Search This Blog

23.7.14

இந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது ஏன்?

இந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது ஏன்? ஆரியப் பண்பாட்டை முறியடிக்கவே! தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்!

சென்னை, ஜூலை 18- இந்தியை தந்தை பெரியார் எதிர்த்தது  ஆரியப் பண்பாட்டை முறியடிக்கவே என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கவுரையாற்றினார்.
இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமிதத்திற்கும் உரிய அனைவரை யும் வரவேற்ற கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, இந்நிகழ்விற்கு வருகை புரிந்து, சிறப்பாளராக, சிறப்பாக இங்கே அமர்ந் திருக்கும் அருமைத் தோழர்களே, தோழியர்களே, செய்தி யாளர்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.


கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிர்க்கின்றன


இந்தியை எதிர்க்கின்ற ஒரு அவசியத்தை, புதிய அரசு திடீரென்று மற்ற பல்வேறு தலைபோகின்ற பிரச்சினைகள் என்று மக்களால் சொல்லப்படுவதைப்போல, விலைவாசி ஏற்றம், பண வீக்கம் இன்னும் தேர்தல் அறிக்கையில் அவர்கள் அறிவித்த அவசரத் திட்டங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், திடீரென்று ஒரு நாள் அவர்கள் இந்தியைக் கட்டாயமாக்கவேண்டும் என்ற அந்தக் கொள்கையை, உடனடியாக ஆட்சிக்கு வந்து 30 நாள்களில் அவர்கள் தொடங்கினார்கள் என்றவுடன், தமிழகத்தில் இருக்கக்கூடிய அத்துணைத் தலைவர்களும், இந்தியைப் பாரம்பரியமாக எதிர்த்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்களைப் போன்றவர்கள், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இதனை எதிர்க்கவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகளும் எதிர்க்கின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய, வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்தி எதிர்ப்பு என்பது ஏதோ இல்லாத ஒன்றாக ஆகிவிட்டதோ என்று பதம்பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதைப்போல, எடுக்கப் பட்ட முயற்சியைப்போல அந்த முயற்சி இருந்தது. ஆனால், இது நீறுபூத்த நெருப்புதான், எப்பொழுது வேண்டு மானாலும், எதிர்காலத்தில், வேகமாக, அவசியம் வரும் பொழுது தீப்பிடித்து எரியும் என்று காட்டுவதைப்போல, அந்த உணர்வுகள் வந்தவுடன், இல்லை, இல்லை, தமிழகம் போன்ற மாநிலங்களுக்காக அது வரவில்லை; இந்தி பேசுகின்ற மாநிலங்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்று ஏதோ ஒரு தவறான அல்லது உண்மைக்கு மாறான ஒரு விளக்கத்தை அளித்தார்கள். பிறகு அந்த விளக்கங்கள்கூட அது முரண்பட்ட நிலையில், அது எடுபடாமல் போயிற்று. காரணம், இங்கே வரவேற்புரையாற்றிய நண்பர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்; அந்தப் பயிற்சிக்கு வகுப்புக்குச் செல்லாதவர்களுக்குத் தண்டனை, அபராதம்; ஊதிய உயர்வு குறைக்கப்படும்; அரசு சலுகைகள் ரத்து செய்யப் படும் என்பனபோன்ற நிலைகளையெல்லாம் வைத் திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது, நிச்சயமாக, இது ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு மீண்டும் இந்த முயற்சியை தொடுத்திருக்கிறார்கள். இதனை நாம் முளை யிலேயே கிள்ளியெறியவேண்டும்; நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கவேண்டும் என்ற உணர்வில், இன்றைக்கு அதனைப்பற்றிய விவாதங்களை அவர்கள் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சற்றுநேரத்திற்கு முன்புகூட நான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய ஒரு வார தமிழ் ஏட்டில், ஆர்.எஸ். எஸில் அமைப்பாளராக இருக்கக்கூடிய ஒருவர் கட்டுரை எழுதியிருக்கிறார். அதனை நான் முழுமையாகப் படித்தேன்.

மேலெழுந்தவாரியாகச் சொல்லக்கூடும்

இந்த நிலையில், இது எதற்காக? சில பேருக்கு உள்ளபடியே, இளைய தலைமுறையினருக்கு, என்ன ஒரு முன்னுதாரணம்? படித்துவிட்டால், தோழர்களே, சில பேருக்குக் குழப்பம் இருக்கும். ஏனென்றால், வரலாற்றை அறியாதவர்களும், பண்பாட்டுப் படையெடுப்பினுடைய ஆபத்தை உணராதவர்களும் அப்படி அவர்களை மேலெழுந்தவாரியாகச் சொல்லக்கூடும்.



இந்தச் செய்திகளுக்காகத்தான், ஆதாரப்பூர்வமாக அடிக்கடி நினைவூட்டக்கூடிய செய்திகள் ஏராளம் இருக்கின்றன. மக்களுடைய மறதியை வைத்துத்தான் பல அரசியல்வாதிகள் அரசியலை நடத்திக் கொண்டிருக் கிறார்கள் என்பது ஒரு பக்கம் உண்மை. ஆனால், அதேநேரத்தில், தெளிவாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், எதற்காக தந்தை பெரியார் அவர்கள், 1938 ஆம் ஆண்டு, அதற்கு முன்பு 1926 ஆம் ஆண்டிலிருந்து இந்தியை எதிர்த்தார்கள் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்  மேலெழுந்தவாரி யாக என்ன ஒரு மொழிதானே? ஏன் இன்னும் எதிர்க்க வேண்டும்? என்றிருப்பார்கள். இந்தக் கேள்வி நியாயமாக எல்லோருக்கும் தோன்றுவதுதான். அண்மையில்கூட, இதனை அடிப்படையாக வைத்துத்தான், ஜெர்மனியில் இருக்கக்கூடிய கொலோன் பல்கலைக் கழகத்தில், கடந்த ஜூன் 2 ஆம் தேதிமுதல் 6 ஆம் தேதிவரை நடைபெற்ற நிகழ்வுகளில், சில சொற்பொழிவுகளுக்காக, ஆய்வு சொற்பொழிவுகளுக்காக என்னை அழைத்திருந்தார்கள். அப்படி அழைத்தபொழுது, அவர்கள் இரண்டு தலைப்பு களில் சொற்பொழிவுகளை ஆற்றச் சொன்னார்கள். பொதுவான ஒரு தலைப்பு - திராவிடர் இயக்கம்; பெரியாருடைய பகுத்தறிவுச் சிந்தனைகளுடைய தாக்கம் என்பதை, பொதுமக்களும் கலந்துகொள்ளக்கூடிய ஒரு பொது அமைப்பிலே, தலைப்பாக ஆக்கிக் கொடுத்தார்கள்.



அடுத்த தலைப்பு, இந்தி எதிர்ப்பு இயக்கம். அதைப்பற்றி தெளிவான பல கருத்துக்கள்; என்ன காரணங்கள் என்பதை விளக்கக்கூடியதாக எங்களுடைய பல்கலைக் கழக வகுப்புகள், ஆய்வு மாணவர்கள், இங்கே மட்டுமல்ல, வெளியில் இருக்கக்கூடிய பல்கலைக் கழக மாணவர் களுக்குக்கூட இடமுண்டு. எனவே, அவர்களும் வருவார் கள் என்று சொல்லி, அதற்கும் அவர்கள் வாய்ப்பளித் தார்கள்.



ஆய்வாளர்களுக்குத் தெளிவான கருத்துகள் கிடைக்கும்
கேட்டபொழுது சொன்னார்கள், இது ஆய்வுக்குரிய ஒன்று. ஏனென்றால், தென்கிழக்கு ஆசிய படிப்புகள், அதேபோல தென் ஆசிய அமைப்புகள் இவை எல்லாம் இணைந்த ஒரு துறை இது. ஆகவே, இந்தத் துறையிலே, மிக முக்கியமான ஒரு பிரச்சினையாக கருதுகின்றோம். ஆகவே, அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அழைக்கப் பட்டுச் சொன்னால்தான், இந்த ஆய்வாளர்களுக்குத் தெளிவான கருத்துகள் கிடைக்கும். அதைப்பற்றி பலரும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்; அதற்காகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொல்லி, இரண்டு நாள்கள் அதைப்பற்றி விரிவான, விளக்கமான, கேள்வி - பதில்கள் உள்பட அவர்களுடைய அய்யங்களைக் களையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினார்கள்.


இதற்கிடையில், ஒரு சுவையான இன்னொரு செய்தி:

காலஞ்சென்ற சீதாராம் கேசரி அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து, கடைசியில் அவரிடமிருந்துதான் சோனியா காந்தி அம்மையார் அவர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றார்கள். நீண்ட காலமாக சீதாராம் கேசரி அவர்கள், பொருளாளராக, நேரு காலத்தில் தொடங்கி, இந்திரா காந்தி காலம், அதற்குப் பிறகு ராஜீவ் காந்தி காலம், அதற்குப்பிறகு அடுத்த கட்டம் என தொடர்ந்து, அந்தக் குடும்பத்தினருக்கு நம்பிக்கை யாகவும், இயக்கத்திற்கு நம்பிக்கையாகவும் இருந்த பிகா ரைச் சார்ந்த, பிற்படுத்தப்படுத்த சமுதாயத்தைச் சார்ந்தவர்; மூத்த காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அவர்கள்.

நீங்கள்தான் இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்குரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்!

அவர்கள் பின்னாளிலே, திரு.சந்திரஜித் யாதவ் அவர் களின் மூலமாக, எனக்கு நட்புக்குரியவராக ஆனார்கள். தந்தை பெரியார் அவர்களைப்பற்றிய ஆங்கில நூல்கள், அதைப்பற்றிய விவாதங்களையெல்லாம் சொல்லும் பொழுது, தன்னுடைய தலையணை அடியில் வைத்துக் கொண்டு, ஏதோ தேர்வுக்குச் செல்கின்ற மாணவன்போல, தந்தை பெரியார்பற்றிய ஆங்கில நூல்களை, தத் துவங்களை எல்லாம் படித்துவிட்டு, மிகவும் பாராட்டினார். இப்படிப்பட்ட ஒரு தலைவர், சிந்தனையாளரை நாம் எளிதில் சந்திக்கவே முடியாது என்று, மிகப்பெரிய அளவில் அவர் ஆய்வு செய்தார். அடிக்கடி சந்தேகங்களைக் கேட்பார். திடீரென்று  தொலைப்பேசியில் அழைத்துகூட சந்தேகம் கேட்பார். அவருடைய இல்லத்திற்கு நாங்கள் நேரடியாகச் செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றோம். அவ்வளவு நெருக்கமாக நாங்கள் நட்பாகிவிட்டோம். ஒரு நாள் எல்லோரையும் அனுப்பிவிட்டு, உங்களிடம் ஒரு சந் தேகத்தைக் கேட்கவேண்டும்; ஏனென்றால், பெரியாரி டத்தில் நெருக்கமாக இருந்தவர்கள்; பெரியாரின் மாணவர் நீங்கள். ஆகவே, நீங்கள்தான் இந்தச் சந்தேகத்தைத் தீர்ப்பதற்குரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். ஆகவே, உங்களிடம் இதை கேட்கிறேன்.



பெரியார் ஒரு தலைசிறந்த, ஒப்பற்ற ஒரு பகுத்தறிவாளர். இதனை நான் பல செய்திகளில் படித்திருக்கிறேன். அவருக் கென்று தனிப்பட்ட ஆசாபாசங்கள் கிடையாது; எதையும் அவர் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடுதான் எந்தப் பிரச்சினையையும் சிந்திக்கக்கூடியவராக வாழ்நாள் முழுவதும் இருந்திருக்கிறார் என்பது வியக்கத்தகுந்த ஒரு செய்தி. நான் அதனை ஆழமாகப் பார்க்கிறேன். அப்படிப் பட்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தி மொழியை எதிர்த்தார்கள் என்று சொன்னால், அது வெறும் பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றபொழுது, அவர் வெறும் மொழிக்காக அவர் எதிர்த்திருக்க வாய்ப்பில்லை. அதை விட மிகவும் ஆழமான காரணங்கள் இருக்கவேண்டும் அதற்கு. அதைவிட வெறும் மொழி எதிர்ப்பு என்பது முக்கியமல்ல. அது எனக்குத் தோன்றவில்லை. இந்தி எதிர்ப்பாளர் பெரியார் என்று அவர்கள் காட்டும்பொழுது, அதிலே எனக்கு அவ்வளவு முழு நிறைவு ஏற்படவில்லை. ஆகவேதான், இந்த செய்தியைப்பற்றி உங்களிடம் கேட்டு தெளிவடையவேண்டும் என்று சொன்னார்.

ஒரு பண்பாட்டு நாகரிகத்தை, அடிப்படையை சிதைக்கவேண்டுமானால்...
உடனே நான் சொன்னேன், மொழி எதிர்ப்பு என்பது மட்டும் அவரது அடிப்படையான காரணம் அல்ல. மொழி எதிர்ப்பு என்பது சாதாரண விஷயம். ஆனால், பெரியார் அவர்கள் எதிர்ப்பதற்கு அடிப்படையான இன்னொரு காரணம் என்னவென்றால், இந்தியை அவர்கள் புகுத் தியதின் நோக்கம், சமஸ்கிருதத்தை எப்படியாவது புகுத்த வேண்டும்; அதன்மூலமாக சமஸ்கிருத கலாச்சாரத்தை, சமஸ்கிருத தன்மையை உருவாக்கவேண்டும் என்ற ஒரு ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பு என்று சொல்லக்கூடிய பார்ப்பனீயத்தினுடைய உயர்வை, மேலாண்மையை, வருணாசிரம தர்மத்தை அல்லது அதன்மூலம் வந்த கருத்துகளையெல்லாம் அவர்கள் மேலே தூக்கிப் பிடிக்கவேண்டும்; அதனை நிரந்தரப்படுத்தவேண்டும். அதற்கு என்ன வழி என்றால், ஒரு பண்பாட்டு நாகரிகத்தை, அடிப்படையை சிதைக்கவேண்டுமானால், மொழியின் மூலமாகத்தான் முதலில் கைவைக்கவேண்டும்; ஆகவே, அந்த மொழியைக் கையாளவேண்டும் என்று சொன்னால், அதற்கு வாய்ப்பானது சமஸ்கிருதம்தான் என்று நினைத்து, இன்னமும் சமஸ்கிருதம்தான் இந்தியாவினுடைய மொழி யாக இருக்கவேண்டும் என்று சொல்லுவதில்கூட, நேரிடை யாக அதனை செய்ய முடியாது என்பதற்காக, மறைமுக மாகவும், முதற்கட்டமாகவும், அதிலிருந்து கிளைத்த, அதே நாகரீகத்தை, அதே தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மொழியான, இந்தியை அவர்கள் புகுத்தினார்கள்.



இந்தித் திணிப்பு என்பது, வெறும் மொழித் திணிப்பு என்பதைவிட, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பாகத்தான் அதனைச் செய்தார்கள் என்பதற்காக, தந்தை பெரியார்  தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்த்தவர்கள். ஆகவே தான், இந்தப் பண்பாட்டு படையெடுப்பை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த இந்தி எதிர்ப்பு என்பது உருவானது என்று சொல்லும்பொழுது, அவர் கைதட்டி வரவேற்று, கைகொடுத்தார். இதுதான் நான் தேடிக்கொண்டிருந்தது, ஏனென்றால், நான் ஆழமாக சிந்திக்கிறபொழுது, இது சரியானது. ஏனென்று சொன்னால், அதன்மூலமாக பண்பாட்டு படையெடுப்பை, பண்பாட்டு ஆக்கத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். அதனைப் புரிந்துகொண்டார் பெரியார்;  அவர் இந்தி எதிர்ப்பு நியாய மானது; அவருடைய கண்ணோட்டத்தில் அது தேவை யானது. ஏனென்றால், வெறும் மொழிக்காக, மொழி பரவ வேண்டும் என்பதற்காக அல்ல; இந்த மொழியினுடைய வரலாற்றைத் தேடிப் பார்த்தால் ஏராளமான ஆதாரங்கள்  இருக்கின்றன என்பதை, அதனுடைய வரலாற்றைப் பார்க்கும்பொழுது நிச்சயமாக உணருகிறோம். இது சரியான, எனக்கு ஒரு நல்ல தெளிவை உண்டாக்கக்கூடிய விளக்க மாகும் என்று சொன்னார்.


பவர்பாயிண்ட் பிரசன்டேசன்

எனவே, ஜெர்மனியில் உரையைத் தொடங்கும்பொழுது கூட, நேரிலே, மின்னொளி மூலமாக நேரத்தைக் கருதி, செய்கிறபொழுது, ஆங்கிலத்தில் நான் வகுப்பு எடுக்கும் பொழுது, அவர்களுக்கு வசதியாக மின்னொளி பவர் பாயிண்ட் பிரசன்டேசன் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினேன்.


அனேகமாக நிறைய செய்திகள்; சாதாரணமாகப் பேசினால், அந்தச் செய்திகள் மனதிலே தங்குவதில்லை. ஏதோ ஒரு பொதுவான ஒரு பேச்சைக் கேட்டோம்; சில கருத்துகளோடுதான்  வெளியே போக வேண்டியிருக்கும். ஆனால், இப்பொழுது மின்னொளியின் மூலமாக சில செய்திகளை எடுத்துச் சொல்லுகின்ற நேரத்தில், பல்வேறு வாய்ப்புகள் அதற்குத் தாராளமாகக் கிடைக்கும்.

அந்த வகையில், இந்தி எதிர்ப்பு என்பது இருக்கிறதே, இப்பொழுது அதனுடைய அடிப்படை என்பது வெறும் மொழித் திணிப்பை எதிர்ப்பது என்பது மட்டுமல்ல; அந்த மொழியைத் திணிப்பவர்களுக்கும் உள்நோக்கம் உண்டு; எதிர்ப்பவர்கள் அதை புரிந்துகொண்டு எதிர்க்கிறார்கள் என்பதும் மறக்கப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத வரலாறாகும்.


அந்த அடிப்படையில், என்னுடைய இந்த உரையின் அம்சங்கள், மின்னொளியின் மூலமாக தெளிவாகத் தெரியும்.
இந்தியத் துணைக் கண்டம் என்பது, பல மொழிகள் பேசப்படக் கூடிய ஒரு துணைக் கண்டமே! இதற்கு முன்பு, 56 ராஜ்ஜியங்கள் என்று சொல்லுவார்கள். இப்பொழுது வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான், இந்தியா என்பதே உருவானது என்பது எல்லோருக்கும் தெரிந்த, மறுக்கப்பட முடியாத ஒரு வரலாற்று உண்மை.


உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், மண்டல் ஆணையத்தின் தீர்ப்பில் எத்தனை ஜாதிகள் இருக் கின்றன? எவ்வளவு மொழிகள் இருக்கின்றன? என்பது போன்ற அந்த மொழிகளைப்பற்றிச் சொன்ன ஒரு அடிப் படையை வைத்துக்கொண்டு இந்தக் குறிப்புகள் தயாரிக் கப்பட்டிருக்கின்றன.
நம்முடைய நாட்டில், இந்தியா என்று அழைக்கப்படு கின்ற இந்த நாட்டில் பேசப்படும் மொழிகள் 1652 மொழிகள்; இதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பிறகு, மொழிப் பிரச்சினையை, அவர்கள், வரைவுத் திட்டம் மூலமாக இது ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை என்கிற காரணத்தினால்,  மிக ஆழமாக ஏனென்றால், தென்னாடு தனியே இருந்தது; இந்தியை தென்னாட்டில் புகுத்த வேண்டும் என்று நினைத்தனர்.  அந்த அடிப்படையில் என்ன செய்யலாம் என்று சொல்லி, எதையும் தேசிய மொழி என்று சொல்லி, ஒரு தனித்த அந்தஸ்து கொடுத்து, இந்திதான் தேசிய மொழி என்று பல பேர் இப்பொழுது சொல்கிறார்கள் அல்லவா? அதுபோல, இந்திய அரசியல் சட்டத்தில், எந்த இடத்திலும் இந்தி மட்டும் தேசிய மொழி என்று குறிப்பிடப்படவேயில்லை என்பதை, பல பேர் இதுவரையில் தெரிந்துகொள்ளாதவர்களாக இருந்தால், தெரிந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.


எந்த இடத்திலும், இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை.  இந்தி நம்முடைய தேசிய மொழி என்றெல்லாம் மேடைகளில் பேசுகிறார்கள். யாரோ ஒருவர் இந்திக்காக நான் வக்காலத்து வாங்கிக்கொண்டு, பயில்வானாகப் போகிறேன் என்று சொல்கிறார். வரட்டும்; களத்தில் பார்ப்பதற்கு நாம் என்றைக்கும் தயாராகத்தான் இருப்போம். அதுவேறு.


அந்த வகையில், தெளிவாக அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதை, ஆதாரப்பூர்வமாக, இது வெறும் உணர்ச்சிபூர்வமான ஒரு உரையல்ல;  இது அறிவுபூர்வ மான, ஆதாரப்பூர்வமான பல பேர் இதனை எடுத்துக் கொண்டு பயன்படுத்தவேண்டும்; நீங்கள் விவாதங் களுக்குரிய செய்திகளை சேகரிக்கவேண்டும் என்பதற் காகத்தான்.



அரசியல் சட்டத்தில், 17 ஆவது பகுதியில்...

இந்தியைப் பொறுத்தவரையில், அரசியல் சட்டத்தில், 17 ஆவது பகுதியில், 343 ஆம் பகுதியில், ஆட்சி மொழியாக, மத்திய அரசாங்கத்தினுடைய அலுவல் மொழியாக இந்தி மொழி இருக்கவேண்டும் என்று சொல்கிறது.


அந்த 17 ஆவது பிரிவில் இருக்கக்கூடிய அமைப் பின்படி 8 ஆவது அட்டவணை என்று பின்னாளில் அவர்கள் சேர்த்திருக்கிறார்கள்.  அந்த 8 ஆவது அட்ட வணையில், அந்தந்த மாநிலங்களில் பேசப்படக்கூடிய மொழிகள். அதில் இரண்டு குடும்பம் உண்டு. ஆரியக் குடும்பம் உண்டு; திராவிடக் குடும்பம் உண்டு.


அதிலே பண்பாட்டு அடிப்படையில் மிகப்பெரிய ஒரு கோடு போடப்பட்டிருக்கின்றது என்பதை யாரும் மறுத்து விட முடியாது. எனவேதான், இந்திக்கெல்லாம் ஆரிய பாஷா என்பது சமஸ்கிருதம். ஆரிய வர்த்தம் என்ற பகுதி இருக்கின்றது. 22 மொழிகள் அட்டவணையில் இருக்கின்றன


இதோ நம்முடைய அரசியல் சட்டத்தினுடைய 8 ஆவது அட்டவணையில், வரைவுத் திட்டத்தைப் போட்ட போது, 13 மொழிகளை மட்டும்தான் அவர்கள் அங்கீகரித் தார்கள். அதில் ஒன்று இந்தி. பிறகு, அவரவர்கள் கிளர்ச்சி செய்யச் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக பலூனை ஊதி னால் பெரியதாக ஆவதைப்போல, 14 மொழிகளாயிற்று; பிறகு 18 ஆயிற்று. இப்பொழுது 22 மொழிகள் அட்ட வணையில் இருக்கின்றன. இது இப்பொழுது இருக்கக்கூடிய நிலவரம்.


அசாமியம், வங்காளம், குசராத்தியம், இந்தி, கன்னடம், கசுமீரியம், கொங்கணியம்,  மலையாளம், மணிப்புரியம்,  மராத்தி, நேபாளி, ஒரியம், பஞ்சாபி, சமசுகிருதம், சிந்தியம், தமிழ், தெலுங்கு, உருது, மைதிலியம், போடோயம், சாந்தளியம், தோக்ரியம்.

இந்தச் செய்தியை நீங்கள் மிக முக்கியமாக அடிப் படையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.



இதில் தலைப்பு என்னவென்றால், இந்திய அரசியல் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் தலைப்பு என்ன போட்டிருக்கவேண்டும்? 22 தேசிய மொழிகள் என்று போட்டிருக்கவேண்டும். அல்லது இந்தி, சமஸ்கிருதம் எல்லாம் அந்த 22 மொழிகளில்தான் இருக்கிறது. மொழிகள் என்றுதான் தலைப்பு போடப்பட்டிருக்கிறது என்பதை இந்த அறிவார்ந்த அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்து நிறுத்துகிறோம்.



இதற்கு அடுத்தபடியாக சில செய்திகளை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


இந்தி பேசுகிறவர்கள் 42 சதவிகிதம் பேர்தான்

ஒரே மொழி, பேசப்படக்கூடிய, எழுதப்படாத, பேசப் படாத, ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஒரு மொழி என்று கூறப்படுகிறது.


42 சதவிகிதம் பேர்தான் அந்த மொழியைப் பேசு கிறார்கள். எல்லா மொழிகளையும் சேர்த்து. அந்த மொழி கள்கூட எவ்வளவு என்பதைப்பற்றி சொல்லும்பொழுது, நம்முடைய நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், திராவிட இயக்க வரலாறு முதல் தொகுதியை எழுதி, மிக அற்புத மான அந்தப் பணியை செய்தார். இந்த இடத்தில்தான், அவருடைய பிறந்த நாள் விழாவின்போது, அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு, பல இடங்களிலும் திராவிடர் கழகம் பரப்புவதற்குக் காரணமாக இருந்தது. நாவலர் அவர்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு எழுதுகிறபோது, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி என்பதை ஒரு தனிப் பகுதியாகவே எழுதியிருக்கிறார். மிக ஆழமாகவே அதில் எழுதியிருக்கிறார்.



பல்வேறு செய்திகள், நல்ல ஆவணப்படுத்தப்பட்ட ஒரு பகுதியாகும். இதில் ஒரு செய்தியை மிக ஆழமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். எப்படியெல்லாம் இந்தி ஒரு பகுதியிலே இருக்கக்கூடிய இந்தி, ஒரே மாதிரியான சூழ்நிலையில் இல்லை என்பதற்கு அடையாளமாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்ற பகுதி மிக முக்கிய மானது.

                -----------------(தொடரும்)---”விடுதலை” 18-7-2014
Read more: http://viduthalai.in/page-4/84279.html#ixzz37sFSUlFB

*************************************************************************************
அரசமைப்புச் சட்டத்தில் இந்தியைக் குறிக்கும்பொழுது தேவநாகரி எழுத்து என்று குறிப்பிட்டது ஏன்?


அரசமைப்புச் சட்டத்தில் இந்தியைக் குறிக்கும்பொழுது தேவநாகரி எழுத்து என்று குறிப்பிட்டது ஏன்?
தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்


சென்னை, ஜூலை 19- அரசமைப்புச் சட்டத்தில் இந்தியைக் குறிக்கும்பொழுது தேவநாகரி எழுத்து என்று குறிப்பிட்டது ஏன்? என்று விளக்கம் அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
5 குழு மொழிகளும், 19 மொழிப் பிரிவுகளும்!
எத்தனை இடங்களில் வெவ்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு குழுக்கள் இந்தி பேசப்படுகின்றன என்று சொல்கிறார்.

இந்தி என்ற பெயரில், 5 குழு மொழிகள். 19 மொழிப் பிரிவுகளாக ஆகி, 89 வகை மக்களால், தனித்தனியாகப் பேசப்படும் சில்லறை மொழிகளாக மாறின. இந்தியின் 5 குழு மொழிகளும், 19 மொழிப் பிரிவுகளும் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

குழுக்களின் பெயர் - மொழிப் பிரிவுகளின் பெயர் வருமாறு:

1. கவுரவி குழு: கடீபோலி, பங்காரு
2. பிரஜ் குழு: பிரஜ் பாஷா, கண்ணோவ்ஜி, பண்டேலி
3. கவுஷாலி குழு: அவதி, பஹேலி, சட்டிஸ்காதி
4. இராஜஸ்தானி குழு: மார்வாடி, மால்வி, ஜெய்புரி, மேவதி, மாலினி
5. பீகாரி குழு: போஜ்புரி, மைதிலி, மகாஹி, கார்வாலி, காமாயுளி, நேபாளி.
டாக்டர் சங்கர் ராஜூ நாயுடு

சென்னைப் பல்கலைக் கழகத்தில், இந்தி மொழித் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கிய டாக்டர் சங்கர் ராஜூ நாயுடு அவர்கள், 1965 இல் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். பிற மொழிகள் அனைத்தையும் பேசுவோர் எண்ணிக்கை 58 சதவிகிதம்

இந்தி மொழி பேசுவோர் என்று சொல்லப்படுபவர் கள் அனைவரும் ஒரே விதமாகப் பேசுவோர் அல்லர். வெவ்வேறு விதமான பேச்சு மொழிகள் பலவற்றைக் கொண்ட மொழியே இந்தி மொழி. ஒவ்வொரு பேச்சு மொழிக்கும் ஒவ்வொரு குழுவினர் உண்டு. அந்த ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்பவர்கள் ஆவார்கள். இவ்வாறு மாறுபட்ட தனிப் பெயர் தாங்கித் தனித்தனியாகக் கணக்கெடுக்கப்பட்டப் பேச்சு மொழியாளர்கள் அனைவரையும் இந்தி என்ற ஒரு பொது மொழிப் பெயரால் குறிப்பிடுவது எந்த வகையிலும் பொருந்தி வராது. மேலும் இந்தி இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது என்ற வாதமும், உண் மைக்குப் புறம்பானதாகும். இந்தியாவில் சுமார் 42 சத விகிதத்தினர்தாம், எல்லா வகையான இந்தி மொழி களையும் பேசுபவர்கள் ஆவார்கள். பிற மொழிகள் அனைத்தையும் பேசுவோர் எண்ணிக்கை 58 சதவிகிதம் ஆகும். இப்பொழுது இந்தியப் பேரரசின் ஆட்சி மொழி யாக, அரசமைப்புச் சட்டத்தால் ஆக்கப்பட்டிருக்கின்ற கடீபோலி என்ற இந்தி மொழியைப் பேசுபவர்கள் சுமார் 2.5 கோடி பேர்கள்தான் இருப்பார்கள். அவர்களும் டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர்கள்தாம் என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் சங்கர் ராஜு நாயுடு.



இந்தி மொழியின் 19 பிரிவினர்களும் பேசும் பேச்சுக்கள் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது என்பது, அவை வேறுபட்ட வகையில் உச்சரிக்கப்படுவதி லிருந்து தெரிந்துகொள்ளலாம்.



ஆகவே, முதலில் நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், இந்திய மக்களை இந்தி மொழி ஒற்றுமைப்படுத்தும் என்ற வாதம் வைக்கப்படுவது உண்மையல்ல. உதாரணமாக வடபுலத்தில் வேலைக்குச் சென்றவர்கள், மும்பை, பிகாரில் மற்றவர்கள் உள்ளே நுழையும்போது எப்படிப் பட்ட சூழ்நிலை நிலவியது என்பது தெளிவாகத் தெரியும்.



பஞ்சாபில் அகில இந்திய வானொலியில்கூட இந்தி மொழியில் சொல்லுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லி, அவர்கள் எதிர்ப்பு காட்டியது பதிவு செய்யப்பட்டிருக்கின்ற ஒரு உண்மையாகும்.
ஆகவே, இந்தி, நம் எல்லோரையும் இணைத்து விடுகிறது என்பது அல்ல.
கிழக்குப் பகுதியில் பெரும்பாலும் இருக்கின்ற மாநிலங்களில் எல்லாம் ஆங்கிலம்தான் நடைமுறை யில் பேசப்படுகிறதே தவிர, அங்கு இந்தியோ அல்லது வேறு மொழியோ கிடையாது.



பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். நாகாலந்து, மேகாலயா போன்ற பகுதிகளில். அசாமில்தான் போடோ மொழி பேசப்படுகிறது. பின்னாளில் 22 மொழிகளில் ஒன்றாக அம்மொழி இணைக்கப்பட்டிருக்கிறது.



ஆகவே, இப்படி பல மொழிகளில், இந்தி மொழி ஒற்றுமைப்படுத்தும் என்கிறார்களே, அது ஒற்றுமைப் படுத்தவில்லை. மாறாக,  வெறுப்புணர்ச்சியை உரு வாக்கி, அமைதியாக கைகோத்துக் கொண்டிருப்பவர் மத்தியில்கூட ஒரு சந்தேக உணர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.
இது வெறும் மொழி அடிப்படையில் அல்ல; இது ஆழமான கலாச்சார ஆதிக்கத்தின் அடிப்படையில் தான். அதை விரும்பாத மக்கள்மீது திணிக்கப்படுகிறது என்பது முக்கியமாக சுட்டிக்காட்டப்படவேண்டும்.



காங்கிரசில் இருந்தபோது, இந்தி மொழியை பெரியார் எதிர்த்தார்

இங்கே வரவேற்புரையில் சுட்டிக்காட்டியபடி, அன்றைக்கே, காங்கிரசில் இருந்தபோது, இந்தி மொழியை பெரியார் எதிர்த்து இருக்கிறார். இந்த வரலாற்றை பல பேர் தெரிந்துகொள்ளவேண்டும். மனதிலே அதை பதிய வைத்துக் கொள்ளவேண்டும். எதனால் இந்தியை எதிர்த்தார் பெரியார்?
ஜாதியால் ராமாயணத்தில் சம்பூகன் ராமனால் வெட்டிக் கொலை செய்யப்படுவதை எடுத்துக்காட்டி, கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். ராஜகோபாலாச் சாரியார், திரு.வி.க. போன்றவர்களை வைத்துக்கொண்டு, திருப்பூர் மாநாட்டில்.

துளசிதாஸ் ராமாயணத்தில், புருஷ உத்தமன் என்று காட்டும் நோக்கில், சிவனை வணங்குவதைவிட, மகா விஷ்ணுவை வணங்குவதைவிட, யாரை வணங் கினான் ராமன் என்றால், பிராமணர்களைத்தான் வணங்கினான், பார்ப்பனர்களைத்தான் வணங்கினான் என்று சொல்லி, பார்ப்பனீய வருண தருமத்தையும், பார்ப்பனீயத்தையும் தூக்கிப் பிடிப்பதற்காகவே துளசிதாஸ் ராமாயணம் உருவானது. எனவே, துளசிதாஸ் ராமாயணம் இந்தியில் வந்தது என்று சொன்னால், அது பார்ப்பனீய கலாச்சாரத்தை, ஆரிய கலாச்சாரத்தை முழுக்க முழுக்க திணிக்கவேண்டும் என்பதுதான் இதன் பின்னணி!
கம்ப ராமாயணம் அதற்கொன்றும் குறைந்தது அல்ல; கம்பராமாயணப் பாடலை எடுத்துக் கொண்டால்கூட, கரியமானினும் என்று தொடங்கும் பாடலுக்கு என்ன அர்த்தம் என்றால், பார்ப்பனர்களை வணங்கித்தான் மற்றவைர்களை வணங்கவேண்டும்; கடவுள்களைவிட மேலானவர்கள் பார்ப்பனர்கள்தான் என்று இருக்கக்கூடியது. இதனை குடியரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சுட்டிக்காட்டி எழுதி யிருக்கிறார்.

மாணவப் பருவத்திலேயே ஆரம்பிக்கவேண்டும் என்று ஆரம்பித்துதான்...

எனவே, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை, மிகச் சாமர்த்தியமாக, கலாச்சாரத் திணிப்பை, அவர்கள் ஒரு மொழியின் மூலமாக, அந்த மொழியை கற்றுக் கொண்டால், மிக வசதியாக இருக்கவேண்டும் என்று சொல்லி,  அதை எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்றால், மாணவப் பருவத்திலேயே ஆரம்பிக்கவேண்டும் என்று ஆரம்பித்துதான், தெளிவாக இங்கே கவிஞர் சொல்லியதைப்போல, ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, லயோலா கல்லூரியில் உரையாற்றும்பொழுது மிகத் தெளிவாக அதை செயல்படுத்த முனைந்தார்.

Hindi in Devnagari Script

இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற அந்த வாக்கியத்தில், Hindi shall be the official language of the State என்று சொல்லும்பொழுது, வெறும் இந்தி என்ற வார்த்தை, மற்ற மொழிகளில் தமிழில் இந்தி என்று போட்டுவிடுவோம். தமிழுக்கு பிராக்கெட் போட மாட்டோம். தமிழுக்கு தமிழ் எழுத்துப் போட்டு அப்படி சொல்லமாட்டோம். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் என்ன எழுதப்பட்டது என்று சொன்னால், Hindi in Devnagari Script   என்று ஆரம்பிக்கிறது. தேவ் என்றால் என்ன? கடவுள்; நகரி என்றால் என்ன? எழுத்து; கடவுள் எழுத்து! கடவுள் எழுத்து என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்து.
என்ன அதற்குக் காரணம் என்று பார்த்தால், அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு அதனுடைய ஆரம்பம் புதைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் சீதாராம் கேசரி அவர்களுக்கு விளக்கும்பொழுது, அவருக்குப் பளிச்சென்று விளங்கியது.

                  ------------------------------------ தொடரும்--”விடுதலை” 19-07-2014

*************************************************************************************
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததே! அதனை மாற்றியது நீதிக்கட்சி - தந்தை பெரியார்

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததே!
அதனை மாற்றியது நீதிக்கட்சி - தந்தை பெரியார்
தமிழர் தலைவர் வெளியிட்ட வரலாற்று உண்மை

சென்னை, ஜூலை 20- மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததே அதனை மாற்றியது நீதிக்கட்சியும், தந்தை பெரியார் அவர்களும்தான் என்ற வரலாற்று உண்மையை வெளிப்படுத்தி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


இந்தி மொழிக்கும், உருது மொழிக்கும்தான் அங்கே போராட்டம்

நம்முடைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒரு பக்கத்தில் இருக்கட்டும். ஆனால், வடபுலத்தில் இந்தியை எதிர்த்தவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால், மிக முக்கியமாக, ஆழமாக, இந்தி மொழிக்கும், உருது மொழிக்கும்தான் அங்கே போராட்டம்.


உருது மொழி - அரபு மொழி - அதற்கு முன்பு இருந்த இஸ்லாமியர்களுடைய ஆட்சி - அதனுடைய விளைவுகள் காரணமாக, அரபு, பாரசீக மொழிகள் இவைகளெல்லாம் கலந்தன, இந்து என்று பெயரே கூட பாரசீகம் கொடுத்த பெயரே தவிர, வேறு கிடையாது.


அதற்கு முன்பு, இந்த மதத்திற்கு வேத மதம், வைதீக மதம், பார்ப்பன மதம் என்றுதான் இருந்திருக்கிறது.


அதற்கு இந்து என்று வெறுப்போடு கொடுத்த ஒரு வார்த்தையாகும்.
சிந்து நதி பக்கம் வசித்தவர்கள் சிந்து என்று அழைக்க ப்பட்டனர். சிந்து, இந்து என்று இவர்கள் ஒரு தவறான நீண்ட விளக்கத்தை வலிந்து சொல்லக்கூடியவர்கள் ஆனார்கள்.


உருது மொழிதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்தி மொழி அல்ல!
ஆனால், அதேநேரத்தில், அங்கிருந்த பிரச்சினை அரபு மொழி, பாரசீக மொழி இவைகள் எல்லாம் கலந்துதான், உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஒரு செய்தி இருக் கிறதே, எந்த எழுத்தின்மூலமாக  பயன்படுத்தினார்கள் என்று சொல்லும்பொழுது, இந்துஸ்தானி என்று சொன்னார் கள்.


காந்தியார் ஆதரித்ததும், காந்தியார் வரவேண்டும் என்று விரும்பியதும் அதுதான்.


இந்தி என்பது பாசறை மொழி; அந்தப் பாசறை மொழியாக மற்றவர்கள் இருந்தார்கள்.


எனவே, வடபுலத்தைப் பார்த்தீர்களேயானால், உருது மொழிதான் அதிகமாக இருக்குமே தவிர, இந்தி மொழி அல்ல.


அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையில்,  உருது மொழி சேர்ந்த இந்துஸ்தானியில்,.


உருது எழுத்துக்களைப் பயன்படுத்துவதா? சமஸ்கிருத எழுத்துக்களாக இருக்கக்கூடியவைகளைப் பயன்படுத்து வதா? என்பதில் மிகப்பெரிய ஒரு போராட்டமாக இருந்தது.


அந்தப் போராட்டத்தைப்பற்றி சொல்லும்பொழுது, இதோ என் கைகளில் இருக்கின்ற ஒரு புத்தகம்; இது 60 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ஆதாரபூர்வமான புத்தகம். பவன்ஸ் புக் யுனிவர்சிட்டி - பாரதீய வித்யா பவனின் வெளியீடாகும்.


றிக்ஷீஷீதீறீமீனீ ஷீயீ பிவீஸீபீவீ ணீ பீஹ்   என்று மிகப்பெரிய மொழி அறிஞரும், வரலாற்று அறிஞருமான ஏ.கே.மஜூம்தார் அவர்கள் ஆழமான பல செய்திகளை இந்நூலில் சொல்லி யிருக்கிறார்.


இதையே, நாம் பண்பாட்டுப் படையெடுப்பு அடிப்படையில், இந்தியில் இந்தப் பக்கத்தில் எதிர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல, மற்ற பகுதிகளிலும் நடந்துகொண்டு இருக்கிறது என்பதற்கு, அவசியமாக, இந்த புத்தகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு செய்திகளை சுட்டிக்காட்டவேண்டும்.


இந்தியின் ரகசியம்பற்றி....


இந்தப் போராட்டம் நீண்ட காலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தப் போராட்டம் 1926 ஆம் ஆண்டு குடியரசில் பெரியார் தமிழுக்குத் துரோகமும், இந்தியின் ரகசியம் என்று எழுதியுள்ளார்.
ஒரு பக்கம் உருது என்று சொன்னால்,  அது இஸ்லாமியர்களுக்குச் சம்மந்தப்பட்டது; அது ஆரியக் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. அதற்கு விரோதமாக இன்னொரு மொழியை தயாரிக்கவேண்டும். சமஸ்கிருதம் என்பது நடைமுறையில் வேகமாக பரவவில்லை. காரணம், எல்லோரும் அதனைப் படிக்கிற மாதிரி இல்லை. சூத்திரர்கள் படிக்கக்கூடாது; படிக்கிற மொழியிலும் அது வரவில்லை; ஆகவே, என்ன செய்வது என்று யோசித்த நேரத்தில், ஒன்றை தயார் செய்தார்கள்; அதுதான் இந்தி மொழி. அந்த இந்தியை எப்படி தயாரித்தார்கள், எப்படி அதை பிரபலப்படுத்தினார்கள், மக்கள் மத்தியில் புழக்கத் திற்குக் கொண்டு வந்தார்கள் என்று சொல்லும்பொழுது, சமஸ்கிருத எழுத்து வேறு, இந்தி எழுத்து வேறு.


இந்தி - தேவநகரி ஸ்கிரிப்ட்

பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தி, இந்த எழுத்துக்கள் வந்தால்தான், இந்துத்துவ கருத்துகள் நிலைக்கும். அதற்குப் பதிலாக வேறு வந்துவிட்டால்,  உருது வேறு எங்கோ போய்விடும். இஸ்லாமியர்கள் தனியே பிரிந்துவிடுவார்கள். அவர்கள் பிரிந்து போகாமல் இருந்து வலியுறுத்தினால், நாம் இதனை ஏற்றுக்கொள்ளலாம். அவர்கள் தனியே போய்விட்டார்கள் பாகிஸ்தானுக்கு, இனிமேல் நம் ராஜ்ஜியம்தான்; ஆகவே, நமக்கு அதைப் பற்றி கவலையில்லை. எனவே, இந்தி - தேவநகரி ஸ்கிரிப்ட் என்ற வார்த்தை அரசமைப்புச் சட்டமானது.


இதற்கு ஆதாரமானதுதான் Problem of Hindi a study  என்ற இந்தப் புத்தகம்.
திராவிடர்களுக்கு எதிராக கலாச்சார ஊடுருவல் மற்றும் படையெடுப்பு என்ற முறையில், சமஸ்கிருத மயமாக்கல் ஏற்படுகிறது.


தேவபாஷை என்று சொல்லும்பொழுது, தமிழை என்ன சொன்னான், நீச்ச பாஷை என்று. ஏன் தமிழ் உள்ளே நுழையக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால், தமிழை நீச்ச பாஷை என்று சொல்லியிருக்கிறார்கள்.


நம்முடைய திருமணங்களில் தமிழ் இருக்கக்கூடாது;  நாம் கோவிலுக்குச் சென்றால், அங்கே தமிழ் இருக்கக் கூடாது; கோவிலில் அர்ச்சனை தமிழில் இருக்கக்கூடாது. அர்ச்சகர் தமிழராக இருந்தால், தமிழ் பேசக்கூடியவராக இருந்தால், சாமி செத்துப் போகும்; தீட்டாகிவிடும்.


இந்த நேரத்தில், ஒன்றை இடைச்செருகலாகச் சொல்ல வேண்டும்; நேரடியாக சம்பந்தப்படாத செய்தியாக இருந் தாலும்கூட, அதைச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை.



நேற்று எல்லோருக்கும் கலக்கமான செய்தி; தலைவர் கள் எல்லாம் கண்டனம் என்று நாளிதழ்களில் வெளிவந்த செய்தி.



தமிழன் கட்டிய கோவிலுக்குள், தமிழனே உள்ளே வரக்கூடாது என்ற இழிவு....
வேட்டிக் கட்டிக்கொண்டு சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை கிரிக்கெட் சங்கத்தில் அனுமதிக்கவில்லை. அதுபோன்ற இன்னும் சில சங்கங்கள் இருக்கின்றன. அவர்கள் சட்டதிட்டத்திலும் அந்த விதிமுறைகளைப் போட்டிருக்கிறார்கள். இதனைக் கண்டித்து எல்லோரும் அறிக்கை விட்டிருக்கிறார்கள்; கண்டனங்களைத் தெரிவித் திருக்கிறார்கள். வேட்டி கட்டியவர்களை அவமானப்படுத் தக் கூடாது; மற்றவர்களுக்கு என்ன உரிமையோ அதனை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும்; நம்முடைய பண் பாட்டுக்கு அடித்தளம் என்னவோ அதனை கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அதனை வரவேற்கிறோம்; ஆனால், அதே நேரத்தில், நாங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு கேள்வி கேட்கிறோம்,



அது என்னவென்றால், வேட்டி கட்டியதற்காக வெளியே போங்கள்; உள்ளே வரக்கூடாது என்று சொன்ன தற்கு, இவ்வளவு துடியாய்த் துடித்து, தமிழர்களுடைய அடையாளம் என்று துடியாய் துடிக்கின்றோமே, தமிழன் கட்டிய கோவிலுக்குள், தமிழனே உள்ளே வரக்கூடாது என்று சொல்லி, காலங்காலமாக இழிவுபடுத்தியிருக் கிறார்கள்; அதற்கு நமக்கு சொரணை வேண்டாமா, சூடு வேண்டாமா, அறிவு வேண்டாமா, மானம் வேண்டாமா?
வேட்டிக்கு இவ்வளவு பதறுகிறீர்கள்; நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். அதேநேரத்தில், இன்னும் ஒருபடி வேகமாக எதில் இருக்கவேண்டும். ஆனால், அது மரத்துப் போய்விட்டதே! இந்த இயக்கத்தைத் தவிர, இந்த மேடையைத் தவிர மற்றவர்கள் யாரும் சொல்வதில் லையே! அதனைச் சொல்லவேண்டாமா, இந்த நேரத்தில்!



வேட்டி கட்டுவதைவிட, மிக முக்கியம் என்ன வென்றால், சரியாகக்கூட வேட்டி கட்டாதவன்; வேட்டியை நம்மைப்போல் கட்டாமல், மாற்றிக் கட்டுபவன்; உள்ளே சென்று அவன்தான் மணி அடிப்பேன் என்கிறான். காஞ்சிபுரம் தேவநாதன்கள் என்னென்னமோ விஷயத் திற்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.



அதைப்பற்றி நம்மாட்கள் கவலைப்படவில்லையே!



வேட்டி கட்டுவது ஒன்றும் அவமானம் கிடையாது. அது நம்முடைய உடை
வேட்டி கட்டியதால், கிளப்புக்குள் விடவில்லை என்றால், அதற்காக நடவடிக்கை எடுக்க முடியாது; அந்த கிளப்புக்கு என சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அதற்காக வழக்குப் போட்டாலும், சட்ட திட்டங்கள் தப்பு என்றுதான் நீதிமன்றத்தில் சொல்வார்கள். அந்த சட்ட திட்டங்களை மாற்றவேண்டும் என்றுதானே சொல்வார்கள்.



காமராசர் முதற்கொண்டு வேட்டி கட்டிக்கொண்டுதான் சென்றார்கள். வேட்டி கட்டுவது ஒன்றும் அவமானம் கிடையாது. அது நம்முடைய உடை அதனை அவமானப் படுத்தக் கூடாது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். அதனை நாங்கள் எதிர்க்கவில்லை.



அதேநேரத்தில், இதற்குத் துடியாய்த் துடிக்கின்ற தமிழர்கள், தமிழர்களை கோவிலுக்கு வெளியில் நிற்க வைத்துவிட்டானே! தமிழன்தான் கல் கொடுத்தான்; தமிழன்தான் பணம் கொடுத்தான்; தமிழன்தான் கோபுரத் தைக் கட்டுகிறான்; அப்படி தமிழன் கட்டிய கோபுரத்தி மீது ஏறி நின்று, மணி அடித்துவிட்டு, தண்ணீரை ஊற்றுகிறான், கீழே நின்றுகொண்டு அதை வாங்கிக் குடித்துவிட்டு, அதுதான் திருக்குட நன்னீராட்டு விழா என்று சொல் கிறானே அவன்! இதைவிட மானக்கேடு வேறு என்னவாக இருக்கும்? இந்த மான உணர்ச்சி இல்லாமல் ஆக்குவதற் குத்தான் இந்தி மொழி மூலமாக சமஸ்கிருதம் திணிக்கப் பட்டது.



அதை எதிர்ப்பதன் அடிப்படை இதுதான். அந்த உணர்வுகள் நமக்கு வரும். ஆகவேதான், பெரியார் அவர்கள் இந்த உணர்வுக்கு வந்தார்கள். இந்த இரண்டையும் நீங்கள் முடிச்சுப் போட்டு பார்த்தால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.


சமஸ்கிருத மொழியை சூத்திரன் படிக்கக்கூடாது!

திராவிடர்களுக்கு எதிரான கலாச்சார ஊடுருவல்கள், மற்றும் படையெடுப்பு முறை, சமஸ்கிருத மயமாக்கல், தேவ பாஷை, தமிழ் நீச்ச பாஷை என்று சொல்லக்கூடிய நிலையில்,கடவுள் வழிபாடுகள் சமஸ்கிருத மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும்.
பிறப்பின் அடிப்படையிலான வேறுபாட்டை அது நிலைநிறுத்துகிறது. அதுமட்டுமல்ல, சமஸ்கிருதத்தைக் கற்க பெரும்பாலான மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நேற்று வரையில், டாக்டர்களாக வரவேண்டும் என்றால்,  சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும். சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், டாக்டருக்கு மனு போட முடியும். சமஸ்கிருத மொழியை சூத்திரன் படிக்கக்கூடாது; அப்படியென்றால் என்ன அர்த்தம், பார்ப்பான்தான் டாக்டராக வரவேண்டும்; அவர்கள்தான் மருத்துவக் கல்லூரிக்கு வரவேண்டும். அப்படி வந்தவர்கள்தான் ரங்காச்சாரியார்கள் எல்லாம்.



பிறகு திராவிடர் கழகம் வந்ததினால், பெரியார் பாடு பட்டதினால், அதனை நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் ரத்து செய்ததினால்தானே, இன்றைக்கு எல்லோருக்கும் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறந்து வைக்கப் பட்டிருக்கின்றன.



பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல, நம்முடைய கல்வி உரிமை பறிப்பு
ஆகவே, சமஸ்கிருதத்தை எதிர்க்கவேண்டும் என்று சொல்வது, பண்பாட்டுப் படையெடுப்பு மட்டுமல்ல, நம்முடைய கல்வி உரிமை பறிப்பும் ஆகும். அதுதான் மிக முக்கியம். ஆகவே, இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது  அகலமாகப் பார்த்தால், கல்வி உரிமை பறி போவதற்கும் அதற்கு இடமுண்டு.
எனவே, இந்தி போராட்டம் என்பது இருக்கிறதே, ஒரு மொழியை எதிர்த்து மட்டுமல்ல. அப்படிப் பார்த்தால், எத்தனையோ மொழிகளை அவரவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் போய் நாம் தடுத்தோம்? அவரவர் விருப்பப்படி மாலையில் சென்று படிக்கட்டும்; அதுபற்றி நமக்குக் கவலையில்லை. அதை மாணவர் களுக்கு கட்டாயமாக்கவேண்டும்; முதலில் இதைப் படிக்க வேண்டும்; சமஸ்கிருத கலாச்சாரத்தை உண்டாக்க வேண்டும் என்பதினால்தானே, இந்த நேர்மாறான சூழலை வந்திருக்கிறது. ஆகவே, சமஸ்கிருத மொழியினுடைய அடையாளம் என்பதற்குத்தான் அடிப்படையானது இது என்பது மிக முக்கியம்.

                                  
                               ------------------------”விடுதலை” 20-07-2014

Read more: http://viduthalai.in/page-4/84411.html#ixzz383pPNNBR
************************************************************************************

இந்தியைத் திணித்த ஆச்சாரியார் பிற்காலத்தில் இந்தியை எதிர்த்தது - பெரியாருக்குக் கிடைத்த வெற்றி!


தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை
சென்னை, ஜூலை 21- இந்தியைத் திணித்த ஆச்சாரியார் பிற்காலத்தில இந்தியை எதிர்த்தது பெரியாருக்குக் கிடைத்த வெற்றிதான் என்று உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இந்தியை நாம் எதிர்ப்பது ஏன்? என்ற தலைப்பில் 14.7.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:



இந்தி பற்றிய பிரச்சினைகள், சில முக்கிய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


1869 இல் இந்திக்கும், உருது மொழிக்குமான போட்டி - தகராறுகள் இருந்தன.
நியானி டால் இன்ஸ்டிடியூட் என்பதன் நடவடிக்கை 28.8.1869 இல் ஒரு வெளியீட்டைக் கொணர்ந்தது.


அரபு எழுத்துக்களின் மாற்றமே உருது என்று குறிப்பிட்டு, உருது மொழியைத் தாக்கி அது கருத்துகளைக் கூறியது.



இந்தி முதன்முதலாக மக்கள் மொழிபோல புழக்கத்தில் வர காரணமானவர் சுவாமி தயானந்தா (ஆரிய சமாஜ நிறுவனர்) அவர்களே, இந்து மத உணர்வின் அடிப்படையிலேயே இது உருவானது.



சமஸ்கிருதம் பேசினால், வெகு சிறுபான்மை மக்கள் மத்தியில்தான் தனது வேதக் கருத்துக்களைப் பரப்ப முடியும்; பெரும்பான்மை மக்களைச் சென்றடைய முடியாது என்பதற்காகவே தயானந்தாவும், சமஸ்கிருதம் தெரியாத வங்காளியான கேசப் சந்திரசென் அவர்களும் ஆரிய பாஷா என்ற ஹிந்தியை பொது மேடைப் பிரச்சாரங்களில் பயன்படுத்தினர்.
ஹிந்தி என்பது தேவ நகரி எழுத்துக்களைப் பயன் படுத்தி உருவான நிலையில், ஹிந்தி போராட்டம் பெரிதும் மத அடிப்படையிலே அடி நீரோட்டமாக அமைந்திருந்தது. அப்போது இங்கிலீஷ்பற்றிய பிரச்சினையே எழவில்லை.



இதை ஏ.கே.மஜூம்தார் அவர்கள் அவரது நூலில் Problem of Hindi a study என்று இந்திபற்றிய பிரச்சினை பக்கம் 18 இல் குறிப்பிடுகிறார்.


1906 ஆம் ஆண்டிலேயே தென்னகத்திலிருந்து வெளிவந்த மெயில் ஏட்டில் இந்தியைக் கண்டித்து தலையங்கம் தீட்டியது. இந்தி என்பது சமஸ்கிருத சொற்களை மிக அதிகமாகக் கொண்ட மொழி. இந்துஸ்தானி என்பது பாரசீக அரபுச் சொற்களைக் கொண்ட மொழி.



இந்தியை வட நாட்டு இந்துக்கள் பாராட்டுகின்றனர்.


இந்துஸ்தானியை வடநாட்டு முஸ்லிம்கள் போற்றி வந்தனர்.


இந்துக்களின் ஆதிக்கம் வலிமை பெற்றிருந்த காரணத்தால்...

காந்தியடிகள் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கு மிடையே உள்ள ஒற்றுமை உணர்வை வளர்க்க இந்துஸ்தானி மொழி பயன்படும் என்று கருதி, அதுவே இந்தியாவின் பொது மொழியாகத் திகழவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.
காங்கிரஸ் கட்சியில், இந்துக்களின் ஆதிக்கம் வலிமை பெற்றிருந்த காரணத்தால், இந்தி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்ததோடு, காந்தியார் அவர்களையும் நாளடைவில் அவர்கள் ஒப்புக்கொள்ளும்படியும் செய்துவிட்டார்கள்.



1906 ஆம் ஆண்டில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து பேசிய, வடநாட்டு இந்தி வெறி பிடித்த தலைவர் ஒருவர், இந்தி அல்லது இந்துஸ்தானிதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.


மெயில் ஆங்கில நாளேட்டின் தலையங்கம்


1906 ஏப்ரல் 18 ஆம் நாள் வெளிவந்த, மெயில் ஆங்கில நாளேடு அந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்ததோடு, திராவிடர்களைப் பொறுத்தவரை, ஆங்கிலம் எந்தளவிற்கு அந்நிய மொழியோ, அதே அளவிற்கு இந்தியும் அந்நிய மொழி என்பதை அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டு தலையங்கம் எழுதியிருந்தது.



எனவே, இந்த எழுச்சி என்பதன் வரலாறு இருக்கிறது பாருங்கள், ஒரு நூற்றாண்டுக்கு மேலே போய்க்கொண் டிருக்கின்ற வரலாறு. காரணம் என்னவென்றால், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பினுடைய அடிப்படை.
ஆகவேதான், மஜூம்தார் எழுதிய புத்தகத்தில் மிகத் தெளிவாக, அவர்கள் குறிப்பிடுவது, வகுப்புவாத கண்ணோட்டம் என்பதை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.


வகுப்புவாத கண்ணோட்டம் என்று சொல்வது மட்டுமல்ல, இன்னும் தெளிவாக ஒரு கருத்தை உங் களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும்.
ரவீந்திரநாத் தாகூருக்கு, காந்தியார் எழுதிய கடிதம்
அதற்கு என்ன ஆதாரம் என்று சொல்லும்பொழுது,   ஆங்கிலம் எப்படி அந்நிய மொழியோ, அதேமாதிரிதான், இந்தி மொழியும் திராவிட மக்களுக்கு அந்நிய மொழி என்று சொல்லும்பொழுது,



ரவீந்திரநாத் தாகூருக்கு 1918 ஆம் ஆண்டு காந்தியார் ஒரு கடிதம் எழுதுகிறார். மொழிப் பிரச்சினையில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்கிறார்.
அப்பொழுது தாகூர் சொல்கிறார்,



தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் இந்தி மொழியைக் கொண்டு போய் திணித்தால், திராவிட மக்கள் ஒருபோதும் அதனை ஏற்கமாட்டார்கள்; அவர்களைப் பொறுத்தவரை யில், இந்தி, ஆங்கிலம்போல் ஒரு அந்நிய மொழியே என்று தாகூர் கூறியிருக்கிறார்.



இதையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு புரிந்து, தொடர்ச்சியாக 1924 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்கள், திருவண்ணாமலையில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டிற்கு பெரியார் அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றியபோது இந்தி திணிப்பு குறித்து தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேசினார்.



1924 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் தலைமையுரை


இது யாருடைய உரை? பெரியார் அவர்களுடைய உரை. எப்பொழுது 1924 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாநாட்டில் தலைமை உரையாற்றும்பொழுது.
அதைத் தொடர்ந்து, இந்தியின் ரகசியம் என்ற கட்டுரையில் பண்பாட்டுப் படையெடுப்பைப்பற்றியும், நாகரிகம், ஒரு இனத்தை அழிப்பதற்கு, அவர்களுடைய மொழியை முதலில் அழித்துவிடுங்கள், அவர்களுடைய செல்வாக்கை அழித்துவிடுங்கள் என்று சொன்னதினுடைய அடிப்படையிலேதான் இது இருக்கிறது.



எனவே, காந்தியார், இந்தி பற்றிய தகவல்கள் அத்தனையும் அந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.



காந்தியார் அவரது சுயசரிதையில் எழுதுகையில்,
நான் எனது பயணங்களில் கண்ட ஒன்று, மார்வாடிகள் இந்தி ஆதரவுப் பிரச்சாரத்தையும், பசுப் பாதுகாப்பையும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு செய்வதைப் பார்க்கிறேன்...



இதற்குரிய விளைவாக இஸ்லாமியர், இதைப் பார்க்கும்போது இது வகுப்புவாத கலவரம் உருவாக்குவதாக அமைந்துவிட்டது என்பதே அது.
(இஸ்லாமியர்கள் மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் ஆனபடியால், இதை இந்துத்துவா அம்சமாக இஸ்லாமிய மக்கள் கருதினார்கள்).
எனவேதான்,  ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்று சொல்வதுதான் எங்களுடைய கொள்கை என்று வருகின்ற நேரத்தில், இந்த ஒரே மொழி சமஸ்கிருதம்; அதை நேரடியாகப் புகுத்த முடியாது என்பதால், அதற்கு முதல்படிதான் இந்தி.



அந்த இந்தியின்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்கிருத எழுத்து மறைந்து போய்விடும். இந்தியை ஒரு படிக்கட்டாக வைத்துக்கொண்டு, சமஸ்கிருத கலாச்சாரம்; ஒரே அமைப்பு, ஒரே நாடு என்ற அடிப்படையில், பசுப் பாதுகாப்பு போன்றவை எல்லாம் வரும். பன்மதங்கள், பல மொழிகள், பல அமைப்புகள் இருக்கின்ற இடத்தில், பல பண்பாடுகளுக்கு இடமே கிடையாது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த மொழியின்மூலமாக படையெடுத்து வந்தது; எப்படி வருகிறது என்று பார்க்கின்றபொழுது, இதுதான் நண்பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இதை பெரியார் கண்ணாடி போட்டு பார்க்கின்ற நேரத்தில் மிகத் தெளிவாகத் தெரியும். அந்த அடிப்படை யில், இந்தப் பிரச்சினை பல்வேறு பிரச்சினைகளாக ஆவதற்கு என்ற வாய்ப்பு வரும்.
இன்றைக்கு வந்திருக்கிற செய்தி ஒன்றை சொல்கிறேன்.


ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் வெளிவந்த கட்டுரை!


மீண்டும் இந்தி எதிர்ப்பு தேவையற்றது! என்ற தலைப் பில் ஆர்.எஸ்.எஸ். வார ஏட்டில் கட்டுரை வெளியிடப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையை ஆர்.எஸ்.எஸினு டைய மாநில பிரச்சார அணி தலைவர் எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில், தமிழகத்தில், 1938 இலும், 1965 இலும் இருந்த சூழ்நிலை ஏன் என்பதை மறந்துவிடக் கூடாது. 1965 இல் தமிழகத்தில் இந்திக்கு எதிராக, தீவிரமான போராட்டங்கள் நடை பெற்றதற்கு முக்கியமான காரணம், காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியால், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை ஏற்பட்ட விரக்தியே, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வேகத்தைக் கூட்டியது. மேலும் அவர்,
பணிபுரியும் அடியார்களும், அநேகர்களும், டுவிட்டர், பேஸ்புக் போன்று தங்களுடைய சமூக வலைதளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் ஆணையாகும்.
எப்படி புதிதாக ஒரு கரடி விடுகிறார் பாருங்கள்;


இங்கே கவிஞர் அவர்கள் வரவேற்புரையில் சொன்னாரே, தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் புதிதாக அமைந்துள்ள மத்திய அரசு, இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மய்யத்தை மீண்டும் செயல்பட உத்தரவிட்டுள்ளது.



மத்திய அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு அரசு ஆணைகள் இந்தி மயமாகியுள்ளன. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத ஊழியர்களுக்கு காரணம் கேட்கப்பட்டுள்ளது. புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம்


தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவல கங்களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப் பட்டுள்ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



சென்னையில் உள்ள பல்வேறு மத்திய அரசு அலுவல கங்களில் 11 பேருக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையொப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப்போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள்ளது.



மேலும் அலுவலகக் கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத்துடன் தற்போது இந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.



மறைமுகமாக பயமுறுத்தி, பிரிப்பதைத் தவிர வேறு என்ன? அரசாங்க மொழியாகிவிட்டால், பிறகு அதை பேசுகிறான். ஆங்கிலத்தை ஏன் தவிர்க்க முடியாது. வெள்ளைக்காரன் அரசாங்க மொழியாக்கினான். தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல், கடைசிவரை ஆங் கிலத்திலே படித்துவரலாம் என்கிற வெட்கங்கெட்ட நிலை இருக்கிறது. ஆகவே, இதில் தெளிவாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால், உண்மைகளை மறைத்து இவர்கள் சொல்கிறார்கள். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பல பேர் படித்துவிட்டு எங்கே வேலைக்குச் செல்கிறார்கள்? வளைகுடா நாட்டிற்குத்தானே செல்கிறார்கள். அரபு மொழி படித்தால், நல்ல வருமானம் கிடைக்கிறது. அரபு மொழியை கட்டாயமாக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ். அரசு தயாராக இருக்கிறதா? தயவு செய்து நீங்கள் சிந்திக்கவேண்டாமா?



இந்தி மொழியைவிட, அரபு மொழி வளமான மொழி தானே! உருது படித்தவர்கள் எல்லாம் அங்கே செல்லலாமே, அரபு மொழியும், உருது மொழியும் கிட்டத்தட்ட ஒன்றானதுதானே! அங்கே போய் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டால், என்ன சொல்வார்கள்? தயவு செய்து இதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.



இந்தி மொழி தெரிந்தவர்களுக்கே தமிழ்நாட்டில்தானே வேலை!
அதுமட்டுமல்ல, இந்தி படித்தால், வேலை கிடைக்கும், வேலை கிடைக்கும் என்று கிளிப் பிள்ளை போல சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்களே! பிகார் மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தி மொழி தெரிந்தவர்கள் தானே, அங்கே வேலையில்லாமல், தமிழ்நாட்டில்தானே கட்டட வேலைகள் மற்ற வேலைகளை நாம் கொடுக் கிறோம். இங்கேதானே அவர்கள் முழுக்க முழுக்க வரு கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் இல்லையென்றால், கட்டட வேலைகளே கிடையாது என்ற நிலை இருக்கிறதே! அவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு, தமிழில் பேசுகிறார்களே!



ஏற்கெனவே நாம் சொல்லியிருக்கிறோம், இந்தி மொழியில் யாரும் பேசக்கூடாது என்று நாம் உத்தரவு போடவில்லை. இந்தியை யார் வேண்டுமானாலும் விரும் பலாம்; வடநாட்டிற்கு நாம் செல்கிறோம், அங்கேயுள்ள தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்; அங்கேயிருந்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகிறோம்; அவர்கள் தமிழில் உரையாற்றுகிறார்கள். தந்தை பெரியாரின் நூல்களை வடமாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, இந்தி மொழியில் மொழி பெயர்க்கிறோம், ஒரியா மொழியில் மொழி பெயர்க்கிறோம், தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கிறோம், அசாம் மொழியில் மொழி பெயர்க்கிறோம். நமக்கு ஒன்றும் மொழியின்மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பில்லையே! பண்பாட்டுப் படையெடுப்பாக வைத்து, கட்டாயமாக்கி, இந்த நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறவர்களின் உள்நோக்கம் என்ன?



எந்தக் காரியத்தையும் சாதாரணமாக செய்யும்பொழுது அதற்கு மரியாதை உண்டு. அதையே உள்நோக்கத்தோடு செய்யும்பொழுது, எப்படி அறிவாளிகள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? திரிக்கின்ற வரை லாபம் என்று இருக்க முடியுமா?



ஆகவேதான், நண்பர்களே, இப்பிரச்சினை மிக முக்கியமானதாகும். தற்போது ஒரு தலைமுறையினர் இந்திக்கு எதிராகத் திரும்பியதால், தீனதயாள்ஜி கொடுத்தாரே, அதையே ஏன் இப்பொழுது மோடி ஜி மாற்றுகிறார்?
அய்க்கிய பாரதீய ஜனசங்கத் தலைவர் தீனதயாள் உபாத்யாயா (ஒரு பத்திரிகையாளர்) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது,
அந்தக் கேள்வி என்னவென்றால், மத்திய அரசு நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளை இந்தியில் எழுதவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள் ளதே, இதுபற்றி தங்கள் கருத்து என்ன கேட்கிறார்கள்?
அவரது பதில்,



ஒரு தேர்வை எந்த மொழியில் எழுதவேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்யக்கூடாது. இதற்கு மாறாக, தேர்வு நடத்தும் கல்வியாளர்களும், தேர்வு எழுதும் மாணவர்களும் முடிவு செய்யவேண்டும். அரசியல்வாதிகள் இந்த மாதிரியான விஷயங்களில் தங்களது கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்று தீனதயாள்ஜி அழகாக சொல்லி யிருக்கிறார்கள்.



தீனதயாள்ஜி கொடுத்தாரே, அதையே ஏன் இப்பொழுது மோடிஜி மாற்றுகிறார்? அதுதானே மிக முக்கியம்!



இளைஞர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்

ஆகவேதான் நண்பர்களே, இப்பொழுது அந்தப் பிரச்சினை என்பது, இருக்கின்ற பிரச்சினைகளில், ஈழத் தமிழர்கள் பிரச்சினையாகட்டும்; தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்ற பிரச்சினையாகட்டும் அல்லது விலைவாசி பிரச்சினையாகட்டும், எந்தப் பிரச்சினை களிலும், எல்லாம் பழைய கருப்பனாகத்தான் இன்னமும் இருக்கிறது. பழைய கள், புது மொந்தையாகத்தான் இருக்கிறது. இன்னுங்கேட்டால், அந்தப் பழைய கள் புளித்துப்போன கள்ளாக இருக்கிறது, புது மொந்தையில் ஊற்றினாலும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக் கிறது என்று மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்த காரணத் தினால்தான், நண்பர்களே, இதை மீண்டும் பல்வேறு வாதங்களை எடுத்துச் சொல்லி, அதன்மூலமாக இவர்கள் புதிய மெருகேற்றலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் உடன்படக் கூடாது. அதிலும், குறிப்பாக, இணைய தளம்தான் எல்லாமே என்று இருக்கக்கூடிய 18 வயது முதல் 24 வயது இளைஞர்கள், இணைய தளத்தி லேயே தன்னுடைய வாழ்க்கையை செலவழித்துக் கொண்டிருக்கக்கூடியவர்கள், பழைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.


இவை அத்தனையும் இணைய தளத்திலும் வெளியிடப் படும். அதற்கு வசதியாகத்தான் இந்த செய்திகள், மின் னொளி மூலமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


ஆகவே, இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்களும், திராவிடர் இயக்கமும் தொடர்ந்து அந்தப் பணியைச் செய்யக்கூடிய நிலையிலே இருக்கிறது. இன்னமும் யாரும் அசந்துவிட வில்லை. இன்னுங்கேட்டால், இந்த இயக்கம் எப்படிப் பட்டது என்பதை புரிந்துகொள்வதற்கு,


Hindi Never, English Ever 


எந்த ராஜகோபாலாச்சாரியார், நான் யாரைக் கேட்டுக்கொண்டு இந்தியைத் திணிக்கவேண்டும்? என்று கேட்டாரோ, அதே ராஜகோபாலாச்சாரியார்,  பின்னாளில் எப்படி மாறினார்?  என்ன சொன்னார், Hindi Never, English Ever    என்று சொன்னாரே!


யார் வெற்றி பெற்றார்கள்? பெரியார் வெற்றி பெற்றார்; திராவிடர் இயக்கம் வெற்றி பெற்றது.


எப்பொழுதும் தயாராக இருப்போம்! எப்பொழுதும் விழிப்போடு இருப்போம்!
ஆகவே, நண்பர்களே, இந்தப் போராட்டம் ஒரு தொடர் போராட்டம். எப்படி தேவாசுரப் போராட்டமாக இனப் போராட்டமாக, நம்முடைய அரசியல் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறதோ, அதுபோலத்தான், மொழிப் போராட்டம் என்று சொன்னாலும், முழுக்க முழுக்க இது ஒரு இனப் போராட்டம்; ஒரு பண்பாட்டுப் பாதுகாப்புப் போராட்டம். எனவே, எப்பொழுதும் தயாராக இருப்போம்! எப்பொழுதும் விழிப்போடு இருப்போம்!
எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் கேட்டார்களே, அதுபோல, எப்பக்கம் வந்தாலும், எந்த ரூபத்தில் வந்தாலும், அதனை எதிர்ப்பதற்குத் தயாராக இருப்போம், அதிலொன்றும் சந்தேகமில்லை.


உணர்வுகள் மங்கிவிடவில்லை; மறைந்துவிடவில்லை


இப்பொழுது, அடக்கமாக, அமைதியாக இருக்கிறார்கள், இல்லை என்று விளக்கம் சொல்கிறார்கள் என்று சொல்லும்பொழுது, உடனடியாக நாம் போராட்டக் களத்தில் இறங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைப்படும்பொழுது இந்த ஆயுதம், பெரியார் கொடுத்த ஆயுதம் நமக்கு எப்பொழுதும் கையில் இருக்கிறது. மக்கள் தயாராக இருக்கிறார்கள்; உணர்வுகள் மங்கிவிடவில்லை; மறைந்துவிடவில்லை; மலிந்து விடவில்லை.


எனவே, நம்முடைய பணிகள் தொடரும், தொடரும்; பண்பாட்டைப் பாதுகாப்போம் என்று கூறி முடிக்கிறேன், நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

--------------------------- இவ்வாறு தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

                                ----------------------”விடுதலை” 21-07-2014

9 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மீகம்?

ஆண்கள் நெற்றியில் விபூதியை மூன்று பட்டை யாக இட்டுக் கொள்ள வேண்டும். அதன் நடுவில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குங் குமத்திற்கு மேலே சிறு கீற்றாக திருநீற்றை எடுத் துக் கொள்ளவேண்டும் என்பது அய்தீகம்.

சிவனின் தலையில் சூடிக் கொள்ளப்பட்ட கங்கை - மாதவிடாய்த் தருணத்தில் வழிந்த குருதி தான் குங்குமம் என்று கூறப்படுவதுபற்றி சிந்திக் கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/84536.html#ixzz38LSrIRxb

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அடிகோலுவதா?


விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள் 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை மறந்திருக்கக் கூடும். ஆனால், முஸாபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை அவர்கள் மறக்கக்கூடாது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், தொகாடியாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளை கெட்டுள்ளது. உடனே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், தொகாடியா மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

சிபிஅய் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இப்படித்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் துவேஷத்தைக் கிளப்பி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், மத உணர்வு களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் பேச்சு இது - வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

சங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே வன்முறையைத் தூண்டும் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் கள் ஆயிற்றே அவர்கள். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில், மேலும் ஆணவக் கொம்பு கூர்மையாக முளைக்காதா?

தேர்தல் நேரத்தின்போதே கூட வி.எச்.பி.யின் தலைவரான இதே பிரவீன் தொகாடியா என்ன பேசினார்?

குஜராத் மாநிலம் பாவ் நகர் மற்றும் ராஜ்கோபு தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கக்கிய நாராசமான நச்சுவார்த்தைகள் என்ன தெரியுமா?

இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதி களில் ஒரு சில இஸ்லாமியர் குடும்பங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறவேண்டும். அப்படி வெளியேற மறுக்கும் பட்சத்தில் கற்கள் மற்றும் டயர்களைக் கொண்டு செல்லுங்கள் - டயர்களை எரித்து முஸ்லிம்களின் வியாபார நிறுவனத்துக்குள் எறியுங்கள். கற்களையும், தக்காளிகளையும் வீசுங்கள். ராஜீவ் கொலையாளி களுக்குத் தூக்கிலிருந்து மன்னிப்பு வழங்கும்போது எந்த சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது என்று சொன்னதோடு, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய 48 மணிநேரம் அவகாசமும் கொடுத்தார்.

குஜராத் முதல்வர் மோடி அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? எப்படி எடுக்கும்? ஆயிரக் கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை வெட்டிப் பலி கொடுத்த குஜராத்தின் காவல்துறை ஆயிற்றே!

இப்பொழுது மத்தியிலும் ஆட்சி வந்தாகிவிட்டது. தொகாடியாக்கள் எந்த எல்லைக்கும் சென்று கொக்கரிப்பார்கள்.

இந்த வி.எச்.பி.,க்கள் மக்களிடத்தில் திரிசூலங்களை நேரிடையாகவே அளித்து முஸ்லிம்களையும், கிறித் தவர்களையும், மதச்சார்பின்மைப் பேசும் இந்துக் களையும் குத்தச் சொல்பவர்கள் ஆயிற்றே - குடலைச் சரிக்கச் சொன்னவர்கள் ஆயிற்றே! எந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது?

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு இந்துத்துவாவாதி! எங்கள் கடவுள்களே ஆயுதம் தாங்கியுள்ளன - நாங்களும் ஆயுதம் தாங்குவோம்! என்று விஷம் கக்கியுள்ளார்!

இது அப்பட்டமான ஆயுதக் கலாச்சாரத்துக்குத் தூபம் போடும் துடுக்குத்தனமான வன்முறை வெறியின் வெளிப்பாடு.

தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவானேன்?

முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், விளைவு எங்கே போய் முடி யும் என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்குத் தெரியவே தெரியாதா?

அமைதிப் பூங்காவான மண்ணைக் காவிகள் கலவர மண்ணாக மாற்றிட நினைக்கிறார்கள் போலும்!

சட்டம் தன் கடமையைச் செய்யுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84539.html#ixzz38LTPnSDX

தமிழ் ஓவியா said...


சமுதாய ஆதிக்கமே தேவை


நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நாம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான் பெயர்.

- (விடுதலை, 4.10.1948)

Read more: http://viduthalai.in/page-2/84538.html#ixzz38LTY0mDN

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


உச்சிஷ்ட கணபதி!

உச்சிஷ்டம் என்றால் எச்சில்; சாப்பிட்டபின் உள்ள எச்சத்தை - மீதியை இவருக்கு நிவே தனம் செய்தால் இந்தக் கணபதி மகிழ்வாராம்.

ஓ, எச்சக்கலை என்று இந்தக் கடவுளைச் சுருக்க மாகச் சொல்லலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/84477.html#ixzz38LV4vToo

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

பாலியல் குற்றவாளிகள்

செய்தி: பாலியல் பலாத் காரங்களை கடவுளால் கூடத் தடுக்க முடியாது.
- உ.பி.ஆளுநர் அஜிஷ்குரேஷி சிந்தனை: நம் நாட்டுக் கடவுள்களில் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகள் ஆயிற்றே! அவர்களால் எப்படித் தடுக்க முடியுமாம்?

Read more: http://viduthalai.in/page1/84480.html#ixzz38LVG1vto

தமிழ் ஓவியா said...


வெல்லட்டும் பிகார் முயற்சி!

பிகாரில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்; இந்த மூன்று கட்சிகளுக்குமே பா.ஜ.க. தான் பொது எதிரி என்று பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்) கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட நேரத்தில்கூட அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சிறிதும் பொருட் படுத்தியவர் அல்லர் பிகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார்.

மோடியின் கண் மூடித்தனமான இந்துத்துவா வெறியை ஒருக்காலும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி இருந்தும்கூட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது, அவர் படம் பொறித்த விளம்பரங்கள் பிகார் மாநிலத்தில் இடம் பெறக் கூடாது என்று கறாராகக் கூறியதோடு அல்லாமல், அவ்வாறே செயலும்படுத்தி தேர்தலில் வென்று காட்டியவரும்கூட!

சமூக நீதிக் கொள்கையில் அடங்கா ஆர்வம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்.

இடைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதுகிற கருத்து மிகவும் சிறந்ததே! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலில் (அஜண்டாவில்) இடம் பெற்றவைகளை மள மளவென்று செயல்படுத்திடத் துடியாய்த் துடிக்கிறது.

அய்ந்தாண்டு ஆட்சி தொடருமேயானால் அதன் விளைவு மிகவும் மோசமாகத் தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.

அதற்கிடையே பல மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் முக்கிய கடமையை ஆற்றுவதில் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இந்தியாவுக்கே நிதிஷ்குமார் வழிகாட்டி விட்டார்.

வட மாநிலங்களைப் பொறுத்தவரை, லாலு பிரசாத்யாதவ், முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஓரணியில் நிற்பார்களேயானால், வட மாநிலங்களில் அரசியல் தட்ப வெப்ப நிலையே தலைகீழாக மாறி விடும் என்பதில் அய்யமில்லை!

நியாயமாக, இந்தச் சமூக நீதி அணியில், மதச் சார்பற்ற அணியில் லோக் தள் கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இணைந்திருக்க வேண்டும்.

பி.ஜே.பி.யின் மதவாத நெடியைப் பொறுக்காமல் தான் அந்தக் கூட்டணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பஸ்வான்; இந்த நிலையில் கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் நின்று, மத்திய அமைச்சராகவும் ஆகி விட்டார்.

இன்றைய மத்திய ஆட்சி மதவாதத் தன்மை கொண்டது மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானதும் கூட!

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினார் என்பதற்காக வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர் என்பது வி.பி. சிங்கின் நெருங்கிய தோழரான ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமே!

தனிப்பட்ட முறையில் தலைவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், அகில இந்திய அளவில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து சமூக, அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.

இந்த முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்திய அரசிய லிலும் சமூகத்திலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.

பிகாரில் இடைத் தேர்தலில் இந்தக் கூட்டணி வென்று காட்டினால், அது இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டப்பட்டதாக அமையும்!

வெல்லட்டும் அந்த முயற்சி!

Read more: http://viduthalai.in/page1/84485.html#ixzz38LVWNY3l

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக் கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தின் நோக்கமாகும்.
(விடுதலை, 21.7.1950)

Read more: http://viduthalai.in/page1/84484.html#ixzz38LVe27a9

தமிழ் ஓவியா said...


மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

விடுதலை 15.7.2014 நாளிதழில் வெளி வந்த மாலை மலரிலும் ஆர்.எஸ்.எஸா? என்று பெட்டிச் செய்தி படிக்கும்போது தமிழ்நாளேடுகள் - இன உணர்வற்று எத் துணை அடிமைத்தனமாக மாறிவிட்டன என எண்ணும்போது மிகவும் கவலையாக உள்ளது.

46 பக்கங்களைக்கொண்ட அந்த மலரில் எந்த ஒரு இடத்திலும் பெரியார் பெயர் வராமல் மிகவும் ஜாக்கிரதையுடன் மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவர் களோடு இருக்கும் படத்தில் கூட பெரியார் கிடையாது. பார்ப்பன பத்திரிகையின் திரிபு வேலைகளை பற்றித் தெரியும்.

அவர்களின் சூழ்ச்சிகளும் நமக்கு புரியும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தந்தை பெரியாரின் தொண்டால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் - நடத்துபவர்களின் தமிழ் பத்திரிகைகள் இவ்வாறு நடந்து கொண்டால் யாரைப்போய் நொந்து கொள்வது?

விடுதலை இதழ் மட்டும் இல்லையென்றால் இத்தகைய செய்திகளை வெளிப்படுத்து வதற்கு வேறு நாதியில்லை. தமிழன் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிலிருந்து மீண்டு வர பாடுபடும் ஒப்பற்ற இயக்கம் திராவிடர் கழகம்.

அந்த தமிழ் மாந்தனை மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றவனாக மாற்று வதற்கு உரியதை விளக்கமாக வழங்குவது விடுதலை ஆனால் மாலை மலர்கள் இப்படியெல்லாம் இருட்டடிப்பதன் மூலம் காமராசரையும் பெரியாரையும் பிரிக்க முடியாது.

பெரியாரை மறைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனாரின் குடுப்பத்தாரின் மாலைமலர் ஏடு வெளி யிடுகிறது என்றால் இதுதான் தமிழர்களின் யோக்கியதை என்று தந்தை பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. தினமலர் களை, தினமணிகளை நொந்து என்ன பயன்?.

இந்த வாசகங்கள் எல்லாம் அழியாக் கல்வெட்டுகள் - மாலை மலர்களே திரும்பிப் பாருங்கள் - திசை தவறிப் போகாதீர்கள்.

- தி.க. பாலு, திண்டுக்கல் மாவட்ட தி.க. தலைவர்

Read more: http://viduthalai.in/page1/84491.html#ixzz38LWAcVWM

தமிழ் ஓவியா said...


இந்தித் திணிப்பைப் போன்று, சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது மத்திய அரசின் முடிவுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் எதிர்ப்பு


சென்னை, ஜூலை 22_ இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடியாதோ, அதைப்போல் சமஸ்கிருத திணிப்பையும் ஏற்க முடியாது என்று மத்திய அரசின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் எதிர்ப்பு தெரிவித்துள் ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் நிறுவனமான சி.பி.எஸ்.இ. இயக்குநர் சார்பில் நான்கு பக்க சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், ஆகஸ்டு மாதம் இரண்டாவது வாரத்தை சமஸ்கிருத வார மாகக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 30 ஆம் தேதியன்று பிறப் பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சமஸ்கிருதம் என்றால் என்ன என்றே தெரியாத பகுதி களுக்கும்கூட பொருந்தும் வகையில் உள்ளது என்று மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சமஸ்கிரு தத்தைக் கற்பிக்கவும், பயிலவும் சி.பி.எஸ்.இ. உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஆணிவேர் சமஸ்கிருதம்தான். இதில் இந்திய அறிவுக்களஞ்சியம் உள்ளது என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பை எப்படி ஏற்க முடி யாதோ, அதைப் போல சமஸ்கிருதத் திணிப் பையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதற்கு தங்கள் கண்ட னத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பி னரான நண்பர் இல.கணேசன், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதால் தமிழ் மொழிக் கும், தமிழ்நாட்டுக்கும் பாதிப்பில்லை என்றும், அ.தி.மு.க.வில் அகில என்பதும், திராவிட என்பதும் சமஸ்கிருத வார்த்தை கள்தான் என்றும், சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்றும், அதே நேரத்தில் செம்மொழித் தமி ழுக்கு தை மாதத்தின் முதல் ஏழு நாட்களை தமிழ் மொழி வாரம் என்று கொண்டா டலாம் என்றும் கூறியிருக்கிறார்.

சமஸ்கிருத வாரம் கொண்டாடினால்...

அவர் வாதப்படியே சமஸ்கிருத வாரம் கொண்டாடினால் மேலும் மேலும் சமஸ் கிருத வார்த்தைகள் உள்ளே வர வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்பதையும் நினைவிலே கொள்ள வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு மாநிலத்திலும், அதன் மொழி சார்ந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டு மென்றும், தமிழ்நாட்டில் தமிழ் செம்மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் சம்பந் தப்பட்ட மொழிகளின் வாரத்தையும் கொண் டாட உத்தரவிடுங்கள் என்றும், சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை ஏற்கமுடியா தென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியதாக செய்தி வந்தது.

இதே ஜெயலலிதா, 8.7.2014 அன்று காமராஜர் சாலையிலே அமைந் துள்ள விவேகானந்தர் இல்ல வளாகத்தில், தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதி உதவி யுடன் ராமகிருஷ்ணா மடம் நிருவாகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தைக் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த நிகழ்ச்சி பற்றியும் செய்தி வெளிவந்தது.

விவேகானந்தரின் 150- ஆம் ஆண்டு பிறந்த ஆண்டு விழாவினையொட்டி 8,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பண்பாட்டு மய்யத்தில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிப் பாடங் களை பயிற்றுவித்தல் போன்ற பல்வேறு பண்பாட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்படும் என்று தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந் தார்கள்.

தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மய்யத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பயிற்று விக்க அமைந்துள்ள பண்பாட்டு மய்யத் திற்கு அரசின் சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி செய்து விட்டு, மத்திய அரசுக்கு தமிழ கத்திலே சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதுகிறார்.

தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்தி மொழியையோ, சமஸ்கிருத மொழியையோ எந்தப் பிரிவு மக்கள் மீதும் திணிப்பதை என் றைக்கும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடு வதை ஏற்றுக்கொள்ள இயலாது.

எனவே, மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு நம்முடைய கடுமையான கண்டனத் தையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, ஏற்கெனவே இந்தி மொழி பற்றிய அறிவிப் பில் மத்திய அரசு அது இந்தி மொழி பேசுகின்ற மாநிலங்களுக்கு மட்டுமே உரிய அறிவிப்பு என்று அறிவித்ததை போல, இந்த சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியும் உடனடியாக உரிய திருத்த அறிக்கையினை வெளியிட வேண்டுமென்று வலியுறுத்து கிறேன்.

_ இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/84506.html#ixzz38LWfzAdr