப்பதும் என்பது ஒன்றோடொன்று இணைய முடியாமல் இருப்பதாக உள்ளது.
வரலாற்றாசிரியர் டி.என்.ஜா,மகாபாரதம் நடைபெற்ற காலத்தைக் குறிப்பிட முடியுமா? என்று ராவிடம் கேள்வி எழுப்புகிறார். மேலும் டி.என்.ஜா கூறும்போது,மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் மட்டும் இந்த கேள்வியைக் கேட்க வில்லை. நமக்கு முன்னோரான தத்துவார்த்தவாதியான மாதவாச்சார்யாவும் 13ஆம் நூற்றாண்டில் கேள்வியை எழுப்பி உள்ளார் என்று கூறுகிறார்.
பழமையைத் தூக்கிப் பிடிக்கும் பணியாக 2007ஆம் ஆண்டில் ராவின் பிளாக்கில் இந்திய ஜாதி அமைப்பு முறை குறித்து எழுதியுள்ளார். பேராசிரியர் டி.என்.ஜா நகைச்சுவையாக, கடந்த காலத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார். ஆனால், அந்த அமைப்பு முறை இருந் திருந்தால், மோடி பிரதமராக வந்திருக்கவே முடியாது என்று கூறுகிறார். பேராசிரியர் ராவ் சமூகத்தின் மோச மானதாக ஜாதி முறையைப்பார்க்காமல் உள்ளார். ஜாதீயமுறையிலான அதே கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றுவது என்பது முசுலீம்கள் நுழைவு மற்றும் அதைத்தொடர்ந்து அவர்களின் ஆட்சி ஆகிய வற்றைக்கொண்டு வந்ததுபோல் மோசமான நிலையில்தான் கொண்டு சேர்க்கும்.
இதுபோன்ற அனைத்துப் பணி நியமனங்களும் வேறு பாடின்றி அரசியலில் இருப்பது இயற்கைதான். 1998 ஆம் ஆண்டில் வரலாற்றுப்பேராசிரியர் டி.கே.வெங்கடசுப்பிர மணியன் இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவின் உறுப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கூறும்போது, பேராசியர் ராவ் வரலாறு குறித்து கருத்துக்கூறுவதற்கு சுதந்திரம் உள்ளவர்.
அவருடைய ஜாதி முறை குறித்த கருத்துக்கள் குறித்த பிரச்சினை உண்மையைக் கூற வேண்டுமானால், எழுத்துமூலம் தேர்வின்போது அளிக்கப் படவில்லை. ராவ் போன்றவர்களை இந்திய வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவராக நியமிப்பது என்பது தேசிய அளவில் அறிவியல் ரீதியாக வரலாற்றை எழுதும்போது தவறான வழிகாட்டுதலையே அளித்துவிடும் என்று டி.கே.வெங்கடசுப்பிரமணியன் கூறுகிறார்.
Read more: http://viduthalai.in/e-paper/84137.html#ixzz37eKGTkaz
இன்றைய ஆன்மீகம்? .......
திருநின்றவூரில் ஒரு கோவில் - பெயர் இருத யாலீஸ்வரர். இக்கோவி லின் கர்ப்பக்கிரகத்தின் மேல் இருதய வடிவில் விதானம் நான்கு பிரிவு களுடன் அமைந்துள்ளது. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி மரகதாம்பாள் அருள்பாலிக்கிறாளாம். இக்கோவிலில் நெய்தீபம் ஏற்றி அர்ச்சித்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமடையுமாம்.
ஓகோ! டாக்டர்களில் ஈ.என்.டி., நியூராலஜி என்று நிபுணர்கள் இருப் பதுபோல, கடவுள்களி லும் தனித்தனி நிபுணர் களோ! அந்த வகையில் இவர் என்ன கார்டியாலஜி ஸ்பெஷலிஸ்டோ! இந்தக் கோவில் இருக்கும்போது எதற்கு தேவையில்லா மல் நாட்டில் இந்த மருத்துவமனைகள்?
Read more: http://viduthalai.in/e-paper/84140.html#ixzz37eKQD5x3
தமிழ்நாட்டிலும் நரபலியா?
சேலம், ஜூலை 16_ சேலம் அருகே புதையல் எடுப்ப தற்காக பள்ளிக் குழந்தை களை கடத்தி நரபலி கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக கிராம மக்கள் மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் அலுவலகத் திற்குத் திரண்டு வந்து புகார் அளித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெரிய கவுண்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் என 50-_க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்து ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனு வில் கூறியிருப்பதாவது:-
பெரிய கவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-_ மாணவியர் மந் தைமேடு என்ற இடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். எங்கள் பகு தியில் புதையல் எடுப்பதா கக் கூறி வெளியூர்களைச் சேர்ந்த சில நபர்கள் வந்து தங்கி உள்ளனர். அங்குள்ள ஒருவரின் வீட்டில் தங்கி இதற்காக யாகம் நடத்தி வருவதாகத் தெரிகிறது.
யாகம் முடிந்தவுடன் நரபலி கொடுக்கவும் திட்ட மிட்டிருப்பதாகக் கூறப்படு கிறது. இதற்காக எங்கள் பகுதியில் இருந்து பள்ளிக் கூடத்திற்கு சென்ற தாம ரைச்செல்வி, மகேஷ், சந் தோஷ், சக்திவேல் ஆகிய மாணவ_ மாணவிகளிடம் நைசாக பேசியுள்ளனர். அப் போது சாக்லேட், பிஸ்கட் தருகிறோம், எங்களுடன் வாருங்கள் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனால் பயந்து போன சிறு வர்,-சிறுமியர் பள்ளிக்கூடத் திற்கு வேகமாக சென்ற போது அவர்களை துரத் திச் சென்று பிடிக்க முயற்சி செய்துள் ளனர்.
எங்கள் பகுதியில் தங்கி யாகம் நடத்துபவர்கள் சில குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களில் அவ்வப்போது சென்று வருகிறார்கள். அந்த நபர் களின் செயல்பாடு பள்ளி செல்லும் குழந்தைகள் மற் றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. எனவே, தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் குழந்தைகளின் உயி ரைக் காப்பாற்றவேண்டும். இவ்வாறு அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்
Read more: http://viduthalai.in/e-paper/84141.html#ixzz37eKiGhef
கர்மா - விதியை நம்பினால்...
கர்மாவை நம்பினவன் கடைத்தேற மாட்டான். விதியை நம்பினவன் மதியை இழப்பான்.
_ (குடிஅரசு, 12.4.1931)
Read more: http://viduthalai.in/page-2/84145.html#ixzz37eL5l3lV
Post a Comment