Search This Blog

18.7.14

கங்கை சுத்திகரிப்பா? இந்துத்துவப் புனரமைப்பா?

  கல்வியறிவின்மை: 
  கிராமம் 35%, நகரம் 40% (யு என் அறிக்கை 2012)
  ஏழ்மை: கிராமம் 35.7%, நகரம் 23.07%, (திட்டக்குழு அறிக்கை, ஜூலை 23, 2013)
  ஏழ்மை நாடுகள் வரிசையில் 72ஆம் இடம்.

  ஊட்டச் சத்தின்மை காரணமாக இறப்பு: 
  ஆசியாவில் 2ஆம் இடம்,
  உலகத்தில்7ஆவது இடம்.
   
  பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகள்: ஒரு இலட்சத்துக்கு 1407
  1 முதல் 4 வயதுக்குள் இறப்பு :
  ஒரு இலட்சத்துக்கு 19.50
  தாய் சேய் இருவரும் இறப்பு: 1000க்கு 58
  வேலையின்மை: 20%, நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளோர் 77%.
  இந்த அவல நிலையில் உள்ள இந்தியாவில் கிடந்தது கிடக்கட்டும், கிழவியைச் சிங்காரித்து மணையில் வை என்ற தோரணையில் கங்கை நீரைத் தூய்மைப்படுத்த, சீரமைக்க 2037 கோடி ரூபாயை புதிதாக வந்த மத்திய பி.ஜே.பி. ஆட்சி நிதிநிலை அறிக்கையில் தூக்கிக் கொடுத்துள்ளது.
  ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு என்பார்கள். ஆனால் இங்கோ ஆயிரக்கணக்கான கோடிகள்!

  வறுமையும், கல்வியின்மையும், வேலையின்மையும் கைகோர்த்துக் கூத்தாடும்  இந்தியாவில் கங்கை என்னும் சாக்கடையைச் சுத்திகரிக்கும் வேலையில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது பா.ஜ.க. ஆட்சி.
  இதற்கு என்ன காரணமாம்? இதற்கான விடை பி.ஜே.பி.யின் 16ஆவது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.
  தேர்தல் அறிக்கையில்


  Cultural Heritage: Ganga: River Ganga is a symbol of faith in India, and has a special place in the Indian psyche. It is Mukti dayini. In addition it is also Jivan dayini for the parts of the country it flows. People and cattle depend on it for agriculture, fodder and drinking water. Pure water of the Ganga are thus essential for the spiritual as well as physical well being of India.
  Unfortunately however, even after decades of  independence, the Ganga continues to be polluted and is drying. BJP commits to ensure the cleanliness, purity and uninterrupted flow of the Ganga on priority. In addition, a massive ‘Clean Rivers Programme’ will be launched across the country driven by people’s participation.

  கங்கை என்பது இந்தியாவின் கலாச்சாரச் சின்னமாம் _ புனிதத்தின் உறைவிடமாம். முக்தி அடைவதற்கான மூலமாம்.

  நதிகளையும் மலைகளையும் கடவுள்களாகக் கருதி கற்காலத்துக்கு இந்தக் காவிகள் பயணம் செய்வதாகத் தெரிகிறது.

  இந்தியாவில் கங்கை மட்டும்தான் உள்ளதா? நூற்றுக்கணக்கான நதிகள் வழிந்தோடுகின்றன. அவற்றிற்கெல்லாம் இல்லாத முக்கியத்துவம் கங்கைக்கு மட்டும் ஏன்? முக்தியைக் கொடுக்கும் முச்சலிகை கங்கைதான் இடுப்பில் செருகிக்கொண்டு இருக்கிறதா?

  வாஜ்பேயி தன் கவிதை ஒன்றில்,

  கங்கையைப் பார்ப்பதே ஞானம்
  அதன் ஓட்டத்தில் இந்தியக் கலாச்சாரம் மிளிரும்
  அதன் ஓசையில் வேதங்கள் கேட்கும்
  தூய நீரில் மகான்களைத் தரிசிக்கலாம்
  அதன் வேகத்தில் இதிகாசங்களின் இதயத் துடிப்பு தெரியும்

   என்று எழுதுகிறார்.

  இந்துத்துவ சிந்தனையாளர்களின் பார்வை இதுதான்!
  இயற்கையை மதத்துடன் கலந்து மாசுபடுத்திவிடுவர்.

  இந்துக்களும் கங்கையும் 
  கங்கை இந்திய தீபகற்பத்தின் கால்பங்கு நிலப்பகுதியை வளமாக்கும் நதி. அன்றும் இன்றும் இந்தியாவின் பெருவாரியான மக்களின் முக்கியத்தொழில் விவசாயமே: இந்த விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் கங்கைதான் தங்களின் வாழ்விற்கும் மரணத்திற்கும் காரணம் என்று நினைத்துவிட்டனர். இதையே மதவாதிகள் தங்களின் லாபகரமான முதலீடில்லாத தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்டனர். விளைவு, கங்கையில் உடல்களை வீசுவது. இன்றளவும் கங்கையில் பிணத்தின் சிறுதுண்டையாவது வீசவேண்டும் அப்போதுதான் செத்துப்போனவரின்  ஆத்மா(?) சாந்தியடையும் என்று பரப்பிவிட, சிறு துண்டு என்ன, முழு உடம்பே போகட்டும் என்று வீசிச் சென்று விடுகின்றனர். இந்த நம்பிக்கை ஆழமாக ஊறிப் போய்விட்டது. இதில் சாஸ்திரம், புராணம் என்று பல்வேறு புனைக்கதைகளை உருவாக்கி கடவுளர்களோடு இணைத்துவிட்டனர்.

  ஆகவே அவர்களைப் பொறுத்தவரையில் பிணங்களை கங்கையில் போடவிடாமல் தடுப்பது இந்துமத விரோத நடவடிக்கையாகும்.

  முக்கியமாக கும்பமேளா!!

  கங்கையில் 5 ஆண்டுகளில் சேரும் மாசு கும்பமேளா காலத்தில் மட்டும் சில நாட்களிலேயே சேர்ந்துவிடுகிறது. கும்பமேளா சமயத்தில் மூழ்கி எழுபவர்களில் தற்போதைய பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவை சகாக்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  1980-களில் சமவெளியில்தான் கங்கை கந்தலாகத் தொடங்கியது. ஆனால் தற்போது தொடங்கும் இடத்தில் இருந்தே (கோமுகி) சிக்கல்தான். கோமுகி சிகரத்தில் உள்ள கிளேசியர் எனப்படும் பனிக்கட்டிகளில் பல்வேறு மாசுப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பாதரச மூலக்கூறுகளும் அடங்கும் என்ற செய்தி பல்வேறு இயற்கை ஆர்வலர்களின் உள்ளத்தில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமா-? சாமியார் ராம்தேவ் பாபா கங்கை வரும் மலைப்பாதை முழுவதையும் வளைத்துப்போட்டு வாங்கிவிட்டார். பல்வேறு மூலிகைத் தோட்டங்கள், கேளிக்கை விடுதிகள் என்ற பெயரில் கங்கையின் இரு கரைகளிலும் உள்ள இயற்கை வனங்களை அழித்து செயற்கை வனங்கள் உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.
  இப்படி உருவாகும் செயற்கை வனங்களுக்கான வேதி மருந்துகள் மண்ணோடு கலந்து கங்கை நீர் வழியாக சமவெளியை அடைகின்றன.


  மரணமடைந்த துறவி 

  கங்கா மாதா, புனிதவதி என்று  அழைத்துக் கொண்டே பல காவித் தலைவர்களே கங்கையை வன்கொடுமைக்கு ஆளாக்கினர். கங்கை நதிக்கரையில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள், சுரங்கங்கள், இயற்கை வன அழிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கங்கை மலைப்பகுதிகளிலேயே அசுத்தமாகிவிடுகிறது. இதைக் கண்டித்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த துறவி சுவாமி நிகமானந்தா (வயது 36), சாகும் வரை உண்ணாவிரதமிருந்து 11.06.2011 அன்று செத்தும் போனார்.

  சுவாமி நிகமானந்தா சிகிச்சையில் இருந்தபோது, அவருக்கு விஷ ஊசி போடப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணமடைந்ததாகவும், மத்ரி சதான் ஆசிரமத் தலைவர் சுவாமி சிவானந்தா, பரபரப்பு புகார் தெரிவித்தார்.

  இதுகுறித்து போலீசிலும் அவர் புகார் செய்துள்ளார். ஆளும் பி.ஜே.பி. அரசு அவரது உண்ணாவிரதத்தைக் கண்டு கொள்ளாமல், கல்குவாரி முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு நிகமானந்தாவைக் கொன்று விட்டது என்று சொல்கிறார்கள். இந்த ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்களும், அதன் ஊதுகுழலான பார்ப்பனப் பத்திரிகைகளும் இவரைப் பற்றி செய்திகளை வெளியிட்டு மக்கள் ஆதரவை இவருக்குத் தேடிக் கொடுக்கவில்லை.

  சுவாமி நிகமானந்தாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரது உண்ணா விரதத்தை முடித்துவைக்க யாரும் முயற்சிக்க வில்லை. கங்கை தன்னுடைய வரலாற்றில் குறைந்தபட்சம் 10 லட்சம் உயிர்களையாவது பலிவாங்கி இருக்கும். ஆனால் அந்த கங்கைக்காக முதன்முதலாக உயிர்விட்ட ஒரு சாமியார் இவராகத்தான் இருப்பார். 2000 கோடி செலவு செய்யும் அளவு கங்கையில் என்னதான் இருக்கிறது?

  அதை அசுத்தப்படுத்தியது யார்? உலகில் மிகவும் அசுத்தமான 10 ஆறுகளின் பட்டியலில் இந்துத்துவாவாதிகள் தூக்கிச் சுமக்கும் இந்தப் புனித கங்காதேவி இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறாள். ஆண்டு ஒன்றுக்கு காசி நகரில் 33 ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. பாதி எரிந்ததும் எரியாததுமான பிணங்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன.

  800 டன் மயான சாம்பல் கங்கையில் கரைக்கப்படுகிறது. கங்கையில் பிணங்கள் மிதப்பதும் பார்ப்பதும் கூட புண்ணியமாம். அதற்காக இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் கங்கைக் கரையில் காத்துக் கிடக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வாடகைப் படகுகளில் சென்று கங்கை நீரில் மிதக்கும் பிணங்களைப் பார்த்துப் பக்திப் பிரவாகித்துத் திரும்புகின்றனர்.

  கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னால் ஆத்திரம் கொப்பளிக்கும் ஆன்மீகவாதிகள் _ இந்தச் செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

  கங்கை அய்ந்து மாநிலங்களில் தனது ஓட்டத்தை நடத்துகிறது. 750க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கங்கைக் கரையில் இயங்குகின்றன. கான்பூரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் குடிகொண்டுள்ளன. இவற்றின் கழிவுநீர் முழுவதும் கங்கை நீரில்தான் கலக்கின்றது. காசி நகரில் 2 இலட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுத் தொழிற்சாலையின் அத்தனைக் கழிவுகளையும் ஆலிங்கனம் கொள்வது இந்தக் கங்கா தேவிதான். காசி நகரின் 20 மில்லியன் காலன் சாக்கடை நாள்தோறும் கங்கையைத்தான் முத்தமிடுகிறது.
  படிக்கும்பொழுதே குடலைக் குமட்டுகிறதா?

  தப்பு, தப்பு! இது இந்துக்களுக்கான புனித கங்கா ஜலம்!
  கங்கை ஏதோ 2500 கி.மீ. பயணம் செய்து வங்காள விரிகுடாவில் சங்கமம் அடைகிறது என்று எளிதாக நினைத்துவிட வேண்டாம்.   இந்தப் பின்னணியில் உள்ள புராணக் கதைகளைக் கேட்டால் அதன் தெய்வீக தரிசனத்தை அகக் கண்களால் ஆராதித்தால் அப்பப்பா அதனைச் சொல்லுந்தரமன்று!

  கங்கை யார் தெரியுமா? இமய மலையின் மகளாம். (அப்பா யார் என்று கேட்டுவிடாதீர்கள்!)

  கங்கை, கேவலம் இந்தியாவில் மட்டும்தான் பாய்கிறது என்று நினைக்க வேண்டாம். வானிலும் இது பாய்கிறதாம். அங்கு பாயும்பொழுது மந்தாகினி என்று பெயர். பாதாளத்தில் பாயும்பொழுது போகநதி என்ற நாமகரணம்!
  வானிலே பாய்ந்து கொண்டிருந்த கங்கையை  பூமாதேவியிடம் கொண்டுவர பகீரதன் கடும் தவம் இருந்தானாம். அவன் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிட்டதாம். அதன்படி கங்கை பூமியில் பொங்கிப் பாய்ந்த வேகத்தை பூமாதேவியால் தாக்குப் பிடிக்க முடியவில்லையாம்!

  மீண்டும் பகீரதனின் கடும் தவத்திற்கு இரங்கி சிவன் கங்கையைத் தன் தலையில் சூடிக் கொண்டானாம். அந்தக் கங்கையின் ஒரு சொட்டுதான் பூமியில் ஓடிக் கொண்டுள்ளதாம். அந்தக் கங்கையே கண்ணீர் விட்டாளாம். பாவம் செய்த மக்கள்  எல்லாம் குளிப்பதால் நான் அத்தனைப் பாவங்களையும் எங்கே போய்த் தொலைப்பேன் என்று பிரமனிடம் கங்கா தேவி கெஞ்சினாளாம். அப்படியா! அதற்கொரு பரிகாரம் சொல்கிறேன் கேள் என்றான் பிரமன். துலா யுகத்தின் கடைசி நாளில் பூலோகத்தில் உள்ள மயூரத்தில் காவிரி நதிக்கரை ஓரத்தில் உள்ள விஷ்ணு கட்டத்திலும் சிறீரங்கத்தில் ஓடும் காவிரியிலும் முழுக்குப் போட்டால் நீ சுமக்கும் ஒட்டுமொத்தப் பாவங்களும் ஒரே நொடியில் மாயமாய் மறைந்துவிடும் என்றானாம் பிரமன். (சங்கராச்சாரிகள் கும்பமேளாவிற்குச் சென்று கங்கையில் முழுக்குப் போடுகிறார்கள் என்றால் சும்மாவா? அவ்வளவு பாவங்கள் செய்துள்ளார்கள்.)

  ஏற்கெனவே அவன் பைத்தியக்காரன். அவன் சாராயமும் குடித்திருந்த நேரத்தில், அவனைத் தேளும் கொட்டிவிட்டால் எப்படியெல்லாம் உளறுவானோ அதைவிட 1000 மடங்கு உளறலாக அல்லவா இருக்கின்றன இந்தப் புராணக் குப்பைகள்!

  பக்திப் போதை தலைக்கு ஏறினால் நம் நாட்டுப் படிப்பும் பட்டங்களும் பதுங்குக் குழிக்குள் போய்விடாதா?

  இந்தியாவில் பிரதமரும் அமைச்சர்களுமே புரையோடிப் போன இந்தப் பக்திக்கு இரையாகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் கங்கை புனிதத்தைக் காப்பாற்றிட கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழும் கோமாளித்தனங்கள்!

  கங்கை நதியைத் தூய்மைப்படுத்திட கடந்த 28 ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு கொட்டி அழுத தொகை 1100 கோடி ரூபாய். ஆனாலும் விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லையே!
  1927, 1963, 1970 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய நதி என்னும் சாக்கடையால் தொற்றுநோய் கடுமையாகத் தாக்கியது. இந்தியாவின் பிற பகுதிகளில் குழந்தைகள் மரணம் 1000க்கு 94 என்றால் இந்த வட்டாரத்திலோ 1000க்கு 134 ஆகும். மும்பையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஆய்வு  ஒன்றினை மேற்கொண்டது. அக்குழுவில் இடம்பெற்ற டாக்டர் ஜெகன்நாத் கீழ்க்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.

  பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 20 முதல் 30 ஆயிரம் மக்கள் வரை பித்தநீர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மும்பையில் டாடா நினைவு மருத்துவமனையில் பித்த நீர்ப்பை நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலோர் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கங்கை நதிக்கரை ஓரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

  கங்கையில் நச்சுக்கலவைக் கழிவுநீர் அதிகம் கலப்பதால் கங்கை நதிக்கரையில் உள்ள நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபட்டுள்ளது. அந்த நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமான இரும்புச் சத்தும் நச்சுப் பொருள்களும் மலிந்துள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

  மற்றொரு அருவருக்கத்தக்க தகவலும் உண்டு. அண்மையில்  சுவிட்சர்லாந்து அரசு ஓர் ஆய்வு நடத்தி உலக சுகாதர நிறுவனத்திடம் சமர்ப்பித்தது. அதில், அய்ரோப்பிய நாடுகளில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கடுமையான தடைவிதிக்கப்பட்டிருப்பதால், ஆன்மீகப் பயணம் என்ற பெயரில் பல அய்ரோப்பிய இளைஞர் இளைஞிகள் வட இந்திய நகரங்களான வாரணாசி, ஹரித்துவார், ரிஷிகேஸ், அலகாபாத் போன்ற நகரங்களுக்கு வந்து, கடவுளின் பிரசாதம் என்று கருதப்படும் கஞ்சா உடன் அபின், ஹெராயின் மற்றும் சரஸ் போன்ற போதை வஸ்துக்கள், ஊசிகள் தங்குதடையின்றி சாமியார் மடங்களில் கிடைக்கின்றன. போதை ஏறிய பிறகு பாதுகாப்பற்ற உறவு கொள்கிறார்கள். இதனால் புனித கங்கை ஓடும் பகுதிகளில் வாழ்வோரிடையே எய்ட்ஸ் நோய் தொற்றியவர்கள் எண்ணிக்கை அதிகம். கங்கையின் புனிதத்தைக் காக்க மக்கள் பணத்தை ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டும் பக்தர்கள் - இதனால் காதொடிந்த ஊசி முனை  அளவுக்கு நாட்டு மக்களுக்கு நற்பயன் என்று கூறமுடியுமா?

  வேண்டுமானால் பார்ப்பனர்கள் பொறுக்கித் தின்னப் பயன்படலாம்.
  அதே நேரத்தில்  தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டபொழுது இந்தக் கூட்டம் என்ன கூறியது?

  தமிழ் செம்மொழியானால் காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்; ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாதவர்க்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும் (தினமலர், வாரமலர் 13.6.2004) என்று எழுதியது தினமலர்.
  திரும்ப நாம் கேட்க முடியாதா? கங்கை நீரைச் சுத்தப்படுத்தினால் வீட்டுக்கு வீடு சிக்கன் பிரியாணி கிடைக்குமா?

  கல்கி இதழ் என்ன சொன்னது தெரியுமா?


   கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதலமைச்சர்?

  பதில்: எல்லாம் கிடக்க, கிழவியை மனையில் அமர்த்திய கதைதான். (கல்கி 27.1.2008) தமிழ் அர்ச்சனை மொழி ஆவது பற்றிக் கேட்டபொழுது தமிழ் அர்ச்சனையால் விலைவாசி குறைந்து விடுமா என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் கூறினாரே! (திருச்சிராப்பள்ளியில் 15.11.1998).
  இவர்களை எல்லாம் நாம் திருப்பிக் கேட்க முடியாதா? கங்கையைச் சுத்தப்படுத்தினால் வீட்டுக்கு வீடு கழிவறை வந்து குதித்து விடுமா?
  ஒன்றை நாம் ஆழமாக கவனிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை ராமன் பாலம் என்று சொல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று முடக்கிய இந்திய பார்ப்பனிய சங்பரிவார் - பி.ஜே.பி. யினர் கங்கையைச் சுத்தம் செய்ய கோடிக்கோடியாகக் கொட்டுகிறார்கள்.
  மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புத் திட்டமான சேதுசமுத்திர திட்டத்திற்கே வெறும் 2427.2 கோடி ரூபாய். ஆனால் சாக்கடை கங்கையைத் தூய்மைப்படுத்தவோ 2037 கோடி ரூபாயா? செலவைப்பற்றிக் கவலையில்லை என்கிறார் இத்துறைக்கான அமைச்சர் உமாபாரதி. காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் டில்லியில் கடந்த ஞாயிறன்று (6.7.2014) செய்தியாளர்களிடம் பி.ஜே.பியின் அந்தரங்கத்தை அப்படியே அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டிவிட்டாரே.

  வாரணாசியில் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பும், பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்த பிறகும் நரேந்திரமோடி என்ன செய்தார்? கங்கைச் சென்று பூசை, புனஸ்காரங்களில் ஈடுபட்டாரே? இது எதைக் காட்டுகிறது? கங்கை நீர் சுத்திகரிப்பை இந்துத்துவா திட்டமாக ஆக்கும் முயற்சியில் பி.ஜே.பி.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது என கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

  பி.ஜே.பி ஆட்சி என்பது இந்துத்துவா ஆட்சியே தவிர அரசமைப்புச் சட்டப்படியான மதச்சார்ப்பற்ற ஆட்சியல்ல! அந்தவகையில் இது  சட்ட விரோத ஆட்சியே.  கங்கையை எப்படிச் சுத்தப்படுத்துவார்கள்?

  நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பிணங்களையும் சுட்டெரித்த சாம்பலையும், கிழடான பசுக்களையும் ஜீவமுக்தி அடைவதற்காக என்று சொல்லி கங்கையில் வீசி எறிவதைத் தடுத்தாலொழிய கங்கையைச் சுத்தப்படுத்த முடியுமா? இதைச் செய்யாதவரை கங்கை புனரமைப்பு என்பது அசல் ஏமாற்று வேலையே! உண்மையிலேயே கங்கையைத் தூய்மைப்படுத்தவேண்டுமானால் இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
  செய்வார்களா? செய்யமாட்டார்கள். காரணம், இவர்கள் இந்துத்துவாவாதிகளாயிற்றே... கங்கையில் சாம்பலைக் கரைத்தாலோ முழுப் பிணத்தையோ சிறு உடல் துண்டையோ கங்கையில் வீசினாலோ ஆத்ம சாந்தி, ஜீவமுக்தி இவற்றில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிற்றே...! அசல் இரட்டை வேடம்!

  நரமாமிச அகோரிகள்
  கங்கைக் கரையோரம் இருக்கும் காசி நகரை நினைவுகூறும்போது, அகோரி எனப்படும் விநோத சாதுக்கள் நம் கவனத்தில் வருவதைத் தவிர்க்க முடியாது. பைரவர் அவதாரமாக தங்களைக் கருதிக்கொள்ளும் இவர்கள், மயான சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார்கள். மனித மண்டையோடு, எலும்புகள் சகிதம் காணப்படுகிறார்கள்.
  இதைவிட அதிர்ச்சி... பாதி எரிந்தும், எரியாமலும் கங்கையில் வீசப்படும் பிணங்களை எடுத்து வந்து அதற்கு ஆத்மசாந்தி பூஜை நடத்தி, மனித சதைகளைப் பிய்த்துத் தின்னும் நரமாமிசப் பழக்கத்துக்குச் சொந்தமானவர்கள்.
  பலவித நோய்களை நீக்கும் சக்தியை இவர்களுக்கு கடவுள் கொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. முற்றும் துறவறம் பூண்டு வாழும் இவர்களில் பலர், யோகக் கலைகளிலும், ஆசனங்களிலும் கைதேர்ந்தவர்கள், போதைப் புகைக்கு அடிமையானவர்கள்-ஆடைகளையும் துறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


  புராண அளப்புகள்

  ஒரு கோவிலுக்கோ, குளத்துக்கோ, நதிக்கோ முக்கியத்துவத்தை உண்டாக்க வேண்டுமானால் சில அற்புதங்களைத் தல புராணங்களாகக் கட்டிவிட வேண்டும்.

  அந்த வகையில் கட்டி விடப்பட்டுள்ள மகத்துவங்கள் மண்ணையும், விண்ணையும் தொடும்.


  தினமலரிலிருந்தே (4.11.2002) இதோ ஓர் எடுத்துக்காட்டு:
  கலிங்க நாட்டில் வாகீசர் என்ற பிராமணர் இருந்தார். இவர் வேதம் படிக்கவில்லை. ஆச்சாரங்களைப் பின்பற்றுவதில்லை. உப்பு, எண்ணெய் போன்றவற்றை விற்று வாழ்ந்து வந்தார். சாஸ்திரங்களில் கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களை இவர் தைரியமாகச் செய்வார். பாப காரியங்கள் செய்ய அஞ்சுவதே இல்லை. இப்படிப்பட்டவர் ஒரு நாள் காட்டிற்குச் சென்றபோது புலியால் அடித்துக் கொல்லப்பட்டார்.

  இவரது உடலின் மாமிசங்களைக் கழுகுகள் தின்றன. அதில் ஒரு கழுகு அவரின் கணுக்கால் கட்டு எலும்பை மூக்கினால் தூக்கிக் கொண்டு சென்றது. காசி நகரில் கங்கை நதியைக் கடந்து செல்லும்போது வேறு கழுகுகளுக்கும், இந்தக் கழுகிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது வாகீசரின் உடல் எலும்பு கங்கை நதியில் விழுந்துவிட்டது.

  அதுவரை நரக லோகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வாகீசருக்கு, கங்கையில் அவரின் உடல் எலும்பு விழுந்ததால் பரிகாரம் ஆகிவிட்டது.  உடன் எமதர்ம மகாராஜா சித்ரகுப்தரைக் கூப்பிட்டு வாகீசரின் எலும்பு கங்கையில் விழுந்ததால், அவரின் பாபங்கள் விலகிவிட்டன. அதனால், இவரைச் சொர்க்கலோகத்திற்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவாயாக என தெரிவித்தார். அதனால் காசியில் தெரிந்தோ தெரியாமலோ அஸ்தி போடப்பட்டால் பாபம் விலகுகிறது. அதே நேரத்தில் முறையான சாஸ்திர சம்பிரதாயங்களுடன் அஸ்தி கரைக்கப்பட்டால், அந்த அஸ்தியின் சொந்தக்காரருக்கு புண்ணியலோகம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான் காசியில் அஸ்தியைக் கரைப்பது புண்ணியம் என்று கூறப்படுகிறது.

                                    -----------------(தினமலர் 4.11.2002)

  மேற்கண்ட தகவல்கள் எதைத் தெரிவிக்கின்றன? எந்தக் கொடிய பாவங்களைச் செய்தாலும், கங்கையில் மூழ்கினால் அல்லது இறந்தபின் அவனது உடலின் எந்தப் பாகமாவது கங்கையில் விழுந்தால் புண்ணியம் கிடைக்குமாம். அப்படி என்றால் பாவங்கள் செய்ய யார் பயப்படுவார்கள்? பாவம் செய்யத் தூண்டுவதுதான் மதமா?

  இதனால் ஒழுக்கம் வளருமா? அறிவு வளருமா? அழியுமா? சிந்திப்பீர்!  ---------------- கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் “உண்மை” ஜூலை 16-31  2014 இதழில் எழுதிய கட்டுரை

  31 comments:

  தமிழ் ஓவியா said...

  பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!


  இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது! - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ்

  காங்கிரஸ் ஆட்சியின் நிலைப்பாடே தொடரும்! - இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் பேட்டி

  பா.ஜ.க.வைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கு பட்டை நாமம்!

  புதுடில்லி, ஜூலை 17_ இந்திய அரசு நமக்கு ஆதரவாக இருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜியெல் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசிய பின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர் களிடம் பேசும்போது இந்தக் கருத்தை வழி மொழிந் தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு கிடைக் கும் என்று தமிழ்நாட்டில் துள்ளிக் குதித்தவர்களின் நெற்றியை இழுத்துப் பட்டை நாமத்தைச் சாத்தி விட்டது பி.ஜே.பி. ஆட்சி.

  இந்தியப்பிரதமர் எங்களின் நிலையை நன்கு அறிந் திருக்கிறார். அவரது அனைத்து நடவடிக்கைகளும் எங்களுக்கு ஆதரவாக அமையும்.

  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் கூறுகிறார்

  இலங்கைத் தொடர்பான நிலைப்பாட்டில் நமக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுத்து வருகிறது என சமீபத்தில் டில்லி வந்து சுஷ்மா சுவராஜை சந்தித்துவிட்டுச் சென்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்தார். இது தொடர் பாக அவர் லங்கவேப் என்ற அரசு இணையதளப் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியின் விரிவு இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் குறித்து நமது அதிபர் அனைவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

  கடந்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல சந்திப்புகளை நிகழ்த்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

  தமிழ் ஓவியா said...

  இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் நான் டில்லி சென்று சுஷ்மா சுவராஜ் அவர் களைச் சந்தித்தேன். சுஷ்மா சுவராஜ் இலங்கையுடனான நட்புறவு மேலும் வலுப்பெறும் விதமாக நம்பிக்கையான பல உறுதிமொழிகளைக் கூறினார். முக்கியமாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசு மீது போர்க்குற்றச்சாட்டு என்ற அச்சுறுத்தலை தொடர்ந்து வைத்து வரும் வேளையில் சுஷ்மா சுவராஜ் அவர்களின் பேச்சு நமக்கு மிகுந்த ஆறுதலைத் தந்துள்ளது.

  நீண்ட காலமாக இலங்கையில் நடந்து வந்த தீவிரவாதச் செயல்களை நமது அதிபர் தலைமையில் அடக்கி வைத்தோம். உலகெங்கும் சிதறியுள்ள தீவிரவாதிகளின் ஆதவாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைக்கின்றனர். மேலும் பொய்யான தகவலை மேற் குலகிற்கு வழங்கி நம்மீது அழுத்தம் கொடுக்க முயல் கின்றனர். சில மேற்குலக நாடுகளுக்கு அவர்களின் சொந்த லாபம் கருதி இலங்கை மீது பெரிய அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை நாம் ஒன்று கூடி தடுத்து வருகிறோம். இந்த நிலையில் நரேந்திர மோடி அரசின் பதவியேற்பு நமக்கு மிகவும் சாதக மானதாகும். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா நமக்கு ஆதரவாக இருக்கும் வரை மேற்குலக நாடுகள் நம்மை எதுவும் செய்ய முடியாது, நமது முடிவில் என்றும் உறுதியாக இருப்போம்.

  மோடி அரசின் ஆதரவு

  முக்கியமாக இந்தியாவும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு ஆகும். ஆகையால் தான் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றிணைந்து உலக அரங்கில் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

  அதே நேரத்தில், மோடி அரசும் நமக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. இதை இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிபடக் கூறினார். சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில், இந்திய மீனவர்கள் விவகாரம், இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிப்படைந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் இருநாட்டு வர்த்தக உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது

  'உள்நாட்டுப் போருக்கு பிறகு எமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள், வாழ் வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்தல் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டது. இலங்கை மீதான மேற்குலக நாடுகள் கொடுக்கும் அழுத்தம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜ், இலங்கை எமது நட்பு நாடு மாத்திரமல்ல; கலாச்சார ஒற்றுமை கொண்ட நாடும்கூட; அய்நா விசாரணைக் குழு அமைக்கும் விவகாரத்தில் ஏற்கெனவே முன்னாள் அரசின் நிலைப்பாட்டையே நாங்களும் கையாள் வோம் என்று உறுதிபடக்கூறினார்.

  தமிழ் ஓவியா said...


  மேலும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. என்று அந்த இணைய தளத்திற்கு ஜி.எல்.பிரீஸ் பேட்டியளித்தார்;

  முந்தைய காங்கிரஸ் நிலைப்பாடே தொடர்கிறது!:சையத் அக்பருதீன்

  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சையத் அக்பருதீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுஷ்மா _ ஜி.எல்.பிரீஸ் சந்திப்பின்போது இந்திய அரசு இலங்கையில் செயல்படுத்திவரும் சிறப்புத் திட் டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டன. இந்த ஆண்டில் மூன்றாவது தடவையாக இலங்கை வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வந்துள்ளமை இருநாட்டுக்கும் இடையேயான உறவுகள் வலிமை பெற்று வருவதைக் காட்டுகிறது. இலங்கையில் அய்.நா. மனித உரிமைகள் பேரவை யின் விசாரணைக் குழு மேற்கொள்ளவுள்ள நட வடிக்கை குறித்தும் இந்த சந்திப்பின்போது ஆராயப் பட்டதா என்றும் இந்த விவகாரத்தில் இந்திய அரசின் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  அய்.நா. மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கெனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது என்று பதி லளித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சையத் அக்பருதீன்.

  இலங்கை இராணுவ செய்தி இணையதளம்

  இலங்கையில் நடந்தது தண்டனைக்குரிய குற்ற மல்ல, இலங்கையின் அனைத்து முயற்சிக்கு நாங்கள் ஒத்துழைப்பு நல்குவோம்! என்று இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உத்திரவாதம் அளித்துள்ளதாக இலங்கை இராணுவச் செய்தி இணையதளம் (http://www.defence.lk/) செய்தி வெளியிட்டுள்ளது.

  இலங்கை மீது மீண்டும் போர்க் குற்றவிசாரணை என்ற பெயரில் தீர்மானம் கொண்டுவந்தால் இலங் கைக்கு ஆதரவான நிலையை நாங்கள் எடுப்போம் என்றும், மேலும் இலங்கையில் மனித உரிமைமீறல்கள் நடைபெறவில்லை, அங்கு நடந்தவை அனைத்தும் தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளே என்றும் இந்திய அரசாங்கம் கூறியதாம்.

  மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஈழத் தமி ழர்ப் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்று துள்ளிக் குதித்து தமிழ்நாட்டு மக்களிடம் உத் தரவாதம் கொடுத்த கட்சிகள், தலைவர்கள் இந்த நிலைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டிய குற்றவாளி களாகவே கருதப்படுவார்கள் என்பதில் அய்யமில்லை.

  Read more: http://viduthalai.in/e-paper/84194.html#ixzz37mKFzwtm

  தமிழ் ஓவியா said...


  இன்றைய ஆன்மீகம்? .......
  இம்மாதம் (ஆடி) உங் களுக்கு ஒரு இனிய மாத மாகும். எடுத்த காரியங் களில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதன் - சுக்ர சேர்க்கை இருப்பதால் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

  கணவன் - மனை விக்குள் ஒற்றுமை பலப் படும். உங்கள் பெயரி லேயே சொத்துக்கள் வாங் கலாமா என்று குடும்ப உறுப்பினர்கள் பரிசீலனை செய்வர்.

  உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். சென்ற மாதத்தில் கொடுத்த கடன் இப்பொழுது வசூலாகும். செவ்வாய்க்கிழமை விரத மிருந்து வழிபட்டு வரு வதன் மூலம் செல்வ நிலையை உயர்த்திக் கொள்ளலாமாம்.

  எந்த வேலையும் செய் யாமல் செவ்வாய்க்கிழமை யன்று விரதம் இருந்தால், இவ்வளவு வசதிகளும், வாய்ப்புகளும் பெருகுமா? இந்து மதக்காரர்களுக்கு மட்டும்தானா? மற்றவர் களுக்கும் சேர்த்தா?

  ஒரு கேள்வி, இந்த செவ்வாய்க் கிழமைகளிலும், ஆடி மாதத்திலும் இந்துக்கள் திருமணங்களைச் செய்வதில்லையே, ஏன்?

  Read more: http://viduthalai.in/e-paper/84189.html#ixzz37mL1pIKq

  தமிழ் ஓவியா said...

  வழிக்கு வந்தது கிரிக்கெட் கிளப்!

  வேட்டி அணிவது தொடர் பாக தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புக் காரணமாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் முதலமைச்சரின் அறி விப்புக் காரணமாகவும் கிரிக் கெட் கிளப்பின் விதிமுறை களை மாற்றத் தயாராக இருப்பதாக கிளப்பின் தலை வர் சீனிவாசன் தெரிவித் துள்ளார்.

  Read more: http://viduthalai.in/e-paper/84188.html#ixzz37mLEiaiP

  தமிழ் ஓவியா said...


  பிரதமரும்-கட்சித் தலைவரும்!


  பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

  ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல மோடிக்கேற்ற ஜோடியாக இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

  உண்மையைச் சொல்லப்போனால், எல்லா வகைகளிலும் எல்லாமுமாக நரேந்திர மோடிக்கு இருக்கக் கூடியவர் தான் இந்த அமித்ஷா.

  அசல் ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி ஏடே கூட நேற்று (16.7.2014) தீட்டிய தலையங்கத்தில் அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராக அமைத்துக் கொண்டது மோடிக்கு மரியாதை சேர்க்காது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதே!

  தினமணி எழுதுகிறது:

  அமித்ஷாவின் அரசியல் திறமைகள்பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேநேரத்தில் கட்சித் தலைவராக, அதிலும் குறிப்பாக, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவராக அமித்ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்து நியமித்திருப்பது - தார்மீக ரீதியில் சரியானதுதானா என்ற கேள்விக்கு மன சாட்சியுடைய யாரும் ஆம் என்று பதிலளித்து விடவும் முடியாது! என்கிறது தினமணி

  பி.ஜே.பி. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மூச்சு முட்ட எழுதி வந்த - செய்திகளை அந்தக் கோணத்தில் சித்தரித்த தினமணியே, அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராகக் கொண்டு வந்தது மனச்சாட்சியற்ற செயல் என்று காலை வாரிவிட்டதே!

  குஜராத் மாநிலத்தில் காவல்துறை டி..அய்.ஜி.யாக இருந்த வன்சாரா, வெளியிட்ட அறிக்கை மிக முக்கியமானது.

  போலி என்கவுன்டர்களுக்கு குஜராத் முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பு. அவர்கள் வழிகாட்டியபடிதான் போலி என்கவுன்டர்கள் நடந்தன.

  நாங்கள் குற்றவாளிகள் என்றால், எங்களுக்கு ஆணையிட்ட, வழிநடத்திய முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றவாளிகள்தான் என்று சொன்னாரே!

  இந்தியாவிலேயே மோடி ஆண்ட குஜராத்தில்தான், காவல்துறை அதிகாரிகள் 32 பேர் அதிக எண்ணிக்கை யில் கைது செய்யப்பட்டனர். மோடி அரசாட்சி எத்தகையது என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?

  என்கவுன்டரில் அமித்ஷாவின் பங்குபற்றி தினமணி தனது தலையங்கத்திலும் சுட்டிக்காட்டியுள்ளது.

  சொராபுதீன் போலி துப்பாக்கிச் சூடு (என்கவுன்டர்) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான குற்றவாளியும், சூத்திரதாரியும், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா 2010 இல் அந்த வழக்கின் பின்னணியில், பதவி விலகியவர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக் கப்பட்டவர். அந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை என்று தினமணி தலையங்கத்திலேயே அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளதே, என்ன பதில்? இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகப் பண்பாட்டின் தலைசிறந்த அரசியல் ஒழுக்கமா?

  உத்தரப்பிரதேசத்திலும், மோடியின் பிரதிநிதியாக இருந்து தேர்தலில் மொத்தம் 80 இடங்களில் 73 இடங் களில் பி.ஜே.பி. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று மகுடம் சூட்டுகிறார்கள்; இருக்கட்டும், அந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறை என்ன? மதக் கலவரத்தைத் தூண்டியதுதானே? படுகொலைகள் எத்தனை? இலட் சக்கணக்கான சிறுபான்மையினர் முகாம்களில் தஞ்ச மடைய நேர்ந்த அவல நிலைக்கு இவர்தானே பொறுப்பு?

  மதக்கலவரத்தை நடத்தி இந்து வாக்கு வங்கி, முஸ்லிம் வாக்கு வங்கி என்று கூறு போட்டு, வாக்குகளை அள்ளியதுதானே அவர் மேற்கொண்ட யுக்தி.

  தேர்தல் நேரத்தில் அவர் என்ன பேசினார்? மக்களை எப்படித் தூண்டினார்?

  உத்தரப்பிரதேச மக்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல் ஒரு கவுரவப் பிரச்சினை. முசாபர் நகர் கல வரத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்கு வதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். கலவரத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் புகட்டவேண்டும்.

  உணவு, தூக்கம் இல்லாமல்கூட மனிதன் உயிர் வாழலாம். பசி, தாகம் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால், அவமதிக்கப் பட்டால், அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது; இங்கு நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். நமக்கு நீதி கிடைக்கவில்லை. முன்பெல்லாம் அம்புகளையும், வாளையும் வைத்து, பழிவாங்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது அதற்கான அவசியம் இல்லை. ஓட்டுப் பதிவு இயந்தி ரத்தில், பட்டனை அழுத்தினாலே பழிவாங்க முடியும் என்று பேசியவர் தான் பி.ஜே.பி.யின் இன்றைய அகில இந்தியத் தலைவர்.

  குஜராத்தில் மதக் கலவரத்தை ஊக்குவித்தவர் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் அதையே செய்தவர் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்.

  நாடு எங்கே போகிறது? எதிர்காலம் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் காலமாக மாறிவிடுமோ என்கிற அச்சம், வெகுமக்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

  காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு, வெகுமக்களா தண்டனையை அனுபவிக்கவேண்டும்?

  விழிப்புணர்வு தேவை! தேவை!!

  Read more: http://viduthalai.in/page-2/84208.html#ixzz37mLiOB00

  தமிழ் ஓவியா said...


  மனித எலும்புகள் பற்றி அறிவோம்


  * மனிதனின் மண்டை ஓட்டில் 22 எலும்புகள் உள்ளன.

  * மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள் தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

  * முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14

  * மண்டை ஓட்டில் உள்ள எலும்பு களில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

  * எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது கால்சியம் பாஸ்பேட்

  * கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

  * எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

  * பற்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பேட்

  * மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

  * மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

  * மனித உடல்களிலுள்ள எலும்பு களின் எண்ணிக்கை 206

  * பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

  * மனித உடலில் மிகப்பெரிய எலும்பு தொண்டை எலும்பு

  * தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ் ஞானிகள் பீமர் என்று அழைக் கின்றனர்.

  * எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர் ஆஸ்டியாலஜி

  * ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

  * கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30

  * கால் பாதங்களிலுள்ள எலும்பு களின் பெயர் டிபியா, ஃபிபுலா.

  * கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

  * மூளை மற்றும் மண்டை ஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர் பிரினாலஜி

  Read more: http://viduthalai.in/page-7/84202.html#ixzz37mMCGu36

  தமிழ் ஓவியா said...


  நட்புக்கு காரணம் மரபணுக்களா?


  நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறி முகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப் பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

  நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப் பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

  அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளி யிட்டிருக்கிறார்கள்.

  அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப் போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர்.

  அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களை விட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

  அதாவது முன் பின் அறிமுகம் இல்லாத வர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

  அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத் தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா-பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

  எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப் படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

  சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை

  ஆனால் இவர்களின் இந்த கண்டு பிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையான வர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்த வர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.

  மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகு முறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.

  Read more: http://viduthalai.in/page-7/84204.html#ixzz37mMa8OGz

  தமிழ் ஓவியா said...


  கிடைக்காது!


  உலகில் எந்தத் தொண்டு செய்கிற வர்களுக்கும் மரியாதை கிடைக்கும். ஆனால், சமுதாயத் தொண்டுக் காரர்களுக்கு மட்டும் மரியாதை கிடைக்காது. - (விடுதலை, 26.12.1964)

  Read more: http://viduthalai.in/page-2/84269.html#ixzz37sEYKFHP

  தமிழ் ஓவியா said...

  பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும்

  விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால் - 88 வயது நிறைந்த முதியவர். புதுடில்லியில் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஏடுகளில் இடம் பெற்றுள்ளது. அன்னிய சக்திகளும் பிளவு சக்திகளும் நமது அடையாளத்தை அழிப்பதற்காக முஸ்லிம் அரசியலை பயன்படுத்தினர். ஆனால் இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.

  பா.ஜ.க. ஆட்சியில் முஸ்லிம்கள் பொது பிரஜைகளாக நடத்தப்படுவார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் முஸ்லிம்கள் இந்துமத உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

  முஸ்லிம்கள் இந்துக்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தால் எவ்வளவு காலம் அவர்களால் இங்கு வாழ முடியும்?முஸ்லிம்கள் அயோத்தி கோவில் மற்றும் காசி, மதுரா கோவில்கள் ஆகியவற்றின் மீதான உரிமை கோரலை கைவிட வேண்டும். மேலும் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தையும் ஏற்க வேண்டும். நாங்கள் முஸ்லிம்களுடன் அன்பாக நடந்து கொள்வோம், மேலும் மற்ற எந்த ஒரு மசூதி வளாகத்தின் மீதும் (ஆயிரக்கணக்கான மசூதிகள் பழைய கோவில் களின் இடிபாடுகளின் மேல் கட்டப்பட்டிருந்தாலும்) நாங்கள் உரிமை கோர மாட்டோம். ஆனால், முஸ்லிம்கள் இதனை ஒத்துக் கொள்ளா விட்டால், மேலும் ஏற்படவுள்ள இந்து ஒருமைப்பாட்டை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

  தற்போது இது மத்திய அரசில் நிகழ்ந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது நிகழும். தற்போதைய பா.ஜ.க. அரசு பின்வாங்காது. மேலும் பின்வாங்கவும் தேவையில்லை. ஏனெனில் மக்களவையில் பா.ஜ.க.வுக் குப் பெரும்பான்மை உள்ளது. மேலும் நாங்கள் எதை செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதனை அரசியல் சட்ட ரீதியாக செய்யவே விரும்புகிறோம்.

  ராமர் கோவில் மற்றும் கோத்ரா விவகாரங்கள், தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை சாத்தியமாக்கின. பா.ஜ.க.வின் வெற்றிக்கு இந்த விவகாரங்கள் அடித்தளமாக இருந்தன. அத்துடன் வளர்ச்சி, நிர்வாகம் போன்ற விஷயங்களும் இளைஞர்களைக் கவர்ந்தன - இவ்வாறு சிங்கால் கூறியுள்ளார்.

  இதுதான் சங்பரிவார்களின் - அதன் அரசியல் வடிவமான பிஜேபியின் கோட்பாடும் - சிந்தனையும் ஆகும். இந்த விசுவ ஹிந்து பரிஷத்துதான் பொது மக்கள் மத்தியில் திரிசூலங்களை வழங்கி வருபவர்கள்! திரிசூலத்தில் ஒரு முனை முஸ்லீம்களையும், ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் மதச் சார்பின்மைப்பேசுபவர்களையும் குத்திக் கிழிக்கும் என்று வெளிப்படையாகப் பேசி வந்தவர்கள் தான்.

  இந்தக் காரணத்தால்தான் பிகாருக்கு வி.எச்.பி.யின் பொதுச் செயலாளரான தொகாடியா வரக் கூடாது என்று திருப்பி அனுப்பப்பட்டார்.

  ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வாக்கரால் எழுதப்பட்ட வரையறுக்கப்பட்ட நமது தேசியம் (We or our Nation hood Defined) என்ற நூல் என்ன சொல்லுகிறது தெரியுமா?

  இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் அன்பு, தியாகம் போன்றவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களை அயல்நாட்டினராகக் கருதக் கூடாது. அல்லது இந்தத் தேசத்தை முழுவதும் ஆதரிக்க வேண்டும். எதையும் கேட்காமல், எந்தச் சலுகைகளையும் பெறாமல் எதற்கும் முன்னுரிமை பெறாமல் குடி மக்களின் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

  இந்த மனப்பான்மை தானே அசோக் சிங்கால் களுக்கு இருக்க முடியும். இதே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவரான மறைந்து குப்பஹள்ளி சீத்தாராமய்யா சுதர்ஸன் (கே.எஸ். சுதர்ஸன்) என்ன சொன்னார்?

  கிருத்தவர்கள் கிருஷ்ணனை வணங்க வேண்டும்; முஸ்லீம்கள் ராமனைத் தொழ வேண்டும் என்றெல்லாம் சொன்ன துண்டு.

  இப்படி ஒரு பாசிச அமைப்பு இந்தியாவில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விட்டது. இந்த நிலையில் இந்தப் பாசிசக் கும்பல் பந்தயக் குதிரை வேகத்தில்தான் நடந்து கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

  இந்துத்துவ சக்திகள் ஆட்சியில் வந்தால் இந்து முஸ்லீம் ஒற்றுமை சீர்குலையும் என்று அரக்கோணம் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் (14.3.2014) கூறியதை நினைவு கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினாலொழிய இதற்கு வேறு மார்க்கம் கிடையாது.

  குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்கள் சிந்தனைகள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

  மக்கள் சிந்தனை முன்னெடுத்துச் செல்லப்பட்டால் நொண்டி அடித்துக் கொண்டாவது அரசு பின்னால் வந்து சேரும் என்பதை இந்த இடத்தில் எண்ணிப் பார்ப்பது நல்லது.

  அரசியல் கட்சிகள் - அவற்றின் தலைவர்கள் சங்பரிவாரை (பிஜேபி உட்பட) எவரும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் அதைவிட - மிகப் பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்கவே முடியாது.

  தெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டு சில அரசியல் கட்சிகள் இந்தத் தவறைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன என்பது வெட்கப்படத்தக்க பிற்போக் கான நிலையாகும்.
  அசோக் சிங்கால் பேட்டியைப் படித்த பிறகாவது திருந்துவார்களா?

  தமிழ் ஓவியா said...


  வரலாற்றில் ஒரு பொன்னாள்  தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பெயர் மாற்றம் பெற்ற நாள்


  "மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது.
  "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல் அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார்.

  கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா. ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக் கூடாது" என்று கூறினார்.

  ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ் நாடு" பெயர் மாற்றக் கோரிக் கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார். தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:

  "இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வ மாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும். என்றார். விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுகையில் அண்ணா கூறியதாவது:

  "இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.
  இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ் நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

  10 நாட்களுக்கு முன்னர் பாராளு மன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத் துடனும், சிரமத்துடனும் "டமில் நாட்" (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறி னால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.

  தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.

  அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப் பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

  நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த் தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோ சனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
  இவ்வாறு அண்ணா கூறினார்.

  பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப் பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியது. தீர்மானம் ஒருமனதாக நிறை வேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

  பின் அண்ணா எழுந்து, "தமிழ் நாடு" என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ் நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.

  எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.

  சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.

  Read more: http://viduthalai.in/page-2/84271.html#ixzz37sEwKVqN

  தமிழ் ஓவியா said...


  பகுத்தறிவின் சிகரம்


  பெரியார் ஈ.வெ.ரா. பிராமணத் துவேஷி - பிராமணர்கள் அவருக்குப் பிடிக்காது என்று பெருவாரியான பிராமணர்கள் நினைப்பதோடு பிரச்சாரமும் செய்து வருகின்றார்கள். இந்தக் கருத்து முற்றிலும் தவறு. இது பெரியாரைப் பற்றிய அவதூறுப் பிரச்சாரமாகும். பெரியார் அவர்களே பல கூட்டங் களிலும் நேரடியாக பலர் அவருடன் உரையாடிய காலத்திலும் பிராமணர் களையல்ல.

  பிராமணீயத்தை யேதான் நான் எதிர்க்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் பிராமணீயத்தை எதிர்த்தது நாத்திக கண்ணோட்டத்தால் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. இந்தத் தத்துவமும், சமயமும் வருணாசிரம தருமம் என்ற அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்ட கட்டடங்கள் என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.

  பிராமணீயம் வருணாசிரம தர்மத்தின் அடிப்படை யாகும் - வருணாசிரம தர்மம் ஜாதிப் பிரிவினை யையும், அவரவர் ஜாதிக்குரிய வேலையைச் செய்வதும் தான் அவரவர்க்கு ஈசன் விதித்த கட்டளை என்று கூறுவதையும், ஜாதிக் கொடுமைகள் சமுதாய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை போன்ற பல சீர்கேடுகளையும் நியாயப் படுத்துகின்றது.

  இத்தீமைகளையே பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் கடுமையாக, வன்மையாக எதிர்த்துச் சாடி வந்தார். இந்த தத்துவ சாத்திரம் பிராமணீயத்தை தூக்கிப் பிடித்து தாங்கி நிற்கின்றது.

  ஆகவே இவை எல்லா வற்றையும் எதிர்ப்ப தென்றால் கண்டதற்கெல்லாம் கடவுள் என்ற கற்பனைப் பொருளை முன் கொண்டு வந்து நிறுத் துவதை எதிர்ப்பதா கும் சுருங்கக் கூறின், கடவுள் நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங் கள் முதலியவற்றை எதிர்ப்பதென்றால் அது நாத்திகம் தான். நாத்திகத்தின் அடுத்த உயர்நிலைப்படி தர்க்க இயல்பொருள் முதல் வாதமாகும்.

  இவற்றின் அடிப்படை விஞ்ஞானம் தழுவிய பகுத்தறிவேயாகும். பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் பகுத்தறிவின் சிகரமாக விளங்கி வந்தார். புகழ்பெற்ற பொதுவுடமை இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஏ.எஸ்.கே.அய்யங்கார் (பார்ப்பனர்) பகுத்தறிவின் சிகரம் ஈ.வெ.ரா. என ஒரு நூல் எழுதியுள்ளார். பெரியாரைப் பற்றிய நூல் எழுதுவதற்கு காரணமாக இதை குறிப்பிட்டுள்ளார்.

  Read more: http://viduthalai.in/page-7/84259.html#ixzz37sFofTuL

  தமிழ் ஓவியா said...


  மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை


  நமது கலாச்சாரமும் நாகரிகமும் முதிர்ந்ததுதான் ஆனால் அவற்றின்மீது வடுக்களும், சுருக்கங்களும் ஏற்பட்டு உருக்குலைந்து போயிருக்கின்றன.

  ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையான வற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.

  இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.

  பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்கு வதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.

  - 18.11.1967ஆம் நாள் அன்று
  அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா

  Read more: http://viduthalai.in/page-7/84262.html#ixzz37sFzjh30

  தமிழ் ஓவியா said...


  இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் உரிமையில்லையாம்  அசோக் சிங்காலின் அப்பட்டமான பாசிசக் குரல்!

  புதுடில்லி ஜூலை -18 இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் ஓட்டுரிமை செல்லாக்காசாகிவிட்டது. இங்கு இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகை யால் இஸ்லாமியர்கள் தங்களது நடவடிக்கை களை குறைத்துக்கொண்டு இந்துக்களின் மதநீதிகளை மதித்து நடக்கவேண்டும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த விஷ்வ இந்துப் பரிசத்தின் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்

  இதன் விவரம் வருமாறு இந்தியாவில் இதுவரை இஸ்லாமியர்களின் ஓட்டுக் களைப் பெற்று ஆட்சிக்கு வந்த சகாப்தம் முடிந்து விட்டது. இனி இந்து ராஜ்ஜியம் மலர்ந்து விட்டது. இனி இஸ்லாமி யர்களின் ஓட்டிற்கு வேலையில்லை. இஸ்லாமி யர்அனைவரும் சிறப்பான மக்கள் அல்ல அவர்கள் சாதாரண குடிமகன் தான், அவர்களுக்கு என்று சிறப்பு சலுகைகளோ அல்லது வேறு வகையான சிறப்பு வசதிகளோ செய்து கொடுக்கக்கூடாது.

  இங் குள்ள கோடானு கோடி இந்துக்களுக்கு உள்ள அதே உரிமை இஸ்லாமி யர்களுக்கு கொடுக்கப்பட் டுள்ளது. ஆகவே இஸ்லா மியர்கள் இந்துக்களின் மதநம்பிக்கையை மதிக்கவேண்டும். அரசியல் கட்சிகள் முஸ்லீம் ஓட்டிற்காக அலையத்தேவையில்லை, இஸ்லாமியர்களின் ஓட் டுக்கள் இல்லாமலேயே ஒரு இந்து அரசு அமைந்து விட்டது. இனி இஸ்லாமிய ஓட்டின் முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது. நரேந்திரமோடி உண்மையான இந்துத்துவப்போராளி

  அசோக் சிங்கால் பிரதமர் நரேந்திரமோடி பற்றிக்கூறும் போது மோடி அவர்கள் உண்மை யான இந்துத்துவாதி, தீவிரமான இந்துமதப் பற்றாளர், சங்கப்பரிவாரங் களின் காப்பாளர், முந் தைய அரசின் ஆட்சி முறையில் இருந்து முற்றி லும் விலகி தனித்துவமான ஆட்சியைத் தரவல்லவர்.இராமனும் பரதனும் தந்த ஆட்சியை மோடி தருவார் என்பதில் அய்யமில்லை. மேலும் வாஜ்பாய் அரசு செய்யத்துணியாத பல மாற்றங்களை மோடி செய்வார்.

  இதற்காகத்தான் இந்துக்கள் அனைவரும் இணைந்து மோடியை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். காசி அயோத்தியா மதுரா போன்ற பகுதி களில் பழமையான இந் துக்கோவில்கள் தான் மசூதிகளாக மாற்றப்பட் டுள்ளன. நீண்டநாட் களாக தவறான செய்திகள் மற்றும் தகவலின் காரண மாக அவற்றை உரிமை கொண்டாடி வருகின்ற னர். இனி இஸ்லாமியர்கள் இந்த இடங்களுக்கு உரிமைக் கொண்டாடக் கூடாது. இங்குள்ள ஆயி ரக்கணக்கான மசூதிகள் இந்துக்கோவில்களை இடித்துக் கட்டப்பட்டவை தான். விரைவில் ஆதாரங் களை முன்வைப்போம். இஸ்லாமியர்கள் எங்களது நடவடிக்கைகளில் தலை யிடக்கூடாது. இனி இந் துக்களுக்கு எதிராகவோ இந்துமதத்திற்கு எதிரா கவோ எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கும் முன்பு சிந்திக்கவேண்டும். யாரு டைய ஆட்சி என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

  காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

  அசோக் சிங்காலின் இந்த மக்கள் விரோத பேச்சிற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித் துள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனீஷ் தீவாரி கூறியபோது அசோக் சிங்காலின் இந்த பேச்சை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அவர் நரேந்திர மோடியின் பெயரை முன்மொழிந்து இதுபோன்ற நச்சுகலந்த பேட்டியைக் கொடுத் துள்ளார். சுதந்திரம் அடைந்த பிறகு இந்து-முஸ்லீம்கள் ஒன்று கூடி அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

  இந்த நேரத்தில் இது போன்ற விவாதத்திற்கு உரிய அறிக்கையை கூறுவதால் சமூகத்தில் ஒற்றுமை குலைந்து அமைதி கொட் டுப்போக வாய்ப்புள்ளது. நாட்டை வளமான பாதைக்குக் கொண்டு செல்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி இது குறித்து என்ன சொல்லப்போகி றார் என்று தெரியவில்லை. அசோக் சிங்கால் இத் தனை காலமாக கூறிவந்த தற்கும் இன்று கூறியதற் கும் பெரிய வேறுபாடு உண்டு என்று கூறினார். அசோக் சிங்கால் மீது காவல்த்துறையில் புகார் - பிருந்தாகாரத்
  சிறிமி(வி) கட்சியின் பொலிட் பீரோ உறுப் பினர் பிருந்தா காரத் ராஞ் சியில் பத்திரிகையாளர் களிடம் பேட்டியளித்தார்.

  அப்போது அசோக் சிங்கால் விவகாரம் குறித்து பேசியபோது நாட்டில் அமைதியை குலைக்கும் விதத்தில் இவ்வாறு விவாதத்திற்கு உரிய பேச்சை பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகைச் செய்தி கையில் கிடைத்த பிறகு நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய் வோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட் டோம். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இதுபோன்றவர்களின் பேச்சை இனிமேலும் மற்ற மதத்தலைவர்கள் தொட ராமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.

  Read more: http://viduthalai.in/e-paper/84265.html#ixzz37sGe0BtU

  தமிழ் ஓவியா said...

  அப்போது அசோக் சிங்கால் விவகாரம் குறித்து பேசியபோது நாட்டில் அமைதியை குலைக்கும் விதத்தில் இவ்வாறு விவாதத்திற்கு உரிய பேச்சை பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகைச் செய்தி கையில் கிடைத்த பிறகு நாங்கள் இது குறித்து காவல் துறையில் புகார் செய் வோம். காவல் துறை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட் டோம். சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இதுபோன்றவர்களின் பேச்சை இனிமேலும் மற்ற மதத்தலைவர்கள் தொட ராமல் இருக்கவேண்டும் என்று கூறினார்.

  Read more: http://viduthalai.in/e-paper/84265.html#ixzz37sGnglzG

  தமிழ் ஓவியா said...


  இன்றைய ஆன்மிகம்?

  திருமணம்

  பெற்றோர்கள், பிள்ளை களுக்கு திருமணம் பேசத் தொடங்கும்பொழுது காலா காலத்தில் கல்யா ணம் செய்ய வேண்டு மென்று சொல்வார்கள். வந்த வரன்கள் எல்லாம் வாயிலோடு திரும்பிச் சென்று விடுகிறதே என்று சிலர் அங்கலாய்ப்பர். சிலர் கை நிறையச் சம்பளம் வாங்கிய பிறகுதான் திரு மணம் செய்ய வேண்டு மென்று நினைப்பர். எவர், எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டே போகும். மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடுத்த வரம், கணவர் அமைவ தெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று நினைக்க வேண்டும். ஒரு பெண் ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.

  குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும், செவ் வாய், சனி களத்திர ஸ்தா னத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும் அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய் தால் மனதிற்கினிய மண மகள் அமைவாளாம்.

  இந்தியாவில் உள்ள மாப்பிள்ளை அமெரிக் காவில் சென்று கை நிறைய சம்பாதிக்கும் வேளையில் அங்குள்ள இன்னொரு மதப் பெண்ணையும் திரு மணம் செய்து கொண்டு ஜாம் ஜாமென்று வாழ்கிறார் களே! அவர்களின் ஜாதகத் தில் களத்திர ஸ்தானாபதி பதி 6,8 இடங்களில் இருப் பது தானோ?

  Read more: http://viduthalai.in/e-paper/84321.html#ixzz37uqA4o7J

  தமிழ் ஓவியா said...


  காக்கிக்குப் பதில் காவி அணியலாமே!

  சென்னை, ஜூலை 19: குற்றத்தை தடுக்க தனிப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் வழக்கமான ரோந்து பணிகளையும், நேர்மையான முறையில் விசாரணை நடத்தினாலே குற்றத்தை பெரும்பாலும் காவலர் குறைத்துவிடலாம். ஆனால், காஞ்சி தாலுகா காவலர் என்ன நினைத் தார்களோ தெரியவில்லை, அதிகளவு குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக கண் திருஷ்டி விநாயகர் படத்தை காவல் நிலையம் முன்பு வைத் துள்ளனர்.

  காஞ்சிபுரம் மாவட் டத்திலேயே மிகப்பெரிய எல்லை கொண்ட காவல் நிலையங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் உள்ளது. மாவட் டத்திலேயே காஞ்சி தாலுகா காவல் நிலையத் தில்தான் அதிக எண்ணிக் கையில் புகார்கள் வரு கின்றன.

  இங்கு, காவலர் பற் றாக்குறை காரணமாக புகார்கள் மீது உடனடி நட வடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள சிவகாஞ்சி மற்றும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் இங்கு வந்து சில முக்கிய வழக்குகளை முடித்து தந்துவிட்டு செல்கின்றனர்.

  இதனால், தாலுகா காவல் நிலைய ஆய்வாள ராக நியமிக்கப்படுபவர்கள், இங்குள்ள பணிச் சுமை யின் காரணமாக வந்த வேகத்திலேயே வேறு இடத்துக்கு மாறுதல் பெற்றுச் சென்று விடுகின் றனர். திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட எல்லைகள் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத் துக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் வெளி மாவட் டங்களில் கொலை செய் யப்பட்டு உடல்களை இர வோடு இரவாக பாலாறு, சென்னை-_பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்து நடக்கிற இடமாகவும் இருக்கிறது.

  இந்நிலையில், கம்ப்யூட்டர், மொபைல் போன் என தகவல் தொழில்நுட்பம் செழித் துள்ள இக் காலத்தில், பில்லி, சூன்யம், கண் திருஷ்டி பொம்மைகள், காத்து கருப்பு போன்ற பழைய பழக்க வழக்கங் களை காஞ்சி தாலுகா காவலர் இன்னும் நம்பி வருகின்றனர். காவல் நிலைய எல்லையில் குற் றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக தாலுகா காவல் நிலையம் முன்பாக கண் திருஷ்டி விநாயகரை காவலர் பொருத்தி இருக் கின்றனர் என்கின்றனர் சக காவலர் மற்றும் பொது மக்கள்.

  Read more: http://viduthalai.in/e-paper/84324.html#ixzz37uqKq741

  தமிழ் ஓவியா said...


  வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு


  பிரச்சாரத்துக்கு கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது

  மனைவியின் வருமான விவரம் குறிப்பிடவில்லை மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது.

  அலகாபாத், ஜூலை 19- வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.


  பிரதமர் பதவி வகிக் கும் நரேந்திர மோடி, நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வதோ தரா, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியிலி ருந்து விலகினார்.

  வாரணாசி தொகுதி யில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரம் வாக் குகள் அதிகம் பெற்றார். அந்த தொகுதியில் காங் கிரஸ் சார்பில் போட்டி யிட்ட அஜய் ராய்க்கு 3ஆ-வது இடமே கிடைத் தது. இவர் உத்தரபிரதேச மாநிலம் பிண்ட்ரா தொகு தியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

  வாரணாசி நாடாளு மன்ற தொகுதியில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன் றத்தில் அஜய் ராய் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

  இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

  வாரணாசி தொகுதி யில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் நரேந்திர மோடி தனது மனைவி யசோதா பென்னின் வருமானம் குறித்தும், அவரது பான் கார்டு (வருமான வரி கணக்கு எண் அட்டை) பற்றிய விவரங்களையும் குறிப்பிடவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.

  நாடாளுமன்ற தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரச்சாரத் துக்காக ரூ.70 லட்சத்துக்கு மேல் செலவிடக்கூடாது என்று தேர்தல் ஆணை யம் விதிமுறை உள்ளது. ஆனால், வாரணாசி தொகுதியில் மோடியின் பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டுள்ளது. மோடியின் பெயர் மற்றும் உருவம் பொறிக்கப்பட்ட பனியன்கள் மற்றும் தொப்பிகள் மக்களுக்கு ஏராளமாக வழங்கப் பட்டன.

  இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணா னது ஆகும். எனவே, வாரணாசி தொகுதியில் மோடி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.

  நீதிபதி வி.கே.சுக்லா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக பிரத மர் நரேந்திர மோடிக்கு தாக்கீது அனுப்புமாறு உத்தரவிட்டார்.

  அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

  Read more: http://viduthalai.in/e-paper/84318.html#ixzz37uqVeWIp

  தமிழ் ஓவியா said...


  முல்லைப் பெரியாறில் அரசியல் மூக்கை நுழைக்கக் கூடாது!


  முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்கு வயது 35 - இவ்வளவு இடைவெளிக்குப் பிறகு ஒரு முடிவு இப்பொழுது கிடைத்திருக்கிறது.

  1886 அக்டோபர் 29ஆம் நாள் சென்னை மாநிலத்திற்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமே முல்லைப் பெரியாறு என்பது.

  152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று வரையறை செய்யப்பட்டது. இடைக்காலத்தில் அணைக்குக் கடும் ஆபத்து என்று கேரளத்தவர்கள் கூக்குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் அணை யினைப் பார்வையிட்டதுண்டு - இது நடந்தது 1979 நவம்பரில்.

  அதன்பின் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட போது அணையைப் பலப்படுத்தும் பணியைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 21 கோடியே 51 லட்சம் ரூபாய் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணியைச் செய்து முடிக்கும் வரைக்கும் அணையின் நீர் மட்டத்தை 136 அடியாகக் குறைத்துக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்தபிறகு 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்பதை கேரள மாநில அரசும் ஒப்புக் கொண்டதா இல்லையா? உண்மை என்னவென்றால் அணையைப் பாதுகாக்கும் பணிகள் முடிந்த நிலையிலும் கேரள அரசு ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி நடந்து கொள்ளாமல் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதுதான் பிரச்சினைக்கே காரணம்.

  ஏனிந்த முடிவை கேரளா எடுத்தது என்பதுதான் முக்கியம். 1976இல் கேரளாவில் இடுக்கி அணை கட்டப்பட்டது - இது முல்லைப் பெரியாறு அணையைக் காட்டிலும் ஏழு மடங்கு பெரியது. கேரளாவின் மின் தேவை முழுவதையும் இந்த அணையிலிருந்து உற்பத்தி செய்வதுதான் இந்த அணையை உருவாக்கியதன் இரகசியம் - ஆனால் எதிர்பார்த்த அளவு நீரைத் தேக்க முடியவில்லை. அதன் காரணமாக மின் உற்பத்தியும் கிடைத்த பாடில்லை. முல்லைப் பெரியாறு அணை என்ற ஒன்று இல்லையென்றால் அந்நீர் முழுவதும் இடுக்கி அணைக்கு கிட்டுமே! இதுதான் இதற்குள்ளிருக்கும் பிரச்சினை.

  முல்லைப் பெரியாறில் தமிழ் நாட்டுக்குரிய உரிமை நிலை நாட்டப்படாத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகளும் பாதிப்புகளும் அதிகம் 36,000 ஏக்கர் நிலங்கள் தரிசாகி விட்டன. 86,000 ஏக்கர் நிலங்கள் ஒரு போக சாகுபடிக்குத் தள்ளப்பட்டன. ஆற்று நீர்ப் பாசனத்தை இழந்து ஆழ் குழாய் நீருக்கு மாறிய விவசாய நிலங்களின் பரப்பளவு 30,000 ஏக்கர்; இதனால் ஆண்டு ஒன்றுக்கு ஏற்பட்ட நட்டம் ரூ.56 கோடி. மின் உற்பத்தி இழப்பு ரூ.75 கோடி.

  இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் கேரளாவில் ஓடும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறுகளில் 50 சதவீதத்துக்கும் மேலான நீர் எவ்விதப் பயன்பாடும் இல்லாமல் கடலில் கலக்கின்றது.

  35 ஆண்டுகளில் நீதிமன்ற ஆணைகள் - நிபுணர் குழுக்கள் என்று மாறி மாறி வந்திருக்கின்றன.

  142 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற ஆணை கறாராக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு!

  இப்பொழுது போய் தமிழக முதல் அமைச்சர் இதில் அரசியல் என்னும் மூக்கை நுழைய விடுவது பொறுப் பானதல்ல!

  142 அடியிலிருந்து 136 அடியாகக் குறைத்துக் கொண்ட கால கட்டம் எது? அப்பொழுது ஆட்சியில் இருந்தவர் யார்? எந்தக் கட்சி? என்று பேச ஆரம் பித்தால், அது ஆளும் அதிமுகவுக்குத் தேவையில்லாத நெருக்கடியைத் தான் கொடுக்கும். கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவது புத்திசாலித்தனமல்லவே!

  பிற மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் நடந்து கொள்ளும் ஒற்றுமையைப் பார்த்த பிறகாவது நாம் புத்தி கொள் முதல் பெற வேண்டாமா? இதில் பொறுப்பாக நடந்து காட்ட வேண்டியது ஆளும் கட்சி என்பதை நினை வூட்ட வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

  Read more: http://viduthalai.in/page-2/84328.html#ixzz37urKTbEj

  தமிழ் ஓவியா said...


  சிவசேனாவை விமர்சித்த விவகாரம்


  சிவசேனாவை விமர்சித்த விவகாரம் : கைது செய்யப்பட்ட மாணவிகளுக்கு ரூ. 50 ஆயிரம் நஷ்டஈடு மனித உரிமை ஆணையம் உத்தரவு

  மும்பை, ஜூலை 19- -மும்பையில் சிவசேனா தலைவர் பால்தாக்ரே இறந்ததை தொடர்ந்து நடைபெற்ற சம்பவம் குறித்து பேஸ் புக்கில் விமர்சனம் செய்திருந்த இரு மாணவி களை மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம், இது கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது. எனவே மாணவிகளை கைது செய்தமைக்காக அவர்களுக்கு நஷ்ட ஈடாக இரு வருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

  சிவசேனாவின் தலைவராக இருந்த பால்தாக்ரே இறந்தபோது, மகாராஷ் டிராவின் பல பகுதிகளில் அக்கட்சி யினர் வன்முறையில் ஈடுபட்டு கடை களை அடைக்க செய்தனர். போக்கு வரத்தை அராஜகத்தின் மூலம் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது மும்பையில் வாழும் பலதரப்பு மக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இது குறித்து இரு மாணவிகள் தங்களுக்குள் சமூக வலைத்தளமான பேஸ்புக்மூலம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

  அதில் மறைந்த தலைவர் மீதான மரியாதையை காண்பிக்க பந்த் நடத் துவது சரியான வழிமுறை கிடையாது. தாக்ரே மீதான மரியாதை காரணமாக கடைகள் மூடப்படவில்லை. பயத்தின் காரணமாகவே கடைகள் மூடப்பட் டுள்ளன என ஒரு மாணவி தெரிவித்தி ருந்தார். இதற்கு அவரது தோழி ஒருவர் அந்த கருத்தை ஆமோதித்து லைக் தெரிவித்திருந்தார். இதனைக்கூட சகித்துக்கொள்ள முடியாத சிவசேனா கட்சியினர் இது குறித்து காவல் துறையில் புகார் செய்து, சம்மந்தப்பட்ட மாணவிகளை கைது செய்து சிறையில் அடைக்க கோரினர். ஆனால் மும்பை காவல்துறையினர் எந்த வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் சிவசேனாவிற்கு ஆதரவாக இரு மாணவிகளையும் கைது செய்தனர். இது இந்திய அளவில் பெரும் சர்ச் சையை உருவாக்கியது. பலதரப்பினரிட மிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு இந்த வழக்கை முடித்துக் கொண்டது. இருந்த போதிலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவ காரத்தை தானாகவே முன்வந்து கையி லெடுத்து விசாரணை நடத்திவந்தது. விசாரணையின்போது மாணவிகள், மத, இன உணர்வுகளுக்கு எதிராக கருத்து பதிவு செய்யவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.

  இதனை தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகா ராஷ்டிரா அரசிற்கு ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில் கூறியி ருப்பதாவது : மாணவிகளை எவ்வித விசாரணையும் இன்றி அவசர கதி யில் மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த நடவடிக்கை என்பது அரசமைப்பு சட்டம் பொது மக்களுக்கு வழங்கியுள்ள கருத்து சுதந் திரத்திற்கு எதிரானது.பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரத்தை அபராதமாக மகா ராஷ்டிர அரசு வழங்க வேண்டும். அல்லது, 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் சட்டத்தின் 13ஆவது பிரிவின்கீழ் விளைவுகளை அந்த அரசு சந்திக்க வேண்டிவரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

  Read more: http://viduthalai.in/page-2/84331.html#ixzz37urWgzHf

  தமிழ் ஓவியா said...


  நோக்கம்


  சிறு கூட்டத்தாரால் நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் செல்வமும், செல்வாக்கும் அற்ற பெரும்பான்மைக் கூட்டத்தார், சமுதாயத் துறைகளில் தங்களுக்குள்ள தடைகளை அரசியல்மூலம் நீக்கிக்கொண்டு முன்னேற்றமடையு மாறு செய்வதே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் நோக்கமாகும். - (விடுதலை, 21.7.1950)

  Read more: http://viduthalai.in/page-2/84327.html#ixzz37ured8AO

  தமிழ் ஓவியா said...


  சைமன் கமிசன் யாதாஸ்து


  சைமன் கமிசன் யாதாஸ்த்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் இப்போது எவ்வித அபிப்பிராயமும் கூற முற்படவில்லை.

  அன்றியும், அதிலிருந்து இந்தியர்களுக்கு எம்மாதிரியான அரசியல் உரிமை கிடைக்கப் போகின்றது என்பதைப் பற்றியும் நாம் சிறிதும் கவலைப்பட வில்லை. ஏனெனில், அதெல்லாம் உத்தியோகமும், பதவியும் அனுபவிக்கக் கருதி, அதற்காகவே பல ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு காத்திருப்பவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.

  நம்மைப் பொறுத்தவரை சைமன் கமிசன் முடிவான யாதாஸ்த்தில் தீண்டப்படாதவர்கள், பெண்கள், ஜாதி வித்தியாசத்தினால் இழிவு படுத்தப்பட்டவர்கள் ஆகிய வர்கள் விடுதலை விஷயத்திலும், முகமதியர்களும், கிறிஸ்தவர்களும் இந்துக்களிடம் அவநம்பிக்கை கொண்டு எதிரிகளாயில்லாமல் ஒற்றுமையாய் வாழவும், பொதுவாக எல்லோருக்குமே சமமாக கல்வி கிடைக்கும்படி செய்யவும் என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன?

  என்பதைப் பற்றியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயத்தில் தீண்டாதவர்கள் பெண்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் ஆகியவர்களுக்கு எவ்விதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருக்கின்றது என்கின்ற விஷயத்திலுமேதான் கமிசனின் சிபாரிசை அறிந்து அதன் மேல் அது மக்களின் சமத்து வத்திற்கும், விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்றதா, அல்லவா என்பதைப் பற்றி யோசிக்கக்கூடும்.

  அன்றியும், இந்தியாவில் உள்ள சகல அரசியல் ஸ்தாபனங்களும் சைமன் கமிசனை எதிர்த்தும், நாம் மாத்திரமே ஆரம்பத்தில் இருந்தே அவ்வெதிர்ப்புகளை எதிர்த்து கமிசனை வரவேற்றதுடன் மற்ற மக்களையும் வரவேற்றுத் தங்கள் குறைகளைத் தெரியப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது இக்கருத்தைக் கொண்டேயாகும். ஆதலால் முடிவு யாதாஸ்த்தை எதிர்பார்க்கிறோம்.

  - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.06.1930

  Read more: http://viduthalai.in/page-7/84304.html#ixzz37usy4aHw

  தமிழ் ஓவியா said...

  தந்தை பெரியார் பொன்மொழிகள்

  ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டு விட்டான்.

  எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து, நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச் சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியது தான் முறை.

  Read more: http://viduthalai.in/page-7/84304.html#ixzz37ut82Jj1

  தமிழ் ஓவியா said...


  சுசீந்திரத்தில் சுயமரியாதை போர்

  சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40ஆவது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொழுதும் இருந்து வருகின்றது.

  அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத் திலிருந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங்கூர் ராஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவு ளாகிய பத்மநாபவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதியால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப்படும் ஜனங்கள் யாரென் றால் இந்துக்கள் என்று சொல்லப் படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள்.

  மற்றபடி, அந்த சாமியின் பக்தர் களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர்களுமான கிருத்தவருக் கோ, மகமதியர்களுக்கோ, அவ் வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணையும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும் பான்மையான மக்களாகிய சில சமூகத்தரைத்தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வதுவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப்போகலாம்.

  அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20ஆவது நூற்றாண்டில் மறுக்கப்பட்டு வருகின்றது.

  இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக் கலாம்.

  அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது. இப்போதும் அதுபோலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத்தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப்பட்டு வருகின்றது.

  இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்ப தாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக்கிரகத்தை அடக்கி விடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

  அதற்கேற்றாப் போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சி யிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

  இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடு வதாகச் சொல்லி அரசாங்கத்தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர்.

  இவர் காலத்தில்தான் தொண்டர் களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டினங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப்படுத்தினவர்.

  அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

  Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utGuGSm

  தமிழ் ஓவியா said...

  தந்தை பெரியார் பொன்மொழி

  ஜாதிக்கென்று தொழில் செய் வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய் யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்

  Read more: http://viduthalai.in/page-7/84306.html#ixzz37utPqFUZ

  தமிழ் ஓவியா said...


  சட்டமறுப்பு இயக்கம்

  தலைவர்களுக்குள் எங்கும் ராஜிப் பேச்சும் ராஜிக் கோரிக்கையுமே முழங்குகின்றது. ஆனால், சர்க்கார் ராஜிக்கு இடம் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். குறைந்த அளவு ராஜி நிபந்தனையாக, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதாக திரு. மாளவியா சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

  தேசியப் பத்திரிகைகளும் அதை வலியுறுத்தி ராஜி! ராஜி!! என்று கதற ஆரம்பித்து விட்டன. எனவே தோல்வி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. ஜோசியப் புரட்டினாலாவது அதாவது திரு. காந்தி நாளைக்கு விடுதலை, நாளன்னைக்கு விடுதலை என்று எழுதி சிறு பிள்ளைகளையும் பாமர மக்களையும் ஏமாற்றி சிறைக்கு அனுப்பிக் கணக்குக் கூட்டி வந்ததும் கூட இப்போது சில ஜோசியர்களுக்கும் 144 போட்டுவிட்டதால் அவர்களும் அடங்கும்படியாகி விட்டது.

  மற்றபடி ஜவுளிக்கடை, கள்ளுகடை, பள்ளிக்கூட மறியல்களோ வென்றால் தொண்டர்கள் எண்ணிக்கை போதாததால் நிறுத்த வேண்டிதாய் விட்டது. வேதாரணியத்திற்கு யாத்திரைக்குப் போகும் ஜனங்கள் பெயர்களைக் கூட பத்திரிகைகளுக்கு வெளிப்படுத்த முடியாமல் போய் விட்டது. மற்றும் எது எப்படியானாலும் சட்ட மறுப்பு இயக்கத்தால் ஒரு லாபம் ஏற்பட்டதை நாம் மறுக்க முடியவில்லை.

  அதாவது அது சர்க்காரை ஒன்றும் செய்யமுடியவில்லை யானாலும் பணக்கார வியாபாரிகள் திமிர் சற்று அடங்கிவிட்டது. அநேக வியாபாரிகள் இயக்கத்தை வைத்துக் கொண்டே தூக்கமில்லாமல் இருக்கின்றார்கள். பணக்கார விவசாயிகள் திமிரும் சமீபத்தில் அடங்கிவிடும். தவசங்கள் (தானியங்கள்) விலை மிகவும் இறங்கிவிட்டதால் வரும்படி குறைந்து திண்டாடுகிறார்கள்.

  ஆனால், ஏழைகளுக்குச் சற்று உணவு பொருள்கள் சல்லீசாய் கிடைக்க ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்த காரணங்களைக் கொண்டு இந்த கிளர்ச்சி இன்னமும் ஒரு மூன்று மாதத்திற்கு ஆவது நடந்தால் இன்னமும் சற்று ஏழைமக்களுக்கு அனுகூல மாகும் என்றே ஆசைப் படுகின்றோம்.

  - குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

  Read more: http://viduthalai.in/page-7/84305.html#ixzz37utYgHki

  தமிழ் ஓவியா said...


  சென்னை விவேகானந்தா கல்லூரியில் 100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் ஆதிக்கம்

  சென்னை விவேகானந்தா கல் லூரியை நடத்தும் பொறுப்புகீழ் சாதியி னருக்கு தொண்டு செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. 1921இல் பார்ப்பனரல்லாத நாட்டுக் கோட்டை நகரத்தாரால் மாணவர் இல்லத்திற்கு என கட்டித் தரப்பட்ட நாட்டுக்கோட்டை நகரத்தார் வித்தியா சாலை என்ற பள்ளிக்கட்டடம் கல் லூரிக்கு என ஒதுக்கப்பட்டது. பின்னர் சென்னை மாகாண அரசினால் சிட்டி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்டிடயிருந்து சி.அய்.டி. காலனி பகுதியில் பெரும் நிலம் (மனைகள்) கல்லூரி மைதானத் திற்காகவும், கல்லூரி விடுதிக்கும் மிக மிகச் சொற்ப விலையில் (அதிலும் பெரும்பகுதியை அரசே தந்து விட்டது) தரப்பட்டது.

  பல்கலைக் கழக மானியக்குழு தந்த நிதியைப் பயன்படுத்தி (Matching Grant)கல்லூரி மாணவர் விடுதியின் ஒரு கட்டடமும் மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் மாநில, மத்திய அரசுகளிட மிருந்து நிதிக் கொடைகளை இவ்வாறு பெற்றதுடன் மாநில அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மாதந்தோறும் ஊதிய மானியமாகவும் பெற்று வரும் விவேகானந்தா கல்லூரி எப்படி ஒரு பார்ப்பனக் கல்லூரியாக இயங்க முடியும்?

  கல்லூரி தொடங்கப்பட்ட 1946ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கல்லூரி நிருவாகக் குழுத் தலைவர்களாக 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! இதைப் போன்று இந்த 67ஆண்டுகளில் கல்லூரிச் செயலாளர் களாக 9 பேர் இருந்துள்ளனர். இவர் களில் சுவாமி நிஷ்கமானந்தா 1970-1976)வைத் தவிர அனைவரும் பார்ப் பனர்களே!

  பொது நிதியில் அரசு மானியத்தில் இயங்கும் இக்கல்லூரியில் 1946 முதல் இன்று வரை 14 பேர் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 1.7.2013 முதல் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பேரா சிரியர் கே. சீனிவாசன் 15வது முதல்வர். 15 முதல்வர்களும் பார்ப்பனர்களே!

  சூத்திரர் யுகம் என்ற விவேகானந் தரின் கனவு என்னவாயிற்று? காயஸ் தராகப் பிறந்த அந்த துறவியின் கனவு என்றும் கனவாகவே நீடிக்க வேண்டும் என்பதுதான் அவரது துறவுப் பரம்பரை யினரின் சாதி வர்ண வேட்கையா? இனமானத் தமிழர்களே! சிந்திப்பீர். செயல்படுவீர்!

  நன்றி: விடுதலை நாளிதழ் 2.7.2013

  வெளியீடு: நகர திராவிடர் கழகம், செய்யாறு

  Read more: http://viduthalai.in/page4/84366.html#ixzz37uuxmvhu

  தமிழ் ஓவியா said...


  16ஆவது மக்களவை இதுதான்


  வயதுடையவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மக்களவை இதுதான். அதிகமான வயதுடையவர் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானி (வயது 86). பிரதமர் நரேந்திர மோடிக்கு 63 வயது. 25-35 வயதுடையோர் 136 பேர். 56-65 வயதுடையோர் 171 பேர். 66-75 வயதுடையோர் 70 பேர். 76-85 வயதுடையோர் 9 பேர். தென் சென்னை எம்.பி. ஜெயவர்த்தன் உட்பட 5 பேர் மட்டுமே 26 வயதுடைய இளைஞர்கள்.

  மகளிர் மன்றம்: புதிய மக்களவையில் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் நாடாளுமன்றத் தேர்தலில் (1952) 5 சதவிகித (22 பேர்) பெண்களும், 1977 தேர்தலில் 4 சதவிகித (19 பேர்) பெண்களும், 2009 தேர்தலில் 10.7 (59 பேர்) சதவிகித பெண்களும் இடம் பெற்றனர். தற்போது 11.3 சதவிகிதம் (61பேர்) இடம் பெற்றுள்ளனர்.

  குபேரர்கள் கிளப்: இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்.பி.க்களில் 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை உடையவர்கள். 2009 தேர்தலில் 58 சதவிகிதமாகவும், 2004 தேர்தலில் 30சதவிகிதமாகவும் இருந்த கோடீஸ்வரர்களின் சதவிகிதம் இப்போது 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களில் பலர் 50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். 16ஆவது மக்களவையில் மிகப் பெரிய கோடீஸ்வரர் எம்.பி.யாக விளங்குபவர், தெலுங்கு தேசக் கட்சியின் ஜெயதேவ் கல்லா. குண்டூர் தொகுதி எம்.பி.யான இவருடைய சொத்து மதிப்பு 683 கோடி ரூபாய்.

  எம்.பி.க்கள் ஜாக்கிரதை: மொத்த எம்.பி.களில் மூன்றில் ஒரு பகுதியினர் (34 சதவிகிதம்) கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். பா.ஜ.க.வின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். 5இல் ஒரு பகுதியினர் மிக மோசமான கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்களின் எண்ணிக்கை 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும், 2009 தேர்தலில் 24 சதவிகிதமாகவும் இருந்தது.

  படிக்காத மேதைகள் பலர்: உயர்நிலைப் பள்ளித் தேர்வைக்கூட முடிக்காதவர்கள் 13 சதவிகிதம் பேர். 75 சதவிகிதம் பேர் பட்டதாரிகள். ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் 6 சதவிகிதம் பேர்.

  இஸ்லாமியர்கள் குறைவு: இந்த மக்களவையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெறும் 22 பேர் மட்டுமே தற்போது மக்களவைக்கு செல்கின்றனர். 1952 தேர்தலில் 25 பேரும், 1980 தேர்தலில் 49 பேரும், 2004 தேர்தலில் 35 பேரும் மக்களவையில் இடம் பெற்றனர்.

  விவசாயிகள் அதிகம்: மொத்த உறுப்பினர்களில் 27 சதவிகிதம் பேர், விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள்.

  Read more: http://viduthalai.in/page6/84371.html#ixzz37uvVEcnV

  தமிழ் ஓவியா said...

  விவசாயிகள் அதிகம்: மொத்த உறுப்பினர்களில் 27 சதவிகிதம் பேர், விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள்.

  Read more: http://viduthalai.in/page6/84371.html#ixzz37uvenrwf

  தமிழ் ஓவியா said...


  பராமரிப்பின்றி புத்தர் சிலைகள்  தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, அய்யம்பேட்டை, ஆயிரவேலி அயிலூர், உள்ளிக்கோட்டை, ஒதுளூர், கரூர், கிள்ளியூர், பட்டீஸ்வரம், பரவாய், புஷ்பவனம், புத்த மங்கலம், புதூர், பெரண்டாக்கோட்டை, பெருஞ்சேரி, மங்கலம், மன்னார்குடி, மானம்பாடி, விக்கிர மங்கலம், விக்ரமம், வெள்ளலூர் உள்ளிட்ட பல இடங்களில், இப்போதும் மகாபுத்தர் வழிபாடு நடைமுறையில் உள்ளது. அய்யம்பேட்டையில், முனீஸ்வரன் என்றும், பெருஞ்சேரியில் ரிஷி, என்றும், புத்தரை வழிபடுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன், பவுத்த மதம் தமிழகத்தில் பரவியபோது, சோழ நாட்டில், அதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. அதனால், அப்பகுதி முழுவதும், புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பிற்காலங்களில், சிலைகள் பராமரிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டன. தமிழக தொல்லியல் துறை, இருபது ஆண்டுகளுக்கு முன், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளை கணக்கெடுத்து, அதில், 70 புத்தர் சிலைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் 20 சிலைகளை உள்ளூர் மக்கள் வழிபட்டு வந்தனர். எனவே, அச்சிலைகளை அவர்களின் பொறுப்பிலேயே தொல்லியல் துறை விட்டது. மீதமுள்ள, 50 புத்தர் சிலைகள், போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் இருப்பதாக தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, புத்தர் சிலைகளைப் பராமரிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Read more: http://viduthalai.in/page8/84374.html#ixzz37uwQIcvs

  தமிழ் ஓவியா said...

  பகத்சிங் தூக்கில் இடப்பட்டபோது

  ஆங்கில அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி

  அன்றைய "தேசபக்தர்கள்" வாய்மூடி, மௌனியாக இருந்தபோது,

  பகத்சிங்கின் செயலை ஆதரித்து

  1931 ல் கட்டுரை தீட்டியவர் தந்தை பெரியார் என்பது

  இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?