Search This Blog

5.7.14

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை -சித்திரபுத்திரன்


 

மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடி என் அருமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும், மேல் உலகத்திலும் உள்ளவர் களுக்கெல்லாம் அய்சுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?

லட்சுமியான ஸ்ரீரங்கநாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தயிரும் சாப்பிட்ட தால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண் களையெல்லாம்கூட கைவைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மைச் சாப்பாட்டுக்கே லாட்டரி போடும் படியாக ஏன் செய்யக் கூடாது?

விஷ்ணு:- அய்யய்யோ! அதனாலா இப்படிச் செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படிச் செய்வதும் ஒரு லட்சுமி கடாட்சம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்குக் கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடு கிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தைச் சேர்ப்பதற்கு இப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்கநாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசியென்று பெயரும் செய்து கண்டகண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம்தானா  உமக்கு லாட்டரி சீட்டில் வந்துவிட்டது? பக்தர்களின் பெண்களைத் தாங்கள் கைப்பற்று வதும், தங்கள் தாசிகளைப் பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர் களுக்கும் உள்ள பந்துத்துவமாகும்.

விஷ்ணு:- அதெல்லாம்தான் இப்போது நமது உண்மை பக்தர் களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும், குடியரசு மூலமும் நிறுத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்கும். அப்புறம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்தக் காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்குச் சோறுபோடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டுவிடும் கவலைப்படாதீர்கள், இன்னும் கொஞ்ச நாளைக்குப் பொறுத்துக் கொண்டிருந்தால் போதும்.

------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய  கற்பனை உரையாடல் - “குடிஅரசு” -  16.03.1930

17 comments:

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க தினத்தந்தி தலையங்கம்

குஜராத் அல்ல, தமிழ்நாடுதான் வழிகாட்டுகிறது!

குஜராத்தில் முதல்மந்திரியாக பணி யாற்றிய நரேந்திர மோடி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அபரிமிதமான வெற்றிக்கு பிறகு, பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவருக்கு பிறகு யார் குஜராத் முதல்மந்திரியாக பொறுப்பு ஏற்கப்போகிறார்கள் என்று நாடே உற்று நோக்கிக்கொண்டு இருந்தது. அந்த மாநிலத்தின் முதல் பெண் முதல் மந்திரியாக 72 வயதான ஆனந்திபென் பட்டேல் பதவி ஏற்று இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஆமதாபாத் நகரில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி நிறைவுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பில் கலந்துகொண்ட அவர், குஜராத் மாநில போலீஸ் படையில் 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்காக ஒதுக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்தார். இந்த இடஒதுக்கீடு அனைத்து மட்டத்திலும் அமல் நடத்தப் படும் என கூறினார். அவரது அறிவிப்பு அந்த மாநிலத்தை பொறுத்தமட்டில், பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்குள் பல ஊடகங்கள் அனைத்து மாநிலங் களுக்கும் முன்னோடியாக இந்த அறி விப்பை குஜராத் முதல்மந்திரி வெளி யிட்டது போலவும், அனைத்து மாநிலங் களும் பின்பற்றவேண்டிய அறிவிப்பு போலவும் சித்தரித்துவிட்டார்கள்.

இவர்களெல்லாம் தமிழ்நாட்டின் வரலாற்றை கண்டிப்பாக படிக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டுக்கென நீண்ட, நெடிய பாரம்பரியமும், பெருமையும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஒளி விளக்கான தந்தை பெரியார் சமுதாய சீர்திருத் தத்துக்கான அவரது போராட்டத்தில் மிக முக்கியமாக பெண்களின் முன்னேற்றத் துக்காகவும், பெண் விடுதலைக்காகவும் தான் போராடினார். பெண்களுக்கு சமுதாயத்தில் உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக அச்சாரம் போட்டவர் தந்தை பெரியார் தான். அதுபோல, பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதி யாரும், ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவி லோங்கி இவ் வையம் தழைக்கும் என்று பாடிவிட்டு, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று முழங்கினார். இத்தகைய பெரும்பேறு பெற்ற தமிழ்நாட்டில் 1989ல் முதல்அமைச்சராக இருந்த கருணாநிதி அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசு உத்தரவு பிறப்பித்தார். பெண்கள் முன்னேற்றத்தில் ஒரு புதுக்கணக்கு தொடங்கியது. 1991ல் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற முதல் பெண் முதல்அமைச்சர் என்ற பெருமையோடு பதவியேற்ற ஜெயலலிதாவின் சிந்தை யில் உதித்து அடுத்த ஆண்டே செய லுக்கு வந்த திட்டம்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் போலீசாரிடம் இருந்த திறமைகளை யெல்லாம் வெளியே கொண்டுவந்தவர் அவர்தான். 1995ல் போலீஸ் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு தேவையில்லை என்று ஒரு கருத்துரு வந்தபோது, அதை ஆரம்ப கட்டத் திலேயே நிராகரித்து கண்டிப்பாக 30 சதவீத இடஒதுக்கீடு அமல்நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். வீரதீர கமாண்டோ படைகூட பெண் போலீசில் இருக்கிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்களை வெளிநாடுகளில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளெல்லாம் வந்து பார்த்து, தங்கள் நாட்டிலும் செயல்படுத்த திட்டமிட்டு சென்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 773 பெண் போலீசார், அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். 199 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இருக்கின் றன. இந்தியா முழுவதிலும் உள்ள மொத்தம் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. தற்போது 7 மாவட்டங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளாக பெண்கள்தான் இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு பெண் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரும், 2 பெண் போலீ சாரும் இருக்கவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு என்றாலும், பொதுப்பட்டியலிலும் திறமை உள்ளவர்கள் போட்டியிட்டு தேர்வாக லாம். ஆக, அரசு பணிகள் என்றாலும் சரி, போலீஸ் துறை என்றாலும் சரி, பெண் களுக்கு இடஒதுக்கீடும், பெண்களின் திறமையை மிளிரச்செய்ததிலும் தமிழ் நாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டு கிறது. தமிழ்நாட்டின் அடிச்சுவடைப் பின்பற்றித்தான், மற்ற மாநிலங்கள் பெண் போலீசில் பல திட்டங்களை செயல் படுத்த தொடங்குகிறதே யல்லாமல், இன்னும் பெண் போலீசுக்கு இட ஒதுக் கீட்டையே தொடங்காத குஜராத்தை பார்த்து அல்ல.

நன்றி: தினத்தந்தி தலையங்கம் 5-7-2014

Read more: http://viduthalai.in/page-2/83484.html#ixzz36eEwilFx

தமிழ் ஓவியா said...


செத்தான்நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோ மானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்.
(விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page-2/83481.html#ixzz36eF8Xu1y

தமிழ் ஓவியா said...


வாஸ்து?

வாஸ்து என்ற ஒன்று மிக அதிகமாகப் பேசப் படும் காலம் இது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் கட்டும் வீட்டுக்கு மட்டும் தானா இது? மற்ற மதக்காரர்கள் வீடு களைக் கட்டுவதே கிடையாதா? அவர்கள் வாஸ்து பார்க்கிறார்களா? மதச் சார்பற்றவர்கள் வீடு கட்டுவதில்லையா? அவர்கள் வாஸ்து பார்க்காததால் என்ன கெட்டு விட்டதாம்? ஒரே ஒரு கேள்வி - வாஸ் துவில் கழிவறைக்கு (Toilet) இடம் உண்டா?

சோதிடம் எப்படி அறிவியலுக்குப் பொருத்தமற்றதோ, அதே நிலைதான் வாஸ்துவுக் கும். எல்லாவற்றிற்கும் இந்து மதத்தில் அறி வுக்குப் பொருத்தமற்ற புராண சமாச்சாரங்கள் உண்டு. அது இதோ:

ஒரு சமயம், தேவ, அசுரர் யுத்தத்தில் பிருகு முனிவரும் அவரது பத் தினியும் அசுரர்களைப் பாதுகாத்துக் காப்பாற் றினர். இதனை அறிந்த தேவர்கள், பிருகு முனிவரின் பத்தினியின் தலையை வெட்டிவிட்ட னர். இதனைக் கண்டித்த பிருகு முனிவர் கோபம் கொண்ட சமயம் அவரது தேகத்தில் உண்டான வியர்வை பூமியில் விழுந்து, ஓர் அசுர உத்த மன் (வாஸ்து புருஷன்) உண்டாகித் தேவர்களை அழிக்க ஆரம்பித்தான். இதனை அறிந்த தேவர்கள் வாஸ்து புரு ஷனின் தலையிலிருந்து பாதம் வரை அவனது உடலை ஆக்கிரமித்து அவனை எழுந்திருக்க விடாமல் செய்தனர்.

அது சமயம் பிரம்மா அவன் பூமியிலிருந்து தோன்றியதால், அவனைப் பூமியின் புதல்வன் என்று கூறி, உன்னை மனிதர்கள் பூமியில் வீடு, கிராமம், பட்டினம், யாகசாலை, ஆலயங்கள் ஆகிய வற்றை உண்டாக்கும் சமயம் வழிபடுவார்கள்.

அதனால் உனக்கு அளவற்ற திருப்தி உண் டாகும் உன்னை வழிபடு பவர்கள் அனைத்து நலன்களும் பெறுவர் என வாஸ்து புருஷ னுக்கு வரமளித்தார். இதுதான் வாஸ்து புருஷன் தோன்றிய வரலாறு.

எந்தக் காலத்திலோ, எந்தக் கிறுக்கனோ எழுதி வைத்த இந்தக் குப்பைகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? முகலிவாக்கம் 11 மாடி கட்டடம் வாஸ்து பார்த் துக் கட்டப்பட்டதுதான். அவர்களின் வலைத் தளத்திலேயே இது இருக் கிறது.

61 பேர் பலி கொண்ட பிறகும் வாஸ்துவை, வாஸ்தவமாக நம்பு கிறீர்களா? - மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/83471.html#ixzz36eFOmaSI

தமிழ் ஓவியா said...


முத்துலட்சுமி ரெட்டி மசோதா


(டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)

1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் விபசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.

வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை. ஆனால், சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.

தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபசாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும்வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கெனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.

ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

- குடிஅரசு - கடிதம் -30.03.1930

Read more: http://viduthalai.in/page-7/83438.html#ixzz36eHlierK

தமிழ் ஓவியா said...


கடைசிப் போரின் முதல் பலன்


திரு. காந்தியார் ஆரம்பித்திருக்கும் கடைசிப் போரினால் இந்தியாவுக்கு அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் பல கெடுதல்கள் ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றம் தடைப்பட்டுப் போகும் என்று நாம் எழுதியும் பேசியும் வருவது நேயர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். அதற்கு இப்போதே ஒரு தக்க ருஜுவு ஏற்பட்டுவிட்டது.

அதாவது சாரதா சட்டம் சிறிது ஆட்டம் கொடுத்து விட்டதேயாகும். பார்ப்பனர்கள் பெரும்பாலும் திரு. காந்திக்கு உதவியாயிருப்பதாகவும் காந்தி இப்போரில் மிக்க அக்கறை இருப்பதாகவும் இது சமயம் காட்டிக் கொண்டிருப்பதின் பல இரகசியங்களில் முக்கியமானது இந்த சாரதா ஆக்டை ஆடச் செய்வதற்காகவேயாகும்.

உப்பு சத்தியாக்கிரகத்திற்குப் பயந்து கொண்டுதான் சர்க்கார் சாரதா சட்டத்தில் பின்வாங்கக் கூடுமே ஒழிய மற்றபடி சாரதா சட்டம் தப்பு என்றோ சர்க்காரார் தாங்கள் செய்தது பிசகு என்றோ கருதி அல்ல.

உப்பு சத்தியாக்கிரகம் முடிவு பெறுவதற்குள் வைதிகர்கள் இதுபோல் அநேக காரியங்கள் சாதித்துக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியும். இவ்விதக் கெடுதியை திரு. காந்தியைப் போன்ற தலைவர்களைக் கொண்ட இந்திய மக்கள் அடைவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எப்படி இருந்தாலும் நமது நாட்டில் அரசாங்கத்தார் சீர்திருத்தம் செய்ய இசைந்தாலும்கூட அதை நடைபெற வொட்டாமல் தடுப்பவர்கள் இந்தியர்கள் தானா அல்லவா? பொது மக்கள் பிரத்தியட்சத்தில் அறிந்து கொள்ள இதனாலாவது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதைக் குறித்து ஒரு விதத்தில் நமக்கு மகிழ்ச்சியேயாகும்.

ஏனெனில் நமது நாட்டில் சில போலி தேசிய வீரர்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு சர்க்காரே காரணம் என்று பேசி மக்களை ஏய்ப்பதற்குச் சரியான பதிலாகும். ஆனாலும், இது விஷயத்தில் இது உண்மையா யிருக்குமானால் சர்க்காருடைய நடவடிக்கையை நாம் அழுத்தமாகக் கண்டிக்கின்றோம்.

கண்டிக்கின்றோமென்பது போலி தேசிய வீரர்களைப் போல் வாயினாலும் எழுத்தினாலும் மாத்திரம் அல்ல என்றும் அதற்கு அறிகுறி காரியத்திலேயே காட்டப் போகின்றோமென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உணராமல் சாரதாச் சட்டத்தை சர்க்கார் திருத்து வார்களேயானால், வைதிகக் கூச்சலுக்குப் பயப்படுவார் களேயானால் அது கடைசிப்போரின் முதல் பலனாகுமே ஒழிய வைதிகர்களின் வெற்றி என்பதாக நாம் ஒரு காலமும் ஒப்புக்கொள்ள மாட்டோம். இது மாத்திரமல்லாமல் கடைசிப்போர் முடிவு பெறுவதற்குள் இதுபோல் இன்னும் அநேகக் கெடுதிகள் ஏற்படப்போவதையும் எதிர்ப் பார்த்துதான் ஆகவேண்டும்.

- குடிஅரசு - கட்டுரை - 13.04.1930

Read more: http://viduthalai.in/page-7/83445.html#ixzz36eHvBqDD

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஜாதி ஒழியக் கூடாது; சூத்திரன் படிக்கக்கூடாது; சூத்திரன் பெரிய உத்தி யோகத்திற்குப் போகக் கூடாது; சூத்திரன் வயிறார கஞ்சி குடிக்கக் கூடாது - என்பதற் காகவே மனுதர்மச் சாஸ்திரம் பார்ப்பனரால் எழுதப்பட்டது. இதுதான் இந்து லாவுக்கு அடிப்படையாக உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/83439.html#ixzz36eI3W3jD

தமிழ் ஓவியா said...

சிவகாமி - சிதம்பரனார் திருமண அழைப்பு

திருவாளர் தமிழ்ப் பண்டிதர் சாமி சிதம்பரனார் அவர்கட்கும் கும்பகோணம் திரு. குப்புசாமி பிள்ளை அவர்கள் குமாரத்தி திருமதி. சிவகாமி அம்மாள் அவர் கட்கும் 05.05.1930 திங்கட்கிழமை மாலை5 மணிக்கு திரு. ஈ. வெ.ரா. அவர்கள் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் சுய மரியாதை மகாநாட்டுப் பந்தலில் திருமணம் நடைபெறும்.

திருமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் திருமண வைபவத்தை நடத்தி வைப்பார்கள். - குடிஅரசு - ஈ.வெ.ராமசாமி - திருமண அழைப்பிதழ் - 04.05.1930

Read more: http://viduthalai.in/page-7/83439.html#ixzz36eI81IPQ

தமிழ் ஓவியா said...

ஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்!.2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்திய போது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக் கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது. எனவே இதை ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார் என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரசின் திக் விஜய் சிங்.

தமிழ் ஓவியா said...

கர்ப்ப காலத்தில் உறவு - இந்திரன் தந்த வரமா?


பிரம்மஹத்யம் அஞசலைன
ஜகரஹ யத் அபிஸ்வராஹ
சாமவதசரந்தோ தத அக்ஹம் புதா(ஹ)னம்
ப்ஹுமய் அம்பு(ஹ) துர்ம யொஸித்பயாஸ்
சதுரத வயப்ஹஜத த(ஹ)ரிய(ஹ) - பகவத் கீதை

மேலுள்ள வேதமொழிச் செய்யுளின் விளக்கம் இதுதான்.

இந்திரன் தெரியாத்தனமாக ஒரு பார்ப்பனனைக் கொலை செய்துவிட்டானாம். அவனுக்கு மிகவும் கொடுமையான பிரம்மஹஸ்தி தோசம் பிடித்துவிட்டதாம். அதற்காக கவலைப்படத் தேவையில்லை. அதைப் பங்கிட்டுக் கொடுக்க பார்ப்பனர்களுக்கு மாத்திரம் அனுமதியுள்ளது. தன்னுடைய தோசத்தைப் பெண்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டானாம். அதற்குப் பரிகாரமாக பெண்கள் என்ன வரம் கேட்டார்கள் தெரியுமா? அதாவது தனது கர்ப்பகாலத்திலும் ஆண்களுடன் உறவு கொள்ளும் வரத்தை இந்திரனிடம் கேட்டு, கர்ப்பகாலத்திலும் உறவு கொள்ளலாம் என்ற வரத்தைப் பெற்றார்களாம். பெண்களுக்கு வரம் கேட்பதற்கு வேறு விசயமே இல்லை பாருங்க! எதிலும் இதே சிந்தனைதான்.- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.

பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.

பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

- பென்யாம் மெஜ்முர்,
அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்.

தமிழ் ஓவியா said...

ஜாதிகள் ஒழிந்தால் நாடு முன்னேறும்


மைசூர் அருகே சாமுண்டி மலையடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்தில் நடைபெற்ற ஜெகத்ஜோதி பசவண்ணர் ஜெயந்தி விழா(பசவ ஜெயந்தி விழா)வில் கலந்து கொண்டார் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா.

விழாவில் பேசியபோது, நமது நாட்டில் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கடந்த 850 ஆண்டுகளுக்கு முன்னே ஜாதிகளை ஒழிக்கப் பாடுபட்டவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தியதுடன் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றாகச் சேர்த்து, மனித ஜாதி ஒன்றே, வேறு எந்த ஜாதியும் இல்லை என உலகத்திற்கு அறிவித்தவர். ஜாதிகளை ஒழிக்க மகாமனே மற்றும் அனுபவ மண்டபங்களை உருவாக்கி அனைத்து மக்களும் சரிசமமாக வாழ நடவடிக்கை மேற்கொண்டவர்.

இன்றுவரை ஜாதிகள் ஒழியவில்லை. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு ஜாதி உள்ளது. அந்த ஜாதிகளை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால்தான் நம் நாடு முன்னேறும். மனிதர்கள் அனைவரும் மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஜாதி வெறியைத் தூக்கி எறிய வேண்டும் என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்


தமிழகத்தில் 6 வயது முதல் 14 வயது வரை பள்ளிக்குச் செல்லாமல் 27,400 குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 2,794 குழந்தைகளுடன் முதல் இடத்திலும் காஞ்சிபுரம் மாவட்டம் 2,225 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நீலகிரி மாவட்டம் 153 குழந்தைகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தாலும், சில காரணங்களால் குழந்தைகள் இடையிலேயே கல்வியை விடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதனையும் கண்காணித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், பெற்றோரிடம் பேசி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்பினை மேற்கொண்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

2013ஆம் ஆண்டு 10,800 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது தற்போது 27,400 என உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பிராமணாள் கபே!ஜாதிப் பெயரில் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அப்படி தங்கள் ஜாதிப் பெயரை வெளிப்படுத்துவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். ஆனால் பிராமணர்கள் பயன்படுத்தக்கூடாதா? பிராமணர்கள் மற்றும் பிராமணியத்திற்கு எதிராக திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் பேசுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சிவகாசிப் பார்ப்பனர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள செய்தியை நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

எந்த ஜாதிப் பெயரையும் பொது இடங்களில் பயன்படுத்தக்கூடாது என திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வந்ததால்தான், கடந்த திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெரும்பாலான தெருக்களின் பெயர்களில் ஒட்டி இருந்த ஜாதி வால் நறுக்கப்பட்டது. தற்போதும் இந்த நிலை தனியார் நிறுவனங்களில் தொடர்வது விரும்பத்தக்கதல்ல என்பதோடு அகற்றப்பட வேண்டியவை என்பதிலும் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நாடார் மெஸ்சும், தேவர்ஸ் பிரியாணி கடையும், பிராமணாள் கபேயும் ஒன்றா?

தேவரும், நாடாரும், அய்யரும், அய்யங்காரும் ஜாதிப்பெயர்கள். பிராமணாள் என்பது ஜாதிப்பெயரா? வர்ணாசிரம தர்மப்படி இந்துக்கள் பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் என நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் வைசியனும், சத்திரியனும், மறைந்து பிராமணன், சூத்திரன் என்கிற இரண்டு வர்ணங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. சூத்திரன் என்பவன் அடிமைப் போரில் புறமுதுகிட்டு ஓடியவன். பிராமணர்களுக்கு சேவகம் செய்யக்கூடியவன். பிராமணர்களின் வைப்பாட்டி (தேவடியாள்) மக்கள் என்று மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே, ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்வானானால் மற்றவர்கள் சூத்திரர்கள் எனப் பொருள்பட்டுவிடும் என்பதாலேயே பிராமணாள் என்கிற சொல்லை எதிர்க்கிறோம்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் அவர்கள் பிராமணாள் கபே பெயர்ப் பலகை அழிப்புப் போராட்டத்தை அறிவித்தார்கள். சென்னையில் இயங்கி வந்த பிராமணாள்(முரளி)கபே முன்பு நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திராவிடர் கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கித் திரண்டனர். எங்கள் ஊர் மயிலாடுதுறை தோழர்களும் பலர் அதில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சென்னையில் தங்கவைக்கப்பட்டு தினசரி அய்ம்பது தோழர்கள் புறப்பட்டு முரளி கபே வாயிலில் நின்று வாடிக்கையாளர்களிடம் தமிழர்களை இழிவுபடுத்தும் கடைக்குச் செல்லவேண்டாம் எனக் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடைத் தொழிலாளர்கள் மூலம் கழகத் தோழர்களைத் தாக்கிய வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து கடையை நடத்த இயலாத நிலையில் கடை உரிமையாளர் தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வருத்தம் தெரிவித்து கடையின் பெயர்ப் பலகையை மாற்றினார். அதனைத் தொடர்ந்து அங்கங்கிருந்த ஒன்றிரண்டு பிராமணாள் பெயர்ப் பலகைகளும் காலப்போக்கில் மறைந்து போயின.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரியம் கோலோச்சுகின்ற நிலையில் பார்ப்பனியம் படமெடுத்தாடத் தொடங்கியிருக்கிறது. ஆரிய பவன்களும், உடுப்பி ஹோட்டல்களும்கூட நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. தேவைப்படும்பொழுது அவற்றை எதிர்த்தும் கிளர்ச்சிகள் நடைபெறுவது உண்டு. அது வேறு, பிராமணாள் கபே அழிப்பு என்பது இன இழிவு ஒழிப்பு!. மான உணர்வுள்ள, சுயமரியாதை உள்ளம் கொண்ட எவனும் இதைச் சகித்துக்கொண்டிருக்க முடியாது. எதிர்த்துப் போராடவே செய்வான். கொசுறுச் செய்தி: சிவகாசிப் பார்ப்பனர் தொடுத்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

- கி.தளபதிராஜ்

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் படிப்போம்


கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும்.- ரவீந்திரன்,
இதழியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளைப் படம்பிடித்த முண்டாசுப்பட்டி


அண்மைக் காலமாக தமிழ் சினிமா ஒரு புதிய தடத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பது அதன் முழு வடிவம் புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் கிராமங்களில் நிலவும் பல வகையான மூட நம்பிக்கைகளுக்கு ஒரு கிராமமாக ஒட்டு மொத்த அடிமையாக இருக்கும் சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் முண்டாசுப்பட்டி. அதென்ன முண்டாசுப்பட்டி? அந்த ஊரில் எல்லோரும் எப்போதும் தலையில் முண்டாசு கட்டிய படியே உள்ளனர். எனவே அது முண்டாசுப்பட்டி அவ்வளவுதான். மற்றபடி அதற்க்கு ஒரு பெரிய விளக்கம் இல்லை.1947இல் இந்திய நாடு விடுதலை அடைவதற்கு முன் அந்த கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்கார அதிகாரி அங்கு உள்ள கலாச்சாரங்களை தனது புகைப்பட கருவியில் (போட்டோ கேமரா) பதிவு செய்கிறார்.

அப்போது ஒரு வயதான மூதாட்டியைப் படம் பிடிக்கும்போது தன்னியல்பாக அவர் இறந்து போகிறார். மேலும், அந்தக் கிராமத்தில் ஒரு விதமான நோய் பரவி பலர் இறக்கின்றனர். அதைக் கண்டு அச்சப்படும் மக்களிடயே மேலும் ஒரு பிரச்சினையாக கொள்ளைக்காரர்கள் கூட்டமாக வந்து கொள்ளையடிக்கின்றனர். அப்போது அந்த கிராம மக்கள் கடவுளை நோக்கி எங்களைக் காப்பாற்று என்று வேண்டும்போது வானியல் அதிசய நிகழ்வாக விண்கல் ஒன்று வேகமாகப் பயணித்து அந்த முண்டாசுப்பட்டி கிராமத்திலேயே அதுவும் அந்த கொள்ளைக்காரர்கள் மீதே வந்து விழுந்து விட, அந்தக் கல்லையே கடவுளாக வழிபடத் தொடங்கி விடுகின்றனர். அதன் பிறகு அந்தக் கிராமத்தில் யாரும் போட்டோ எடுக்கக் கூடாது மீறி எடுத்தால் இறந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கை பரவுகிறது. அடுத்து கதைக்களம் 1982ஆம் ஆண்டில் பயணிக்கிறது. இது போக மேலும் பல சின்னச் சின்ன மூட நம்பிக்கைகள் அந்த மக்களிடையே நிலவுகிறது. பக்கத்து ஊரில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் கதாநாயகன், அவனது உதவியாளர், முண்டாசுப்பட்டி கிராமத்தின் தலைவரின் மகள் கதாநாயகி, நகைச்சுவை நடிகராக பாத்திரமேற்றிருக்கும் முனீஸ்காந்த், என இந்த நால்வரைச் சுற்றியே கதை நகருகிறது. முன்பு போட்டோ எடுத்த அந்த வெள்ளைகார அதிகாரி அந்த ஊரில் விழுந்த விண்கல்லின் துகள்களை ஆய்வு செய்து அது விலை மதிக்க முடியாத கனிமம் என்று கோமளப்பட்டி ஜமீன்தாரிடம் சொல்ல அவரும் அந்தக் கல்லைத் (வானமுனி இது அந்த விண்கல்லுக்கு கிராமத்தினர் வைத்த பெயர்) திருட முயற்சிக்கும் வேலை ஒரு பக்கம் என்று படம் மிகச் சிறப்பாக நகர்கிறது. ஒருவரிக் கதையை வைத்துக் கொண்டு கொஞ்சமும் சலிப்பில்லாமல் அதே நேரத்தில் இப்படித்தான் சினிமா என்பதை உடைத்து சாதாரணமாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். இது போக அந்த ஊரில் ஒரு சாமியார். அவரிடம் குறி கேட்டுத்தான் அந்தக் கிராமமே இயங்குகிறது. ஆனால் அவரின் பின்புலம் என்ன என்று பார்த்தால் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆகி வந்தவர். வெளியில் வந்து முண்டாசுப்பட்டி கிராமத்தின் கோவிலில் ஓர் இரவு படுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தால் கிராம மக்கள் அவர் முன் கூடி சாமி! நீங்கதான் எங்க கிராமத்தைக் காப்பாத்தணும் என்று சொல்ல, அவரும் நமக்கு ஒரு சரியான இடம் கிடைத்து விட்டது என்று அந்த ஊரிலேயே தங்கி தனது வாழ்க்கையை நடத்துகிறார்.

(இப்படி பல ஊர்களில் சாமியார்கள் உண்டு என்பதை அனைவரும் அறிவோமல்லவா?). அந்தக் கிராமத்தில் உள்ள வானமுனியைக் கடத்திப் போக அதை மீட்டு வந்து தந்து கதாநாயகன், தன் காதலியான அந்த ஊரின் தலைவர் மகளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். இறுதியில் கதாநாயகன் திட்டப்படிதான் வானமுனி காணாமல் போனது என்று தெரியவர, கல்யாணம் நடத்தி முடித்த கையோடு ஊரை விட்டு ஓடிப்போகும் போது அந்த ஊர் மக்கள் அவர்களைப் பிடிக்க விரட்டுகிறார்கள். அப்போது வேறு வழியே இல்லாமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க, திரும்பி கேமராவை எடுத்துக் காட்ட கிராம மக்கள் பயந்துகொண்டு திரும்ப ஓடுகிறார்கள்.படம் முழுக்க சின்னச் சின்ன விசயங்களை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்து மக்கள் மத்தியில் மண்டக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லியுள்ள இயக்குனர் வசனங்களிலும் சரியாகக் கவனம் செலுத்தியுள்ளார்.

மற்றபடி ஒளிப்பதிவு, பின்னணி இசைப் பாடல்கள்,என அனைத்தும் வித்தியாசமாக செய்திருக்கிறார்கள். படக்குழுவினர் படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை முழு நீள நகைச்சுவைப் படமாக நகர்கிறது. கதை நாயகன், நாயகி தவிர மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் புதியவர்கள். மிக சாதாரண மனிதர்களிடம் உள்ள திறமைகள் கண்டிப்பாய் மதிக்கப்பட வேண்டும். அதைச் சரியாக இனங்கண்டு பயன்படுததியிருக்கிறார்கள். எள்ளி நகையாடப்படவேண்டிய மூடநம்பிக்கைகளை அதே சுவையில் சொல்லி அனைவரையும் கவர்ந்திருக்கும் மூடநம்பிக்கைப்பட்டி மன்னிக்கவும் முன்டாசுப்பட்டி நல்ல செய்தியுடன் கூடிய பொழுதுபோக்குப் படம்.

- தம்பியப்பா

தமிழ் ஓவியா said...


மதச் சார்பின்மைக் கண்ணோட்டம் தேவை! மோடிக்கு அமர்த்தியாசென் அறிவுரை


லண்டன், ஜூலை.6_இங்கிலாந்தில் லண் டனில் உள்ள ஏசியா ஹவுசில் நோபெல் பரிசு பெற்ற அறிஞரான அமர்த்தியாசென் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்.

அவர் பேசும்போது: மோடி ஆட்சி அமைந் துள்ளதற்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும், இந்தியாவில் அண்மை யில் நடைபெற்றத் தேர் தலில் வெற்றி பெற்றுள் ளார். ஜனநாயகத்தின் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சிபுரிவதற்கு முழு உரிமை வழங்கப்பட்டுள் ளது. ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமர்த்தியா சென் தன்னுடைய பேச்சில், இந் தியா ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண் டும் என்று கூறினார். இந்தியாவுக்கு சவாலாக உள்ள கல்வி, சுகாதாரம் மற்றும் மின் தேவை குறித்துப் பேசினார்.

பின்னர் அவர் கூறும் போது, இந்தத் தேர்தல் முடிவால், பாஜக இந்திய சமூகத்தில் எவ்வித அடிப் படை மாற்றங்களையும் செய்துவிடப் போவ தில்லை. அந்த கட்சி 31 விழுக்காடுதான் வாக்கு களைப் பெற்றுள்ளது. இதுபோன்ற முடிவு தற்போதைய தேர்தல் முறையில் எப்போதுமே நட வாத ஒன்று என்பது கிடை யாது என்று கூறினார்.

அரசுத்துறை அலுவ லர்கள், வங்கியாளர்கள், பிரபலமான பல்வேறு துறைகளைச் சார்ந்த வர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்த அரங்கில் அவர் கூறும்போது, இடது சாரிகள் வன்முறைத் தாக்கத்துக்கு ஆளாகி உள்ளனர் என்றார்.

புதிதாக அமையும் அனைத்து அரசுகளும் மத சார்பின்மையுடன்தான் செயல்பட வேண்டும். இதை பெரிய அளவில் உள்ள மதசார்பற்ற ஊட கங்கள், நீதிமன்றங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்காணித்தே வருகின்றன.

மேலும் அமர்த்தியா சென் கூறும்போது, புதிய அரசு அமைந்துள்ளது. திறனையும், நல்லவற்றை யும், வெளிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. குஜ ராத்தின் நிர்வாகத்தில் என்ன நடந்துள்ளது? கட்டமைப்புகள், சாலை கள் என்று கூறப்பட்டா லும், மய்யக் கருத்துகளான கல்வி, சுகாதாரம் குறித்து ஆளும் பாஜக குறிப் பிடுவதில்லையே. மோடி அரசுகுறித்து பாஜக தரப் பினர் பெரும் பான்மை மனப்பான்மையுடன் உள்ளனர். அதேநேரத்தில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம். நாம் மதசார்பற்ற ஜன நாயக நாடு என்று சொல்கிறோம். மக்களுக்கு தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. நாமும் நம் கருத்தை வெளிப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்று பேசினார்.

ஊழல் முறைகேடுகள் உட்பட பல்வேறு பிரச் சினைகள் குறித்துக் கூறும் போது அது இந்தியாவில் மட்டும் உள்ளதல்ல. கடந்த சில ஆண்டுகளில் அதிகமாகி உள்ளது என்பது உண்மை அல்ல. இது எப்போதுமே பெரிய பிரச்சினைதான் என்று அமர்த்தியா சென் தன் னுடைய பேச்சில் குறிப் பிட்டார்.

மேலும், காங்கிரசு அரசின் முக்கியத் திட்டங் களாக கூறப்படுவது, தகவல் பெறும் உரிமைச் சட்டம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வாறு இந்தியாவில்தான் தகவல்களைப் பெறுவதில் அதிகப்படியான உரிமை உள்ளது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு ஊழல் முறைகேடுகள் எளிதில் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. இது எதிரானது அல்ல. மாறாக சாதகமானதாகும் என்று குறிப்பிட்டார்.

அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங் கைத் தூதரக அதிகாரி யான கிரிஸ் நோனிஸ், அமர்த்தியா சென்னிடம், பொருளாதார முன்னேற் றத்துக்காக மோடியை ஆதரிப்பீர்களா? என்று கேட்டதற்கு அமர்த்தியா சென் பதிலளிக்கும் போது, நீங்கள் கூறுவது சரிதான் என்று நினைக் கிறேன். ஆனால், அது போன்று இதுவரை நடக்க வில்லை என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/83512.html#ixzz36k5ljqhG

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி இவ்வளவுதான்!


கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் திருட்டு

நெகமம், ஜூலை 6_ கோவை அருகேயுள்ள நெகமம் தாசநாயக்கன் பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூஜாரி சதாசிவம் (வயது 55). இவர் தினமும் காலை 5 மணிக்கு கோவிலை திறந்து மாலை பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

சம்பவத்தன்று மாலை கோவிலில் பூஜை முடிந்ததும் சதாசிவம் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் பின்புற பூட்டு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கோவிலுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதற்குள் வைத்திருந்த தங்க கண் மலர் மற்றும் வெள்ளியாலான ஒட்டியாணம், கை, குடை ஆகியவை திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.18 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சதாசிவம் நெகமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதேபோல் தாசநாயக்கன் பாளையத்துக்கு பக்கத்தில் உள்ள மெட்டுவாவி அரிஜன காலனியில் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக முருகன் (66) உள்ளார். இவர் சம்பவத்தன்று கோவிலை திறக்க சென்ற போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தாலிக்கொலுசு 10, தாலி காசு 6, பித்தளை குத்து விளக்கு 2 உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து முருகன் நெகமம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆத்தூரில் பேருந்து மோதி அர்ச்சகர் சாவு

ஆத்தூர், ஜூலை 6_ ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 57). இவர் அதே பகுதியில் உள்ள கோவில்களில் அர்ச்சக ராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் ஆத் தூருக்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் ஆத்தூர் பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சிலை அருகில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவரது மிதிவண்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்களிடம் 20 பவுன் நகை பறிப்பு

தாம்பரம், ஜூலை. 6_ குரோம்பேட்டை பாரதிபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பா பிஷேகம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண் பக்தர்களிடம் சுமார் 20 பவுன் நகைகளை திருடர்கள் பறித்து சென்று விட்டனர். குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/83517.html#ixzz36k5zdis2