Search This Blog

22.7.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 14


(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)


பால காண்டம்

பன்னிரெண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி  


இதனால் விளைந்துள்ள தீமைகள் தமிழ் மக்களுக்குப் பல.  இனியேனும் அறிஞர் தவறாதிருக்குமாறே இம்மெய் ஆராய்ச்சி வெளிவருகிறது.  இனி மேற்செல்லுதும்.


திருமணம் முடிந்த மறுநாள் விஸ்வாமித்திரன் விடைபெற்றுக் கொண்டு, இமயமலையை யடைந்தான்.  தசரதன் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டான்.  சனகன் தன் குழந்தைகளுக்குப் பல பொருள்கள் தந்து, வழியனுப்பச் சிறிது தூரம் சென்று திரும்பினான்.  சிறிது தூரம் சென்றவுடன், தசரதனுக்கு முன்னால் விண்ணில் பறவைகள் பேரிரைச்சலிட்டன.  மண்ணில் மிருகங்கள் வலம் சுற்றிப் போயின.  மன்னன் அதுகண்டு திகைத்து நின்று, வசிட்டனிடம் அதன் பலனை வினவினன்.  வசிட்டன் அவனை நோக்கி, பறவைகள் கூச்சலிடுவதால் நமக்கு ஓர் ஆபத்து விளையுமென்றும் அறியலாம் என்று கூறினன்.  அப்போது மிகவும் கடுமையான தோற்றத்துடன் பரசுராமன் அங்கே தோன்றினான்.  முனிவர்கள் எல் லோரும் அவனைக் கண்டு, அவன் முன்னரே அரசரைக் கொன்று சினம் தணிந்தபடியால், இப்போது கேடு செய்யான் என்று பேசிக் கொண்டு அவனை வரவேற்று இன்சொற் கூறினர்.  பரசுராமனும் அவர்கள் பூஜையை ஏற்றுத் தசரதனுடைய மகனான இராமனைப் பார்த்து, இராமா!


நீ வில்லை முறித்த செய்தி கேட்டு, உன் வலிமையில் அய்யங் கொண்டு இங்கே வந்தேன்.  உனக்கு உண்மை யான பலமிருந்தால், நான் கொண்டு வந்திருக்கும் இந்த வில்லை வளைத்து நாணேற்று; நாணேற்றி விட்டா யாயின், நான் உன்னோடு கைச்சண்டை செய்கிறேன் என்று கூறினான்.
அப்போது தசரதன் மிக அஞ்சி, ஆயுதத்தைக் கையிலெடுப்ப தில்லையென்று இந்திரனிடம் வாக் குரைத்துப் பிராமணராயிருந்த நீர் இராமனைக் கொல்லு வீராகில், நாங்களெல்லோரும் இறந்து விடுவோம்; காத்தருள வேண்டும் என்று வேண்டி நின்றனன்.  பரசுராமனோ அச்சொல்லைச் செவிக் கொள்ளாமலே இராமனை நோக்கி மேலும் சிவன் வில், திருமால் வில்களின் வரலாறு கூறி, நான் வைத்திருக்கும் இத்திருமால் வில்லை வளைத்து இந்த அம்பைத்தொடு; உன் வல்லமையை அறிந்து நான் உன்னோடு கைச்சண்டையிடுகிறேன் என்று சொன்னான்.


இராமன் அவனை நோக்கி, உன் தந்தையைக் கார்த்தவீரியார்ச் சுனனென்னும் ஒருவன் கொல்ல, அதற்காக நீ அரசர்களையெல்லாம் கருவறுத்தது நன்று.  தந்தைக்குக் கேடு செய்வோரை வேரோடு அழித்தல் பிள்ளைகளின் கடமையே.  ஆனால், நீ என்னை இப்போது மிகவும் அவமரியாதையாகப் பேசினாய்.  அதனால் என்னுடைய வல்லமையைக் காட்டுகிறேன் பார் என்று அவ்வில்லை வாங்கி வளைத்து, அம்பைத் தொடுத்துக் கோபத்துடன் பின்னரும், இந்த அம்பு உன் உயிரை வாங்கவல்லதா யிருந்தாலும், நீ பிராமணனாகவும் விஸ்வாமித்திரனுக்கு வேண்டியவனாகவும் இருந்ததனாலேயே உன்னை விட்டேன்; ஆனால், இந்த அம்பு வீண் போகாது.  அதனால் நீ நடப்பதற்கு ஏதுவான உன் காலிலுள்ள சக்தியையாவது உன் தவ வலிமையையாவது அடிக்கப் போகிறேன்;
உனக்கு எது சம்மதம்? என்று கேட்டான்.  பரசுராமனோ, திருமால் சம்பந்தமான தன் வலிமையை இழந்து திகைத்துத் தன் காலை விடுத்துத் தவவலிமையை அழிக்கச் சொன்னான்.  இராமனும் அவ்வாறே செய்தான்.  பரசுராமன் மகேந்திர மலையை அடைந்தான்.  தசரதன் தானும் தன் பிள்ளைகளும் பிழைத்தது மறுபிறப்பென்று எண்ணிக்கொண்டு, எல்லோருடனும் அயோத்தியை யடைந்தான். சில நாள் கழிந்த பின் தசரதன் பரதனை அழைத்து, உன் மாமனான யுதாசித்து உன்னை அழைத்துப் போக இங்கே வந்திருக்கிறான் என்று கூறினான்.  அது கேட்ட பரதன் தன்னோடு சத்துருக் கனை அழைத்துக் கேகய தேசத்தை யடைந்தான்.  பின்னர் இராமன் குடிகளுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்து கொண்டு, அவர்களுக்கு மிகவும் வேண்டிய வனாக நடந்து, அவர்களுடைய பிரீதியைத் தேடிக் கொண்டிருந்தான்.  குடிகளும் இராமனிடம் மிகவும் பிரியத்தைப் பூண்டார்கள்.  இவ்வரலாற்றை ஆராய் வோம்.


மேலே கண்ட வரலாற்றில் சனகன் தசரதனுக்குப் பின் வந்து வழியனுப்பிய செய்தியைக் கம்பர் கூறவில்லை.  பின் அரசன் கண்ட சகுனத்தைப் பற்றி வால்மீகி கூறுகிறார்.  அவற்றில் பறவைகள் சத்தமிட்டது கேட்டி னையும், மிருகங்கள் சுற்றினபோது நன்மையையும் தருவனவாம்.  இவ்வுண்மைக்கு மாறாகக் கம்பர் கூறுகிறார்.  அச்செய்யுள் வருமாறு : -


ஏகுமள வையின் வந்தன வலமும் மயிலிடமும்
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான்
நாகமன னிடையுங்குள திடையூறென நடவான்
மாகம் மணி தேரொடு நின்றான் நெறிவந்தான்

இதனால் மயில் வலமும் காகம் முதலிய பறவைகள் இடமும் சென்று தடை செய்தன; அதனால் இடையூறு வருமென தசரதன் உணர்ந்தான் என்பதை அறியலாம்.  ஆகையினாலே வருமிடையூறு வருமென உணர்ந்தான் தசரதன் என்று கூறிய கம்பர் அடுத்த பாட்டாக,

நின்றே நெறியுணர் வானொரு
நினைவா ளணையழையா
நன்றோ பழுதுளதோ நடுவுரை
நீநய மென்னக்
குன்றே புரைதோ ளானெதிர்
புள்ளின்குறி தேர்வான்
இன்றே வருமிடை யூறது
நன்றாய்விடு மென்றான்


இன்றேவருமிடையூறது நன்றாய்விடு மென்றான் என்று கூறியிருக்கிறார்.  தான் கண்ட சகுனமாகிய மயிலின் வலப்போக்கும் காகத்தின் இடப்போக்கும் தடைகளே.  அவை வரும் இடையூற்றை உணர்த்துவன என்று தீர்மானமாக உணர்ந்த தசரதன், புட்குறியாளனை அழைத்துத் தான் செய்த தீர்மானம் சரியா, பிழையா என உணர்ந்து கொள்ளும்படி உள்ளதைக் கூறுமாறு கேட்கின்றனன்.  இதற்கு மறுமொழியாக அப்புட் குறியாளன், இடையூறு வரும்; ஆனால் அது நீங்கி விடும் என்று புகன்றனன்.


இதில் கம்பர் முதற்பாட்டில் கூறியபடி வலமானதும், காகம் இடமானதும் தடையாய் இருக்க, வரும் இடையூறு நீங்கிவிடும் என்பதைப் புட்குறியாளன் எக்குறி கொண்டியம்பினனோ தெரியவில்லை.  ஆத லின், அது நன்றாய் விடும்  என்று கூறுவதற்கு ஆதார மில்லை.  இதனால் வால்மீகி கூறுவதை நன்றாக உணரா மலே கம்பர் கூறியவராவார். பதின்மூன்றாம் அத்தியாயம் ல்மீகியோ,  பறவைகள் விண்ணில் கூச்ச லிட்டன என்று கூறுகிறார்.  அதையே கம்பர், மயில் வலமும், காகம் இடமும் சென்று தடை செய்தன என்று கூறுகிறார்.  இவை இரண்டும் தூய சகுனங்களே என்பது தடை செய்வன என்றதனாலும், இங்கு இடையூறு உளது என்றதனாலும் தெளிவாக அறியலாம்.  ஆதலின் இவற்றின் நீக்கமாக நன்மைக் கறிகுறியான சகுனமொன்றும் கம்பர் கூறாது விடுத்தமை தெளிவாம்.  மேலும் சகுனப் பயனைக் கூறியது வசிட்ட முனிவனென்று வால்மீகி கூற, கம்பரோ புட்குறியாளனை அழைத்து வினாவ, அவன் கூறின னென்று கூறுகிறார்.  பரசுராமன் வந்தவுடனே அவனை முனிவர்கள் வரவேற்றதைக் கூறாது விடுத்ததோடு, அவர்கள் நினைத்தவற்றைத் தசரதன் வாயிலாய் உணர்த்துகிறார் கம்பர்.  மேலும், பரசுராமன் இராமனிடம் வில் வலியைத் தன்வில் வளைத்தலாலே சோதித்துப் பின் அவனோடு கைச்சண்டையிடுவதாகக் கூறுவதைக் கம்பர் கூறாது விடுத்தார்.
கார்த்தவீரியார்ச்சுனனென்ற மன்னன், பரசுராம ருடைய தந்தையைக் கொன்றான்.  அதற்காகப் பரசுராமன் இருபத்தோரு தலைமுறையாக அரசர்களைக் கருவறுத்தான்.  இது மிகவும் தீயதொரு செய்கை.  இத்தீய செய்கையை அறிவும் ஒழுக்கமுமுடையோர் ஒவ்வொரு வரும் வெறுப்பார் என்பது திண்ணம்.  இஃதிவ்வாறாக, இராமன் அச்செயல் தந்தையின் பொருட்டுக் கடமை யாகச் செய்தமையின் அது மிக நன்றென்று உடன் பட்டதாக வால்மீகி கூறுகிறார்.  ஆனால், கம்பரோ அச் செயலில் இராமன் வெறுப்புக் காட்டியதாகவே கூறுகிறார்.  அச் செய்யுள் வருமாறு :-


பூதலத் தரசை யெல்லாம்
பொன்றுவித்தனையென்றாலும்
வேதவித் தாய மேலோன்
மைந்தன் நீ விரதம் பூண்டாய்
ஆதலிற் கொல்லல் ஆகாது
அம்பிது பிழைப்ப தன்றால்
யாதிதற் கிலக்க மாவ
தியம்புதி விரைவி னென்றான்


இதன் கருத்து, நீ கொலைபாதகனாயினும் நான் உன்னைக் கொல்லப் போவதில்லை யென்பது.  பரசுரா மனைக் கொல்லாதிருப்பதற்கு இராமன் கூறியதாகக் கம்பர் கூறும் காரணத்தில், வேத வித்தாய மேலோன் மைந்தன் நீ என்பது பொருந்தாது.  விஸ்வாமித்திரனுக்கு நெருங்கிய உறவினன் பரசுராமன்.  ஆதலின், விஸ்வாமித் திரனுக்காக உன்னைக் கொல்லாது விடுகிறேனென்று இராமன் கூறியதாக வால்மீகி கூறியதே பொருத்த மானதாம்.  ஏனெனில், விஸ்வாமித்திரனுடைய மாண வனாம் இராமன்.
இந்த அம்புக்கு இலக்கமாவதியாது கூறு என்று மட்டும் இராமன் கேட்டதாகவும், அதற்கு மறுமொழியாகப் பரசுராமன், என் தவ வலியைக் கெடு என்று புகன்ற தாகவும் கம்பர் கூறுகிறார்.  இதனால் இராமனுடைய தீய குணம் புலனாகவில்லை.  வால்மீகியே இராமனைத் தீயவனாகக் காட்டுகிறார்.  எப்படியெனில், இராமன் பரசுராமனை நோக்கி, உன் காலை முறித்து உன்னை நொண்டியாக்கவா?  அல்லது உன் தவ வலியைக் கெடுக் கவா?  என்று கேட்டனனாம்.  இதனால் இராமன் எவ் வளவு தீய மனமுடையவன் என்பது புலனாகிறது.  இவனைத் தெய்வம் போல கூறி மயக்குமாறு இவனு டைய தீய செயல்களையெல்லாம் கம்பர் மறைத்தார்.


பரதனுடைய தாய் மாமனான யுதாசித்து, மிதிலை யிலேயே வந்து சேர்ந்தமையை வால்மீகி கூறுகிறார்.  அதைக் கம்பர் கூறுகின்றிலர்.  மேலும், உன் மாமா யுதாசித்து உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறான் என்று பரதனிடம் தசரதன் கூறியதாக வால்மீகி கூற, இவ்விவரத்தைக் கம்பர் கூறாது, உன் பாட்டன் பார்க்க விரும்புகிறான்; அதனால் நீ கேகயம் போ  என்று தசரதன் கூறியதாகக் கூறுகிறார்.  கடைசியாக மட்டும் கம்பர் யுதாசித்தைப் பரதனுக்குத் துணை சென்ற ஒரு தானைத் தலைவனைப் போல மயங்கிக் காட்டுகிறார்.  

அச்செய்யுள் வருமாறு:


உளைவிரி புரவித்தே ருதாசித் தெனும்
வளைமுரல் தானையான் மருங்கு போதப் போய்
இளையவன் தன்னொடு மேழு நாளிடை
நளிர்புனற் கேகய நாடு நண்ணினான்.
இவ்விடத்தில் கம்பர் யுதாசித்தைப் பற்றி விவரமறியாமல் மயங்கியிருக்க வேண்டும்;
அல்லது வால்மீகத்தில் கூறியிருக்கும் விவகாரம் இடைச் செருகலாயிருக்க வேண்டும்.
ஆனால் இடைச் செருகல் என்பதற்குத் தகுந்த ஆதாரமில்லை.  ஆதலின் கம்பர் மேலதே தவறு.

                 ---------------- தொடரும்...." 22-07-2014

9 comments:

Unknown said...

குறிப்பு: சகோ இனி நீங்கள் எழுதும் பொது சாதரணமாக ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் என்று எழுதாமல் அவன் யார் எ(வ)ந்த மதம் என்ன கோத்திரம் என்பன வற்றையும் சேர்த்து எழுதுங்கள்.

அது எப்படியென்று பார்ப்போமா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் வெறும் சர்வக்கர் என்று எழுதாமல் தீவிரவாத ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தொடங்கியவன் சர்வர்க்கர் என்கிற பார்ப்பன பயங்கரவாதி, காந்திஜியை சுட்டுகொன்றவன் கோட்சே மற்றும் அவனது கூட்டாளிகள் இருவரும் பார்பன பயங்கரவாதிகள், அதேபோல் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்த பிரியங்கா சிங் பெண் துறவி பாப்பாத்தி, புரோகிதர் இப்படி நீண்டு கொண்ட போகிறது பார்ப்பனன் பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்கள்.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மீகம்?

ஆண்கள் நெற்றியில் விபூதியை மூன்று பட்டை யாக இட்டுக் கொள்ள வேண்டும். அதன் நடுவில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குங் குமத்திற்கு மேலே சிறு கீற்றாக திருநீற்றை எடுத் துக் கொள்ளவேண்டும் என்பது அய்தீகம்.

சிவனின் தலையில் சூடிக் கொள்ளப்பட்ட கங்கை - மாதவிடாய்த் தருணத்தில் வழிந்த குருதி தான் குங்குமம் என்று கூறப்படுவதுபற்றி சிந்திக் கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/84536.html#ixzz38LSrIRxb

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அடிகோலுவதா?


விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள் 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை மறந்திருக்கக் கூடும். ஆனால், முஸாபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை அவர்கள் மறக்கக்கூடாது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், தொகாடியாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளை கெட்டுள்ளது. உடனே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், தொகாடியா மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

சிபிஅய் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இப்படித்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் துவேஷத்தைக் கிளப்பி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், மத உணர்வு களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் பேச்சு இது - வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

சங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே வன்முறையைத் தூண்டும் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் கள் ஆயிற்றே அவர்கள். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில், மேலும் ஆணவக் கொம்பு கூர்மையாக முளைக்காதா?

தேர்தல் நேரத்தின்போதே கூட வி.எச்.பி.யின் தலைவரான இதே பிரவீன் தொகாடியா என்ன பேசினார்?

குஜராத் மாநிலம் பாவ் நகர் மற்றும் ராஜ்கோபு தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கக்கிய நாராசமான நச்சுவார்த்தைகள் என்ன தெரியுமா?

இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதி களில் ஒரு சில இஸ்லாமியர் குடும்பங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறவேண்டும். அப்படி வெளியேற மறுக்கும் பட்சத்தில் கற்கள் மற்றும் டயர்களைக் கொண்டு செல்லுங்கள் - டயர்களை எரித்து முஸ்லிம்களின் வியாபார நிறுவனத்துக்குள் எறியுங்கள். கற்களையும், தக்காளிகளையும் வீசுங்கள். ராஜீவ் கொலையாளி களுக்குத் தூக்கிலிருந்து மன்னிப்பு வழங்கும்போது எந்த சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது என்று சொன்னதோடு, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய 48 மணிநேரம் அவகாசமும் கொடுத்தார்.

குஜராத் முதல்வர் மோடி அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? எப்படி எடுக்கும்? ஆயிரக் கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை வெட்டிப் பலி கொடுத்த குஜராத்தின் காவல்துறை ஆயிற்றே!

இப்பொழுது மத்தியிலும் ஆட்சி வந்தாகிவிட்டது. தொகாடியாக்கள் எந்த எல்லைக்கும் சென்று கொக்கரிப்பார்கள்.

இந்த வி.எச்.பி.,க்கள் மக்களிடத்தில் திரிசூலங்களை நேரிடையாகவே அளித்து முஸ்லிம்களையும், கிறித் தவர்களையும், மதச்சார்பின்மைப் பேசும் இந்துக் களையும் குத்தச் சொல்பவர்கள் ஆயிற்றே - குடலைச் சரிக்கச் சொன்னவர்கள் ஆயிற்றே! எந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது?

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு இந்துத்துவாவாதி! எங்கள் கடவுள்களே ஆயுதம் தாங்கியுள்ளன - நாங்களும் ஆயுதம் தாங்குவோம்! என்று விஷம் கக்கியுள்ளார்!

இது அப்பட்டமான ஆயுதக் கலாச்சாரத்துக்குத் தூபம் போடும் துடுக்குத்தனமான வன்முறை வெறியின் வெளிப்பாடு.

தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவானேன்?

முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், விளைவு எங்கே போய் முடி யும் என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்குத் தெரியவே தெரியாதா?

அமைதிப் பூங்காவான மண்ணைக் காவிகள் கலவர மண்ணாக மாற்றிட நினைக்கிறார்கள் போலும்!

சட்டம் தன் கடமையைச் செய்யுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84539.html#ixzz38LTPnSDX

தமிழ் ஓவியா said...


சமுதாய ஆதிக்கமே தேவை


நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நாம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான் பெயர்.

- (விடுதலை, 4.10.1948)

Read more: http://viduthalai.in/page-2/84538.html#ixzz38LTY0mDN

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


உச்சிஷ்ட கணபதி!

உச்சிஷ்டம் என்றால் எச்சில்; சாப்பிட்டபின் உள்ள எச்சத்தை - மீதியை இவருக்கு நிவே தனம் செய்தால் இந்தக் கணபதி மகிழ்வாராம்.

ஓ, எச்சக்கலை என்று இந்தக் கடவுளைச் சுருக்க மாகச் சொல்லலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/84477.html#ixzz38LV4vToo

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாலியல் குற்றவாளிகள்

செய்தி: பாலியல் பலாத் காரங்களை கடவுளால் கூடத் தடுக்க முடியாது.
- உ.பி.ஆளுநர் அஜிஷ்குரேஷி சிந்தனை: நம் நாட்டுக் கடவுள்களில் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகள் ஆயிற்றே! அவர்களால் எப்படித் தடுக்க முடியுமாம்?

Read more: http://viduthalai.in/page1/84480.html#ixzz38LVG1vto

தமிழ் ஓவியா said...


வெல்லட்டும் பிகார் முயற்சி!

பிகாரில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்; இந்த மூன்று கட்சிகளுக்குமே பா.ஜ.க. தான் பொது எதிரி என்று பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்) கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட நேரத்தில்கூட அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சிறிதும் பொருட் படுத்தியவர் அல்லர் பிகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார்.

மோடியின் கண் மூடித்தனமான இந்துத்துவா வெறியை ஒருக்காலும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி இருந்தும்கூட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது, அவர் படம் பொறித்த விளம்பரங்கள் பிகார் மாநிலத்தில் இடம் பெறக் கூடாது என்று கறாராகக் கூறியதோடு அல்லாமல், அவ்வாறே செயலும்படுத்தி தேர்தலில் வென்று காட்டியவரும்கூட!

சமூக நீதிக் கொள்கையில் அடங்கா ஆர்வம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்.

இடைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதுகிற கருத்து மிகவும் சிறந்ததே! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலில் (அஜண்டாவில்) இடம் பெற்றவைகளை மள மளவென்று செயல்படுத்திடத் துடியாய்த் துடிக்கிறது.

அய்ந்தாண்டு ஆட்சி தொடருமேயானால் அதன் விளைவு மிகவும் மோசமாகத் தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.

அதற்கிடையே பல மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் முக்கிய கடமையை ஆற்றுவதில் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இந்தியாவுக்கே நிதிஷ்குமார் வழிகாட்டி விட்டார்.

வட மாநிலங்களைப் பொறுத்தவரை, லாலு பிரசாத்யாதவ், முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஓரணியில் நிற்பார்களேயானால், வட மாநிலங்களில் அரசியல் தட்ப வெப்ப நிலையே தலைகீழாக மாறி விடும் என்பதில் அய்யமில்லை!

நியாயமாக, இந்தச் சமூக நீதி அணியில், மதச் சார்பற்ற அணியில் லோக் தள் கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இணைந்திருக்க வேண்டும்.

பி.ஜே.பி.யின் மதவாத நெடியைப் பொறுக்காமல் தான் அந்தக் கூட்டணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பஸ்வான்; இந்த நிலையில் கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் நின்று, மத்திய அமைச்சராகவும் ஆகி விட்டார்.

இன்றைய மத்திய ஆட்சி மதவாதத் தன்மை கொண்டது மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானதும் கூட!

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினார் என்பதற்காக வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர் என்பது வி.பி. சிங்கின் நெருங்கிய தோழரான ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமே!

தனிப்பட்ட முறையில் தலைவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், அகில இந்திய அளவில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து சமூக, அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.

இந்த முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்திய அரசிய லிலும் சமூகத்திலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.

பிகாரில் இடைத் தேர்தலில் இந்தக் கூட்டணி வென்று காட்டினால், அது இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டப்பட்டதாக அமையும்!

வெல்லட்டும் அந்த முயற்சி!

Read more: http://viduthalai.in/page1/84485.html#ixzz38LVWNY3l

தமிழ் ஓவியா said...


மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

விடுதலை 15.7.2014 நாளிதழில் வெளி வந்த மாலை மலரிலும் ஆர்.எஸ்.எஸா? என்று பெட்டிச் செய்தி படிக்கும்போது தமிழ்நாளேடுகள் - இன உணர்வற்று எத் துணை அடிமைத்தனமாக மாறிவிட்டன என எண்ணும்போது மிகவும் கவலையாக உள்ளது.

46 பக்கங்களைக்கொண்ட அந்த மலரில் எந்த ஒரு இடத்திலும் பெரியார் பெயர் வராமல் மிகவும் ஜாக்கிரதையுடன் மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவர் களோடு இருக்கும் படத்தில் கூட பெரியார் கிடையாது. பார்ப்பன பத்திரிகையின் திரிபு வேலைகளை பற்றித் தெரியும்.

அவர்களின் சூழ்ச்சிகளும் நமக்கு புரியும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தந்தை பெரியாரின் தொண்டால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் - நடத்துபவர்களின் தமிழ் பத்திரிகைகள் இவ்வாறு நடந்து கொண்டால் யாரைப்போய் நொந்து கொள்வது?

விடுதலை இதழ் மட்டும் இல்லையென்றால் இத்தகைய செய்திகளை வெளிப்படுத்து வதற்கு வேறு நாதியில்லை. தமிழன் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிலிருந்து மீண்டு வர பாடுபடும் ஒப்பற்ற இயக்கம் திராவிடர் கழகம்.

அந்த தமிழ் மாந்தனை மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றவனாக மாற்று வதற்கு உரியதை விளக்கமாக வழங்குவது விடுதலை ஆனால் மாலை மலர்கள் இப்படியெல்லாம் இருட்டடிப்பதன் மூலம் காமராசரையும் பெரியாரையும் பிரிக்க முடியாது.

பெரியாரை மறைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனாரின் குடுப்பத்தாரின் மாலைமலர் ஏடு வெளி யிடுகிறது என்றால் இதுதான் தமிழர்களின் யோக்கியதை என்று தந்தை பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. தினமலர் களை, தினமணிகளை நொந்து என்ன பயன்?.

இந்த வாசகங்கள் எல்லாம் அழியாக் கல்வெட்டுகள் - மாலை மலர்களே திரும்பிப் பாருங்கள் - திசை தவறிப் போகாதீர்கள்.

- தி.க. பாலு, திண்டுக்கல் மாவட்ட தி.க. தலைவர்

Read more: http://viduthalai.in/page1/84491.html#ixzz38LWAcVWM

தமிழ் ஓவியா said...


இந்தித் திணிப்பைப் போன்று, சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது மத்திய அரசின் முடிவுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எதிர்ப்பு


சென்னை, ஜூலை 22_ இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப்போல் சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது என்று மத்திய அரசின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.இ. இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வார மாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30 ஆம் தேதியன்று பிறப் பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத பகுதி களுக்கும்கூட பொருந்தும் வகையில் உள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமஸ்கிரு தத்தைக் கற்பிக்கவும், பயிலவும் சி.பி.எஸ்.இ. உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர் சமஸ்கிருதம்தான். இதில் இந்திய அறிவுக்களஞ்சியம் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடி யாதோ, அதைப் போல சமஸ்கிருதத் திணிப் பையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்கு தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பி னரான நண்பர் இல.கணேசன், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழ் மொழிக் கும், தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லை என்றும், அ.தி.மு.க.வில் அகில என்பதும், திராவிட என்பதும் சமஸ்கிருத வார்த்தை கள்தான் என்றும், சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அதே நேரத்தில் செம்மொழித் தமி ழுக்கு தை மாதத்தின் முதல் ஏழு நாட்களை தமிழ் மொழி வாரம் என்று கொண்டா டலாம் என்றும் கூறியிருக்கிறார்.

சமஸ்கிருத வாரம் கொண்டாடினால்...

அவர் வாதப்படியே சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் மேலும் மேலும் சமஸ் கிருத வார்த்தைகள் உள்ளே வர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டு மென்றும், தமிழ்நாட்டில் தமிழ் செம்மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் சம்பந் தப்பட்ட மொழிகளின் வாரத்தையும் கொண் டாட உத்தரவிடுங்கள் என்றும், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்கமுடியா தென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக செய்தி வந்தது.

இதே ஜெயலலிதா, 8.7.2014 அன்று காமராஜர் சாலையிலே அமைந் துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதி உதவி யுடன் ராமகிருஷ்ணா மடம் நிருவாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றியும் செய்தி வெளிவந்தது.

விவேகானந்தரின் 150- ஆம் ஆண்டு பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பண்பாட்டு மய்யத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங் களை பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந் தார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பயிற்று விக்க அமைந்துள்ள பண்பாட்டு மய்யத் திற்கு அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி செய்து விட்டு, மத்திய அரசுக்கு தமிழ கத்திலே சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்தப் பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை என் றைக்கும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடு வதை ஏற்றுக்கொள்ள இயலாது.

எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு நம்முடைய கடுமையான கண்டனத் தையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, ஏற்கெனவே இந்தி மொழி பற்றிய அறிவிப் பில் மத்திய அரசு அது இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உரிய அறிவிப்பு என்று அறிவித்ததை போல, இந்த சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியும் உடனடியாக உரிய திருத்த அறிக்கையினை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.

_ இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/84506.html#ixzz38LWfzAdr