Search This Blog

24.7.14

தனித்தமிழில் பெயர் வைத்துள்ள ஒரே ஒரு பார்ப்பனரைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள்!


தேஜ் நாராயணன் டண் டன் என்பவர் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெயகிருஷ்ணா ஜெய கன்யாகுமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரி யர் டாக்டர் நரசிம்மாச்சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப் பிட்டுள்ளார் (30 ஆண்டு களுக்குமுன்).

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந்தார்கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900. மாதம் ஒன்றுக்குச் சம்பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் படிக்க ஒரு மாணவர்கூட இல்லையாம். 12 ஆசிரியர்களும் வேலை யின்றிச் சம்பளம் பெற்று வந்தனர். 

துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறுமனே பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறோமே என்ன செய்ய? என்று குறைபட்டுக் கொண்டார்கள். துணை வேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதி யன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல்கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூலகத் திற்குச் சென்று ஏதாவது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறிவுரை வழங்கினா ராம்!


இன்றைக்கு மட்டும் என்ன வாழ்கிறதாம்? 0.01 சதவிகிதம் மக்கள் மட்டுமே பேசுவதாகச் சொல்லப்படுகிற சமஸ்கிருதம் இந்தியாவில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இருக்கத்தான் செய்கின்றன. ஈ ஓட்டிக் கொண்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் சமஸ்கிருதப் பேராசிரியர்கள்.
ஒரு காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா? சென்னை மாநிலக் கல்லூரி யில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த கா.நமசிவாய முதலி யாருக்கு மாதச் சம்பளம் ரூ.81, அதேநேரத்தில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300. தந்தை பெரியார் குடிஅரசு இதழில் எழுதிய காரணத்தால், நீதிக்கட்சியைச் சேர்ந்த அன்றைய பிரதமர் அமைச்சர் பனகல் அரசர்  அந்த வேறுபாட்டைக் களைந்தெறிந்தார்.


பனகல் அரசருக்கு சிறீரங் கம் நகராட்சி வேண்டுமென் றே சமஸ்கிருதத்தில் வர வேற்பிதழ் அடித்துக் கொடுத் தது. பனகல் அரசரோ சமஸ் கிருதத்திலேயே பதிலடி கொடுத்து அவாளின் மூக்கை வெட்டினார் என்ப தெல்லாம் சுவையான செய்திகள்.


வாஜ்பேயி அமைச்சர வையில் மனித வள மேம் பாட்டுத் துறை அமைச்சராக விருந்த முரளி மனோகர் ஜோஷி ஓர் கல்வி ஆண் டையே (1998-1999) சமஸ் கிருத ஆண்டாக அறிவித்து மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி அழவில்லையா?


கல்வி நிறுவனங்களில் சரஸ்வதி வந்தனா பாட வேண்டும் என்று வற்புறுத்த வில்லையா?

பார்ப்பனர்கள் இப்படி யெல்லாம் மொழி வெறியராக இருந்துகொண்டே மற்றவர்களைப் பார்த்து மொழித் துவேஷிகள் என்று கூசாமல் அர்ச்சிப்பதுதான் வேடிக் கையும், வாடிக்கையும் ஆகும்.


தனித் தமிழில் பெயர் வைத்துள்ள ஒரே ஒரு பார்ப்பனரைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். (ஒரே ஒரு பரிதிமாற் கலை ஞரைத் தவிர - அதுகூட அவர் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரிதான்).
சமஸ்கிருத எடைக் கருவியை வைத்துப் பார்ப்பனர்களை எளிதிற் புரிந்துகொள் ளலாம்.

             -              --------------- மயிலாடன் அவர்கள் 23-07-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

60 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மீகம்?

ஆண்கள் நெற்றியில் விபூதியை மூன்று பட்டை யாக இட்டுக் கொள்ள வேண்டும். அதன் நடுவில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குங் குமத்திற்கு மேலே சிறு கீற்றாக திருநீற்றை எடுத் துக் கொள்ளவேண்டும் என்பது அய்தீகம்.

சிவனின் தலையில் சூடிக் கொள்ளப்பட்ட கங்கை - மாதவிடாய்த் தருணத்தில் வழிந்த குருதி தான் குங்குமம் என்று கூறப்படுவதுபற்றி சிந்திக் கலாமே!

Read more: http://viduthalai.in/e-paper/84536.html#ixzz38LSrIRxb

தமிழ் ஓவியா said...

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவது ஜனநாயக நெறிமுறையல்ல!


கூட்டத் தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்களை பங்கேற்கச் செய்யாததை- மறுபரிசீலனை செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவது ஜனநாயகம் அல்ல; எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை ஆக்க ரீதியாக எடுத்துக்கொள்வதுதான் ஆளும் கட்சிக்கு நல்லது - இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் தி.மு.க. உறுப்பினர்களை சட்டப்பேரவையில் பங்கேற்கச் செய்யாமல் ஆக்கியதை பேரவைத் தலைவர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

அண்மைக்காலமாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் உரிமைகள் பெரிதும் பறிக்கப்பட்டதாக, அத்துணை எதிர்க்கட்சிகளும் மாறி மாறி வெளிநடப்புச் செய்வதும், வெளியேற்றப்படுதலுமான காட்சிகளும் தமிழகச் சட்டமன்றத்தின் மாண்பினைக் காப்பாற்ற உதவிடக் கூடியதாக அமையாது.

அன்று அண்ணா என்ன சொன்னார்?

15 உறுப்பினர்களையே கொண்ட கட்சியாக 1957 இல் தி.மு.க. சட்டமன்றத்தில் முதல் முறையாக நுழைந்து, எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்தபோது, சட்டமன்ற (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த) சபாநாயகரைப் பாராட்டி வரவேற்றுப் பேசும் போது, அறிஞர் அண்ணா அவர்கள், ஜனநாய கத்தில்- ஆளுங் கட்சிக்கு லாலி பாடுவது எதிர்க் கட்சிகளின் வேலையாக இருக்க முடியாது; எதிர்க்கட்சி என்பது ஆளுங்கட்சிக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அது சரியான வழியில் செல்லுகிறதா என்று கண்காணிக்கும் வேலையில் ஈடு படுவதற்கே உள்ளது என்று காங்கிரஸ் கட்சி பெரும் பான்மை பெற்றிருந்த நிலையில் குறிப்பிட்டுப் பேசி யுள்ளார் அண்ணா அவர்கள்.

அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள ஆளுங்கட்சி, அண்ணாவின் நயத்தக்க நாகரிக அறிவுரையைப் பின்பற்ற வேண்டியது நியாயமான கடமை அல்லவா?

அவையில் இல்லாதவர்களைப்பற்றிப் பேசலாமா?

ஆளுங்கட்சி மரபுகளையெல்லாம் புறந்தள்ளுவது போல, அவையில் இல்லாதவர்களைப்பற்றி தேவையற்ற முறையில் (முன்னாள் முதல்வர் கலைஞரைப்பற்றி எப்போதும் விமர்சனம் தேவையா?) செய்வதும், அதனை மறுத்துப் பேச சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதற்கு அனுமதி மறுப்பதும், ஆளுங்கட்சியினர் வெகுண்டு எழுந்து பேசுவதை அனுமதிப்பதும், எதிர்க்கட்சிகளை வெளியேற்றுவதும் விரும்பத்தக்க ஜனநாயகக் காட்சிகள்தானா?

தமிழ்நாடு சட்டமன்றம் பெருமை பெற்ற சட்டசபைத் தலைவர்களைக் கொண்டு ஓர்ந்து கண்ணோடாது அனைவரது உரிமைகளையும் பாதுகாத்த வரலாற்றைப் பெற்ற சட்டமன்றம் அல்லவா?

உறுப்பினர்களின் உரிமைகளுக்காகப் பேசவேண்டியவர் சபாநாயகர்

சபாநாயகர் தம் தலையாய கடமை அனைத்து உறுப்பி னர்களது உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும்!

Speaker - - ஸ்பீக்கர் என்பவர் சபைக்காக, சபை உரிமை யைக் காப்பதற்காகவே பேசவேண்டியவர், பேச இருப்பவர்; மற்றபடி அவர் தனித்து யாருக்கும் ஆதரவாகவும் பேசா தவர் என்பதுதான் பிரிட்டிஷ் மக்கள் அவையின் (House of Commons) நடைமுறை என்பது உலகறிந்த ஒன்று.


இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அல்லது மாநிலங்கள் அவைத் தலைவர், எவ்வளவு பெரும் அமளி துமளிகளுக்கிடையில்கூட கடும் நடவடிக்கை என்ற ஆயுதத்தை (உறுப்பினர்கள் சிற்சில நேரங்களில் எல்லை மீறிய நிலைக்குச் சென்றபோதுகூட) பிரயோகிப்ப தில்லையே; அதைப் பார்க்கவேண்டாமா?

தமிழ் ஓவியா said...

ஆளுங்கட்சிக்குப் பெருமை சேர்க்காது!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொண்டு, தக்க பதிலடி முறையான வகையில் தந்து, தம் நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைக்கலாமே!

அதைவிடுத்து, ஜனநாயகத்தை இப்படி உரிமை பறிப்பதுபோல, தொடர்ந்து அவையிலிருந்து வெளியேற்று வது, பட்ஜெட் தொடர் போன்ற முக்கிய தொடரில் எதிர்க் கட்சிகளின் குரலையே கேட்கவிடாமல் செய்வது, ஆளுங் கட்சிக்கு ஒருபோதும் பெருமை சேர்க்காது - பயனும் அளிக்காது!

ஆளுங்கட்சித் தலைமை, தங்கள் உறுப்பினர்களின் எல்லை மீறிடும் உரைகளின்போது கண்டித்து முறைப்படுத் தினால்தான் அத்தலைமைக்குப் பெருமை! நாட்டில் உள்ள பொதுவானவர்கள் இதனைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கவேண்டாமா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் (குறள் 448)

என்பதற்கொப்ப, எதிர்க்கட்சியின் விமர்சனங்களை எதிர்கொண்டு, முறையான வாதங்கள் மூலம் அதற்குத் தக்க விடை தரலாம்; தரவேண்டும்!

தி.மு.க. மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்க!

தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகளைத் தந்து, ஜனநாயகத்தின் மாண்புகளைக் காத்தல் அவசியம்.

சபாநாயகரின் தீர்ப்புகள் நியாயத்தோடு, எச்சார்பும் இன்றி வழங்கப்படுகிறது என்ற தோற்றத்தையும், நம்பிக் கையையும் அனைவருக்கும் ஏற்படுத்துவதாக அமைந்தால், கூச்சல், குழப்பங்கள், கடும் கருத்து மோதல்கள்கூட தவிர்க்கப்பட வாய்ப்பை ஏற்படுத்தும்.
தி.மு.க.வை இந்தத் தொடர் தடை - முழுவதும் வராமலிருக்கும் தீர்ப்பை, அவை மறுபரிசீலனை செய்து, மக்களாட்சியின் மாண்பைக் காப்பாற்றட்டும்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
23.7.2014

Read more: http://viduthalai.in/e-paper/84527.html#ixzz38LT8Mhes

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அடிகோலுவதா?


விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள் 2002 இல் குஜராத்தில் நடந்த கலவரத்தை மறந்திருக்கக் கூடும். ஆனால், முஸாபர் நகரில் கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை அவர்கள் மறக்கக்கூடாது, நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷீத் ஆல்வி கூறுகையில், தொகாடியாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளை கெட்டுள்ளது. உடனே அவரை மன நல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும் என்றார். முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், தொகாடியா மீது உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

சிபிஅய் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இப்படித்தான் சிறுபான்மையினருக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக விஸ்வ இந்து பரிஷத் துவேஷத்தைக் கிளப்பி வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றார். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், மத உணர்வு களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் பேச்சு இது - வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

சங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே வன்முறையைத் தூண்டும் பேச்சிலும், நடவடிக்கையிலும் ஈடுபட்டவர் கள் ஆயிற்றே அவர்கள். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில், மேலும் ஆணவக் கொம்பு கூர்மையாக முளைக்காதா?

தேர்தல் நேரத்தின்போதே கூட வி.எச்.பி.யின் தலைவரான இதே பிரவீன் தொகாடியா என்ன பேசினார்?

குஜராத் மாநிலம் பாவ் நகர் மற்றும் ராஜ்கோபு தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் கக்கிய நாராசமான நச்சுவார்த்தைகள் என்ன தெரியுமா?

இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதி களில் ஒரு சில இஸ்லாமியர் குடும்பங்கள் உள்ளதாகத் தெரிகிறது. இதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் இந்தப் பகுதிகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறவேண்டும். அப்படி வெளியேற மறுக்கும் பட்சத்தில் கற்கள் மற்றும் டயர்களைக் கொண்டு செல்லுங்கள் - டயர்களை எரித்து முஸ்லிம்களின் வியாபார நிறுவனத்துக்குள் எறியுங்கள். கற்களையும், தக்காளிகளையும் வீசுங்கள். ராஜீவ் கொலையாளி களுக்குத் தூக்கிலிருந்து மன்னிப்பு வழங்கும்போது எந்த சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது என்று சொன்னதோடு, முஸ்லிம்கள், தங்கள் வீடுகளைக் காலி செய்ய 48 மணிநேரம் அவகாசமும் கொடுத்தார்.

குஜராத் முதல்வர் மோடி அரசின் காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? எப்படி எடுக்கும்? ஆயிரக் கணக்கான இஸ்லாமிய குடும்பங்களை வெட்டிப் பலி கொடுத்த குஜராத்தின் காவல்துறை ஆயிற்றே!

இப்பொழுது மத்தியிலும் ஆட்சி வந்தாகிவிட்டது. தொகாடியாக்கள் எந்த எல்லைக்கும் சென்று கொக்கரிப்பார்கள்.

இந்த வி.எச்.பி.,க்கள் மக்களிடத்தில் திரிசூலங்களை நேரிடையாகவே அளித்து முஸ்லிம்களையும், கிறித் தவர்களையும், மதச்சார்பின்மைப் பேசும் இந்துக் களையும் குத்தச் சொல்பவர்கள் ஆயிற்றே - குடலைச் சரிக்கச் சொன்னவர்கள் ஆயிற்றே! எந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது?

இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு இந்துத்துவாவாதி! எங்கள் கடவுள்களே ஆயுதம் தாங்கியுள்ளன - நாங்களும் ஆயுதம் தாங்குவோம்! என்று விஷம் கக்கியுள்ளார்!

இது அப்பட்டமான ஆயுதக் கலாச்சாரத்துக்குத் தூபம் போடும் துடுக்குத்தனமான வன்முறை வெறியின் வெளிப்பாடு.

தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுவானேன்?

முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், விளைவு எங்கே போய் முடி யும் என்று காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்குத் தெரியவே தெரியாதா?

அமைதிப் பூங்காவான மண்ணைக் காவிகள் கலவர மண்ணாக மாற்றிட நினைக்கிறார்கள் போலும்!

சட்டம் தன் கடமையைச் செய்யுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84539.html#ixzz38LTPnSDX

தமிழ் ஓவியா said...


சமுதாய ஆதிக்கமே தேவை


நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நாம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான் பெயர்.

- (விடுதலை, 4.10.1948)

Read more: http://viduthalai.in/page-2/84538.html#ixzz38LTY0mDN

தமிழ் ஓவியா said...


மோடியின் சுமையான அமெரிக்கப் பயணம்


- நாராயண் லட்சுமண்

மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது, கடந்த கால கசப்பான சுமை களை மோடி சுமந்து கொண்டு செல்வது ஒரு கட்டாயத் தேவையாக ஆகிவிட்டது

தமிழ் ஓவியா said...


தகவல் அறிவதற்கான சுதந்திரச் சட்டத்தின் கீழ், கோரிக்கை விடுத்து, 2013 மே மாதத்தில் பெறப்பட்ட அமெ ரிக்க வெளியுறவுத் துறையின் தந்தி களின் அடிப்படையில் மோடி மற்றும் அமெரிக்கா பற்றி ஹிந்து நாளிதழ் இந்த வாரத்தில் நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளது.

இதன் நோக்கமே, இன்றைய இந்திய பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது அமெரிக்காவுக்குச் செல்வதற்கு, அமெ ரிக்க நாட்டின் குடியேற்றம் மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் 214 மற்றும் 212 பிரிவுகளின் கீழ் அவருக்குத் தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த அமெரிக்க அரசின் சிந்தனை ஓட்டத்தைப் பற்றி இன்னமும் மிகத் தெளிவாக அறிந்து கொள்வதே ஆகும்.

மத சுதந்திரத்திற்கு எதிராக நேரடியாக செயல்பட்ட அல்லது செயல் படுவதற்குப் பொறுப்பான அயல்நாட்டு அதிகாரிகள் அமெரிக்காவுக்கு வரு வதை இந்தச் சட்டப்பிரிவுகள் அனு மதிப்பதில்லை. மோடிக்கு விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்ட இந்தத் தடை பற்றி மீண்டும் ஒரு முறை இந்த ஆண்டு மே மாதத்தில் பிரச்சினை எழுந்தபோது, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விசா தடையை நீக்கி ஆணை யிட்டார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மோடியும், அவரது கட்சியும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை பாராட்டி தொலை பேசியில் பேசிய அதிபர் ஒபாமா அமெரிக்காவுக்கு வருகை தருமாறு மோடிக்கு அழைப்பும் விடுத்தார்.

பதில் கிடைக்காமல் இருக்கும் ஒரு கேள்வி இதுதான்: அமெரிக்க நாட்டின் இந்தக் கொள்கை பற்றி அதிக அளவில் விவா தங்கள் நடந்திருக்கின்றன என்பதால், குஜராத் முதல்வர் நிலையில் இருந்து இந்திய நாட்டின் பிரதமராக மோடி வளர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது எந்த அளவுக்கு அமெரிக்க சிந்தனையில் மனமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதுதான் அந்தக் கேள்வி. என் றாலும் இந்தப் புதிரின் காரணமாக, பலதரப்பட்ட பொருளாதார மற்றும் இதர அமைப்புகள் இடையே காட்டப் படும் ஒத்துழைப்பு மற்றும் இருநாடு களிடையே உயர்மட்டப் பேச்சு வார்த் தைகள் நடந்து கொண்டிருக்கும் தற் போதைய சூழ்நிலையில் புதுடில்லி மற்றும் வாஷிங்டனுக்கு இடையே நிலவும் இருதரப்பு உறவுகளில் உடன டியாக எந்த வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை; ஏற்படவும் ஏற்படாது.

அமெரிக்காவில் இருந்த இந்திய தூதரக அதிகாரியான கோப்ரகடே விவகாரம் 2013 ஆம் ஆண்டின் இறுதி யில் முளைத்தது முதற்கொண்டு, தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக வழக்குகள், அறிவுசார் உரிமைப் போராட்டங்களில் எது ஒன்றிலும் ஒரு சுமுகமான, மகிழ்ச்சியான முடிவு எட்டப்படவில்லை. இருதரப்பு உறவு களின் மேம்பாட்டுக்கு இடையூறாக இருக்கும் அளவுக்கு, மோடிக்கு விதிக் கப்பட்ட விசா தடை இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனவலி காரணமாக, மோடியின் நிர்வாகத்தில் நிலவும் கசப்புணர்வு இந்த பிரச்சி னைகளை மிகைப்படுத்திக் கூறலாம் என்பது மட்டுமன்றி, மத சுதந்திரம் பற்றிய மோடியின் கடந்த கால செயல் பாடுகள் பற்றி அமெரிக்கா உண்மை யில் ஓர் ஆழ்ந்த, ரகசியமானது என்றும் கூறப்பட இயன்ற நல் எண் ணத்தைக் கொண்டிராமல் இருந்தால், இருநாட்டு உறவுகளில் மேலும் சிக்கல் கள் ஏற்படவும் கூடும்.
ஏறக்குறைய ஓராண்டு காலத்துக் கும் மேலாக எஃப்.ஓ.அய்.ஏ. (திளிமிகி) அமைப்பிடம் இந்து நாளிதழ் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், 2002 குஜராத் கல வரங்கள் மற்றும் மோடிக்கு விதிக்கப் பட்ட விசா தடை பற்றிய பொதுமக் களுக்கு சாதாரணமாக வெளியிடப் படாத தகவல்கள் 2014 மே மாதம் 16 ஆம் தேதியன்று ஃபாகி பாட்டத்தில் (திஷீரீரீஹ் ஙிஷீஷீனீ) இருந்து தபால் மூலம் கசியத் தொடங்கியது. அந்த நாள் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கள் வெளிவரும் நாளாகவும் தற் செயலாக அமைந்தது.

தமிழ் ஓவியா said...

தொடக்கத்தில் வெளிவந்த தந்தி கள் மற்றும் இதர ஆவணங்களும், வரும் ஓராண்டு காலத்தில் வெளிவர இருக்கும் இன்னமும் அதிகமான தக வல்களும் தெரிவிப்பது என்னவென் றால், குஜராத்தில் நடந்த கலவரங்களில் மோடிக்கு எந்த பங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியுமா என்பதில் ஓரளவு அய்யம் கொண்டவர்களாகவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

இதனைத் தெளிவுபடுத்திக் கொள் வதற்காக, மோடியின் முன் உள்ள சிக்கலான சட்டச் சவால்களில் அவர் மீது குற்றம் சாட்டப்படுவது பற்றி நெருக்கமாகக் கண்காணித்து, அறிந்து, தெரிவிக்குமாறு தங்களுக்கு உள்ள எண்ணற்ற அரசியல் தொடர்புகளிடம், தொடர்ந்து அவர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2002 ஆம் ஆண்டு கலவரங்கள் தொடர் பான ஜகியா ஜாஃப்ரி வழக்கு மட்டு மன்றி, மற்ற பல வழக்குகளும் அவர் களது புலனாய்வுப் பட்டியலில் உள்ளன.

கேள்விகள் கேட்கப்படுவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் மோடி ஆஜராக வேண்டுமா என்ற பிரச்சினையைச் சூழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகளும், குழப்பம் நிறைந்த இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக் கும், 2003 இல் ரகசியங்களை வெளி யிட்ட ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்ட வழக்கும், மோடிக்கு விசா மறுக்கப்பட வேண்டும் என்பதற் காக அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அளித்த நிர்ப்பந்தமும், அழுத்தமும் முதற்கொண்டு 2014 இல் பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி வெற்றி பெற்றது வரையிலான செய்திகள் இவற்றில் அடங்கும். இந்து நாளிதழின் கணினித் தளத்தில் காண இயன்ற இந்த தந்திகள் மற்றும் இதர தகவல்களில் பெரும்பகுதி தகவல் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுள் ளது; சில வழக்குகளில் பக்கம் பக்க மாகவும், சில ஆவணங்களில் ஒட்டு மொத்தமாகவும் தகவல்கள் தரப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை, ரகசியம், அமெரிக்கர் அல்லாத வாசகர் களுக்கு தரப்படும் வரையறுக்கப் பட்ட செய்திகள், அமெரிக்க வெளியுறவுத் துறையின் ரகசிய வலைதளமான ராய்டர் மூலம் வெளியிடப்படும் தகவல்கள், அல்லது மிகவும் உணர்ச்சி வயப்படச் செய்யும் செய்திகள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பினும், அவற் றில் சில வகைப்படுத்தப்படாதவையா கவும் இருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

இந்த முயற்சி அமெரிக்க வெளி யுறவுத் துறையின் எஃப்.ஓ.அய்.ஏ. விதிகளை மீறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள் ளப்பட்டதேயாகும். அயல்நாட்டு அரசுத் தகவல்கள், அயல்நாட்டு உறவுகள் அல்லது அயல்நாடுகளில் அமெரிக்காவின் செயல்பாடுகள், குடியேற்றம் மற்றும் குடியுரிமை சட்டம் என்ற தலைப்புகளின் கீழ் வரும், எந்த ஒரு தகவலையும், தேசிய பாதுகாப்பு அல்லது அயல்நாட்டுக் கொள்கை காரணமாக வெளியிடாமல் நிறுத்தி வைக்க ஃபெடரல் புலனாய்வு அமைப் புக்கு எஃப்.ஓ.அய்.ஏ. விதிகள் அனுமதி அளிக்கின்றன.

கிடைக்கப்பெற்ற தகவல்கள், ஆவ ணங்களில் எவற்றை இவ்வாறு வெளியிடாமல் நிறுத்தி வைக்கலாம் என்பது, பிப்ரவரி 2010-க்குப் பின் விக்கி லீக்கால் வெளியிடப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படலாம் என்று வரையறுக்கப்பட்டது. வெளியிடப்பட்ட தகவல்கள் எவ்வளவு தான் இன்று குறைக்கப்பட்டு வரை யறுக்கப்பட்ட போதிலும், மோடி எதிர்கொண்டுள்ள சட்ட, அரசியல் சவால்கள் பற்றிய செய்திகளை களத்தில் தொடர்ந்து கண்காணித்து வரும் அமெரிக்காவின் ஈடுஇணையற்ற, வளமான தகவல்களைக் கொண்ட நுண்ணோக்கினை இந்த அமெரிக்க வெளியுறவுத் துறைத் தந்திகள் அளிக் கின்றன.

இந்த விஷயத்தில் மோடியைப் பற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை யின் மதிப்பீடு , மோடி பிரதமராகத் தொடர்ந்து இருக்கும் காலம் முழு வதிலும், இந்திய அமெரிக்க உறவு களில் ஒரு எதிர்மறை பாதிப்பை ஏற் படுத்துமா என்பது, இருநாடுகளுக்கி டையே நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வாஷிங்டனில் அமெ ரிக்க அதிபர் ஒபாமாவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்கு முழு மனதோடு, அக்கறையோடு தொடங்கப்படுகின்றன என்பதற்குப் பின்னர்தான் தெரியவரும்.

என்றாலும், தனது அமெரிக்கப் பயணத்தின்போது, கடந்த கால கசப்பான சுமைகளை மோடி சுமந்து கொண்டு செல்வது ஒரு கட்டாயத் தேவையாக ஆகிவிட்டது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

நன்றி: தி ஹிந்து, 19.7.2014
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page-2/84542.html#ixzz38LTfbAHZ

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


உச்சிஷ்ட கணபதி!

உச்சிஷ்டம் என்றால் எச்சில்; சாப்பிட்டபின் உள்ள எச்சத்தை - மீதியை இவருக்கு நிவே தனம் செய்தால் இந்தக் கணபதி மகிழ்வாராம்.

ஓ, எச்சக்கலை என்று இந்தக் கடவுளைச் சுருக்க மாகச் சொல்லலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/page1/84477.html#ixzz38LV4vToo

தமிழ் ஓவியா said...


வெல்லட்டும் பிகார் முயற்சி!

பிகாரில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார்; இந்த மூன்று கட்சிகளுக்குமே பா.ஜ.க. தான் பொது எதிரி என்று பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் நிதீஷ்குமார் (அய்க்கிய ஜனதா தளம்) கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட நேரத்தில்கூட அன்றைய குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியைச் சிறிதும் பொருட் படுத்தியவர் அல்லர் பிகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார்.

மோடியின் கண் மூடித்தனமான இந்துத்துவா வெறியை ஒருக்காலும் அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி இருந்தும்கூட குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரக் கூடாது, அவர் படம் பொறித்த விளம்பரங்கள் பிகார் மாநிலத்தில் இடம் பெறக் கூடாது என்று கறாராகக் கூறியதோடு அல்லாமல், அவ்வாறே செயலும்படுத்தி தேர்தலில் வென்று காட்டியவரும்கூட!

சமூக நீதிக் கொள்கையில் அடங்கா ஆர்வம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் நிதிஷ்.

இடைத் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்று கருதுகிற கருத்து மிகவும் சிறந்ததே! மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலில் (அஜண்டாவில்) இடம் பெற்றவைகளை மள மளவென்று செயல்படுத்திடத் துடியாய்த் துடிக்கிறது.

அய்ந்தாண்டு ஆட்சி தொடருமேயானால் அதன் விளைவு மிகவும் மோசமாகத் தானிருக்கும் என்பதில் அய்யமில்லை.

அதற்கிடையே பல மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும் முக்கிய கடமையை ஆற்றுவதில் மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் இந்தியாவுக்கே நிதிஷ்குமார் வழிகாட்டி விட்டார்.

வட மாநிலங்களைப் பொறுத்தவரை, லாலு பிரசாத்யாதவ், முலாயம்சிங் யாதவ், நிதிஷ்குமார் ஆகிய பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்கள் ஓரணியில் நிற்பார்களேயானால், வட மாநிலங்களில் அரசியல் தட்ப வெப்ப நிலையே தலைகீழாக மாறி விடும் என்பதில் அய்யமில்லை!

நியாயமாக, இந்தச் சமூக நீதி அணியில், மதச் சார்பற்ற அணியில் லோக் தள் கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இணைந்திருக்க வேண்டும்.

பி.ஜே.பி.யின் மதவாத நெடியைப் பொறுக்காமல் தான் அந்தக் கூட்டணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பஸ்வான்; இந்த நிலையில் கடந்த 16ஆவது மக்களவைத் தேர்தலில், கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் நின்று, மத்திய அமைச்சராகவும் ஆகி விட்டார்.

இன்றைய மத்திய ஆட்சி மதவாதத் தன்மை கொண்டது மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானதும் கூட!

மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினார் என்பதற்காக வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் பிஜேபியினர் என்பது வி.பி. சிங்கின் நெருங்கிய தோழரான ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நன்றாகவே தெரியுமே!

தனிப்பட்ட முறையில் தலைவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், அகில இந்திய அளவில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இணைந்து சமூக, அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய காலக் கட்டம் இது.

இந்த முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு இந்திய அரசிய லிலும் சமூகத்திலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.

பிகாரில் இடைத் தேர்தலில் இந்தக் கூட்டணி வென்று காட்டினால், அது இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டப்பட்டதாக அமையும்!

வெல்லட்டும் அந்த முயற்சி!

Read more: http://viduthalai.in/page1/84485.html#ixzz38LVWNY3l

தமிழ் ஓவியா said...


நோக்கம்


சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக் கொண்டு முன்னேற்றமடையுமாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தின் நோக்கமாகும்.
(விடுதலை, 21.7.1950)

Read more: http://viduthalai.in/page1/84484.html#ixzz38LVe27a9

தமிழ் ஓவியா said...


இந்தி பேசாத மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி - ஏன் இந்த ஓரவஞ்சனை?


தமிழால் ஆட்சியைப் பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச் சாட்டு தமிழறிஞர்கள் மத்தியில் பொது வாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை அரசின் நிர்வாகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், தொழில் துறையில், வர்த்தகத்தில் என முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமும், இந்தியுமே கோலோச்சுகின்றன.

என் நாடு. என் மக்கள். இவர்களின் நலனே எங்களின் உயிர் மூச்சு என்று 66 ஆண்டுகளுக்கு மேலாய் வெறும் வார்த்தை ஜாலங்களால் இளைஞர்களின் வாழ்க்கையை கானல் நீராக மாற்றிய பெருமை இந்திய அரசியல் வாதி களையே சாரும். இளைஞர்களின் வாழ்க் கையை ஈடேற்றத்தான் எத்தனை எத்தனை அறிவிப்புக்கள், திட்டங்கள். அவை அனைத்தும் ஏட்டளவிலயே உள்ளன. தேசத்தின் எதிர்காலம் இளை ஞர்கள் கையில்தான் இருக்கிறது என்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேரு முதல், இன்றைய பிரதமர் நரேந்திரமோடி வரை ஏன் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுபவர் வரை அனைவரும் கூறிவருகின்றனா. ஆனால் இளைஞர்களின் எதிர்காலம் யார் கையில் என்று தெரியவில்லை.

இன்று நாட்டில் முக்கிய பிரச்சனை களாக உருவெடுத்திருப்பவை கல்வி, வேலை, பொது சுகாதாரம், ஊழல். இவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண்பது என அனைத்து அரசியல் கட்சிகளுமே போட்டிபோட்டிக் கொண்டு தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகின்றன.

அரசியல் வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும். இன்று இளைஞர்கள் களத்தில் இறங்கி இப்பிரச் சினைகளைத் தீர்க்க முன்வருகின்றனர். அதற்காக அவர்கள் நாடும் வழி அரசாங்க பணி. அரசுப் பணி கிடைத்தால் மக்கள் நலத்திட்டங்களை ஊழலின்றி நடத்த துடிக்கும் இளைஞர்களின் எண் ணிக்கை ஆயிரம் ஆயிரம்.

அவர்களது கனவு பெரிது என எண்ணும்போது அதற்காக அவர்கள் இழக்கும் இழப்பு களையும் நினைவில் கொள்ளவேண்டும். நேரம், பணம், அறிவு, உடலுழைப்பு என அனைத்தையும் முதலீடு செய்து (வென்றால் சரி தோற்றால் அத்தனையும் வீண் தானே?) கடுமையாக படித்து, அரசுப்பணியாளா தேர்வாணையத் தேர்வை எழுதிவருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

சமீபகாலமாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமாக (யூ.பி.எஸ்.சி.,) இருந்தாலும் சரி, மாநில அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணை யமாக இருந்தாலும் சரி. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போன்ற உயரிய பதவிகளுக்கான யூபிஎஸ்சி முதல் நிலைத்தேர்விலிருந்து, இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வு வரை ஆங்கில மொழிக்கும், இந்திமொழிக்கும் உள்ள அங்கீகாரம் தமிழ் உள்பட எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள வேறு எந்த மாநில மொழிகளுக்கும் கிடையாது.

அதாவது கேள்வித்தாள் முழுவதும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே வழங்கப்படுகிறது. இது இந்தி பேசாத மற்ற மாநில தேர்வர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய சமூக அநீதியாகும். அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள சமத்துவம், சம உரிமை, சமூக நீதியைக் காக்க மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தவறிவிட்டது. அரசியல்வாதிகள் முதல் பலர் இதை கவனிக்கத் தவறிவிட்டனர்.


தமிழ் ஓவியா said...

உதாரணம்: கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த அய்..ஏ.எஸ்., தேர்வின் 2-ஆம் தாளான சிசாட் என்ற அறிவுத்திறனாய்வுத் தேர்வில் 80 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றில் 40 கேள்விகள் ஆங்கில பத் தியை (றிணீணீரீமீ) படித்து, அவற்றிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை யளிக்க வேண்டும். அதில் 8 கேள்விகள் முழுக்க முழுக்க தேர்வரின் ஆங்கிலத் திறனை பரிசோதிப்பது என்பதால் அதற்கு மட்டும் இந்தி மொழிப்பெயர்ப்பு வழங்கப் படாது.

மற்ற 72 கேள்விகளுக்கும் ஆங் கில மொழிப்பெயர்ப்பு வழங்கப்படும். அது இந்தி மொழி அறிந்த தேர்வர்களுக் கும், ஆங்கிலத்தில் புலமை மிக்கவர் களுக்கும் எளிமையான வழியாக அமைந்து விடுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப்பள்ளி அல்லது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் ஐஏஎஸ் என்பது எட்டாக் கனியாகி விட்டது. முதல்நிலைத் தேர்விலே இவ் வாறு வடிகட்டப்படுவதால் நூற்றுக்கணக் கான இளைஞர்களும், இளைஞிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக முழுவதும் தமிழ் வழி யிலேயே படித்து தேர்வுக்கு தங்களை தயார்படுத்திவரும் கிராமபுறத்து ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அய்ஏஎஸ் தேர்வு ஆங்கில மற்றும் இந்திமொழிக்கு பக்கசார்பாக இருப்பதால் அம்மொழி தெரிந்தவர்கள் வெற்றி பெறுவது எளிது. இந்த பாகுபாடு போக் கப்படவேண்டும் என்று மற்ற மாநிலத் தேர்வர்கள் பல முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் அந்த 8 கேள்விகளுக்கும் இந்தி மொழிப்பெயர்ப்பு வேண்டும், சிசாட் தாளையே நீக்க வேண்டும் எனக்கோரி டெல்லி வடக்கு தொகுதி முகர்ஜிநகரில் கடந்த இரு வாரங்களாக அய்ஏஎஸ் தேர்வாளர்கள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர். மெட்ரோ ரெயில் நிலையம் முற்றுகை, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீடு முற்றுகை, யூ.பி.எஸ்.சி., அலுவலகம் முற்றுகை, சாகும்வரை பட்டினிப் போர் என அவர்கள் மேற்கொண்டுவரும் பல்வேறு போராட்டங்களின் தொடர்ச்சி யாக மத்திய பணியாளர் பயிற்சித் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர்சிங், தேர்வு பாடத்திட்டம் குறித்து தெளிவான விவரம் கிடைக்கும் வரை தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று யூ.பி.எஸ்.சி.யை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


இதைத் தொடர்ந்து பணியாளர் பயிற்சித்துறை முன்னாள் செயலாளர் அர்விந்வர்மா தலைமையிலான 3 நபர் கமிட்டி அமைக் கப்பட்டுள்ளது. இக்குழு இனி சில மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளும். இந்தப் பொன்னான நேரத்தில், 8-ஆம் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளுக்கும் சம அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும் யூ.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதற்குத் தமிழகத்தில் இருந்து உறுதியான அரசியல் குரல் எதிரொலிக்க வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான தேர்வர் களின் எதிர்ப்பார்ப்பு. அதே நேரத்தில் இங்குள்ள யாரும் இந்தியை எதிர்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமைப்பில் உள்ள இந்த வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதுதான் தேர்வர்களின் நோக்கம்.

தமிழ் ஓவியா said...

தமிழ் படித்தவர்கள் கேட்பது தமிழுக்கு முன்னுரிமை வழங்குங்கள் என்பதல்ல.

தமிழுக்கும் மற்ற மாநில மொழிகளுக்கும் சம நீதியும், சம உரிமையும் வழங்குங்கள் என்பதுதானே தவிர, ஆங்கிலத்தையோ அல்லது இந்தியையோ எதிர்க்க வேண்டும் என்பது நோக்கமல்ல. தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் மற்றும் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு மொழியின் மொழிபெயர்ப்புக் கொண்ட வினாத்தாள் வழங்கலாம்.

அவ்வாறு வழங்குவதில் ஒரு சிக்கலும் இல்லை. குறிப்பாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மய்யம் எனப்படும் ழி.சி.ணி.ஸி.ஜி. நடத்திய தேசிய திறனறி போட்டிக்கான கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும், அந் தந்த மாநில மொழிகளிலுமே வடிவ மைக்கப்பட்டிருந்தன. தரமான கேள்விகள் அனைத்திற்கும் மொழிபெயர்ப்பு சிறப் பானதாகவே இருந்தது. எனவே தமிழ் மொழி பெயர்ப்பில் எந்த சிக்கலும் இல்லை.

சிக்கல் இருப்பது நம் அரசியல் வாதிகளிடம் மட்டுமே! அவர்கள் இந்தி மொழியை தூக்கிப்பிடித்துக் கொள்ளட் டும். அதே நேரத்தில் அவர்கள் பட்டிய லில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழி களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப் பார்ப்பு.

நெதர்லாந்தைச் சோந்த உளவியல் நிபுணர் ழாக்வெர்பைலே, கற்றலின் அடிப்படையை மொழியே தீர்மானிக் கிறது. பார்ப்பவை, கேட்பவை மூலமா கவே பிள்ளைகள் தொடர்புபடுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர். முதலில் வரன்முறைப்படுத்தாத தாய்மொழிக் கல்வி அறிமுகம், பின் முறைப்படுத்தப் பட்ட தாய்மொழிக் கல்வி. அதன்பின் மொழி அறிமுகம், தொடர்ந்து மூன்றாவது மொழி அறிமுகம் என படிப்படியாக தொடரப்படும் கல்வி முறையே சிறந்த தாகவும், எளிமையானதாகவும் இருக்க முடியும். தாய்மொழிப் புலமையின்றி, ஆழமான அறிவாற்றலும் பெறமுடியாது என்கிறார்.

சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற பல நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கி, வெற்றி பெற்றிருப்பதைப் பார்க்கலாம். சொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும். பள்ளித்தேர்வுகளில் மதிப்பெண் கூடுத லாக பெற தமிழ் மொழியை புறக் கணிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம் இருக்கிறது என்றால், கிராமபுறத்து ஏழை இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்க பார்க்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சமூகஅநீதி (ஷிஷீநீவீணீறீ மிஸீழீவீநீமீ) மறுபுறம் இருக்கிறது. இங்கு எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்று சமூக நீதிபேசும் அரசியல் தலைவர்கள் தமிழுக்கான-மற்ற மாநில மொழி களுக்கான இந்த சமூக அநீதியை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிவழியில் நாட்டை முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் புரியுங்கள். இல்லையேல் இளைஞர்களுக்கு,

வருத்தப்படுவதற்கோ நம்பிக்கை கொள்வதற்கோ
எதுவும் இல்லை
இரண்டடுக்கு சுவருக்கு அப்பால்
வாழ்க்கை இருக்கிறது என்பதைத்தவிர

- கோ. சரவணன்

Read more: http://viduthalai.in/page1/84487.html#ixzz38LVlvwPI

தமிழ் ஓவியா said...


மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மாலைமலர் இப்படி நடந்து கொள்ளலாமா?

விடுதலை 15.7.2014 நாளிதழில் வெளி வந்த மாலை மலரிலும் ஆர்.எஸ்.எஸா? என்று பெட்டிச் செய்தி படிக்கும்போது தமிழ்நாளேடுகள் - இன உணர்வற்று எத் துணை அடிமைத்தனமாக மாறிவிட்டன என எண்ணும்போது மிகவும் கவலையாக உள்ளது.

46 பக்கங்களைக்கொண்ட அந்த மலரில் எந்த ஒரு இடத்திலும் பெரியார் பெயர் வராமல் மிகவும் ஜாக்கிரதையுடன் மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. தலைவர் களோடு இருக்கும் படத்தில் கூட பெரியார் கிடையாது. பார்ப்பன பத்திரிகையின் திரிபு வேலைகளை பற்றித் தெரியும்.

அவர்களின் சூழ்ச்சிகளும் நமக்கு புரியும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, தந்தை பெரியாரின் தொண்டால் உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் - நடத்துபவர்களின் தமிழ் பத்திரிகைகள் இவ்வாறு நடந்து கொண்டால் யாரைப்போய் நொந்து கொள்வது?

விடுதலை இதழ் மட்டும் இல்லையென்றால் இத்தகைய செய்திகளை வெளிப்படுத்து வதற்கு வேறு நாதியில்லை. தமிழன் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பிலிருந்து மீண்டு வர பாடுபடும் ஒப்பற்ற இயக்கம் திராவிடர் கழகம்.

அந்த தமிழ் மாந்தனை மான உணர்வும், பகுத்தறிவு உணர்வும் பெற்றவனாக மாற்று வதற்கு உரியதை விளக்கமாக வழங்குவது விடுதலை ஆனால் மாலை மலர்கள் இப்படியெல்லாம் இருட்டடிப்பதன் மூலம் காமராசரையும் பெரியாரையும் பிரிக்க முடியாது.

பெரியாரை மறைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சி.பா.ஆதித்தனாரின் குடுப்பத்தாரின் மாலைமலர் ஏடு வெளி யிடுகிறது என்றால் இதுதான் தமிழர்களின் யோக்கியதை என்று தந்தை பெரியார் கூறியது நினைவுக்கு வருகிறது. தினமலர் களை, தினமணிகளை நொந்து என்ன பயன்?.

இந்த வாசகங்கள் எல்லாம் அழியாக் கல்வெட்டுகள் - மாலை மலர்களே திரும்பிப் பாருங்கள் - திசை தவறிப் போகாதீர்கள்.

- தி.க. பாலு, திண்டுக்கல் மாவட்ட தி.க. தலைவர்

Read more: http://viduthalai.in/page1/84491.html#ixzz38LWAcVWM

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


இலாபம்

ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பூரம், நாக சதுர்த்தி, கருட பஞ்சமி, ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம், ஆடி பவுர்ணமி என்பவை இந்த ஆடி மாதத்தில் மட்டும் என்றால் இதற் காகக் கொட்டியழும், பணமும், நேரக் கேடும் சாதாரணமா?

இந்த நாள்களைக் கொண்டாடாத பிற மதத்தவர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் இலாபம் என்பதுதானே உண்மை!

Read more: http://viduthalai.in/e-paper/84574.html#ixzz38RN6Ex00

தமிழ் ஓவியா said...


விசாரணைக் குழுவுக்கு அனுமதி மறுப்பது ஏன்?அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இலங்கையில் மட்டுமல்ல; இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விசாரணை நடத்த உரிமை படைத்ததாகும்.

அவ்வாறு விசாரணை நடத்த உள்ள குழுவினர்க்கு இந்தியாவுக்கு வந்து விசாரணை நடத்திட இந்தியா விசா வழங்கவில்லை என்பது எவ்வளவுப் பெரிய மனிதாபிமானமற்ற முறையற்ற செயல்!

இனப்படுகொலையாளன் ராஜபக்சே பக்கம்தான் இந்தியா இருக்கிறது என்பதை இதுவரை ஏதோ ஒரு காரணத்தால் ஒப்புக் கொள்ளவோ, உணரவோ தவறியவர்கள்கூட இந்தியாவின் இந்த அணுகுமுறை மூலம் துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும்.

பிரதமராக இருந்த இந்திரா காந்தியும், இன்னொரு கட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியும்கூட இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே (Genocide)
என்று சொன்ன பிறகும் கூட இந்தியா இப்படி நடந்து கொள்வது கண்டனத் திற்குரியதே!

மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் சுத்த மோசம்; இலங்கை அரசு பக்கம் சார்ந்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்குத் துணை போன அரசு; இந்த ஆட்சி போய் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிகாரத்துக்கு வந்தால், அதுவும் நரேந்திர மோடி பிரதமராக வந்தால் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும்; ஈழத் தமிழர்கள் வாழ்வில் விடிவெள்ளி முளைக்கும் தமிழக மீனவர்கள் வாழ்வில் புது அத்தியாயம் பூக்கும் என்றெல்லாம் நம் மக்களை நம்பச் செய்ய தொண்டை வறளக் கத்திய வர்கள் இப்பொழு தெல்லாம் தமிழர்கள் மத்தியில் நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கத் தவறி விட்டது இந்தியா என்று குற்றப் பத்திரிகை படித்தவர்கள், இப்பொழுது மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் தடை செய்து விட்டதே - மோடியின் பிஜேபி அரசு, இதற்கு என்ன பரிகாரம்?

தனக்குத் தானே விசாரணைக் குழு அமைத்து (LLRC) நாட்டில் ஒன்றும் நடந்து விடவில்லை; ஈழத் தமிழர் இப்பொழுது நல வாழ்வில் தான் திளைக் கிறார்கள் என்று தனக்குத்தானே முதுகைத் தட்டிக் கொண்டது ராஜபக்சே அரசு.

அய்.நா.வால் அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் மார்க்சுகி தாருஸ்மான் தலைமையிலான மூவர் குழு விரிவாக விசாரணை செய்து தனது அறிக்கையை அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனிடம் அளித்து விட்டது (13.4.2011).

ஒரே வரியில் இந்த அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று கூறிவிட்டார் கொடுங்கோலன் ராஜபக்சே. அய்.நா.வுக்குள்ள அதிகாரம் என்ன? மரியாதைதான் என்ன? மேல் நடவடிக்கைதான் என்ன?

ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பதற்கான அனைத்துக் காரணங்களையும் பட்டியலிட்டு விட்டது அந்தக் குழு இப்பொழுது.

அய்.நா. மனித உரிமை ஆணையத்தால் நியமிக்கப் பட்ட விசாரணைக் குழு - தொடக்கத்திலேயே தடுமாறும் நிலைக்கு ஆளாகி விட்டது.

ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை இந்தியாவின் பங்கு மிக மிக முக்கியமானது என்று உலக நாடுகள் அத்தனையும் உணருகின்றன. பல நாடுகள் வெளிப்படையாகக் கூறவும் செய்தன. என்றாலும் இந்தியா மட்டும் கல்லுளி மங்கனாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் நாடாளுமன்றம் நடந்து கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பூகம்பம் வெடித்திருக்க வேண்டாமா?
நாடாளுமன்றத்தில் என்னென்ன வெல்லாமோ நடந்திருக்கின்றன. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுக்காதது ஏன்?

கேரளத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இத்தாலியக் கப்பல் படையினரால் சுடப்பட்ட பொழுது கொந் தளித்தவர்கள், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிரச்சினையில் அலட்சியம் காட்டுவது உலகம் முழுவதும் உள்ள கோடானு கோடி தமிழர் களையும் மனிதநேய வாதிகளையும் அவமதிப்பதாகும்.

தேசிய ஒருமைப்பாடு பேசும் கட்சியினர்கள் தமிழர் பிரச்சினை என்கிற போது ஒதுங்கிக் கொள்வது ஏன்?

தமிழ்நாடு சட்டப் பேரவையும் இப்பொழுது நடந்து கொண்டு இருக்கிறது. விசாரணைக் குழு இந்தியா வருவதற்கு அனுமதி மறுப்பது குறித்து, சட்டப் பேரவையில் தீர்மானம்கூட நிறைவேற்றலாமே!

எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொடுத்தால் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிராகரிக்கப்படும் நிலையில், முதல் அமைச்சரே அந்தக் கடமையை எடுத்துக் கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றி நல்ல பெயரைச் சம்பாதிக்கலாமே.

அதன் மூலம் இந்தத் தொடருக்கு ஒரு வகையில் முக்கியத்துவம் கூடக் கிடைக்குமே; செய்வாரா முதல் அமைச்சர்? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/84583.html#ixzz38RNWNhw4

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.

- (விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/84581.html#ixzz38RNdhWhb

தமிழ் ஓவியா said...


சு.சாமியின் திமிர் பேச்சு


யாழ்ப்பாணம், ஜூலை 24_ ஈழச்சிக்கல் அங்குள்ள தமிழர்களின் சொந்தப்பிரச்சினை, இதில் எந்த அயல்நாட்டுத்தலையீடும் கூடாது என்ற சு.சாமியின் திமிர் பேச்சிற்கு பதில் கூறும் விதமாக சண்டே அப்சர்வருக்கு பேட்டியளித்த இரா. சம்பந்தன் கூறியதாவது பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றத்தில் இருந்து தப்புவிக்க வைக்கும் பொருட்டு வெளிப்படையாக பேசுகிறார் நீதிக்கு புறம்பாக பேசி நிலமையை மேலும் சீர்குலைக்க வேண்டாம் என்று தனது பேட்டியில் கூறினார். நேற்று இலங்கைக்கு அரசுமுறைப்பயணமாக சென்ற சு.சாமி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது ஈழத்தமிழர்கள் பலவித சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலும் அது அவர்களின் சொந்தப்பிரச் சினைகள். இதில் எந்த வெளிநாடும் தலையிடக் கூடாது. அவர்கள் இலங்கை அரசுடன் பேசி தங்களது சிக்கல்களுக்கு தீர்வுகாணவேண்டும் என்றும், இலங்கையில் இனவாதம் எதுவும் கிடையாது அவ்வாறு கூறுவது முன்னாள் தீவிரவாதிகளுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவாக செயல்படும் சில அந்நியச்சக்திகள் பரப்பிவிடும் பொய்ப்பிரச்சாரம், இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு பிறகு பிரிவினைத்தீவிரவாதிகளை வென்று தற்போது இலங்கையில் அமைதியை மேற்கொண்டு வருகிறது, இங்கு நடந்த இனப் படுகொலை என்பது எந்த ஒரு நாடும் ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்

இந்தியா 13-ஆவது சட்டத் திருத்தம் பற்றிக் கூறினாலும் அதை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பு நரேந்திரமோடி தலைமை யினாலான அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது. மேலை நாடுகளில் சில தீவிரவாதச் செயல்களின் ஆதரவாளர்கள் இலங்கைமீது போர்க்குற்றம் சுமத்துவது பொய்யானது என்றும் தனது பேட்டியில் கூறியிருந்தார். இது குறித்து சண்டே அப்சர்வர் பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பதிலளித்தபோது

அதிபர் மகிந்த ராஜபக்சே 13ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என்று இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்துள்ளார். சிலவேளைகளில் 13 பிளஸ் குறித்தும் பேசியிருக்கிறார்.

புதுடில்லியில் நடந்த பதவியேற்பு விழாவில், ராஜபக்சேவை முதல் முறையாகச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பகிர்வு பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வேயை சு. சுவாமி கடுமையாக விமர்சித்துள்ள போதும்,நார்வே இலங் கையில் அமைதியைக் கொண்டுவரும் முயற்சியில் மிகவும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டது.

விடுதலைப் புலிகளை அமைதிப்பேச்சுவார்த்தைக்கு கொண்டு வரும் மிகப்பெரிய பணியை ஆற்றியது.

ஒரு கட்டத்தில், அதன் பணிகள் நிறுத்தப் பட்டாலும், நார்வே, எடுத்த முயற்சிகள் மதிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சு.சாமி தனது பேட்டியின் தொடர்ச்சியாக இலங்கைக்குள் நார்வே நாட்டினரை எந்த ஒரு காரணம் கொண்டும் அனுமதிக்க்கூடாது, அந்த நாட்டினரால் இலங்கை பல்வேறு காலகட்டங்களில் பெருத்த பின்னடைவை சந்தித்தது நார்வே தலையீட்டின் போது விடுதலைப்புலிகள் தங்களின் பலத்தை கூட்டிக்கொண்டனர். இலங்கையில் தற்போதுள்ள அமைதி தொடர்வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கம் நார்வே நாட்டினர் எந்த ஒரு காரணம் கூறிக்கொண்டு வந்தாலும் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்

Read more: http://viduthalai.in/page-3/84597.html#ixzz38RObQofd

தமிழ் ஓவியா said...


ஓவியக் கலைஞர்கள் கவனத்திற்கு...


திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழகத்தின் பல்வேறு அணிகளிலும் இருக்கக் கூடியவர்கள், பெரியார் கொள்கையேற்றுச் செயலாற்றும் இயக்க ஆதரவாளர்களில் தொழில் முறை ஓவியர்கள், தொழில்முறை அல்லாத ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள், ஓவிய விரும்பிகள், சுவரெழுத்து / தட்டி விளம்பரப் பணியாளர்கள், கணினி/ வரைகலை தொழில்நுட்ப ஓவியர்கள், கேலிச்சித்திரம் வரைவோர், சிற்பக் கலைஞர்கள், துணி, கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு ஓவிய ஊட கங்களிலும் பணியாற்றக் கூடியவர்கள் உள்ளிட்டோர் தங்களைக் குறித்த விவரங்களையும், தங்களின் சிறப்புகளையும் தொடர்பு முகவரி, எண் ஆகிய வற்றையும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம். கழக மாவட்டப் பொறுப்பாளர்களும் தத்தமது பகுதிகளில் உள்ள நமது தோழர்களில் மேற் கண்டோரை அடையாளம் கண்டு விவரம் அனுப்பிட வேண்டுகிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-_7. தொடர்பு எண் : 94442 10999

Read more: http://viduthalai.in/page-3/84603.html#ixzz38ROvpvBO

தமிழ் ஓவியா said...

பள்ளிகளில் தோப்புக்கரணம் தண்டனை ஏன்?: ஆய்வு

சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக் கழகம் தோப்புக்கரணத்தின் நன்மைகள் பற்றி ஆய்வு செய்தார்கள். காது மடல்களைப் பிடித்து தினமும் காலையில் 20 முறை தோப்புக்கரணம் போட்டால் போதும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குமாம்.

மூளை ரத்தஓட்டம் சீராகி ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர். இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் அறிவுத்திறன் அதிகரிக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84614.html#ixzz38RPcPara

தமிழ் ஓவியா said...


சர்க்கரை நோயா? காரணம் என்ன?


சென்னை, ஜூலை 24_ சர்க்கரை நோய், இதய நோய் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்தியர்களின் உணவு முறை குறித்து ஆராய வேண்டும் என சுவீடன் ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் கூறினார்.

தமிழ்நாடு, புதுவை நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழாவும் இந்திய நாளமில்லாச் சுரப்பிகள் சங்கத்தின் சர்வதேசக் கருத்தரங்கமும் சென் னையில் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த கருத் தரங்கில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இதய நோய்கள் ஆராய்ச்சி யாளர் டாக்டர் பீட்டர் எம்.நில்சன் பேசியதாவது:

இந்தியர்களின் உணவுப் பழக்கம் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. மேலும் இந்தியர்கள் அதிக அளவி லான உணவைச் சாப்பிடு கின்றனர்.

சுவீடன் நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நாங்கள் அதிக கலோரிகள் கொண்ட உணவை சாப் பிடுகிறோம். ஆனால் வெப்ப நாடான இந்தியா விலும் அதிக கலோரிகள் கொண்ட உணவை மக்கள் சாப்பிடுகின்றனர். அதிக கலோரிகள் கொண்ட உணவை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு பாலில் செறிவூட்டப் பட்ட கொழுப்பு இருக் கிறது; எனவே அதைத் தவிர்க்க வேண்டும் என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போதோ பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் பாலில் நோய் எதிர்ப்புச் சக்தியும், வைட்ட மின் டி உள்ளிட்ட பல் வேறு சத்துகளும் நிறைந் துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

பால் ஒரு கொழுப் புள்ள பொருளாக மட்டும் பார்க்கப்படாமல், உட லுக்குத் தேவையான சத்துகள் நிறைந்த பொரு ளாகவும் கருதப்படுகிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள் யாருக்கு வரலாம் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு குடும் பத்தின் உணவு முறையை ஆராய வேண்டியது அவசியம்.

ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோரின் உணவு முறை யை ஆராய்ந்தால், அவர் களுடைய வாரிசுகளுக்கு சர்க்கரை நோய் அல்லது இதய நோய் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதா என் பதைக் கண்டுபிடித்து விடலாம் என்று அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-5/84582.html#ixzz38RPrKBZp

தமிழ் ஓவியா said...

திராட்சை பழம் எந்த வகை பழம்?

ஆரஞ்சுப் பழம், எலுமிச்சைப் பழம் வகையைச் சார்ந்தது திராட்சை. ஹெஸ்பிரிடியம் என்பது அதன் தாவரவியல் பழம், திராட் சையில் பல கிளைகள் இருப்பது தெரியவில்லை அதற்குக் காரணம் திராட்சை பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மனிதனால் பிரித்தெடுக்கப்பட்டு கலப்பு செய் யப்பட்டு, தோட்டப் பயிராக்கப் பட்டிருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84612.html#ixzz38RQEi2Gr

தமிழ் ஓவியா said...


வச்சனந்தி மாலை

சமஸ்கிருதம் - நம் மொழியை நான்காகப் பிளந்தது!

சமஸ்கிருத - இந்து மதம் நம்மை நான்கு கூறுகளாக்கி நாலாஞ் ஜாதி ஆக்கியது.

தமிழ் எழுத்துக்களில் கூட வருணாசிரமத்தைத் திணித்தது.

பாட்டியலில் பன்னீருயிரும்
முதலாறு மெய்யும்
பிராமண வருணமாம்!
அடுத்த ஆறு மெய்கள்
சத்திரிய வருணமாம்!
அடுத்த நான்கு மெய்கள்
வைசிய வருணமாம்!
பிற இரண்டு மெய்யும் சூத்திர வருணமாம்

அதோடு விட்டதா ஆரியம்?

ல,வ,ற,ன - நான்கும் வைசிய எழுத்துக்களாம். ழ,ள என்பன சூத்திர எழுத்துக்களாம். ழ,ற,ன மூன்றும் வைசிய சூத்திர எழுத்துக்களாம். தமிழின் சிறப்பு எழுத்துக்களான ழவும், றவும் வட மொழியில் இல்லை - எனவே அதனை சூத் திரப் பட்டியலில் இணைத்து விட்டனர்.

அத்தோடு விட்டு விட்டார்களா? பாவிலும் பார்ப்பனப் பாணத்தைத் தொடுத்துவிட்டனர்.

பாக்களில் சிறந்தது வெண்பாவாயிற்றே! அது பார்ப்பனர்களுக்காம். ஆசிரியப்பா சத்திரியருக் காம் (அரசருக்காம்!) வைசியருக்கு கலிப்பா வாம்! சூத்திரருக்கு வஞ்சிப்பாவாம்.

கலம்பகம் எப்படி இருக்க வேண்டுமாம்? தேவருக்கு 100 செய்யு ளும், பார்ப்பனர்களுக்கு 95 செய்யுளும் அரச ருக்கு 90 செய்யுளும் - அமைச்சருக்கு 70 செய் யுளும் - வணிகருக்கு 50 செய்யுளும் - மற்றவர் களுக்கு 30 செய்யுளும் பாட வேண்டுமாம். இது பாட்டியல் விதியாம்.

இப்படி ஆரியம் - சமஸ்கிருதம் தமிழர் களுக்கு, தமிழ் மொழிக்கு செய்த வஞ்சகமும், துரோகமும் அட்டூழிய மும் கொஞ்சமா நஞ் சமா? வச்சனந்தி மாலை என்ற நூலையே இதற் காக நூலோர் தொகுத் துள்ளனர்.

தந்தை பெரியாரிடத் தில் 1937இல் உதைபட்ட ஆரியம் மீண்டும் மீசை முறுக்கித் தோள் தட்டு கிறது - காரணம் அதிகார பீடத்தில் அவாள் (ஆர். எஸ்.எஸ்.)ஆயிற்றே.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் அறுதியிட்டுக் கூறிவிட்டபின் அவா ளுக்கு வேறு அட்டி என்ன!

வாலாட்டிப் பார்க் கிறது - தமிழ்நாட்டில், தந்தை பெரியார் மண் கொடுக்கும் சாட்டையில் ஜென்மத்துக்கும் திரும் பிப் பார்க்கக் கூடாது!

ஆகஸ்டு ஒன்று நினைவிருக்கட்டும் ஆர்த்தெழுவீர்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/84634.html#ixzz38UJLCgho

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

தத்துவம்

பிராமணனான இராவணனை சம்ஹாரம் செய்ததால் ராமருக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷத்தைப் போக்கிக் கொண்ட இடம்தான் ராமேசுவரமாம்.

ராவணன் பிராமணனா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அது என்ன பிராமணனைக் கொன்றால் மட்டும் தோஷம்! மற்றவர்களைக் கொன்றால், மான் கறி பிரி யாணியா? இராமாயணம் கூறும் தத்துவம் இது தான்.

Read more: http://viduthalai.in/e-paper/84641.html#ixzz38UJmJ6LS

தமிழ் ஓவியா said...

அநாகரிக அரசியல்!


சிவசேனா என்ற அமைப்பு சங்பரிவார் வட்டத்தைச் சேர்ந்தது என்றாலும் சிறுபான்மையின மக்களை எதிர்ப்பதிலும் மகாராட்டிரத்தைத் தவிர்த்த வேறு மாநில மக்களை எதிர்ப்பதிலும் சங்பரிவார்க் கும்பலுக்கு அப்பனாகத் தான் நடந்து கொண்டு வந்திருக்கிறது.

அந்த வகையைச் சேர்ந்ததுதான் டில்லியில் உள்ள மகாராட்டிர மாநில இல்லத்தில் நடந்த அநாகரிகச் செயல்!

கடந்த வாரம் டில்லியில் உள்ள மகாராட்டிர பவனுக்கு சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர்கள் சென்றுள்ளனர். மகாராட்டிரப் பாரம்பரிய உணவைக் கேட்டுள்ளனர்.

ஆனால், பணியில் இருந்த ஊழியர்கள் சப்பாத் தியைப் பரிமாறி உள்ளனர். இதனால் சீற்றம் அடைந்த சிவசேனை உறுப்பினர்கள் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக இழுத்து அவர் வாயில் சப்பாத்தியைத் திணித்துச் சாப்பிட வைத்துள்ளனர். அந்த மேற்பார்வையாளர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் ரம்ஜான் நோன்பை மேற்கொண்டவர் என்பதால் பிரச்சினை பேருரு எடுத்து விட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆவேசப் புயல் சுழன்று சுழன்று அடித்தது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் வெளி நடப்பு செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உண்மை கண்டறியப்படாத ஒரு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாராவது கூடாது என்று எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்துள்ளார். எல்.கே. அத்வானி மட்டும் தான் வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். மற்ற பிஜேபியினர் நழுவிக்கொள்கின்றனர். இவற்றிற்கு மேலாக மகாராட்டிர அரசு இந்தப் பிரச்சினைமீது விசாரணை நடத்த உத்தரவிட்டது. வரவேற்கத் தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...


சம்பந்தப்பட்ட சிவசேனாவைச் சேர்ந்த ராஜன் பாபுராவ் விச்சாரே உலகறிந்த கிரிமினல், அவர்மீது மட்டும் 20 வழக்குகள் உள்ளன. கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது. கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்துக்குப் பங்கம், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, தனியாருக்குச் சொந்தமான இடத்தை ஆக்ரமித்தது, போலி கையொப்பமிட்டுப் பண மோசடி செய்தது, பெண்களைப் மானப்பங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களைத் தாக்கியது என்று மொத்தம் 20 கிரிமினல் வழக்குகள் இந்தப் பேர் வழிமீது உண்டு. (விவரம் தனியே காண்க).

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் சிவசேனாவில் உள்ளவர்கள் பார்த்தீர்களா? இவர்களுக்கு வாக்களித் துப் பொது மக்களும் வெற்றி பெறச் செய்துள்ளனர் என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்லுவது! (ஜனநாயகத்தைக் காலி நாயகம் என்று தந்தை பெரியார் சொன்னதற்கான விளக்கம் இங்குக் கிடைத்து விட்டதல்லவா!)

16ஆவது மக்களவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 34 விழுக்காட்டினர்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனவாம். இது கடந்த தேர்தலைவிட (2009) 4 விழுக்காடு அதிகமாம்! (ஜனநாயகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்று திருப்தி அடையலாம்!)

டில்லியில் 7 உறுப்பினர்களுள் 5 பேர்கள், பிகாரில் 40 உறுப்பினர்களுள் 27 பேர்கள், மகாராட்டிரத்தில் 48 உறுப்பினர்களுள் 30 பேர்கள், ஆந்திரப் பிரதேசத்தில் 42 உறுப்பினர்களுள் 20 பேர்கள், கேரளாவில் 20 உறுப்பினர்களுள் 9 பேர்கள், உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களுள் 28 பேர்கள், குஜராத்தில் 26 உறுப் பினர்களுள் 9 பேர்கள், கருநாடகத்தில் 28 உறுப்பினர்களுள் 9 பேர்கள், ஜார்க்கண்டில் 14 உறுப்பினர்களுள் 4 பேர்கள், அசாமில் 14 உறுப்பினர்களில் 4 பேர்கள் இமாசலப்பிரதேசத்தில் நான்கு உறுப்பினர்களுள் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் 29 உறுப்பினர்களுள் 7 பேர்கள், உத்தரகாண்டில் 5 உறுப்பினர்களுள் ஒருவர், மேற்கு வங்காளத்தில் 42 உறுப்பினர்களுள், 8 பேர்கள், ஒடிசாவில் 21 உறுப்பினர்களுள் 4 பேர்கள், தமிழ் நாட்டில் 39 உறுப்பினர்களுள் 7 பேர்கள், ஜம்மு-காஷ் மீரில் 6 உறுப்பினர்களுள் ஒருவர், அரியானாவில் 10 உறுப்பினர்களுள் ஒருவர், சத்தீஸ்கரில் 11 உறுப்பினர் களுள் ஒருவர், வடக்கு கிழக்கு மாநிலங்களில் 14 உறுப்பினர்களுள் ஒருவர், பஞ்சாபில் 13 உறுப்பினர் களுள் ஒருவர் ராஜஸ்தானில் 25 உறுப்பினர்களுள் ஒருவர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்றால், நம் நாட்டின் ஒழுக்கத்தை, ஜனநாயக யோக்கியதையை எளிதில் எடை போட்டு விடலாமே!

அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்று பதவிப் பிரமாணம் செய்தவர்கள் அதன்படி நடந்து கொள்கிறார்களா?

ஆந்திராவிலிருந்து தனியே பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் தூதராக பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா அம்மாநில முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைக் கூட பிஜேபி எம்.பி. எதிர்க்கிறார் - காரணம் அந்த வீராங் கனை முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர் என்பது தான்.

குடியரசு தலைவர் அளிக்கும் இஃப்தார் விருந்தையே பிரதமராக இருப்பவர் புறக்கணிக்கிறார் என்றால் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

இரண்டு மாதங்களுக்குள்ளேயே இவ்வளவு விபரீதங்கள் என்றால், மீதிக் காலம் எப்படி நகரப் போகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

இந்த மதவாத சக்திகளுக்கு ஊடகங்களும் துணைப் போவது கடைந்தெடுத்த வெட்கக் கேடே!

Read more: http://viduthalai.in/page-2/84650.html#ixzz38UK25bGQ

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும். - விடுதலை, 22.9.1972

Read more: http://viduthalai.in/page-2/84649.html#ixzz38UKXL1zz

தமிழ் ஓவியா said...


சிறு குழந்தைகளும் - தொலைக்காட்சிகளும்!


அண்மையில் வானொலியில் குழந்தைகள் வளர்ப்பு பற்றி, சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனை (எழும்பூர்) மருத்துவர் ஒருவர் உரையாடலை காரில் பயணம் செய்து கொண்டே கேட்டு மகிழ்ந்தேன்.

அரிய பல தகவல்களை, கேள்வி - பதில் மூலம் வானொலி சார்பாக கேட்டவரும், பதிலளித்த மருத்துவ நண்பரும் மிக அருமையாக கூறி வந்தார்.

சிறு குழந்தைகளை வளர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ள பல பெற்றோர் களுக்கு, குறிப்பாகத் தாய்மார்களுக்குப் பயன்படும் என்பதால், வானொலியில் கேட்ட குறிப்புகளைக் கொண்ட - நினைவில் நின்றவைகளைக் கொண்ட -கட்டுரை இது! படித்துப் பயன் பெறுங்கள்.

இப்போதெல்லாம் பெற்றோர் இருவருமே பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள்; தாய் மகப்பேறு மருத்துவத்திற்கு ஆளாகி, குழந்தை பிறந்த 2,3 ஆண்டுகள் ஆகும் நிலையில் - தொடர் விடுப்பு எடுக்க இயலாது என்ற காரணத்தாலும் சிறு குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையங்கள் அவ்வளவு திருப்தியாக இத்தாய்மார்களுக்கு அமையாத காரணத்தாலும், மாற்று முறைகள் தேடுகின்றனர்.

வேலையிலிருந்து திரும்பிய பிறகுகூட, சமையல் பணி (இன்னமும் இது பெண்கள் தலையில் சுமத்தப்பட்ட பணியாகத்தானே பெரும்பாலான வீடுகளில் உள்ளது) செய்தாக வேண்டிய நெருக்கடி.

அதன் காரணமாக, 2 வயது, 3 வயது குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் படுக்க வைத்தோ, ஆங்கில நர்சரி ரைம்ஸ் (Nursery Rhymes) பாட்டுகளைப் போட்டோ அல்லது குழந் தைகளின் ஈர்ப்புக்கான சி.டி.களையோ போட்டு அக்குழந்தைகள் சதா பார்த்துக் கொண்டே இருக்கும்படிச் செய்து தங்கள் பணிகளை இடையூறு, அவர்களது தொந்தரவு ஏதுமின்றி செய்து வருவது கண்கூடு.

கேட்டால் இந்த நவீன அறிவியல் தகவல் களஞ்சிய, பாட்டு சி.டி.கள் அக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் என்றும் நம்பி பல தாய்மார்கள் இதனைச் செய்கின்றனர். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளை அந்த வயதின் வளர்ச்சிக்குரிய கலகலப் புடன் பெற்றோர்களிடம் குடும்பத்தவரிடம் பழகுவதில்லாமல், பேச்சை அறவே தவிர்த்து விட்டு, எப்போதும் அரைத் தூக்கம், அரை மயக்கத்திலேயே இருந்து விடுகிறார்கள்.

(கிராமப்புற வயல்வெளியில் தூர வேலை செய்யும் பல தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் அழாமல் தூங்கிய வண்ணம் இருக்க, சில போதை மருந்து களை முலைக் காம்பில் தடவிக் கொண்டு குழந்தைக்கு வேலைக்கு வருவதற்குமுன் பாலூட்டிவிட்டு குழந்தைகளைத் தூங்க வைத்து சீனா போன்ற நாடுகளில் செய்வ தாக ஒரு கட்டுரையில் படித்த நினைவு)

அப்படி அறிவார்ந்த சி.டி.களைக் கூட போட்டு, மனித உறவுகளோடு, கலந்து கொள்ளச் செய்வது குழந்தைகளை வளரும்படிச் செய்வது மிகப் பெரிய தவறு என்று அந்த மருத்துவர் திட்டவட்டமாகக் கூறினார்.

ஒரு பந்தை அக்குழந்தை முன் எறிந்தால் அது ஓடிப் போய் துடிப்புடன் எடுத்து, மீண்டும் எறியாமல் அது வெறுமனே அமைதியாக, ஏதோ ஒரு பொம்மை போல்தான் இருக்கும்; காரணம் அத்தொலைக்காட்சிப் பெட்டி முன்பு அது அப்படியே பார்த்து பார்த்து - அதனுடைய இயக்கங்களுக்கே அதில் வேலையில்லை அதன் காரணமாகத்தான் சும்மாவே இருக்கும்.

இதுவே வீட்டில் மற்றவர்களோடு கலந்து மற்ற குழந்தைகளுடன் தாத்தா, பாட்டி, பெற்றோர், அண்ணன், தங்கை, தம்பியுடன் கலந்து உறவாடினால் இப்படி இருக்கவே இருக்காது என்றார்!

ஜப்பானிய முறையில் முப்பரி மாண MRI Scan செய்து பார்த்ததில் அத்தகைய மேற்சொன்ன முறையில் - வளர்க்கப்படும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, அதற்குரிய அளவு வளரவில்லை என்பதை நன்கு நிரூ பணம் செய்யும் அளவில் உள்ளதாம்! கூறினார் மருத்துவர்.

நமது மூளை நான்கு பிரிவாக பகுக்கப்பட்டிருக்கிறது, நரம்பியல் மூளை நிபுணர்களால் (நூறு அளவு போன்ற மூளை முன் பகுதி (Frontal Lobe) தடித்துப் போகிறது.

அதனால் மின்னணு கருவிகள் (Electronic Gadgets) Mobile போன்ற வைகளை வைத்து பாட்டுகள் கேட்க வைத்தால் இவைகளை அருகில் கொண்டு சென்று 2 வயதுக்கு மேற் பட்ட சிறு குழந்தை வளர்ப்பில்கூட விரும்பத்தக்கது அல்ல என்கிறார் மருத்துவர்.

சில முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 1 மணி 2 மணி நேரத் திற்கு மேல் - ஒரு வாரத்திற்கு இந்தக் குழந்தைகள் பார்க்காமல் தடுப்பது மிக மிக அவசியம் - என்கிறார் இந்த மருத்துவ வல்லுநர் அறிவுரைகள்!

கேட்டீர்களா? குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர் கள் இந்த அறிவுரையைப் புறக் கணிக்காதீர் எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84653.html#ixzz38UKgztmH

தமிழ் ஓவியா said...


முஸ்லிம் மேலாளர் வாயில் சப்பாத்தியைத் திணித்த இந்த ராஜன் பாபுராவ் விச்சாரே - யார்?

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பின ராக இவர் மீதுள்ள காவல் நிலையத்தில் பதிந்த வழக்குகளின் விவரம் (கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பதி வானவை)

இவர்மீது கொலை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தாக்கியது, கடத்தல், மிரட்டிப் பணம் பறிப்பது, பொதுச் சொத்திற்கு பங்கம் விளைவிப்பது, அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தனியா ருக்கு சொந்தமான இடத்தை ஆக்ர மித்தது, போலி கையெழுத்துப் போட்டு பண மோசடி செய்தது, பெண்களை மானபங்கப்படுத்தியது, பொது இடத்தில் பெண்களை தாக்கியது என மொத்தம் 20-ற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவற்றின் விவரங்கள்:

1) CRI 163/07/RCC 198/08 வாக்ளே எஸ்டேட் காவல்நிலையம் - தானே.

2) CRI 193/06 Sum CC 6252/2006 மாவ்படா காவல் நிலையம் - தானே.

3) CRII 73/11 நாவ்பாடா காவல் நிலையம் - தானே.

4) 4472/10 தானே காவல் நிலையம்

5) CRI 290/11 Under Section 143, 149.

6) CR II 39/2006 Under Section 37(3), 135, மும்பை காவல் சட்டத்தின்படி கைதாகி பிணையில் வெளியே வந்தவர்.

7) CRII 3033/09 Under Section 37(3), 135 கபூர்வாடி காவல் நிலையம் - தானே.

8) CRI 290/11 Under Section 143,149,323,342 of IPC with Sec. 37(1)1325
கல்வா காவல் நிலையம்.

9) CRII 3054/04 Under Section 37/(3)135

10) CRII 188/5 Under Section 37(3) 135

11) CRII 128/07 Under Section 291, 278, 188 of IPC with Sec.37(3) 135 O

12) CRII 73/11 Under Section 188, 268, 290, 291 with Sec. 6 of Environment Act 1986 and Under

Sec.33 (N) 113, 181, 136.

13) CRII 64/06 Under Section 37(3)135.

14) 193/06 Under Section 323, 504, 506, 143, 145, 147 of IPC

15) CRI 240/89 Under Section 143/147,336,337,353,427 of IPC

16) CRII 04/93 Under Section 37(3) 135.

17) CRII 08/93 Under Section 37(3)135, 36/135

18) CRII 73/06 Under Section 37(3) 135.

19) CRII 92/11 Under Section 37(3)135.

20) CRI 165/07 Under Section 353, 143,145,147, 148,149,427,504 of IPC

Read more: http://viduthalai.in/page-2/84656.html#ixzz38UKr8csO

தமிழ் ஓவியா said...


ஆச்சாரியாரின் குழப்பமும் அண்ணாவின் பதிலும்!


சேக்கிழார் திருநாளில் பேசுவதற்காக, ஆச்சாரியாரை அழைத்தனர். சென்ற கிழமை. சைவர்களுக்கு அவ்வளவு ஆள்பஞ்சமா என்று கேட்காதே தம்பி! அவர்களுக்கு அவ்வளவு சமரச ஞானம் என்று எண்ணிக்கொள்! இப்போதெல்லாம், அரியும் அரனும் ஒண்ணு! சென்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு உள்ள குழப்பம், அவர் பேச்சிலே, எப்படி பளிச்செனத் தெரிகிறது பார், வேடிக்கையாக இருக்கும்.

திருநீறு, நாமம், இவைகளை அணிந்து கொள்ள வேண்டும். அது பக்திக்கு அடையாளம், பரிகாசத்துக்கு உரியதல்ல, என்று வலியுறுத்துகிறார் ஆச்சாரியார். கேள் அவர் பேச்சை,

"சைவம் வைஷ்ணவம் என இரண்டு விதமான சமயம் நாட்டில் பரவி வருகிறது, முக்கியமாக முகத்தில் போடும் நாமக்குறியி லிருந்து தெரிகிறது. இதில் மறைவு கிடையாது. எல்லா ருக்கும் தெரியும் படியாகப் போட்டுக் கொள்ளும்படி ஆச்சாரியார்கள் சொல்லியிருக் கிறார்கள்.''

இவ்விதம் பேசி, திருநாமம் அணிந்தாக வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்துகிறார். சைவர் களிடமா என்று ஆச்சரியப்படாதே. அவர்கள் திருநீறு பூசட்டும், வைணவர் திருநாமம் தரிக்கட்டும் என்பது பொருள், என்று பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்வோம்.

திருநாமத்தின் அவசியத்தை இவ்வளவு வலியுறுத்தி ஆச்சாரியர்கள் ஆக்ஞையிட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டிப் பேசினாரே தவிர, அவருக்குக் குழப்பம் வரா மலில்லை. அவர் நெற்றியில் நாமம் இல்லை! மற்றவர் களுக்கு நாமம் போடச் சொல்லி வலியுறுத்துகிறார். அதன் மகிமையை எடுத்துக் கூறுகிறார். அவர் நெற்றியில் நாமம் இல்லை. என்ன எண்ணிக் கொள்வார்களோ, என்று குழம்புமல்லவா! எனவே சொல்கிறார், அதேபோது,

"எனக்கு நாமக்குறியில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். வேஷத்தில் பக்தி இல்லை'' என்று கூறுகிறார்!

எப்படி இருக்கிறது வாதம்! எவ்வளவு குழப்பம், எவ்வளவு பெரியவருக்கு!'

திருநாமம் தரித்தல் அவசியம் - ஆச்சாரியாள் சொல்லி யிருக்கிறார்கள்! இதைச் சொல்வதும் ஆச்சாரியார்தான் - நாமக்குறி இல்லாவிட்டால் என்ன, வேஷத்தில் பக்தி இல்லை என்று சொல்பவரும், அவரேதான்!

வேஷம் பக்தியல்ல என்பதை நம்பினால், நாமம் போட்டாக வேண்டும் - எல்லோருக்கும் தெரியும்படி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கத் தேவையில்லை.!

நாமம் தரித்தாக வேண்டும், ஆச்சாரியாரின் கட்டளை அது, அதனை மீறக் கூடாது என்பதிலே உறுதியும் நம்பிக்கையும் இருந்தால், நாமம் தரித்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.

எதிலும் உறுதிப்பாடும் உத் வேகமும் இல்லை, எனவே உள்ளத்தில் ஒரே சேறு!!

இந்நிலை இவருக்கு என்றால், சில்லரைகள் சிரமப்படுவதிலே ஆச்சரியமென்ன.

- தம்பிக்கு கடிதம் என்ற நூலில் அண்ணா

Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UM0RVRt

தமிழ் ஓவியா said...

காசியில் இறக்க முக்தி!

சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங்களது அந்தக் கவிதையை சரிபார்த்து தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தரு வார்கள் காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்றும் ஒருவர் புரட்சிக் கவிஞரிடம் வேண்டினார்.

கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி எனும் புராண கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே!

Read more: http://viduthalai.in/page-7/84676.html#ixzz38UMFjDNb

தமிழ் ஓவியா said...


காஞ்சி என்றால் அண்ணா!


சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் தன்னிகரற்று விளங்குபவர் திருமுருக கிருபானந்தவாரியார். அவர் பம்பாயில் ஒரு முறை சொற்பொழிவு ஆற்றும்பொழுது தமக்கு முன்னே திரண்டிருந்த பொது மக்களை நோக்கி அவர் அடியிற் கண்டவாறு புதிர் போட்டாராம்.

...சில பெரியவர்களுடைய ஊர்களைச் சொன்னாலே அவர்கள் பெயர் என்ன என்பது தெரிந்து விடும். உதாரணமாக அரியக்குடி என்றால் யாரை குறிக்கும் தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினாராம் வாரியார்.

இராமானுச அய்யங்கார் என்றனராம் கூட்டத்தினர்.

இவ்வாறே இன்னும் சில ஊர்களை அவற்றுக்குரிய மனிதர்களின் பெயர்களைக் கேட்டு வந்தவர் இறுதியாக,

காஞ்சி? என்றாராம். உடனே குழுமியிருந்த பொதுமக்கள், அண்ணாதுரை! அண்ணாதுரை என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனராம்.

இதைக் கேட்டதும் அயர்ந்து போனாராம் கிருபானந்தவாரியார். காஞ்சி என்றதும் பொது மக்களுக்குக் காமகோடி பீடாதிபதி, சங்கராச்சாரியார் நினைவுதான் வரும். அவர் பெயரைத்தான் கூறுவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், கூட்டத்தினரோ அண்ணாவின் பெயரை முழங்கியது அவருக்கு அளவற்ற வியப்பை அளித் திருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMN8spQ

தமிழ் ஓவியா said...

பச்சை நாஸ்திகம்

சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு சுகம் பெறுவதெக்காலம்

சாத்திரத்தைச் சுட்டு- மனுதர்ம சாஸ்திரத்தைச் சுட்டு பொசுக்கி, சதுர்மறையைப் பொய்யாக்கி - மேல் கண்ட சாஸ்திரத்திற்கு ஆதாரம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களையும் சுத்தப் புரட்டு என்று தள்ளி, சூத்திரத்தைக் கண்டு - பகுத்தறிவின் ஆராய்ச்சியில் இயந்திரங்களைக் கண்டுபிடித்து, சுகம் பெறுவதெக்காலம் - அவைகளினால் மனித சமூகமும் சுகமடைவது எப்போது வாய்க்கப் போகின்றது?

- தந்தை பெரியார் குடிஅரசு - 5-5-1929

Read more: http://viduthalai.in/page-7/84675.html#ixzz38UMjDgF9

தமிழ் ஓவியா said...


குங்குமம் விபூதி பற்றி


பிரபல தோல் நிபுணர் டாக்டர் தம்பையா கூறுகிறார்! நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சது. நவீன உலகில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன! அவை எப்படி எப்படித் தோலைப் பாதிக்கின்றன என்பது பற்றிப் பெரிய ஆராய்ச் சியே பண்ணி தீஸிஸ் கூட சப்மிட் செஞ்சிருக்காங்க. கலப்பட விபூதி பக்தியும் இதுமாதிரி யாராச்சும் ஸ்டடி பண்ணிக் கண்டுபிடிக்கணும். குங்குமம், விபூதி போன்றவற்றை ஒரு சிலக் குடும்பங்கள் பாரம் பரியமாகத் தயாரித்தன. அதாவது, குடிசைத் தொழில் மாதிரி... இப்ப அது மாறிப் போயிடுச்சு. இந்த மாதிரி குங்குமம், விபூதி போன்றவற்றால் தோலில் பிரச்சினை ஏற் பட்டு என்னை அணுகுபவர்களிடம், முதலில் குங்குமம், விபூதி இடுவதைத் தற்காலிக மாக நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குகிறேன்... என்றார். (நன்றி: ஜூனியர் விகடன் 26.10.1997)

Read more: http://viduthalai.in/page4/84802.html#ixzz38op45Q2V

தமிழ் ஓவியா said...


அவமதிக்கப்படும் 50 சதவீத முதியோர்கள்.


நம் நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50 சதவீதம்பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப்படுகிறார்கள் என 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி 'உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக' அனுசரிக்கப்படு கிறது. இதை அனுசரிக்கும் வகையில் கர்நாடக முதியவர்கள் சங்கம் சார்பாக சனிக்கிழமை பெங்களூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கர்நாடக மாநில 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசுகையில், "ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பாக, கடந்த 7 ஆண்டு களாக நாட்டி லுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு நாட்டிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 12 பெரிய மாநகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தினோம்.

அதில் 50 சதவீதமான முதியவர்கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் அவமதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்கள் 38 சதவீதமும், பெண்கள் 53 சதவீதமும் அவமதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த அவமதிக்கப்படும் முதியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நாட்டிலே பெங்களூரில் தான் 75 சதவீத, அதாவது அதிக அளவில் அவமதிக்கப்படு கிறார்கள். முதியவர்களை அவமதிப்பதில் சென்னை 53 சதவீதமும், டெல்லி 22 சதவீதமும், கான்பூர் 13 சதவீதமும் (கடைசி இடம்) பெற்றிருக்கிறது.

இதில் 77 % அவமதிப்புகள் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன. மற்றவை சாலை, பேருந்து நிலையம், மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். நாட்டில் 61% முதியவர்கள் தங்களுடைய மருமகளா லும், 59 சதவீத பெற்றோர் தங்களுடைய மகனாலும் அவமதிக்கப்படுகின்றனர். பெங்களூரை பொறுத்தவரை 65 சதவீதம் மகனாலும், 45 சதவீதம் மருமகளாலும் அவமதிக்கப்படுகின்றனர்.

ஆண்டுதோறும் முதியவர்களை அவமதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதற்கு என்ன காரணம் என முதியவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய முடிவதில்லை. அதனால் பணம் சம்பாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் எங்களை பாரமாக நினைத்து வதைக்கிறார்கள்'' என்றார்கள்.

முதியவர்கள் துன்புறுத்தப் படுவதை தடுக்கும் வகையில், கடந்த 2007ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் வதைபடும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் கொடுக் கப்பட்டுள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லாததால் முதியவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மேலும் அரசு சார்பாக முதியவர்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டந்தோறும் உதவி மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page5/84804.html#ixzz38opKKUSF

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவை அதிர வைத்த பறை இசை


செயின்ட் லூயிஸ் (மிசௌரி, யுஎஸ்): 2014-ஆம் ஆண்டு ஃபெட்னா விழாவில் தமிழரின் கலாச்சார அடை யாளமான பறை இசை நிகழ்ச்சிகளை கட்டியது. வந்திருந்த பார்வையாளர் களை மயிர்க்கூச்செரியும்படி அமைந்தது இந்த பறை இசை நடன நிகழ்ச்சி. 2014, ஜூலை 4, 5 தேதிகளில் செயிண்ட் லூயிஸ் நகரில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27ஆம் ஆண்டு தமிழ்விழா நடந்ததது. வடஅமெரிக்க தமிழ் குடும்பங்கள் ஒன்றிணைந்து தமிழைக் கொண்டாடிய இந்த இரு தினங்களும், நண்பர்கள் அனைவரும் உற்றார்களாகவும், உறவினர்களாகவும் மாறிய நாட்களாக மாறிப் போயின என்றால் மிகையல்ல. நகரின் பிரதான சாலைகளில் பாரம்பரிய உடையில் தமிழர்கள். செயின்ட் லூயிஸ் நகரமே திருவிழாக்கோலம் பூண்டு தமிழால் மணத்தது. தமிழர் அடையாளம் காப்போம், ஒன்றிணைந்து உயர்வோம் என்ற கோட்பாடுகளை முன்னிருத்தி இரு தினங்களும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடைப்பெற்றதுதான், தமிழனின் கலாச்சார அடையாளமான பறை நிகழ்ச்சி.

பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாட்டுப் புற இசை நிகழ்ச்சி அல்லது பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சி நடத்த வேண்டுமானால், அதற்கு தாய்த் தமிழகத்திலிருந்து கலைஞர்களை வரவழைக்க வேண்டி யிருந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை, பறை இசை நடன நிகழ்ச்சி நடத்துவதில், தேர்ந்த கலை ஞர்களாக உருவெடுத்திருக்கிறார்கள் இங்கு வாழும் தமிழர்கள். இந்த நிலைக்கு முக்கிய காரணமாகத் திகழ்பவர் மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொற்செழியன் மற்றும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக நின்ற பேரவையின் தலைவர் தண்டபாணி குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்

பறை இசை கலைஞர்கள் இந்த பறை நடனக் குழுவில், பொற்செழியன், ரமேஷ், கோவிந்தராஜ், அசோக், நந்தகுமார், பாலா, தினேஷ், பிருத்வி ராஜ், யசோதா, ரம்யா, கவிதா, புவனா, வீணா, ஜெயஸ்ரீ ஆகியோரும், இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆர்வலர்களாக ஆதிசரண், கனிஷ்க், ஜோதம்,ரியா, ரித்தன்யா ஆகிய சிறார்களும் இதில் மனமகிழ்வுடன் பறையாடினர்.

பெரும் வெற்றி தமிழ் கலைகளைக் காக்கும் பொருட்டு இக்குழுவினர் மேற்கொண்டுள்ள இம்முயற்சி பெரும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. குறிப்பாக 2014 ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியில் முக்கியப் பங்கு பறை இசை நடனம் மற்றும் தமிழரின் தொன்மை கலைகளான தெருக்கூத்து மற்றும் தோல்பாவைக் கூத்து போன்ற வற்றுக்கும் உண்டு.

அமெரிக்க பேராசிரியர்கள் இதில் பெருமைப்பட வேண்டியது, ஒக்கல ஹாமா பல்கலைகழகத்தின் இசைப் பேராசிரியர் ஜோயி செரினியன் மற்றும் ஏரன் பேகி தமிழ் பறை நடனக் குழுவி னருடன் இணைந்து சிறப்பித்ததுதான். அவர்களுடைய பறை பட்டறையும் பேரவையின் ஒரு அங்கமாக விளங்கி யது. ஆம்... நம் தமிழரின் பறை இசையை மையமாக வைத்து அமெ ரிக்கர்கள் பறைப் பட்டறை நடத்து வதை தாயகத் தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பறையால் விண்ணதிரட்டும் இசை மனதை மகிழ்வூட்டும், அமைதியாக்கும், ஆவாரப்படுத்தும், சுத்தமாக்கும். நம் முன்னோர்கள் கண்ட பறை, அமெ ரிக்கன் தமிழ் பறை குழுவின் மூலம் புது பரிமாணத்தை அடைந்துள்ளது. அவர்களின் முயற்சி தமிழரின் பறையை விண்ணை முட்டச் செய்யும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்கன் தமிழ் பறை குழுவினர், பறை உலகறிய செய்வதற்கு என்றும் ஆர்வமுடன் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. இக்கலையை கற்றுக்கொள்வதற்கோ, மேடையில் கண்டு ரசிக்கவோ அவர்களைத் தொடர்பு கொள்ளவும் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழகத்தில் எந்த ஒரு விழா என்றாலும் மலையாளத்தாரின் செண்டைமேளத்தையும் பார்ப்பனர் புகுத்திய கலாச்சாரத்துடன் கொண் டாடி வரும் வேலையில் அமெரிக் காவை அதிரவைத்த பறைஇசை இனி அனைத்து பொது நிகழ்ச்சியிலும் ஒலிக்குமாம், எந்த தமிழிசையை அமங் கலம் என்று ஒதுக்கிவைத்தார்களோ அதே இசை இன்று மேற்குலகில் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page5/84803.html#ixzz38opVgRtU

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பொன்மொழிமனிதனிடம்தான் உயர்ந்த ஜீவன் என்று சொல்லிக் கொள்ள எந்த ஒரு தனிப்பட்ட குறிப்பும் அடையாளமும் இல்லை என்றே சொல்லுவேன். மனிதனால் - எண்ணப்படும், பேசப்படும், செய்யப்படும் காரியங்களில் - எதிலாவது மற்ற ஜீவன்களைவிட உயர்ந்த தன்மை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அவற்றில் மற்ற ஜீவன்களை விடத் தாழ்ந்த தன்மைகள் பல இருப்பதாகச் சொல்லலாமே தவிர, உயர்ந்த தன்மையைக் குறிக்க ஒன்றினாலும் காண முடியவில்லை.

Read more: http://viduthalai.in/page6/84806.html#ixzz38opiron9

தமிழ் ஓவியா said...


உயிர் உருவாகிறது, படைக்கவில்லை

1. வெள்ளை புழு: ஆம் செம்மறி ஆட்டு புழுக்கை (சாணி) அள்ளி ஓரி டத்தில் (குப்பைக் குழி) தினம் 4, 5 தட்டுக்கூடை அளவுக்கு ஆறுமாதம் வரையில் அதன் மேல் போட்டு வந்து அதன்பின் ஓரளவு மழை அதாவது தண்ணீர் தெளித்து காயாமல் நனைந்து இருக்க வேண்டும். அதன்பின் அதனை மண்வெட்டியால் அள்ளும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அதிலே இரண்டு மூன்று அங்குல நெட்டு அரை ஒரு அங்குலம் உள்ள வெள்ளை நிறமுள்ள பூச்சி உயிருடன் இருக்கிறது.

2. எருவில் புழு: மாடுகளை மேய்க்க நிலத்துப்பக்கம் போகும்போது அதன் எருவில் அடுத்த நாள் பார்க்கும்போது சிறு வெள்ளை புழுக்களும் இருக்கிறது அதை காக்கை கொத்தி இரையாக்கிக் கொள்கிறது எல்லா இடங்களிலும் இவ்விதம் ஏற்படுவதில்லை உப்பு நிலம், உவட்டுத்தரை, கந்தகத்தரை, உவர்மண் இப்படி உள்ள இடங்களில் புழுக்கள் தோன்றுவதில்லை.

3. ஈசல்: மழை பொழியும் போதெல்லாம் இல்லை; அய்ப்பசி கார்த்திகை மாத வாக்கில் மழை பொழிந்தால் உடனே ஈசல் என்ற பறக்கும் உயிரினம் மிக அதிகமான அளவில் உருவாகிறது கொஞ்ச நேரத்தில் இறக்கை உதிர்ந்து தரையில் இளைகிறது. உருமாற்றம் ஆகிறது. இது உணவாகவும் பயன்படுகிறது.

4. பனம் மட்டை: பனம் மட்டையை அடர்த்தியாக ஆறுமாத அளவில் அடுக்கி வைத்து அதில் பலமுறை மழை பொழிவு அல்லது பலமுறை தண்ணீர் தெளித்தால் கருப்பு நிறப்பூச்சி, அட்டை மாதிரி உயிருடன் கூடுதலாக உருவாகிறது.

5. தேள்: பழைய பனம் மட்டை, பழங்கூரை, வரகு, வைக்கோல், சாம்பல் இவைகளை ஒரே இடத்தில் போட்டு அதிகம் காயாமல் தண்ணீர் தெளித்து வந்தால் ஆறுமாத அளவில் தேள் உயிரினம் தோன்றுகிறது.

6. சிகப்பு அட்டை: இற்றுப்போன மட்டை, வைக்கோல், கூரை, பழைய வீடுகளில் மழைக்காலங்களில் சிகப்பான அட்டை உயிருடன் உண்டாகிறது.

7. பாசி: தண்ணீர் உள்ள தொட்டி யில் உயிரான பாசம் ஏற்படுகிறது குறைவான தண்ணீர் உள்ள கிணற்றில் கொடி போன்ற பாசி உயிருடன் உண் டாகிறது. இவை எனது கவனிப்பில் தென்பட்டவை: இடத்திற்கு ஏற்பவும் பொருள்கள் மூலமும் தட்ப வெப்ப பருவகாலங்களில் உயிரினம் ஏற்பட்டு அதுவே வளர்ச்சியின் மூலமாக மனிதன் என்ற உயிரினம் உருவாயிருக்க வேண்டும் சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி சரிதான் கடவுள் என்பது ஒரு பொருள் கூட இல்லையே; அப்படி இருக்க, இல்லாத பொருள் எப்படி எதையும் உருவாக்க முடியும்?

8. விட்டில்: ஆறுமாத அளவில் ஒரே இடத்தில் பல தென்னம் மட்டைகள் காய்ந்து இற்றுப் போய் இருந்தன. மழை பொழியும்போது அந்த மட்டையில் இருந்து விட்டில்கள் பொரி வானம் போல 50 அளவில் பறந்தன. கால நிலைக்கேற்ப உயிரினம் தோன்றும் இந்நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

கோழி: கோழி முந்தியா? முட்டை முந்தியா? உயிர் இனம் கோழி தான் முந்தியது. ஆம், இவ்விதம் செல்கள் உருவாகி அதற்கேற்ப உயிர் இனம் தோன்றி இருக்கும். இதன் பின்தான் இன சேர்க்கை ஏற்பட்டு உற்பத்தி ஆகிறது ஒவ்வொன்றும் அபிவிருத்தி ஆகி இனப்பெருக்கம் அதிகரிக்கிறது. முதலில் செல் உருவாக வேண்டும் இவை சேர்ந்து உயிர்ப் பொருள் உருவாகி நிறங்கள் வடி வங்கள் ஆண்பால். பெண்பால் அமை வதற்கு செல்களே காரணமாகின்றன. கடல், மழை, இப்படி பல இடங்களில் சூழ்நிலைக்கேற்ப உயிர் இனம் தோன்றி ஆண், பெண் என்பன தோன்று கின்றன. அதன்பின் தான் இனச் சேர்க்கை மூலமாக, முட்டை மூலமாக அல்லது குஞ்சு, குட்டி போன்றவை உருவாகின்றன. இதன்படி பார்த்தால் கோழிதான் முந்தியது.

Read more: http://viduthalai.in/page7/84808.html#ixzz38opvRna6

தமிழ் ஓவியா said...


இந்த நாள்!


29.07.1944இல் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் முத்தையா டாக்கிஸ் திரைப் பட அரங்கில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்டம் திராவிடர் கழக மாநாட்டில் அகவை பதினோர் வயது நிரம்பாத நிலையில் சிறுவன் வீரமணியை மேசை மீது தூக்கி நிறுத்தி மனப்பாடம் செய்த பேச்சுத் தொகுப் பினைத் தங்குதடையின்றி பேசி மாநாட்டிற்கு வந்திருந்தோர் அனைவரின் பாராட்டைப் பெற்ற நாள்.

இந்த மேடையில் சிறுவன் வீரமணியின் பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வீரமணியின் பேச்சைப் பாராட்டிப் பேசும்போது இப்பொழுது பேசிய சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்.

சிறுவன் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார் அண்ணா. தந்தை பெரியார் மேடையில் அகமகிழ்வு அடைந்தார். மாநாட்டுப் பந்தலே கையொலியால் அதிர்ந்த நாள்! இந்த நாள்!!

Read more: http://viduthalai.in/e-paper/84827.html#ixzz38orBRK3p

தமிழ் ஓவியா said...

விதைகளை மலடாக்கும் விபரீதம்!


மத்தியில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதவாத அரசு மட்டுமல்ல - வெகு மக்கள் விரோத அரசு - பாட்டாளி மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு - கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை - பொருளாதாரத்தில் அமெரிக்கப் பார்வை கொண்டது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் நாளும் பெருகிக் கொண்டே போகின்றன. இதன் மூலம் வெகு மக்கள் வெறுப்பை வெகுவாக வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட பயிர்களைப் பரிசோதனை முறையில் சாகுபடிசெய்யலாம் என்று ஜூலை 18ஆம் நாள் மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாக ஆகி விட்டது.

மோடியின் குஜராத் மாநிலத்திலேயே இதற்கான ஆக்கப்பூர்வ எதிர்ப்பு களைகட்டுகிறது. இன்று முதல் மூன்று நாள்கள் விவசாயிகள் ஒருங்கிணைந்த மாநாடு குஜராத்தில் நடைபெறுகிறது. தெற்காசிய விவசாயம் ஒருங்கிணைந்த மாநாடாக இது உருவாகியுள்ளது. இதன் அவசர நோக்கம் மரபணு மாற்றுப் பயிர்களை கடுமையாக எதிர்ப்பதே!

மரபணு மாற்று விவசாயத்துக்கு உலகெங்கும் கடும் எதிர்ப்பு மேலோங்கி நிற்கிறது. இதன் சூத்ரதாரி அமெரிக்காவாகும். இவர்கள் சொல்லுகிற முறைப்படி மரபணு மாற்று முறையைக் கையாண்டால் விதை நெல்லுக்கு இந்த நிறுவனங்களிடம் கையேந்தித் தான் நிற்க வேண்டும்.

இந்த மரபணு மாற்று முறை விவசாயத்தால் கிடைக்கும் நெற்களை விதை நெல்லாகப் பயன்படுத்த முடியாது. வீரிய கோழி முட்டைகளை (HYBRID) கொண்டு எப்படிக் குஞ்சு பொரிக்க வைக்க முடியாதோ அதே போன்று தான் இதுவும்
ஏதோ பி.ஜே.பி. இப்பொழுது ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தத் திட்டத்தைக் கைக் கொள்கிறது என்று அவசரப்பட்டு யாரும் முடிவு செய்ய வேண்டாம்.

அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையிலான மத்தியில் அமைந்த ஆட்சியின் போதே 1998ஆம் ஆண்டிலேயே இந்த நாசப்படுத்தும் நச்சுக் கொள்கைக்கு நாற்று நடப்பட்டு விட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம் தனது தாவர மரபணு ஆய்வுக்கான அணுக்களை (டெர்மினேட்டட் ஜீன்) இந்திய நாட்டின் வயல்களில் சோதனை செய்து பார்க்க அனுமதி வழங்கியது. கருநாடகம் உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் சோதனை செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது - பிஜேபி ஆட்சியில். இதில் என்ன கொடுமையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இது குறித்த தகவலோ அவர்களின் அனுமதியோ கிடையாது என்பதுதான் அது.

தமிழ் ஓவியா said...

அமெரிக்காவின் மான்சான்டோவுக்கு வழங்கப் பட்டுள்ள இந்த அபாயகரமான அனுமதி குறித்து அந்தக் கால கட்டத்திலேயே பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் பயிர்களின் மரபுரிமை திருடப்படுவதைக் கண்டித்துக் குரல் கொடுத்ததுண்டு; இந்தத் திட்டத்தால் விளை பொருள்களில் சத்துக்கள் அதிகரிக்கும் என்கிற விளம்பரத்திலும் உண்மையில்லை என்று பெங்களூர் வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் அழுத்தந் திருத்தமாக வெளிப்படுத்தினரே!

நிலத்தையும், நீரையும் தெய்வமாக வழிபட வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட பா.ஜ.க. இப்படி இந்தப் பூமாதேவியை (பூமாதேவி அவர்கள் மொழியில் இப்படித்தானே!) மாசுபடுத்தலாமா?

ஒவ்வொரு முறையும் விவசாயம் செய்து விட்டு, அடுத்த விவசாயத் தொடக்கத்திற்கு அந்த அமெரிக்க நிறுவனங்களின் திசை நோக்கித் தண்டனிட்டுக் கிடக்க வேண்டுமா? அவர்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் மலட்டு விதைகளுக்காக காத்துக் கிடக்க வேண்டும். வேறு வழியில்லை நம்மை அண்டித் தான் இந்தியாவின் விவசாயம் நடந்தாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கிக் கொண்டு விட்டால், அவர்கள் வைத்தது தானே சட்டம், நிர்ணயித்ததுதானே விலை என்ற சுரண்டல்தானே ஜாம் ஜாமென்று நடக்கும்.

மரபணு மாற்று விதையில் பயிர் செய்யப் படுவனவற்றைத் தொடர்ந்து உண்டால் உடல் நோய்க்கு ஆளாக வேண்டும். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த முறையில் உற்பத்தி செய்யப்படுபவை பெரும்பாலும் கால்நடைகளுக்குத் தீவனங்களாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஒரு முக்கிய தகவலாகும்.
மரபணு மாற்றுப் பயிர்களின் திறந்தவெளிப் பரி சோதனை குறித்த முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. நாடாளுமன்ற வேளாண் நிலைக் குழு ஆய்வு நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கை 2013இல் வெளி வந்தது.

இந்த மலட்டு விதை விவசாயத்தின் வாழ்வா தாரத்தையே முற்றிலும் அழிக்கக் கூடியது என்று தெளிவாக தெரிவித்து விட்டதே! இந்த அடிப்படையில் கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டது.

இப்பொழுது நரேந்திர மோடி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசோ, பழைய பிஜேபி அரசு (1998) தொடங்கியதைப் புதுப்பித்துக் கொள்ள தோள் தட்டிக் கிளம்பியுள்ளது.

அறுபது நாட்களுக்குள் இவ்வளவு விபரீதங்கள் என்றால் வரும் காலம் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதிதான் மக்கள்முன் நிற்கிறது.

இந்துத்துவா கொள்கைப்படி விவசாயம் என்பது பாவத் தொழிலாகும். (மனு தர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84) அது எப்படியோ நாசமாக போகட்டும் என்று அவர்கள் நினைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவர்கள் நம்பும் அந்த பாவப்பட்ட தொழிலில் தான் இந்தநாட்டில் கோடானு கோடி விவசாயப் பெருங்குடி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திண்டோள் பொங்கி எழுந்தால் அவற்றை எதிர் கொள்ளும் சக்தி எந்த அரசுக்கும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/84841.html#ixzz38orhYiwR

தமிழ் ஓவியா said...


தீராதுபார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந் தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/84840.html#ixzz38orrEooA

தமிழ் ஓவியா said...


வாய்ப் புண்ணைக் குணமாக்கும் மணத்தக்காளி கீரை


மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும்போது கசப்பு குறைவாய் இருக்கும். இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம்.

மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

இதுகுறித்து தருமபுரி அரசு சித்த மருத்துவ பிரிவு செல்வமூர்த்தி கூறியதாவது:

மணத்தக்காளி சிவப்பு, கறுப்பு என இரண்டு வகைப் படும். இலை, காய் இரண்டும் பெரிதும் பயன்படுகிறது. மணத்தக்காளியை மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, விடைக்கந்தம், உலக மகா என வழக்கத்தில் அழைக்கப் படுகிறது. கபநோயால் உண்டாகும் நாப்புண், நாவேக்காடு, உட்சூடு, நா எரிச்சல், இருமல் சளி மணத்தக்காளி பயன்படுத்தினால் தீரும்.

ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை சாப்பிடவேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலி நீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம்.

நாள்பட்ட வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளி காயை வற்றல் போடலாம்.

வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சினைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-7/84817.html#ixzz38otOZdmU

தமிழ் ஓவியா said...


தொண்டை வலிக்குத் தீர்வு


தொண்டை வலி என்பது எல்லா வயதினருக் கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ் வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும் போதும் சிரமம் இருக்கும்.

எனவே இதை விரட்ட சில வழிமுறைகள்...

சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாள்களில் குணமாகி விடும்.

சுகாதார மற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது.

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். பெரும் பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா தேநீர் குடித்தால் நல்லது. மசாலா தேநீர் என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்கவேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால், தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை சாற்றில், வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

மிளகு: காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.

தடை: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த நேரத்தில் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/84816.html#ixzz38oteWMex

தமிழ் ஓவியா said...


வயிறு பிரச்சினைகளைத் தீர்க்கும் கறிவேப்பிலை....

தமிழர்களின் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது கறிவேப்பிலை. சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உணவு ருசி மிகுந்ததாகவும், வாசனை மிகுந்ததாகவும் மாறும்.

கறிவேப்பிலை தென் னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இது இந்திய, இலங்கை உணவு வகைகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இத்தாவரத்தின் தோற்றம் தென்னிந்தியாவாகும். இதன் விதைகள் நச்சுத் தன்மையுடையவை.

இலங்கை, இந்தியா தவிர்த்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கறிவேப்பிலையின் பயன்பாடு காணப்படு கின்றது.

தென்னிந்தியர் மற்றும் தமிழரின் தொடர்புகள் ஊடாக கறிவேப்பிலையின் பயன்பாடு பிற இனத்தவர் களான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற மக்களிடமும் கணிசமான அளவினரிடம் பரவியுள்ளது. கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணி.. இதுகுறித்து அரசு சித்தா மருத்துவர் செல்வமூர்த்தி கூறியதாவது: கறிவேப்பிலை தூக்கி எறிவதற்கல்ல, உண்பதற்கே.

புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி. இவற்றால் கண் பார்வைக் கோளாறுகள் வராது. எலும்புகள் ஏற்றம் பெறும். சோகை நோய் அண்டாது. தொற்று நோய் ஊரில் இருந்தாலும் நமக்கு வராமல் தடுக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உண்டு.

புண்கள் விரைவில் ஆற கறிவேப்பிலை உதவும். சிறப்பாக வாய்ப்புண் குணமாகும். பல் ஈறு வலுவாகும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டியடிக்கும் வலிமை இதற்கு உண்டு. மலச்சிக்கலை போக்கும். செரிமான சக்தியை மிகுவிக்கும். பேதியைக் கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலைத் தொலைக்கும்.

தலைமுடி வளரவும், வனப்பாக விளங்கவும், கண்களுக்கு ஒளிதரவும், சுக்கிலம் விருத்தியடையவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். பசி எடுப்பதில்லையா? செரிமான மந்தமா? கறிவேப் பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து உப்புச் சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி கிளர்ந்தெழும்

Read more: http://viduthalai.in/page-7/84818.html#ixzz38ottkYaW

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் 1,10,19,26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுப பலன் உண்டாம். புத்தி சாதுரியமும், வாக்கு வன்மையும் உண்டாம்.

7,16,25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு மாதத் தொடக்கத்தில் பண வரத்து இருக்குமாம்.

ஒரு நாளில் பிறந்தால் போதும், திறமை முக்கி யம் இல்லை; உழைப்பு முக்கியம் இல்லையா? இது ஒரு சோம்பேறித்தன மான நம்பிக்கையை அல்லவா வளர்க்கும்!

Read more: http://viduthalai.in/page1/84723.html#ixzz38ouKCkRt

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்


ஒவ்வொருவனும் தன்னை அன்னி யன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.

- (விடுதலை, 24.9.1950

Read more: http://viduthalai.in/page1/84714.html#ixzz38oudCrNg

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடும் பாலியல் வன்கொடுமையும்


தேசிய ஆவணக் கழகம் (National Crime Records Bureau) என்பது மத்திய அரசின்கீழ் செயல்படும் ஓர்ஆவணக் காப்பகமாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக் கைகளில் தமிழ்நாட்டின் பங்கு 2.41 சதவீதம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லை களுக்கு அதாவது 4 முதல் 18 வயது வரையிலான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 280 என்றும், 18 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களின் எண்ணிக்கை 395 எனவும், 30 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களில் பாதிப்புக்குள்ளான வர்கள் 93 பேர். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 16 பேர் பாலியல் கொடுமைக் குள்ளாகி இருக்கிறார்கள் என்பதெல்லாம் வேதனையை வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களாக இருக்கின்றன.

இதிலே இன்னும் கொடுமையென்றால் பாலியல் வன்முறைக்குள்ளான 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 61. அத்துடன், 10 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளில் பாலியல் கொடுமைக் குள்ளானவர்கள் 78 பேர்.

அண்மையில்கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக் கோட்டையில் 19 வயது நிரம்பிய கல்லூரி மாணவி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாகி யுள்ளார்.

2013ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 475. 2012ஆம் ஆண்டில் அது 7ஆயிரத்து 192. அது மட்டுமல்ல;

பாலியல் கொடுமைகள் பொறுத்தவரையில் 2013ஆம் ஆண்டு 923. அதே 2012இல் 677.

தமிழ்நாட்டில் இப்படி நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பேருந்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட தற்காக நாடே பொங்கி எழுந்தது. நமது அண்டை மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டதற்காகக் கடும் கண்டனப் புயல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

தமிழ்நாட்டில் இவ்வளவு நடந்திருந்தும் ஒன்றும் நடக்காததுபோல மூடி மறைக்கப்படுவது - ஏன்? தமிழ் நாட்டு ஊடகங்களும் வாய் மூடி மவுனம் சாதிப்பது - ஏன்?

சட்டப் பேரவையில் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்றால் - மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த முடியும்?

உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவது என்றாலே அது ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

எதிர்க்கட்சிகள் என்றாலும் சரி, ஊடகங்கள் என்றாலும் சரி நாட்டில் நடைபெறும் உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தினால் தானே ஆளும் கட்சியும் சரியான திக்கில் பயணிக்க முடியும்? செயல்பாட்டிலும் வேகத்தை முடுக்கி விட முடியும்.

தமிழ் ஓவியா said...

பெண்ணென்றால் ஓர்ஆணுக்குச் சமையல் காரி ஓர்ஆணின் வீட்டுக்கு வேலைக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை ஓர் ஆணின் கண்ணழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்

(குடிஅரசு 21.7.1946).

சமுதாயத்தில் குறிப்பாக ஆண்களிடத்தில் குடி கொண்டிருக்கும் பெண்கள் பற்றிய மனப்பான்மையில் மாற்றங் கொண்டு வரப்பட வேண்டும்.

இத்திசையில் கல்வியில் பெரும் மாற்றம் காணப்பட வேண்டும். பெண் ஏன் அடிமையானாள்? - என்ற தந்தை பெரியார் அவர்களின் நூல் கல்லூரிகள் மட்டத்தில் இடம் பெற்றாக வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்கு மேலான மாணவர், மாணவி யர்கள் மத்தியில் பாலியல் கல்விபற்றித் தேவையான அளவில் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆபாசமாக அருவருப்பாக, அநாகரிகமாக நாட்டு நடப்புகள் இருப்பதைவிட, இந்தப் பாலியல் கல்வி எப்படித் தவறானதாகும்? இதில் போதிய புரிதல் இல்லாமையும் தவறுகள் நடப்பதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்பதை மறுக்க முடியுமா? போதும் போதாதற்கு நமது ஊடகங்களும், சின்னத் திரைகளும், பெரிய திரைகளும், இணையதளங்களும் இளம் உள்ளங்களைப் பாலியல் வெறி உணர்வுகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன என்பதை மறுக்க முடியுமா?

வார இதழ்கள் என்று எடுத்துக் கொண்டால் அட்டைப் படங்கள் என்பவை - அரை குறை ஆடையுடன் கூடிய சினிமா நடிகைகளின் படங்கள் என்பது நிரந்தரமாகி விட்டனவே!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன என்று நிகழ்வுகள் நடக்கும் அந்தந்த காலங்களில் மட்டும் கூக்குரல் போடுவதும், சில நாட்களில் மறந்து விடுவது என்பதும் ஒரு தீய வட்டச் சுழற்சியாக அல்லவா இருக்கின்றது.

குற்றங்கள் நடக்கின்றன என்றால் அதற்கான மூலவேர் எங்கு இருக்கிறது என்று கண்டாய்ந்து அதனை வேரும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிய அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாமா?

பெண்கள் என்றால் உடல் வன்மையற்றவர்கள் ஆண்கள் பலசாலிகள் என்ற மரபணுவை மாற்றி அமைத்திட விஞ்ஞான மார்க்கத்தை தேடுவதிலும் குற்ற மில்லை; தற்காப்புப் பயிற்சிகள் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்காவது பெண்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்து தற்காப்புக்காக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்ன கருத்து கவனிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது. அரசு சிந்திக்கட்டும் ஊடகங்களும் மனம் விரியட்டும்!

Read more: http://viduthalai.in/page1/84713.html#ixzz38ounIXmT

தமிழ் ஓவியா said...


பாசிசத் தொழிற்சாலையாகிறதா, குஜராத் மாநிலம்?


- குடந்தை கருணா

சென்ற ஜூன் 30-ஆம் தேதி, குஜராத்தில் உள்ள 42000 தொடக்கப்பள்ளி, மற்றும் இடை நிலைப் பள்ளிகளுக்கும், அரசு ஓர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில், தினாநாத் பாத்ரா என்பவரின் ஆறு புத்தகங்களையும், துணைப்பாடமாக, கட்டாயம் கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சரி. யார் இந்த தினாநாத் பாத்ரா? சிக்ஷா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பின் தலைவராக இருந்த, பாத்ரா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்; இவர் தான், அமெரிக்க பேராசிரியர் வென்டி டோங்கியர் எழுதிய இந்துக்கள்; ஓர் மாற்று வரலாறு என்கிற புத்தகம் தடை செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர்.

இந்த பாத்ராவின் புத்தகத்தில் என்னதான் சொல்லப்பட்டுள்ளது? இந்து கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்ற போர்வையில் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இனி, பிறந்த நாளுக்கு, மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டும் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென் றால், இது மேற்கத்திய பண்பாடு. அதற்குப் பதிலாக, ஓர் விளக்கை ஏற்றி, காயத்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.

வரலாற்றுப் பாடங்களில், இந்தியாவின் வரைபடம் எப்படி இருக்க வேண்டும் என சொல்லப் பட்டிருக்கிறது. அதன்படி, தற்போதைய, இந்திய வரைப்படம் மாற்றப்பட்டு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், திபெத், பர்மா, இலங்கை நாடு களையும் உள்ளடக்கிய வரைபடம் தான் இந்தியா என வரையப்பட வேண்டும். ஏனென்றால், இதுதான், பண்டைய அகண்ட பாரதம், என பிள்ளைகளுக்கு சொல்லப்பட் டுள்ளது.

இது குறித்து, குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திர சிங் சவுடா சாமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த பாடங்கள் அனைத்தும், பள்ளிகளில் கட் டாயப்பாடம் என்று கூறி உள்ளார்.

குஜராத்தில் 2002இல் நடை பெற்ற மதக்கலவரத்தின் மூலமாகத் தான், மோடி அடையாளப்படுத்தப் பட்டார். இந்துக்களிடையே, முஸ்லீம் விரோதப் போக்கை உருவாக்கி, அதன் காரணமாக தொடர்ந்து குஜராத்தில் அவர் பெற்ற அரசியல் வெற்றி, பிரதம ராவதற்கான காரணமாக அமைந்தது.

மோடியிடம் குஜராத்தில் அவரது உத்தரவிற்கு பணிந்து வேலை பார்த்த அதிகாரிகள்தான், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் அவருக்குத் துணையாக நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

குஜராத் கலவரம் நடை பெற்றபோது, உள்துறை அமைச்ச ராக இருந்து, பல போலி கொலை குற்றங்கள் செய்த அமீத்ஷாதான் தற்போது பாஜகவின் அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாத்மா என உலகம் முழுவதும் பரப்பப்பட்டுவரும், காந்தி, குஜ ராத்தில் பிறந்திருந்தாலும், காந் தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸைக் கண்டிப்பதுபோல், காப்பாற்றிய, குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேலுக் குத்தான், மோடி சிலை வைக்க இருக்கிறார். அதற்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளார்.

தற்போது, பள்ளிக்குழந்தைகள் மனதில், காலத்திற்கும் நிற்கும் வகை யில், பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, இந்துத்துவா விஷ விதை விதைக்கப்படுகிறது. பாசிசப் பார்த்தினீயம் உருவாக்கப்படுகிறது.

இவையெல்லாம்தான் நடை பெறும் என்று நாம் படித்து படித்துச் சொன்னோம்; இடித்தும் சொன் னோம். ஆனால், இங்கே உள்ள சில தலைவர்கள், அதெல்லாம் ஒன்றும் இல்லை எனச் சொல்லிச் சொல்லி, மக்களை ஏமாற்றினார்களே; இவர் களெல்லாம் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?

Read more: http://viduthalai.in/page1/84716.html#ixzz38ovLY4Iw

தமிழ் ஓவியா said...


சட்டமறுப்பு இயக்கம்

தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால் சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்ப வர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

தேசியப் பத்திரிக்கைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாகி விட்டது. மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது.

வேதாரணி யத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிக்கைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடிய வில்லை. அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடிய வில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது.

அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள். ஆனால் ஏழை களுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூலமாகும் என்றே ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/84703.html#ixzz38ovmPiLE

தமிழ் ஓவியா said...


சேலம் வன்னியர் குலச்சத்திரியர் மகாநாடு


ஆகையால், சகோதரர்களே! இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான ஜாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது என்றும் மற்ற ஜாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ்ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த ஜாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபடவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! இந்தியா ஒரு நாடு ஆகவேண்டாமா? இந்தியா ஒரு நாடு என்று ஆனால்தானே இந்தியா முழுமையும் பற்றிப்பேச நமக்கு உரிமை உண்டு. இப்போது இந்தியா ஒரு நாடாய் இருக்கின்றதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் கண்காட்சி சாலையாக, மத கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சி சாலையாக, சாமிகள் கண்காட்சி சாலையாக இருக்கின்றதே ஒழிய வேறு என்னமாயிருக்கின்றது?

இந்த நிலையிலுள்ள இந்தியா விடுதலையோ, முன்னேற்றமோ அடைவது என்பது சாத்தியமான தாகுமா? என்பதை நீங்களே யோசித் துப்பாருங்கள். மற்ற நாட்டார்கள் தங்கள் நாட்டை ஒரு நாடாக்கி, நம்ம நாட்டையும் அதோடு சேர்க்கப் பார்க்கிறார்கள். யார் எந்த நாட்டோடு சேர்த்துக்கொள்ளுவ தென்று போட்டிப் போட்டுக் கொண்டி ருக்கின்றார்கள். அதிசயிக்கத்தக்கபடி முன்னேறுகிறார்கள். ஆச்சரிய மானதும் அற்புதமானதுமான காரியங்களைச் செய்கின் றார்கள்.

நாம் இன்றையதினம் யார் சத்திரியர் என்று பூதக் கண்ணாடி வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக் கின்றோம். சத்திரியன் என்கின்ற வார்த்தைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் பெயரினால் என்ன லாபம்? அந்தப்பட்டம் வைத்துக் கொண்டால் நம்மிடம் என்ன மாறுதல் ஏற்பட்டுவிட்டது? எந்தத் தேசத்தைப் பிடித் தோம்? எதை ஆளுகிறோம்? யாரிடத்தில் கூறித் தரம் காட்டினோம்? ஏதோ சிலர் பூணூலைப் போட்டுக் கொண்டதைத் தவிர காரியத்தில் 100க்கு 90 பேர்கள் கூலிகளாய் இருப்பதைத் தவிர வேறு ஒன்றையும் காணோமே.

எனது நாடார் நண்பர்கள் அனேகர் இப்போது பூணூலை அறுத்தெறிய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால், ஜாதி விஷயத்தை இனி மறந்துவிட்டு உலகப் போக்கில் கலந்துகொள்ள முன்வாருங்கள் என்று கூப்பிடவே இங்கு வந்தேன்.

உலகப்போக்கு இப்போது எப்படி இருக்கிறது. ஆகாயத்தில் மனிதன் மணிக்கு 250 மைல் வேகம் பறக்கிறான். தண்ணீருக்குள் முழுகும் மனிதன் மணிக்கு 50 மைல் வேகம் ஓடுகிறான். நீங்கள் இமயமலையில் ஏறமுடியாமல் அதுதான் கைலாயம், அதுதான் வெள்ளி மலை.

அங்குதான் பரமசிவன் கால்மேல் கால்போட்டுக் கொண்டு, தொடைமேல் பார்வதியை உட்கார வைத்துக் கொண்டு, தலையில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு அதன் மூலம் கங்கை வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த புளுகுக்கதைகள் எல்லாம் இப்போது தவிடுபொடி ஆகும்படியும், வெள்ளைக்காரன் கைலாயத் திற்கு போய் பரமசிவனின் தலையைப் பிடித்து ஆட்டி அங்கு ஒன்றுமில்லை என்பதை ருஜுப்படுத்திவிட்டான்.


தமிழ் ஓவியா said...

ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும், செத்தவர் களைப் பிழைக்க வைக்கவும் முயற்சிக்கிறான். கிழவனைக் குமரனாக்குகிறான். ஆண்குழந்தை வேண்டுமானால் ஆண்குழந்தையையும், பெண் குழந்தை வேண்டுமானால் பெண் குழந்தையும் பெற்றுக்கொள்ள வழிகண்டு பிடிக்கிறான். செவ்வாய் மண்டலம் போகிறான். தந்தியில் சேதி அனுப்பி, பாட்டு அனுப்பி, இப்போது ஆட்டம் அனுப்புகிறான்.

பொம் மைகள் எல்லாம் கம்பியில்லாத தந்தியில், உருவங்கள் எல்லாம் ஆகாய தந்தியில் வருகின்றது. (நமக்கு யார் சத்திரியர் என்பதும், சத்திரியர் உலகத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதும் இன்னமும் நமது ஆராய்ச்சியில் முடிவு பெறவில்லை) ஆகவே, அந்தமாதிரி உலகப்போக்கை நீங்களும் தயவு செய்து திரும்பிப்பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளத்தான் இங்கு வந்தேனே ஒழிய இவ்வளவு காயலாவுடன் உங்கள் மனம் நோகும்படியே நான் இங்கு வரவில்லை.

மற்றபடி, இந்த நாட்டில் இருக்கும் உங்கள் சமுகம் ஒற்றுமையுடன் பாடுபட்டால் நீங்கள் எவ்வளவோ மேன்மைபெற்று இந்த நாட்டுக்கு எவ்வளவோ நன்மை செய்யலாம். சட்டசபை தல தாபனம் இவைகளைக் கைப்பற்றி அதன் மூலம் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உதவி செய்து நாட்டை உயர்நிலைக்குக் கொண்டுவாருங்கள்.

வெறும் நாமமும், பூணூலுமே ஒன்றையும் அளித்துவிடாது. மூடப்பழக்க வழக்கங்களை விட்டு ஓட்டி அறிவைப் பயன்படுத்தி முன்னேற முயற்சி செய்யுங்கள். சட்டசபை முதலிய தேர்தல்களில் நீங்கள் தைரியமாய் முன்வாருங்கள். கட்சி பேதங்களை விட்டு ஒழியுங்கள்.

முதலில் உங்கள் சமூகம் முழுவதும் ஒன்றானால்தான் மற்ற சமூகங்களுடன் நீங்கள் சரிசமமாக ஒத்து வாழமுடியும் என்பதைத் தெரியப்படுத்திக் கொண்டு நான் இதுவரை சொன்னவைகளை அப்படியே நம்பிவிடாமல் உங்கள் சொந்த அறிவைக்கொண்டு நன்றாய் ஆராய்ந்து பாருங்கள் என்று கேட்டுக்கொண்டு இம்மகாநாட்டை திறந்து வைத்ததாகச் சொல்லி அமர்கின்றேன்.

- குடிஅரசு - சொற்பொழிவு - 01.06.1930

Read more: http://viduthalai.in/page1/84704.html#ixzz38owI5ukO

தமிழ் ஓவியா said...


சாரதா சட்டம்


சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4வது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் அட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண் களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டுகளுடையவும், பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரேரேபணை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற்கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக் கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக் கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும்.

மூடனுடைய மனசாட்சி முட்டாள் தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப் பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/84705.html#ixzz38ownkQaS

தமிழ் ஓவியா said...

உதிர்ந்த மலர்கள்

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பன பிரச்சாரத்திற்கென்றே கற்பிக்கப்பட்டு பார்ப்பன அடிமைகளை கொண்டு பரப்பப்பட்டதாகும்.

புராணக் கதைகளை பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவைகளையெல்லாம் உண்மை யென்று கருதுகின்ற வர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

வயிறுவளர்க்க வேறு மார்க்கமில்லாத தமிழ்ப் பண்டிதர்கள் என்றைக்கு இருந்தாலும் தங்கள் புத்தியைக் காட்டித்தான் தீருவார்கள். ஏனென்றால், அவர்கள் படித்ததெல்லாம் மதஆபாசமும் புராணக் குப்பையு மேயாகும். ஆகவே, பார்ப்பனர்களைவிட பண்டிதர்கள் நமது இயக்கத்திற்கு பெரும் விரோதிகளாவார்கள்.

- குடிஅரசு - பொன்மொழி - 18.05.1930

Read more: http://viduthalai.in/page1/84703.html#ixzz38ox5SPIp

தமிழ் ஓவியா said...


ஆரியம் தான் சமஸ்கிருதம் - உஷார்! உஷார்!!


சமஸ்கிருதம் ஒரு மொழிதானே?

இதற்குப் போய் முண்டா தட்டுவதா? என்று சிலர் முணுமுணுப்பர் - அவர்கள் விரிக்கும் வலையில் வீழாதீர்!

தமிழை - தமிழர்களைத் தாழ்த்த வந்த தாம்பு அது - தமிழை நான்கு கூறு போட்டதும் அதுதான் - மக்களை நான்கு கூறு போட்டதும் அதுதான்.
கோவிலுக்குள்ளிருந்து தமிழை வெளியேற்றியதும் இதுதான்.

தமிழனைப் பிடரியைப் பிடித்துத் தள்ளியதும் - தள்ளி வருவதும் அதுதான்.

அர்ச்சனை மொழி தமிழ் என்று தமிழ்நாட்டில் குரல் கிளம்பிய நேரத்தில், ஒரு பார்ப்பனர் உயர்நீதிமன்றம் சென்றார். அவர் பெயர் வி.எஸ்.சிறீகுமார்; ஹிந்துக் கோவில் பாதுகாப்புக் கமிட்டியின் தலைவராம். உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களை மாற்ற அறநிலையத் துறையின் செயலாளருக்கோ, ஆணையருக்கோ அதிகாரம் கிடையாது.

அர்ச்சகர்களும், குருக்களும் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டுமென்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். கும்பாபிஷேகத்தின்போது வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் பாசுரங்களைச் சொல்லுமாறு கூறுகின்றனர். இது சட்ட விரோதமானது.

சமஸ்கிருத மொழி மூலமாக கடவுளிடம் தொடர்புகொள்ள முடியும். இந்நிலையில், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கூறுவது ஹிந்துக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் என்று மனு தாக்கல் செய்தார் மனுவாதியான பார்ப்பனர்.

தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழர்கள் கொடுக்கும் தட்சணையால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் தமிழை வெறுக்கின்றனர் - சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

நம் தமிழர்களை வெறுக்கும், நம் தமிழை மறுக்கும் சமஸ்கிருதத்தைத் தூக்கி நிறுத்தத்தான் சமஸ்கிருத வாரம்!

உஷார்! உஷார்!!

தமிழர்களின் தன்மான உணர்வை வெளிப்படுத்த ஆகஸ்டு முதல் தேதி களம் காண்போம் தோழர்களே!

கருஞ்சட்டைச் சேனையே, தயார், தயார் தானா?

Read more: http://viduthalai.in/page1/84698.html#ixzz38oxGNAH4